Sunday, February 1, 2009

திருவானைக்காவல் ஶ்ரீ ஆகாசவாசி ஶ்ரீ கண்ட தீக்ஷதர் ஏகவீராம்பாள் மடம்


புராணகாலம்:
திரு ஆனை காவல் தலத்தில் திரு என்ற சிலந்தியும், ஆனையும் சிவனுக்கு கைங்கரியம் செய்கையில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு மடிந்தன.சிலந்தி மறுபிறவியில் ராஜகுருவான ஏகவிராம்பாள் மட தீக்ஷதராக கோயில் கட்ட திட்டம் வகுத்தது .ஆனையோ அவரது சிஷ்யனான கோச்செங்கற் சோழ மன்னனாக பிறந்து,அவர் அறிவுரைப்படி திருவானைக்காவல் கோயிலைக் கட்டியது.
திருவானைக்காவல் தீக்ஷதர்கள் வரலாறு (சமஸ்கிருத புராணத்திலிருந்து கும்பகோணம் சங்கரமடம் ஆஸ்தான வித்வான் ப. பஞ்சாபகேச ஸ்வாமிகளால் தமிழ் வசனரூபமாக மொழி பெயர்க்கப்பட்டது):
சோணாக்ஷன் என்கிற சோளராஜாவால் சிவபூஜைக்காக ஏற்பதுத்தப்பட்டிருந்த பண்டிதர்கள் காவேரியின் பிரவாகத்தில் சம்புவால் முழுகும்படிசெய்யப்பட்டவர்கள் என்று இந்த அத்தியாயத்தில் கூறப்படுகின்றது.
          ஸுதர்: "ஹே மஹரிஷிகளே சிவாச்சார்ய ஜனங்களுடைய நிலைமையை கூறுகின்றேன் கேளுங்கள்" என்று சொல்லத்தொடங்கினார். சோணாஷ்னென்கிற சோளபூபதியால் கேதாரம் காசீ காஞ்சீ முதலானவிடங்களிலிருந்து அறுபது சிவாச்சார்ய பண்டிதர்கள் அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள். அவர்கள் வேதம் ஆகமம் புராணம் முதலியவைகளால் பண்டிதர்களாயும் சிவபூஜ செய்யும் விஸயத்தில் சிறந்த ஸாமர்த்தியம் பொருந்தியவர்களாயுமிருந்தார்கள். அவர்கள் வந்தவுடன் சோளன் அவர்களுக்கு பசு தனம் வஸ்திரம் முதலானவைகளைக்கொடுத்து நமஸ்கரித்துப்பின்வருமாறு பிரார்த்திக்கிறான் ஹேபிராமணர்களே! நீங்கள் என் வசனத்தை அங்கீகரித்து ஸ்ரீஜம்புகேசுவரரான தேவரையும் அகிலாண்டேசுவரீ என்கிற பார்வதியையும் விதிப்படி பூஜைசெய்யுங்கள். ஆறுகாலம் நடக்கவேண்டும். பிரதோஷ ஸோமவாரம் இந்தப்புண்யதினங்களில் உத்ஸவம் செய்யவேண்டும். மேலும் சிவராத்திரி ஸங்கிராந்தி அயனம் இந்தகாலங்களில் சந்திரசேகரரையும் கௌரீதேவதியையும் விஷேஷமாகப் பூஜிக்கவேண்டும் என்றுசொல்லி அவர்களுக்கு வீடு பூமி தனம் தான்யம் முதலானவைகளைக்கொடுத்து வேண்டிய சௌகரியங்களையும் செய்துவைத்தான். அவர்களும் அரசனால் கொடுக்கப்பட்டவைகளைப் பெற்றுக்கொண்டு ஸகல ஆகமங்களிலும் அதிகமான பாண்டித்தியம் இருந்தபடியால் பண்டிதர்கள் என்று பெயரையுமடைந்தனர். இவ்விதம் சோணாஷனால் ஸ்தபிக்கப்பட்ட