குலகுரு மடங்கள்

Tuesday, September 1, 2009

கொங்கு குலகுருக்கள் 3. அய்யம்பாளையம் மடம்

ஸ்ரீமது இம்முடி சிற்றம்பல குருசுவாமிகள் திருமடம்

ஸ்ரீமது இம்முடி சிற்றம்பல நாயனார் சிவஸ்ரீ சிதம்பரம் சிவாச்சாரியார் குருஸ்வாமிகள் 




குலகுரு -  சஞ்சாரம்

குலகுருவானவர் குலம் தழைக்க நித்யபூஜை செய்கிறார். குலம் என்றவுடன் வருவது உடன்பங்காளிகள் மட்டுமே. பங்காளிகள் இல்லையெனில் குலம் அழியத்தொடங்கும். பங்காளிகள் ஒற்றுமை மற்றும் நல்லது-இறப்பு காரியங்களில் முன்னின்று சீர்கள் செய்தால், அதுவும் இறந்தவரை உள்ளூரிலேயே சுட்டு காரியம் செய்தால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தபலன் கிடைக்கும். பிணத்தை மின்மயானத்தில் கருக்கி எரிக்கக்கூடாது; கண்தானம் செய்யக்கூடாது. இன்று பங்காளிகளுக்குள்  போட்டி, பொறாமை காரணமாக ஒற்றுமையின்மையால் பலவற்றை மறந்தும், மாற்றியும்  செய்கின்றனர். இதனை சரிசெய்ய குலகுரு  அந்தந்த சிஷ்ய பங்காளிகளின் ஊர்களுக்கு  சஞ்சாரம் செய்து குல ஒழுக்கங்கள், குடி  ஒழுக்கம் , சீர்கள், தெய்வ பூஜைகள், நீர்க்கடன் (திதி)  போன்றவை நடக்கிறதா என விசாரித்து, அதற்குரிய நிவர்த்திகளை செய்ய வேண்டும். சிஷ்யர்கள்  அவர் சொல்படி கேட்டு  உபாயங்களை  மேற்கொள்ள வேண்டும். 

எனவே, சிஷ்யர்கள் தங்கள் ஊர்களில் வருடாவருடம் பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த குரு சஞ்சார பணியை நடத்த வேண்டும்.  
சஞ்சாரம்




ஏகாதச ருத்ராபிஷேகம் - 2024


ஏகாதச ருத்ராபிஷேகம் - 2023



 



ஏகாதச ருத்ராபிஷேகம் - 2022 








ஏகாதச ருத்ராபிஷேகம் - 2019 
 மடத்தின் தின பூஜைக்கு அனைத்து சிஷ்யர்களின் தினசரி செய்யும் பாவம்கழிய செய்யப்படும் சங்கல்பம். ஏகாதச ருத்ர ஹோமத்திலும் செய்யப்பட்டது. 


 ஏகாதச ருத்ராபிஷேக பூர்ணாஹுதி








ஏகாதச ருத்ராபிஷேகம் - 2018










ஆடி அமாவாசை அன்று மடத்தில் சிஷ்யர்கள் சிவபூஜையில் பங்கேற்றனர்

நாமக்கல்மாவட்டம், அருணகிரிஅய்யம்பாளையம், இம்முடிசிற்றம்பலநாயனார்மடாதிபதி , ஸ்ரீ- லஸ்ரீ - ஸ்ரீமதுஇம்முடிசிற்றம்பலசிதம்பரசிவாச்சாரியகுலகுருக்கள்முன்னின்றுநடத்திவைத்தமஹாகும்பாபிடேகங்கள்

