குலகுரு மடங்கள்

Tuesday, September 1, 2009

கொங்க குலகுருக்கள் 1B. பாசூர் பெரிய மடம்

கொங்கு குலகுருக்கள் 1B. பாசூர் பெரிய மடம் - மேல்கரைப் பூந்துறை நாடு (பிரிவு), ராசிபுரம் நாட்டு  வெள்ளாளர் (கோணமடு ஊர் தவிர்த்து முழுமையும்), அகரம் வெள்ளாஞ் செட்டியார் (சேலம், நாமக்கல் ஜில்லாக்கள்), 12ஆம் செட்டியார் (பிரிவு) குலகுரு.

    
                 



குரு பாரம்பரியம்:
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே. 


ஶ்ரீ நந்திதேவர்
|
|
|
நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளா அது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யானிருந் தேனே.
திருமூலதேவ நாயனார்
|
|
|
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி ஆமே.

கலந்தருள் காலாங்கர்‌ தம்பால்‌ அகோரர்‌ 
நலந்தரு மாளிகைத் தேவர்‌ நாதாந்தர்‌ 
பலங்கொள்‌ பரமானந்தர்‌ போகதேவர்‌    நிலந்தரும் மூலர்‌ நிராமயத்தோரே.


ஶ்ரீ காலாங்கி கஞ்சமலையன்
|
|
|
வந்த மடம் ஏழு மன்னுஞ்சன் மார்க்கத்தின்
முந்தியுதிக்கின்ற மூலன் மடவரை தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரஞ் 
சுந்தர ஆகமச் சொல்மொழிந்தானே.

ஶ்ரீ கஞ்சமலை தவராஜ பண்டிதர்
|
|
|
ஶ்ரீ கவிராஜ குரு 

 ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் துணை   

              ஸ்ரீ கவிராஜ குருப்யோ நம:

மடாதிபதி காசிவாசி Y. வெங்கடேச தீக்ஷதர் வீட்டுடன் பெரிய மடம்

பல்லக்குகள்



மடத்தின் உட்புறம்

வெள்ளோடு ராசா கோயிலில் பண்டைய குலகுரு தீக்ஷதர் சிற்பத்தூண்





 பரமேஷ்டி பாசூர் பெரிய மடாதிபதி 
வெ. எக்ஞேவர தீக்ஷதர்


பரம குரு பாசூர் பெரிய மடாதிபதி
ஒய்.வெங்கடேச தீக்ஷதர் (Ex MLA)

"திருவானைக்காவல் ஆயிரவரான மகாசைவ சோழிய பிராமணரான இவர், கொங்கு வேளாளர், அகரம் வெள்ளாஞ் செட்டியார் குலகுருவாகப் பாசூர் பெரிய மடம் மடாதிபதியாகவும் இருந்து 2006 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். மேற்படி சமூகங்கள் படிப்பறிவு அடைய திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் ஈரோடு பகுதியினரான தனது சீடர்கள் பெருமளவில் சேர்ந்து படிக்கக் காரணமாக மடாதிபதியான இவர் குடும்பம் இருந்ததால், இவரை ஈ.வே.ரா வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதனால் ஶ்ரீரங்கம் ஈ.வே.ரா சிலை இவரை வைத்தே திறக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டும் அங்கு உள்ளது."

பிரம்ம தண்டம்

பாதுகைகள்



2024 அமாவாசை புண்ய தின ஸ்ரீ சங்கிலி கருப்பண ஸ்வாமி முப்பூஜை சீர்கூடை பூஜை. சிஷ்யரான ராசிபுரம் வெளிய கோத்திர நாட்டுக்கவுண்டர் சந்திரகண்ணன் ஆவுச்சீக்குச் சாமி வாக்குத்தரல்.