அறுபது பண்டிதர்களும் ஜம்புகேசுவரருடைய பூஜையையும் அகிலாண்டேசுவரியின் புஜையையும் மற்றுமுள்ள தேவதைகளையும் நன்கு ஆராதனம் செய்துவந்தார்கள். அவர்கள் சாஸ்திரங்களையறிந்தவர்களும் தர்மத்தில் அபிமானமுள்ளவர்களாயுமிருந்தபடியால் ருதுக்கள் அயனங்கள் மாஸங்கள் மற்றுமுள்ள விசேஷபுண்யகாலங்கள் இவைகளில் தவறாமல் எப்பொழுதும் பக்தியுடன் பூஜித்துவந்தார்கள். இவ்விதம் நடந்துவரும் ஸமயத்தில் ஒருநாள் இவ்விடத்தில் பூஜைக்காக ஒருபாலனையும் ஸ்திரீகளையும் வைத்துவிட்டுபாக்கியுள்ள புருஷர்கள் எல்லோரும் பிக்ஷாடநேசர் கும்பாபிஷேகத்திற்காகச் செல்லும்பொழுது உத்திரகாவேரியில் பிரவாஹம் அதிகமாயிருந்தபடியால் ஓடத்தில்போனார்கள். போகும் பொழுது பிரவாஹம் அதிகமாயிருந்தபடியால் ஓடத்தில்போனார்கள். போகும் பொழுது பிரவாஹத்தினுடைய வேகத்தால் அலைகளாகிற கைகளால் அடிக்கப்பட்டு அந்த ஓடம் கவிழ்ந்தது.உடனே அதிலிருந்த பண்டிதர்கள் யாவரும் பிரவாஹத்திற்கு இரையாய்விட்டார்கள். இந்தப்பிரகாரம் ஜம்புநாதர் அவர்களை நதியில்விட்டு பக்கியிருக்கும் அந்த பாலகனைப்பார்த்துவிட்டு அனுக்கிரகம்செய்து அவனைச்சிறந்த பண்டிதனாகச் செய்தார். அந்த வம்சத்திலுண்டானவர்கள் தான் மஹேசுவரரைப் பூஜிக்கிறார்கள். பிராணிகளுக்கு ஏற்பட்ட சம்சாரபந்தத்தை நிவர்த்திசெய்கிறவராயும் வியாபகராயும் ஜம்புவென்ற புண்ய விருக்ஷத்தின் மூலத்திலிருக்கும் தன் கர்ப்பகிருகத்தில் வஸிப்பவரும் மிருடானீபதியாயுமிருக்கும் எந்த தேவர் சோளமன்னனைத்தவிர பக்கியுள்ளவர்களை தன்னுடைய திருஷ்டியின் அனுக்கிரகவிசேஷத்தால் எப்பொழுதும் விலங்கும் பரிசுத்தமான கணங்களாகச்செய்தாரோ அவ்வித சக்திபொருந்திய மூவுலகங்களையும் பாதுகாப்பதில் தீக்ஷை பூண்டிருக்கும் ஜம்புநாதர் நம்மை ரக்ஷிக்கட்டும். இவர் ஸகல வேதங்களையுடைய அந்தமான உபநிததங்களில் பிரியமுள்ளவரோ எவர் சந்திரகலையை தரிக்கிறாரோ எந்த தேவியானவள் அகிலாண்டகோடிகளையும் ஸிருஷ்டிப்பதில் அதிகமான சக்தி பொருந்தியவளோ இவ்விருவர்களுடைய பாதாரவிந்தங்களைப் பூஜைசெய்கிறவர்கள் தனம் தான்யம் கிருகம் இவைகளுடன் கூடினவர்களாயிருக்கிறார்களோ அந்த ஜம்புநாதர் அவர் பத்நீ இவர்களுடைய விஸ்தாரமான மஹிமையின் லேசமானது நமக்கு புத்திராமித்திர களத்ரபாசு முதலான ஐசுவர்யங்களைக்கொடுத்து அனுக்கிரகிக்கட்டும்".
ஏகவீராம்பாள் மடம்: 