01. 20.01.2016 : ஈரோடுமாவட்டம், இச்சிபாளையம்கிராமம் , வளந்தான்கோட்டை
அருள்மிகுகரிகாளிஅம்மன்திருக்கோவில்
02. 10.02.2016 : நாமக்கல்மாவட்டம் , நாமக்கல்வட்டம் , இடையப்பட்டி
அருள்மிகுமகாமாரியம்மன்திருக்கோவில்
03. 26.02.2016 : ஈரோடுமாவட்டம், பாசூர்கிராமம், வெங்கியாம்பாளையம்
அருள்மிகுவேலாத்தாள்திருக்கோவில்
04. 29.04.2016 : ஈரோடுமாவட்டம், மொடக்குறிச்சிவட்டம், ஈஞ்சம்பள்ளி
அருள்மிகுவேலாத்தாள்திருக்கோவில்
05. 11.07.2016 : நாமக்கல்மாவட்டம், திருச்செங்கோடுவட்டம், உஞ்சனைகிராமம்,

அருள்மிகுஅத்தனுர்அம்மன்திருக்கோவில்

குலகுரு பட்டாபிசேகம் - மன்மத வருஷம் கார்த்திகை 6, ஞாயிற்றுகிழமை






மோரூர் கன்ன, மல்லசமுத்ரம் விழியன், வெங்கம்பூர், மொடக்குறிச்சி தூரன் மற்றும் ஆனங்கூர் கன்ன கோத்ர சிஷ்யர்களால் மடத்தில் நடத்தப்பட்ட சண்டி ஹோமம் 


மாட்டுக்கொட்டகையில் அமைக்கப்பட்ட யாகசாலை 

அய்யமபளையம்மட குலகுருக்கள்

மேற்படி சிஷ்யர்கள்

குலகுருக்கள் தம்பதியாக கர்த்தாவாக அமர்தல்

கோ பூஜை

அபிசேகம்

சிவபூஜை

மஹா ஆராத்தி

நிறைவு

பட்டாபிஷேக வீடியோவிற்கு இங்கு க்ளிக் செய்யவும்

சித்ரா பௌர்ணமியன்று குருவிடம் ஆசி பெற்ற சிஷ்யர்கள் 


ருத்திராபிஷேகம் 24, கார்த்திகை 2016








சிதம்பரத்திலிருந்து வந்து சிறப்பித்த நமது மடத்து  பரம்பரை  கட்டளை தீக்ஷிதர் ஸ்ரீ சந்திரசேகர தீக்ஷிதர் (செல்: 95970 19366)




இன்றளவும் ஸ்ரீ சிதம்பரம் கோயிலில் மடத்தின் முறைகார தீக்ஷிதர் உள்ளார். மடத்தின் சார்பில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு அர்ச்சனைகள் நடத்தி பிரசாதங்கள் அனுப்பிடுவர். வருஷம் ஒருமுறை மடத்திற்கு விஜயம் செய்வர். மடத்தின் விசேஷங்களுக்கு குருஸ்வாமியார் அழைப்பனுப்பி சிதம்பரம் தீக்ஷிதர் வந்து கலந்துகொள்வது மடத்தின் பாரம்பரியமாகும். முற்காலத்திய விபூதி பிரசாத கடிதம் பின்னிணைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிதம்பரத்தில் உள்ள நம் மடத்திற்கான முறைகார தீக்ஷிதர்,
  • சி. சந்திரசேகர தீக்ஷிதர்,
  • S/O சின்மயானந்த சுப்ரமணிய தீக்ஷிதர்,
  • சின்மய நிவாஸ்,
  • ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்தி கோயில்,
  • ஸ்ரீ சபாநாயகர் கோயில் டிரஸ்டி & பூஜை
  • 63/152, கீழரத வீதி,
  • சிதம்பரம்-608001
அன்றாடம் அய்யம்பாளையம் மடத்தின் சார்பில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் பூஜை செய்யப்பட்டு மாதமொருமுறை பிரசாதங்கள் அனுப்பபட்டு வருகிறது.
ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீசிதம்பரேஸ்வரர் இம்மடத்தில் ஆத்மார்த்த தெய்வமாக அருள்பாலிக்கிறார்கள். 
2022 மல்லசமுத்திரம் செல்லாண்டியம்மன் கோயிலில் வெளியன் குலத்தின் மல்லை நாட்டுப் புலவருடன் விஜயதசமி எழுத்தாணிப்பால் வித்தியாரம்பத்தில்