பாசூர் மட குரு பாரம்பரியம்:


 


குரு பரம்பரை:

ஶ்ரீ நந்தி

கைலாயம்


ஶ்ரீ சுந்தரர் திருமூலர்

கைலாயம் 


8000 BCE - அகத்தியரது முதற்சங்ககாலம்



ஶ்ரீ காலாங்கி கஞ்சமலையன்

கஞ்சமலை


மடம் ஸ்தாபனம்

கலிங்கதேசம் வேதமங்கலம் - கொங்கதேசம்

மடாதிபதிகள்: 

சேரர், செட்டி சிவப்பிராமணர் காலம்

கொங்கதேசம்

ஶ்ரீதவராஜ பண்டிதர் மடம்


Circa 900ல் சேரமான் பெருமாள் கைலாயம் செல்கையில் கொங்கதேசத்தின் குரு


கஞ்சமலை காடையாம்பட்டி

வித்யாநகரம் - பாண்டியர்


கொங்கதேசம்

கஞ்சமலை காடையாம்பட்டி ஶ்ரீ கவிராஜ குரு மடம்


1485/1504 - திருவானைக்கோயில் ஆயிரவரான மகாசைவ சோழிய அந்தணச் சிறுவர்களை பரம்பரையாக ஏற்றல்


1695/96 - பெரிய மடத்திற்குச் சுவீகாரம் எடுத்தது

கஞ்சமலை காடையாம்பட்டி

வித்யாநகரம்
(விஜயநகரம்) 
கொங்கதேசம் -  பூந்துறைநாடு

1504/05 - பிரபுடதேவ ராயர்,நாகம நாயக்கர் காலத்தில் பாசூர் பட்டவர்த்தி கிராமம் மானியம்.மடம் பேரோட்டிலிருந்து பாசூர் மாற்றமானது.
பேரோடு (பிரமகுட்டைத்தயிர்ப்பாளையம்) ஊரிலிருந்து பாசூரில் ஸ்தாபனம்
 மைசூர் 

கொங்கதேசம் -  பூந்துறைநாடு
1689/90- ஒரே மடமாக இருந்தது

1695/96 - பெரிய,சின்ன மடங்கள் கட்டாயம் பாகப்பிரிவினை


1696/97 - மைசூர் துரைகள் சிக்கதேவராஜ உடையாரின் ஊமை மகன் "மூக்கரச" எனும் கண்டீரவ நரசராஜ உடையாரை பேச வைத்தது.இதற்காக பெரிய மடம் கொடுமணல் கிராமம் மானியமாக பெற்றது.
https://en.m.wikipedia.org/wiki/Kanthirava_Narasaraja_II

1646/47-1739/40 - அமைதியான காலம்

1740/41 - பத்தே சிங் கலாபத்தில் மடம் கொள்ளையடிப்பு

1741/42 - 1763/64 - ஹைதர் அலி காலத்தில் மானியப்பணத்தை கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்பட்டது.

1764/65 - ஹைதர் அலி காலத்தில் மீண்டும் மானியங்கள் ஒழுங்கமைக்கப்பட்டது 1767/68

ஆவணி/கார்த்திகை- கும்பினி வரி வாங்கியது

1767-68 மார்கழி - ஹைதர் அலி மீண்டும் சர்வமானியம் ஆக்கியது

1782/83 - 1799 - டீப்பு சுல்தான் பாசூர் மானியத்தை ஜப்தி செய்தது
பாசூர்
சாக்கிய யூத பிரீமேசன் கும்பினி  வெள்ளையர்
கொங்கதேசம் – பூந்துறைநாடு
1799/1800 - கும்பினி பாசூர் மானியத்தை ஜப்தி செய்தது.பட்டவர்த்தி சாதாரண சொத்தாக தாசில்தார் கிருஷ்ணய்யரால் அறிவிப்பு

1801-02 - மடம்,மானியங்கள்,தேவஸ்தானம் ஆகிய சொத்துக்கள் கல்வி,மதம்,மருத்துவத்தை அழிக்க திட்டமிட்டு கும்பினியால் பிரிப்பு
பாசூர் 

பெரிய மடம் - சின்ன மடம் பிரிவினை:
மதுரை நாயக்கர் ஆட்சி முகலாயரின் ஆற்காடு நவாப்பால் வீழ்ந்த பதினேழாம் நூற்றாண்டில், மைசூரார் வந்து ஈரோட்டில் மதுரையைத் தோற்கடித்துக் கொங்கதேசத்தைக் கட்டிக்கொண்டனர்.