          இங்ஙனம் கோச்செங்கட்சோழனால் திருவானைக்காவல் கோயில் குருத்துவமாக அமர்த்தப்பட்ட மிகத்தொன்மையான  தீக்ஷதர்கள், வைதீக பாசுபத மடமான ஏக வீராம்பாள் மடத்தை திருவானைக்காவல் கிழக்கு வாசல் அருகே நிறுவி கோயிலை நிர்வகித்து வந்தனர். அது பின்னர் மாத்வர்களால் கைபற்றப்பட்டு, தற்போது சங்கர மடமாள்க உள்ளளது. 
https://archive.org/stream/KanchiKamakotiMathAMyth/Kanchi%20kamakoti%20Math%20-%20A%20Myth_djvu.txt
https://archive.org/details/KanchiKamakotiMathAMyth/page/n11

The math at Tiruvanakava! was occupied by Pasupatha Shaiva, according to rock edicts (upto 1714 they were occupying it). In 17th century this changed hands and went to Madhwas for sometime. In the later half of 18th century, this math was occupied by the Kumbakonam Math. 
பாசுபதம் என்பது மிகத்தொன்மையான அற்புதமான ஒரு வழியாகும். சங்கம் முதல் இன்று  வரை கிடைக்கும் வரலாற்று செய்தி. சரஸ்வதி - சிந்து நதிக்கரை நாகரீகத்திலேயே இருந்ததற்கான ஆதாரங்கள் பரக்க கிடைக்கின்றன. நான்கு  வெவ்வேறு பாசுபதர்களின் முத்திரைகள் கிடைத்துள்ளன. மேலும் அகிலாண்டபுரம், ஆவுடையார்கோயில், மதுரை,  ராமேசுவரம், திருச்செந்தூர் ஆகிய ஆறு  ஸ்தலங்களுக்கு 1953 வரை குருத்வமாகயிருந்துள்ளனர்.








ஜம்புகேச்வரம் ஸ்ரீ ஆகாசவாசி ஸ்ரீ கண்ட தீக்ஷதர், ராமேச்வர பூஜகர்களான  குருக்களுக்கு ஆசார்யாபிஷேகம் செய்து வைக்கும் குருவாக இருந்தமை குறித்த ஆவணம் - பரம்பரை நிர்வாகி ராமநாதபுரம் சமஸ்தானம் எம்.பாஸ்கர சேதுபதி அவர்களது மேனேஜரது கடிதத்தில் (1900) 





பாசுபதர்கள் தலை  முதல் கால்வரை  விபூதியை உடல் முழுதும் இட்டு, கௌபீணம்  மட்டும் அணிந்து, ஒருவேளை மட்டும் உண்டு , பசுக்களை ஆயனாக (பதியாக) இருந்து பராமரிப்பவர்கள். 


வேத ஸரஸ்வதி நதிக்கரை ஹரப்பாவில் வைதிக பாசுபதர்கள் வழிபட்ட 5000 வயது சிவலிங்கம்!


ஸரஸ்வதிக்கரை காளிபங்கன் லிங்கம் (மஹாபாரதத்திற்கு முற்பட்டது 4600 வ.முன்)

சிவ லிங்கம் நமது மூளையிலுள்ள pineal gland டெனும் ஸஹஸ்ரார சக்கரத்தின் ஸ்தூல வடிவிலும், அதன் pituitary gland ஆவுடையார் ஆக்ஞா சக்கர வடிவிலுமுள்ளன.



திருவானைக்காவல் சிவன் சந்நிதி முன் "செட்டியார்" என்றழைக்கப்படும் சிற்பம் கைகூப்பி, பாசுபதக்கோலத்தில் உள்ளது உண்மையில் வீராம்பாள் மட பூர்வரான சதாசிவ தீக்ஷதர் என்று கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். இவரே இக்கோயிலை விஸ்தாரப்படுத்தி, யாத்திரீகர்களுக்கு இன்றைய தர்மஸ்தலா போன்று வழியில் திருச்சிக்கு முன்  நித்ய அன்னசத்திரம் ஏற்படுத்தி நிர்வகித்து வந்தார். இன்றும் அப்பகுதி சத்திரம் என்றும், அவ்விடம் சத்திரம் பஸ் ஸ்டான்ட் என்றும் உள்ளது.