முன்னைய குருக்கள்  கனகசபாபதி சுவாமிகள் சஞ்சாரம் செல்கையில் (டவாலியுடன்) 1910 களில்: 


சிஷ்யர்களின் குலதெய்வம் ஒன்றனுக்குகுருசாமி கும்பாபிஷேகம் செய்து வைக்கையில்:

மடத்தின் பழைய முத்திரை:

தலைக்கட்டில் அரசு முத்திரை (15.2.1936 ):


மடத்திற்கு கட்டுப்பட்ட   ஊர்களின்  பட்டியலில் காளமங்கலம்  கிராமம் ஆய்கவுண்டம்பாளையம்:








காணிகள் - கோத்திரங்கள்:




1.     மோரூர்         - ன்னன் கோத்திரம் பெரியவகை நாட்டுக்கவுண்டர் 
2.     சேலம் நாட்டுக்கவுண்டர்கள் - வெண்ணந்தூர்  காடை கோத்திரம் 
3.     கலியாணி ஆண்ட கவுண்டர்கள் (ஏழூர் பண்ணை கோத்திரம் )
4.     மல்லசமுத்திரம்- விழியன் கோத்திரம்
  1. மோரூர்  -  கன்ன கோத்திரம் 
  2. கருமாபுரம்   - பொருளந்தை கோத்திரம்
  3. மண்டபத்தூர் (எலந்தகுட்டை) -  கன்ன கோத்திரம் 
  4. ஏழூர்          -  பொருளந்தை கோத்திரம்
  5. மாமுண்டி    - பொருளந்தை கோத்திரம்
  6. ஈஞ்சப்பள்ளி- பொருளந்தை கோத்திரம்
  7. குமாரமங்கலம்  -  தூரன் கோத்திரம்
  8. குமாரமங்கலம் -  ஈஞ்ச- கோத்திரம்
  9. பாலமேடு   -  தூரன் கோத்திரம்
  10. பாலமேடு   -  அந்துவன் கோத்திரம்
  11. தும்பங்குறிச்சி   - தூரன் கோத்திரம்
  12. அணிமூர்         - தூரன் கோத்திரம்
  13. வெங்கம்பூர்      - தூரன் கோத்திரம்
  14. மொடக்குறிச்சி - 1. தூரன் கோத்திரம்
  15. மொடக்குறிச்சி -  பனங்காடை கோத்திரம்
  16. மொடக்குறிச்சி - காரி கோத்திரம்
  17. ஊத்துக்குளி  - வண்ணக்கன் கோத்திரம்
  18. கொளாநல்லி-  கன்னன் கோத்திரம்
  19. கொளாநல்லி-  கொளாயன் கோத்திரம்
  20. மணலி           - செம்பன் கோத்திரம்
  21. மோடமங்கலம் -  செம்பன் கோத்திரம்
  22. மோடமங்கலம் -   அந்துவன் கோத்திரம்
  23. ராமதேவம்       -  செம்பன் கோத்திரம்
  24. ராமதேவம்     -  காடை   கோத்திரம்
  25. தோக்கவாடி     - காடை கோத்திரம்
  26. தோக்கவாடி     - வெண்டுவன் கோத்திரம்