1689-90 வரை பாசூர் மடம் ஏக மடமாக பிரம்மச்சாரி மடாதிபதியால் ஆளப்பட்டு வந்தது. அச்சமயம் இருந்த மடாதிபதி மைசூர் மன்னனின் மகனுக்கு ஊமை போக்கி உதவியதால் கொடுமணல் கிராமம் மடாதிபதிக்கு மானியமாக வழங்கப்பட்டது. சிஷ்யர்களுக்குள் மதுரை - மைசூர் எனக் கட்சி பேதங்கள் உருவாயின. இதனால் மடாதிபதி, தனது தம்பியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாரம்பரிய முறைப்படி தம்பியின் மூத்த மகனை ஸ்வீகாரம் எடுத்து, அடுத்த பிரம்மச்சாரி மடாதிபதியாக அமர்த்த மறுத்தார். மேலும் மைசூரார் கட்சி சார்பாக திருச்சி பெருவளப்பூரில் குலதெய்வம் கொண்ட ஒரு உறவுக்கார இளைஞனை ஸ்வீகாரம் எடுத்து மடாதிபதியாக அறிவித்தார்.

இதனை அறிந்த அன்றைய நாட்டுப்பெரியதனம் பூந்துறை குப்பக்கவுண்டன்வலசு மணியகாரர், கவிராஜ குருவின ஆணைப்படி நசியனூர் அங்காளாயி கோயிலுக்குச்சேர்ந்த கௌண்டின்ய கோத்திரத்துத் தம்பி மகனே ஸ்வீகார பிரம்மச்சாரி மடாதிபதியாக வரவேண்டும்,  அன்னியத்தில் ஸ்வீகாரம் செல்லாது என அறிவித்து, தம்பி மகனுக்குக் கவிராஜ குரு பூஜையுடன்  கஸ்பா பாசூரில் பட்டம் கட்டினார். இதற்கு மைசூர் ஆதரவு எடுத்திருந்த குமாரவலசு தலைமையிலானோர் ஒத்துக்கொள்ளாமல், பெருவளப்பூர் பிரம்மச்சாரியை குருவாக  ஏற்றனர். மைசூர் கட்சியினரான ராசிபுரம் நாட்டுக்கவுண்டர்களும் அவ்வாறே ஏற்றனர்.

இவ்வாறு பழைய நசியனூர் அங்காளம்மன் கோயிலுக்குச் சேர்ந்த தம்பி மகனது பங்கு சின்ன மடம் என்று கஸ்பா பாசூரிலும், பெருவளப்பூர் ஸ்வீகார பிரம்மச்சாரியினது பங்கு பெரிய மடம் என்றும் மடத்தினை 1695/96இல் பாகப்பிரிவினை செய்து கொண்டனர்.

பெருவளப்பூர் ஸ்வீகார பிரம்மச்சாரி கஸ்பா பாசூரிலிருந்து வெளியேறி முக்குடி வேலம்பாளையத்தில் பெரிய மடம் என்று கட்டி அமர்ந்தார். ஸ்வீகாரம் வந்தவர்கள் ஆதலால் கவிராஜ குரு காசியில் சமாதியான தை கிருஷ்ணபக்ஷ துவாதசியில் பெரிய மடத்தில் பிராமண சமாராதனை செய்து கொள்கின்றனர். நேர் வாரிசுகள் ஆதலால் சின்ன மடத்திலோ கவிராஜ குருபீடமான பேரோடு பிரமகுட்டைத் தயிர்ப்பாளையத்தின்  மண்ணை எடுத்து மடத்தில் பீடம் (சிறு மேடை) அமைத்து அதன்மேல் அமர்ந்து ஆசார்ய அபிஷேகம் செய்துகொள்கின்றனர்.