சதாசிவ தீக்ஷதர்  

சதாசிவதீக்ஷதர் பற்றி மேலும்:

நாகசாமி (தொல்லியல் துறை):
(சதாசிவ பிரம்மேந்திரர் தெலுங்கர். அவர் வேறு)


திருவானைக்காவல் கோயில் தீக்ஷதர்கள் உரிமை கல்வெட்டு 

இன்றோ  இம்மடத்து நிலங்கள் விஷமிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, ஏக வீராம்பாள் கோயிலே இடிக்கப்பட்டு, சுவாமிகள் மாற்றப்பட்டிருந்தாலும், அக்கோயிலில் உள்ள ஒரு தூண் சாசனம், மட வரலாற்றை தெளிவுற விவரிக்கிறது.






மேலும் நேர் எதிரில் மட கருப்பு தெய்வமான சங்கிலி கருப்பணன் கோயிலும் உள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு அன்றாடம் அன்னசத்திரம் போன இடமே தெரியவில்லை.

முதலாம் பராந்தக சோழனால் (910-950), சிங்கையில் (நல்லூர்) அமர்த்தப்பட்ட சோழங்க (கூழங்கை யென்பது திரிபு) கூழங்கை சக்கிரவர்த்திகள் மும்டிச்சோழ மண்டலம் கட்டமைப்பு குடியேற்றம் செய்ய இலங்கைக்கு இம்மரபில் வந்த சந்திரசேகர தீக்ஷதர் குமாரர் ராமலிங்க தீக்ஷதர் குலகுருவாக சென்றதை அறிகிறோம். அவர்மகனே "கைலாயமாலை" பாடச்செய்த கங்காதர தீக்ஷதர். சீடர்களான முதன்மை வன்னிமையான யாழ் வன்னிமையை (லங்கை கூற்றப்பிரிவுகளின் முதன்மைப் பிரிவான யாழ்பாண பிரிவு) தோற்றுவித்த காலத்தே, தீக்ஷதர் குருவாயெழுதிக் கணித்து உண்டானதுதான் யாழ்பாண பஞ்சாங்கம். 


இதன்மூலமும், சிருங்கேரி சங்கரமடமே கதிர்காமம் முதலான கோயில்களுக்கு துருஸ்து செய்வதாலும், இலங்கைத் தமிழர்கள் பாரம்பரியமாக ஸ்மார்த்த பாசுபத சைவர்கள் என்பதனை அறிகிறோம்.

தங்கள் கங்காகுலத்தினை அண்ணமார் சுவாமிகள் ஆரியகுல வம்சமென்பதும், சோழரை சூரியகுல வம்சமென்பதும் அக்கதையிலிருந்து கிடைக்கும் தெளிவு. கூழங்கையின் மரபும் Arya சக்கரவர்த்தி மரபென்பது குறிக்கத்தக்கது. வெள்ளாளரில் கணத்தோரென்பதற்கு Aryaவென்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கூழங்கையனாட்சியையும், அவர்தம் குலகுரு கவிராஜ குரும்பரம்பரையின் அனுகிரகத்தையும் மறைத்ததன்மூலமே Portuguese Jesuits 1620தில் தங்கள் லங்கை அழிப்பைத் தொடங்கியின்று வரை நடத்தி வருகின்றனர். 

"திரிகோணமலை கோணேசர் கல்வெட்டென்ற" நூலாசிரியர் "கவிராஜ வரோதயர்" அதாவது  கவிராஜகுரு வரத்திலுண்டானவரென்று அடைமொழிப்பெயருடையவராதலால் 
 ராமலிங்க தீக்ஷதரது பூர்வீகமான திருவானைக்காவல் - உறையூரென்பது திண்ணம். கீழுள்ள website பாக்கவும்


















வந்தே கவிராஜகுரு பரம்பராம்


தென்னாட்டின் சங்கராசார்யரான சிருங்கேரியே இம்மடத்திற்கும் ஆசார்யர் 

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...