  27. தேவனாங்குறிச்சி- காடை கோத்திரம்
  28. ஆனங்கூர்       - பனங்காடை கோத்திரம்
  29. ஆனங்கூர்       -  கன்னன் கோத்திரம்
  30. ஏமப்பள்ளி      - காடை கோத்திரம்
  31. கொளாரம்       - காடை கோத்திரம்
  32. பில்லூர் - காடை கோத்திரம்
  33. மணியனூர்       - கன்னன் கோத்திரம்
  34. மங்கலம்         - காடை கோத்திரம்
  35. கொன்னையாறு    - செல்லன் கோத்திரம்
  36. கொன்னையாறு    -  பனங்காடை கோத்திரம்
  37. இருப்புலி       - செல்லன் கோத்திரம்
  38. கோக்களை       - செல்லன் கோத்திரம்
  39. கூத்தம்பூண்டி (மாணிக்கம்பாளையம்)   - ஆந்தை கோத்திரம்
  40. கூத்தம்பூண்டி (மாணிக்கம்பாளையம்)   - செம்பூதன் கோத்திரம்
  41. கூனவேலம்பட்டி (பிள்ளாநல்லூர்) - செம்பூதன் கோத்திரம்
  42. முருங்கம்       - ஆந்தை கோத்திரம்
  43. கருதாணி        - ஆந்தை கோத்திரம்
  44. பெருங்குறிச்சி  - தேவேந்திரன் கோத்திரம்
  45. மொஞ்சனூர் (தொட்டம்பட்டி)- தேவேந்திரன் கோத்திரம்
  46. இருக்கூர்       - குள்ளன் கோத்திரம்
  47. வீரகுட்டை     - வெண்டுவன் கோத்திரம்
  48. தகடப்பாடி    - கன்னன் கோத்திரம்
  49. தகடப்பாடி    -  புள்ளன் கோத்திரம்
  50. மரப்பறை      - செம்பூதன்  
  51. உஞ்சனை - காரி கோத்திரம்
  52. பட்டுலூர்  தூரங் கோத்திரம்
  53. பட்டுலூர்   பொன்ன கோத்திரம்
  54. பட்டுலூர்  முத்தண கோத்திரம்
  55. சித்தம்பூண்டி கன்ன கோத்திரம்
  56. இளம்பிள்ளை காடை கோத்திரம்
  57. தாழைக்கரை வெண்டுவன் கோத்திரம்
  58. மாவுரட்டி காடை கோத்திரம்
  59. கூடலூர் பயிர கோத்திரம்  
  60. அலிங்கத்து தூர கோத்திரம்
  61. வண்டிநத்தம் - எழுவாண்டியம்மன் கோயில் - அன்னங் கோத்திரம்
  62. மாமுண்டி -  அடற கோத்திரம் 
  63. படைவீடு -   மேதனி கோத்திரம் 
  64. பாலமேடு - அந்துவன் கோத்திரம் 
அனைத்து கவுண்டர் வகைகளும் குறிப்பிடப்பட்டுள்ளனர். விசாரித்துக்கொள்ளவும்