இதன்பின் ஒருவர் மடத்துவாசலை மற்றார் மிதியோம் என்று இருதரப்பும் விளக்கணைத்துச் சத்தியமும் செய்து கொண்டனர்.


பெரிய  மடத்திற்கு மானிய காணி ஊர்கள் (கொங்கு நாடு): 
  1. பேரோடு (பூந்துறை நாடு)
  2. பாசூர் (பூந்துறை நாடு) 
  3. கொடுமணல் (குறுப்பு நாடு)
  4. குருக்கள்புரம் (ராசிபுர நாடு) 
                            மடத்திற்கு சேர்ந்த கொங்க தேசத்து நாடுகள்:

நவீன காலத்தில் சீடர்களை முன்னேற்ற மடத்தின் பணிகள்:


"திருவானைக்காவல் ஆயிரவரான மகாசைவ சோழிய பிராமணரான இவர், கொங்கு வேளாளர், அகரம் வெள்ளாஞ் செட்டியார் குலகுருவாகப் பாசூர் பெரிய மடம் மடாதிபதியாகவும் இருந்து 2006 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். மேற்படி சமூகங்கள் படிப்பறிவு அடைய திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் ஈரோடு பகுதியினரான தனது சீடர்கள் பெருமளவில் சேர்ந்து படிக்கக் காரணமாக மடாதிபதியான இவர் குடும்பம் இருந்ததால், இவரை ஈ.வே.ரா வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதனால் ஶ்ரீரங்கம் ஈ.வே.ரா சிலை இவரை வைத்தே திறக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டும் அங்கு உள்ளது."
10:17 முதல் 12:02 வரை தீக்ஷதர் பற்றி


மேலும், ஈ.வே.ரா ஜனதா கட்சி மேடையில் நேரடியாகத் தலையிட்டு, "எங்க சாமியாருக்கு (ஒய். வெங்கடேச தீக்ஷதர்) MLC சீட்டு கொடுக்கோணும்" என்று வாங்கித்தந்த வரலாறும் உள்ளது. தங்களது "பாசூர் சாமியார்" என்று காமராஜரால் மேடைக்கு அழைக்கப்பட்டு கைகளால் வெள்ளிக் காப்பு அணிவிக்கப்பட்டவர்.

1900கள் முதல், மடத்தின் சீடர்களான கொங்க நாட்டுமைப் புலவர்களிடம் திண்ணைப்பள்ளியை (Traditional Elementary Education)

http://kongupulavanars.blogspot.com/?m=1 முடித்து, குருகுல மேற்படிப்புக்காகத் தங்களிடம் வரும் சீடர்களை மடமே ஆங்கிலம் உள்ளானவற்றைப் பயிற்றுவித்ததற்கான ஏடுகள் இன்னும் பெரிய மடத்தில் உள்ளன. அதற்கு மேல் மேற்படிப்பு முடித்தால்தான் ஆங்கிலக்கல்வியில் பின்தங்கியிருந்த சீடர்கள் முன்னேற முடியும் எனப் போட்டி போட்டுக்கொண்டு சின்ன மடமும், பெரிய மடமும் முன்னேறிய சமூகங்களாக (FC) சர்க்காரால் அன்று அறிவிக்கப்பட்டிருந்த கொங்கர் சமூகங்களை தங்கள் பொறுப்பில் (Guardianship) திருச்சி St.Jospeh's கல்லூரியில் சேர்த்துவிட்டனர். இதனால்தான் அக்காலத்தைய கவுண்டர்களும், செட்டியார்களும் அன்றைய அகண்ட கோவை ஜில்லாவின் தலைநகரான கோவையில் படிக்காமல், மடாதிபதியின் சம்மந்திகள்  ஊரான திருச்சியில் படித்தனர். இவ்வாறு மடாதிபதிகள் உந்துதலில் திருச்சி தேசியக்கல்லூரியில் படித்த சின்ன மடம் (நாட்டுப்புறம்)த்தின் சீடரும்,  இக்கட்டுரை ஆசிரியரின் பெரிய அப்பாறும், எழுமாத்தூர் பனங்காடை கோத்திர பட்டக்காரர் வம்சத்தில் பிறந்த பேராசிரியர் C.A.பழனிசாமி B.A B.L (Former TNPSC Board Member, Former Principal of Madras Law College) தான் சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத்தினை அமைத்தார். பிரீமேசானியர்களான பொள்ளாச்சி C.சுப்பிரமணியம், பழையகோட்டை N.S.S மன்றாடியார் ஆகிய மிட்டா மிராசு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு துரோகங்களையும் மீறி, 1975இல் சமூகம் பிற்பட்ட சமூகமாக அறிவிக்கப்படக் காரணமாக இருந்தார்: http://kongupattakarars.blogspot.com/2011/03/1.html?m=1  

கூட்டங்களின் பட்டியல்:

  1. பூந்துறை காடை  கோத்திரம், 
  2. வெள்ளோடு சாத்தந்தை  கோத்திரம்,  பயறன்  கோத்திரம், 
  3. நசையநூறு கண்ணன்  கோத்திரம் , செம்பன் கோத்திரம் ,  பூச்சந்தை  கோத்திரம்,  கூறை  கோத்திரம்,  கீறை  கோத்திரம்,  பாண்டியன்  கோத்திரம்,  யீஞ்சன்  கோத்திரம், 
  4. யெழுமாத்தூறு  ஊராட்சிக்கோட்டை  பனங்காடை  கோத்திரம்,  செல்லன்  கோத்திரம்,  காறி  கோத்திரம்,
  5. அனுமன்பள்ளி செல்லன்  கோத்திரம் 
  6. அனுமன்பள்ளீ கூடலூரு பண்ண  கோத்திரம், 
  7. யீங்கூறு ஈஞ்ச  கோத்திரம் 
  8. முருங்கத்தொழுவு பெரிய  கோத்திரம், 
  9. கனகபுரம் இலவமூலை சாத்தந்தை  கோத்திரம், 
  10. கொடுமணல் பனங்காடை  கோத்திரம்,  பாண்டியன்சேரன்  கோத்திரம் 
  11. ராசிபுரம் வெளிய ( விழிய )  கோத்திரம் நாட்டுக்கவுண்டர்கள்

மோகனூரு கறூரு பஞ்சமாதேவி நெறூரு கோயம்பள்ளி மயில்ரெங்கம்  கொங்க பனிரெண்டாம் நகரத்து செட்டியார்கள் (பிரிவு)

கொங்க அகரம் 
வெள்ளாஞ் செட்டியார்கள் (கீழ்கண்ட ஊர்கள்)


தற்போதைய முகவரிகள் 
(உங்கள் ஊர்,பெயர்கள் எந்த தலைக்கட்டு கணக்கு கீழ்கண்டவர்களில் எவரது பதிவேட்டில் உள்ளதோ,அவரே குலகுரு):


20, வடக்கு ரத வீதி,   திருவானைக்காவல் திருச்சி  - 620005 இலும், பாசூர் பெரிய மடத்துக் கிழக்கு வீட்டிலும் குடியிருந்து, மடத்தில் பட்டத்திலிருந்த திருவானைக்கா ஆயிரவரான மஹாசைவ  சோழிய அந்தணர் ஒய். வெங்கடேச தீக்ஷதர் Ex MLA, 2006இல் காசிவாசியானார்.  அவரது மகன் வழக்கறிஞர் ராஜகோபால். ராஜகோபாலுக்கு மகன் மதுபிரகாஶ் என்பவர் உள்ளார். எண்: +91 6369 513 537

பாசூர் பெரிய  மடம்,
6/5, முக்குடி வேலம்பாளையம் ரயில்வே கேட் எதிரில்,
பாசூர் கிராமம்,
கொடுமுடி வட்டம்,
ஈரோடு மாவட்டம்