ஸ்திரி கணக்குபிள்ளைகள் சிஷ்யர்கள்:
  1. கௌடின்ய கோத்திரம்
  2. காசிப கோத்திரம் 
கொங்க குலால சிஷ்யர்கள் 
  1. மோரூர் நாட்டு குயவர் - பவானி பட்டக்காரர் வகையாராக்கள் 
  2. பருத்திபள்ளி நாட்டு குயவர் 

 ஆதிசைவர்  
  1. கௌடின்ய கோத்திரம்
  2. காசிப கோத்திரம்
  3. கௌசிக கோத்திரம் 

கொங்க முதலி 
  1. கொங்க கைகோல முதலி வகையறாக்கள்
  2. சேலத்து நாடு கிழக்கத்தி முதலி வகையறாக்கள் 

சோழிய வெள்ளாள பிள்ளை கஞ்சமலை பாருபத்தியம் ஏரணாபுரத்தில் இருக்கிறார்கள்

  கோயில் சிப்பந்திகள் - தாசிமார்கள்
1.      சிவகிரி

2.      கபிலமலை

3.      மொடக்குறிச்சி

4.      பூந்துறை

5.      சங்ககிரி

6.      சாம்பள்ளி  காவேரிபுரம் - 
7.  மோளபாளையம்  ஆகிய ஏழு ஊர்கள்
  





















  • குடியின கோத்திரம்
  • கோயங் கோத்திரம்

  • பட்டாபிஷேக பத்திரிக்கை




    Salem, Madras District Gazetteers, Vol 1, Part 1, 1918, Pg. 145: 
    "Each Nad has its Brahman Guru. The Guru of Morur and Molasi Nads is by caste a Gurukkal, and he lives in Natta-Kadayur i, in Kangayam Nad of Coimbatore. The Gurus of Malla-samudram and Parutti-palli Nads are also Gurukkal Brahmans, the Guru of the former living at Ayyam-palaiyam, in Paramati Division, his title being Immudi Sitambala Nayinar,and the Guru of the latter Nad residing at Kallan-kulam in Salem Taluk. The Guru of Rasipuram Nad is a Dikshitar and lives at Pasur in Erode Taluk."

    செங்குண்ணி கோத்திரத்தார் தாமிர சாசனம்::
    மோரூர், மொளசி, மோளிப்பள்ளி, வட்டூர், பெருச்சாளி நத்தம், மருதுறை, இருப்புலி, மானூர், வாழவந்தி, வெங்கரை, பாசூர், கொத்தனூர், கல்வடங்கம், காஞ்சிக்கொயில், புன்னம் ஆகிய காணிகளைச் சேர்ந்த செங்குண்ணி கோத்திரத்தார் மோளிப்பள்ளி கரியகாளியம்மன் சன்னிதியில் கலி 4794 (1696 கிறிஸ்தவ) வருடத்தில் கூத்தாடி கந்தப்பட்டன் பெண் அத்திப்பெண்ணுக்கு செங்குண்ணி கோத்திர மாணிக்கி என்று அர்பணித்தனர். அச்சாசனத்தில் சகலருடைய காணி தெய்வங்களையும் அந்துவ கோத்திரத்து ஆதிகுருவாகிய இம்முடி சிற்றம்பல நாயினாரையும் நினைத்து எழுதியுள்ளனர்.
    ".................இத்தியாதி தேவர்களுடைய கடாட்சத்தினாலையும் இம்முடி சிற்றம்பல சுவாமியார் பிரதாபத்தினாலையும்............................................................"

    செல்ல கோத்திரத்தார் தாமிர சாசனம்:
    சங்ககிரி, பருத்திப்பள்ளி, ஈரோடு, வெள்ளோடு, எளுமாத்தூர், குழவிளக்கு, இறாசம்பளி, அறச்சலூர், வாய்ப்பாடி, அஞ்சூர், ஆறுதொழு, வள்ளியறச்சல், தாராபுரம், வெஞ்சமாக்கூடல், மட்டுலகம், முட்டம், கடம்பை, குப்பம், குருமந்தூர், கோசனம், சதுமுகை, கறுகல்பாடி, திருமலைகிரி, ஆப்பக்கூடல், கொன்னையாறு, பிறசை, பாலமேடு, மொஞ்சனுர், அத்தனூர், நவனி, பட்லூர், ஆனங்கூர், இருப்புலி, கொக்களை, காவல்குறிச்சி, கச்சிவளியல், நெடுங்குளம், இடையாறு ஆகிய காணிகளைச் சேர்ந்த செல்ல கோத்திரத்தார் கொன்னையாற்று செல்லாண்டியம்மன் கோயிலில் கூடி கூத்தாடி கந்தப்பட்டன் மகள் அத்திப்பெண்ணுக்கு "தூர கோத்திர மாணிக்கி" என்ற பட்டம் அளித்தனர். நாட்டியமும், மெரமனையும் பருத்திப்பள்ளியில் நடந்தது. சாசனத்தின் முதல் சொல்லிலேயே குருவின் பெயரோடு துவங்குகிறது.
    "அப்பற்ச் சித்தம்பலக் குருசுவாமியார் அருள்பெற்ற செல்ல கோத்திரத்து வெள்ஆளர் குடுத்த செப்பேட்டுச் சாஸனம். குருபாதம் துணை. சிவ ரட்சிப்பார்..........."

    அந்துவ கோத்திரத்தார் தாமிர சாசனம்:
    பாலமேடு, இருப்புலி, மோடமங்கலம், அந்தியூர், நாகம்பள்ளி, லக்காபுரம், அலைவாய்ப்பட்டி, கீரனூர், திருவாச்சி, ஆதியூர், தெக்கலூர் ஆகிய காணிகளைச் சேர்ந்த அந்துவ கோத்திரத்தார் தங்கள் ஆதி காணியான பாலமேட்டில் கலி 4450 (1448 கிறிஸ்தவ) வருடத்தில் கூடி அந்துவ கோத்திரத்து மாணிக்கத்தி என்று அர்பணித்தனர். அச்சாசனத்தில் சகலருடைய காணி தெய்வங்களையும் அந்துவ கோத்திரத்து ஆதிகுருவாகிய இம்முடி சிற்றம்பல நாயினாரையும் நினைத்து எழுதியுள்ளனர்.
    "..................இம்முடி சிற்றம்பல குருக்கள் கிருபா கடாட்சத்திலேயும் கீழ்கரைப் பூந்துறை நாட்டிலிருக்கும் வேளாளர் கூடி தகடப்பாடியிலிருக்கும்........"

    தேவேந்திர கோத்திரத்தார் தாமிர சாசனம்:
    குமரமங்கலம், பொன்குறிச்சி, மொஞ்சனூர், கீரனூர், வேலம்பூண்டி, கூத்தனூர், வாங்கல் ஆகிய காணிளைச் சேர்ந்த தேவேந்திர கோத்திரத்தார் ஆதி காணியான குமரமங்கலம் பொன்காளியம்மன் கோயிலில் கலி 4885 (1784 கிறிஸ்தவ) வருடம் கூடி குமரமங்கலம் மலைபட்டன் பேத்தி முத்துவாழியை தேவேந்திர கோத்திர மாணிக்கியாக நியமிக்கின்றனர்.
    "இத்தியாதி தேவதைகளுடைய கிருபையும் இம்முடி சிற்றம்பல சாமியார் கடாட்சத்துனாலேயும்............................................."

    தூர கோத்திரத்தார் தாமிர சாசனம்:
    குமரமங்கலம், பட்டிலூர், சிராப்பள்ளி, பாலமேடு, முடுதுறை, கலியாணி, தும்பங்குறிச்சி, கீரம்பூர், கோதையூர், இடையாறை, பெருங்குறிச்சி, காங்கயம், தூரம்பாடி, மானூர், வெங்கம்பூர், முடக்குறிச்சி, பாசூர் ஆகிய காணிகளைச் சேர்ந்த தூர கோத்திரத்தார் தங்கள் ஆதி காணியான குமரமங்கலத்தில் பொன்காளியம்மன் சன்னிதியில் கூடி தூர கோத்திரத்து மாணிக்கத்தி அர்பணித்தனர்.
    "கொங்குனாட்டில் ஸ்ரீமது முள்வாய் சூழ்ந்த குன்றத்தூர் சங்ககிரி துற்கத்துக்குச் சேந்த கீழ்க்கரைப் பூந்துறைநாட்டில் பூறுவீக தெட்சிண கயிலாச அற்தநாரீசுரர் கிறுபா கடாக்ஷத்தினாலேயும் இம்முடிச் சித்தம்பல சுவாமி பாதசேகரர்......................."

    மடம் திருச்செங்கோடு அருகே அய்யம்பாளையத்தில் உள்ளது. 
    align="left">முத்துசாமிக்கோனார் "கொங்குநாடு" புத்தகத்தில்:








    முகவரி :
    சிதம்பரம் குருக்கள்,
    அருணகிரி அய்யம்பாளையம்,
    கந்தம்பாளையம் (வழி) ,
    திருச்செங்கோடு, 
    நாமக்கல் (DT).
    Mob: 94428 63234





    வெங்கம்பூர் காணி தெற்குப்புதுப்பாளையம் கிராமத்தில் சஞ்சார பூஜையின்போது இம்முடி சிற்றம்பல நாயனார் சுவாமிகள் (25.04.2018)

    8 comments:

    1. Hi!
      Can you please forward me more details on Aanthai Kootam (Murangam Annanmar swamy Koil). I called you .but no answer.