பொன்: 9994920378 (நாகராஜ், பராமரிப்பாளர், பெரிய மடம், பாசூர்)

மடத்தின் பெண் வழி பேரர், துங்கா சிருங்கேரி மடத்தின் திருப்பூர் தர்மாதிகாரி CA ராமநாதன் ஷர்மா மற்றும் அவரது கூட்டாளிகளான BJP அண்ணாமலை, BJP கனகசபாபதி கவுண்டரோடு இணைந்து, மடத்தின் நந்தி, திருமூலர் வழி சித்தாந்த சைவ பாரம்பரியத்திற்கு விரோதமாக பாசூர் பெரிய மடத்தினை துங்கா சிருங்கேரி சன்னியாசி மடத்தின் உபபீடம் என்று கூட்டாக பதாகைகள்/பத்திரிக்கைகள் மூலம் அறிவித்து, மட சொத்துகளை நிர்வாகம் செய்து வருகின்றனர்: https://sringeri.net/2022/04/26/news/konga-desha-aadheenam-has-darshan.htm



பெண் வழி மாற்று பிராமண ஜாதி  வாரிசுகளை  தன்னிச்சையாக மடாதிபதியாக அறிவித்த BJP அண்ணாமலை ஆதரவு துங்கா சிருங்கேரி சங்கராச்சாரியார், மடத்தை சிருங்கேரியின் உபபீடமாக அறிவித்து மட சொத்துகளை விற்க, பூஜை விக்ரஹங்களை மேற்பார்வை செய்ய திருப்பூர் தர்மாதிகாரி CA ராமநாதன் ஷர்மா சிருங்கேரியிலிருந்து மேற்கண்ட வரம்புமீறிய சான்றிதழ்களை மடத்தின் பாரம்பரியத்துக்கு விரோதமாக வாங்கிக்கொடுத்துள்ளார்.

சிஷ்யர்களின் அசட்டையால் இத்தனை கொடுமைகள் சிருங்கேரி B.L.சந்தோஷ் அடிமையான அண்ணாமலை BJPயால் நடக்கின்றன.


பாசூர் பெரிய, சின்ன (நாடு), சின்ன (நாட்டுப்புறம்) மடங்களுக்கான சிஷ்யர்களது ஊர்-கோத்திர-குடிகள் தலைக்கட்டுப் பட்டியல் (இருவிரல்களால் விரித்துப் பார்க்க):
ராசிபுரம் நாட்டுக்கவுண்டர்கள் வெளிய கோத்திரம் தலைக்கட்டு ஏடு(1929)(இருவிரல்களால் விரித்துப் பார்க்க)::
https://pasursishyas.blogspot.com/2023/03/1929.html?m=0

ராசிபுரம் நாட்டுக்கவுண்டர்கள் வெளிய கோத்திரம் தலைக்கட்டு ஏடு(1936 -1937)(இருவிரல்களால் விரித்துப் பார்க்க)::
https://pasursishyas.blogspot.com/2023/04/blog-post_28.html?m=0

அகரம் வெள்ளாஞ்செட்டியார் தலைக்கட்டு ஏடு(1930) (இருவிரல்களால் விரித்துப் பார்க்க):

பாசூர் பெரிய மடம் சிஷ்யர்கள் தலைக்கட்டு  பதிவேடு (பெரிய மடம்):

மேற்கண்ட பட்டியலில் ஊர்/ கோத்திரம் தலைக்கட்டு கணக்கு இல்லாதோர் சின்ன (நாடு), சின்ன (நாட்டுப்புறம்) மடங்களுக்கான சிஷ்யர்களது ஊர்-கோத்திர-குடிகள் தலைக்கட்டுப் பட்டியல்களில் தேடவும்:

https://pasursishyas.blogspot.com/2023/04/blog-post.html



வந்தே கவிராஜகுரு பரம்பராம்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.