      Thank you
      Soma sundaram
      soma2uk@yahoo.co.uk

      ReplyDelete
    2. அன்புடையீர்!
      இப்படி ஒரு அருமையான வரலாற்று தகவல் நிறைந்த வலை தடத்தை மிக சிறப்பாக உருவாக்கிய உங்கள் கடினமான பணிக்கு எனது நன்றியை காணிக்கையாக சமர்பிக்கிறேன் ! மேலும் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!
      அன்புடன்,
      சோமசுந்தரம்
      த/பெ.பெருமாள் கவுண்டர்
      soma2uk@yahoo.co.uk

      ReplyDelete
    3. சென்ற மாதம் அருணகிரி அய்யம்பாளையம் மடத்தை சேர்ந்த தண்டிகருப்பணன் கோவிலுக்கு கிடா வெட்டுவதற்காக தெர்க்குபுதுபாலயத்திலிருந்து சென்றிருந்தோம். குரு அவர்கள் அங்கே வந்து பூஜை எப்படி செய்யவேண்டும் என விளக்கம் கூறிச் சென்றார். தண்டி கருப்பன்னசாமிக்கு மட்டுமின்றி மேற்கு மற்றும் வடக்கு பக்கத்திலிருக்கும் ஜன்னல் அருகேயும் படையலிட்டு ஆகாயக் கருப்பன்னனுக்கும் , நடுவநேரி கருப்பன்னனுக்கும் பூஜை செய்யுமாறு கூறினார். அது யார் ஆகாயக் கருப்பசாமி மற்றும் நடுவநெறி கருப்பண சாமி என்று விளக்கம் கேட்ட போது கீழ்க்கண்ட வரு கூறினார்:

      தற்போதைய அய்யம்பாளையம் குரு பீடம் முன்பு விஜயமங்கலத்தில் இருந்தது. குருபரம்பரையில் முன்னோர் ஒருவர் சஞ்சாரம் நிமித்தமாக பாலக்காடு சென்று திரும்பும் போது ஒரு ஊரில் இரவு தங்குகிறார்கள். அங்கெ வந்த ஊர் மக்கள் இங்கே தங்க வேண்டாம் எனவும் ஆகாயக் கருப்பு விளையாடும் இடம் என்றும் கூறுகிறார்கள். தங்கினால் ஆபத்து விளையும் எனவும் எச்சரிக்கிறார்கள். எனினும் குரு அவர்கள் அங்கேயே தங்குகிறார்கள். மறுநாள் காலையில் ஊர் மக்கள் கூடி வந்து குருவிற்கு என்ன ஆபத்து நேர்ந்ததோ என பார்க்கிறார்கள். குரு நலமாக இருக்கவும் ஆச்சரியப்பட்டு aakaaya வரவில்லையா என கேட்கிறார்கள். வந்தார்கள். விளையாடினார்கள். என்று குரு கூறவும், ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டு , இந்த கருப்பினைக்கண்டு நாங்கள் மிகவும் பயப்படுகிறோம். குருவானவர் தயவு செய்து இந்த ஆகைய கருப்ப்ன்னனையும் உங்கள் கூடவே கூட்டிச்ச்ன்று விட்டால் எங்களுக்கு மிகவும் சந்தோசம் என வேண்டுகிறார்கள். குருவும் சம்மதித்து நாளை கூட்டிச் சென்று விடுகிறேன் என உறுதி கூறுகிறார்கள். அப்படியே அடுத்த நாள் காலை ஊர் மக்கள் வந்த போது ஆகாயக் கருப்பண சாமி மற்றும் இரு கருப்பண்ண சாமிகளையும் ( தண்டி கருப்பண்ணசாமி, நடுவநேரிகருப்பன்ன சாமி) ஒரு குடத்தில் இட்டு வேடு கட்டி வைத்திருப்பதாகவும், குடத்தோடு கருபண்ண சாமி களை எடுத்துச் சென்று விடுவதாகவும் கூறுகிறார். ஊர் மக்கள் குடத்தில் கருப்பண்ண சாமிகள் இருப்பதை எப்படி உறுதி செய்வது என்று கேட்கிறார்கள். குடத்தை நீங்களே தூக்கி வண்டியில் வையுங்கள் என குரு கூறவும், ஊர் மக்கள் முயல்கிறார்கள் . குடத்தை தூக்க முடியவில்லை. குரு அவர்கள் கையைக்காட்டியதும் குடம் தானாக வண்டியில் மாற்றப்பட்டது. குருவும் கருப்புகளோடு ஊரை விட்டு கிளம்பினார். விஜயமங்கலம் வந்தவுடன் குருவிடம் ஆகாயக்கருப்பன்ன சாமி தன்னை இறக்கி விட்டுவிடும் படியும் தான் இங்கேயே இருந்து ஊர் மக்களுக்கு பாது காவலாக இருப்பேன் என்றும் வேண்டுகிறது. குருவும் ஆசீர்வத்திது அங்கேயே இருந்து காவல் காக்க வைத்து விடுகிறார். ஆகாசப் பாளையம் என அந்த ஊருக்கு பெரும் வைத்து விட்டு குரு ஐயம் பாளையம் கிளம்பி வந்து, தண்டி கருப்பன்னசமியை அய்யம்பாலயத்திலும், நடுவநேரிகருப்பான்சமியை எடப்பாடி அருகிலுள்ள வேப்பநேரி யிலும் தங்கி மக்களுக்கு அருள் பாலிக்கும் படி கூறுகிறார். அதனால்தான் ஆகயக்கருப்பனுக்கு மேற்கு திசை நோக்கியும், நடுவநேரி கருப்பனுக்கு வடக்கு திசை நோக்கியும் இன்றும் பூசை தொடர்ந்து தண்டிகருப்பணன் கோவிலில் நடைபெறுகிறது. நடுவநேரிக்கருப்பன்ன சாமியின் பராமரிப்பு இன்றும் ஐயம் பாளையம் குகுக்கள் வசமே உள்ளது. மேலும் தகவலுக்கு: திரு. குப்புசாமி 9688071799 தண்டி கருப்பண்ண சாமி கோவில், திரு. தங்கராஜு 94431 84259 விஜயமங்கலம் கருப்பு சாமி கோவில்.

      ReplyDelete
    4. மிகவும் அருமையான தகவல்..... தூரன் குல கொங்கு நண்பர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய விசயம்....
      மேலும், குலகுருவை சந்தித்து ஆசிபெற வாழ்த்துக்கள்.....

      ReplyDelete
    5. அழிந்து வரும் பாரம்பரியத்தை மீண்டும் நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி,
      உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்,

      ReplyDelete
    6. அருமையான பதிவு... மிக்க மகிழ்ச்சி...

      கி. இரமேஷ்
      வெண்ணந்தூர்
      krramesh7@gmail.com

      ReplyDelete
    7. அறுமையான பதிவு வாழ்த்துக்கள் நமது குலகுரு இருக்கும் விபரம் நமது சொந்தங்களுக்கும் நமது குழந்தைகளுக்கு பங்காளிகளுக்கு சொல்லி குல குருவின் அருமை பெருமைகளை விளக்கி அவர்களும் குருவை சந்தித்து ஆசி பெற நாம் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். நம் பின்வரும் தலைமுறைகளுக்கு அதை இவற்றை சொல்லி வளர்ப்போம் நன்றி

      ReplyDelete

    Note: Only a member of this blog may post a comment.