Friday, September 4, 2009

கொங்கு குலகுருக்கள் - 46.பழங்கரை வள்ளல் மடம்


 திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளல் குருஸ்வாமிகள் - பழங்கரை மடாதிபதி 
தற்போதைய குலகுரு சுவாமிகள் அப்புக்குட்டி குருக்கள் 

பழங்கரை மடத்து சிஷ்யர்கள் :

1.    கொங்க வெள்ளாள கவுண்டகளில்,
a.    முளையாபூண்டி பிள்ளையப்பம்பாளையம் காடை கோத்திரம்
b.    ஆலத்தூர்  - கன்ன கோத்திரம் 
(புஞ்சை புளியம்பட்டி அருகே பட்டிலிங்கம்பாளையம்  கன்னிமார் கோயிலுக்கு சேர்ந்தோர். ஆதியில் கன்னிவாடியில் இருந்து வந்தோர் கீழ்கண்ட ஊர்களில் வசிக்கின்றனர்)

1.      செம்மம்பாளையம் (சீனிகல்தோட்டம், தண்ணீர்பந்தல்பாளையம்)
2.      அம்மாபாளையம் 
3.      சங்கபாளயம்     
4.      முருககவுண்டன்புதூர்  
5.      அவிநாசி செம்பாக்கவுண்டம்பாளையம்
6.      தொட்டியபாளையம்    
7.      செல்லப்பாளையம்     
8.      சங்கம்பாளையம் 
9.      ஆலத்தூர்   தொட்டிபாளையம்
10.   செல்லப்பம்பாளையம்  
11.   அரசூர்     
12.   நம்பியாம்பாளையம்    
13.   சின்னகானூர்    
14.   சத்தியமங்கலம்  
15.   மனியாரம்பாலையம் (கோவை)
16.   சின்னகானூர்    
17.   அரசூர்     
18.   தண்ணீர்பந்தல்பாளையம் (வட்டக்காடு)
19.   முருகக்கவுண்டன்புதூர் 
20.   மல்லீம்பட்டி     
21.   முருகக்கவுண்டன்புதூர் 
22.   கவுண்டாயிபுதூர் 
23.   கண்டிசாளை - ஓடக்காடு
24.   சங்கரந்தோட்டம்  நல்லிகவுண்டம்பாளியம்புதூர்
25.   சின்னவேடம்பட்டி
 
2.    பால வெள்ளாளர கவுண்டர்களில்,
a.    கவசகுண்டல கோத்திரம் (ஒற்றை சங்கு) – சேவூர் என்னும் செவளாபுரி நாடு – துரவலூர் அண்ணமார்
b.    பைசல்ய (பைத்தலை) கோத்திரம் – சேவூர் அங்காளம்மன்
c.    கொண்டத்துகாளியம்மன் கோயிலை சேர்ந்த பால வெள்ளாள கவுண்டர்கள்

3.    பத்துக்குடி செட்டியார் (கோவிலன் செட்டியார் வம்சம்)


அவினாசி பழங்கரை மட வரலாறு

சீகாழித் தலத்திலே சுத்த சைவ மரபில் வந்த சிவபாதஇருதயர்க்கு முருகப்பெருமானின் அவதாரமாக ‘திருஞானசம்பந்தவள்ளலார்’ தோன்றினார். அவரிடம் உபதேசம் பெற்று சீகாழியில் ‘திருஞானசம்பந்தவள்ளலார்’ மடாலயம் ‘திருநேரி தேசிகர்’ என்பவர் திருஞானசம்பந்தபெருமானாலேயே தோற்றுவிக்கப்பட்டது. அம்மடத்தின் பிற்காலத்தில் (1500 A.D.) தோன்றிய சட்டநாதபண்டாரவள்ளல் சந்நிதி கொங்கு ராச்சியத்தில் தலையூரில் மடாதிபதியாக சிஷ்யார்ச்சனையும், தேவாரம் திருவாசகம் வெளங்கும்படியும் செய்து இருந்து வந்தார். அம்மடத்தில் தோன்றிய  வெள்ளைத் தம்பிரான் (வள்ளல் தம்பிரான்) இளமையிலேயே சைவ சித்தாந்த சாத்திரத்திலும் வல்லவரானார். வள்ளல் தம்பிரான் சுவாமிகள் காசி யாத்திரை செய்யக்கருதி, தமது செல்வத்தில் ஒரு பகுதியை (பொற்காசுகளை) ஒரு கைத்தடியில் துளையிட்டு அடைத்து கைத்தண்டமாகக் கைக்கொண்டு  காசித்தலத்தை அடைந்தார்.

ஒருநாள் வள்ளல் தம்பிரான் சுவாமிகள் கங்கைக்கரையின் அருகில் ஒரு படிக்கட்டில் பூசைப் பெட்டகத்தையும் கைத்தடியையும் வைத்துவிட்டுக்கங்கை  நதியில் இறங்கிஸ்நானம் செய்து எழுந்தார். கங்கை நீரின் அலைமோதுதலால் கைத்தண்டம் கங்கையில் மூழ்கியது. பின்பு அது அவினாசிக்கங்கையில் வந்து சேர்ந்தது. அவினாசி கோயில் சிவாச்சாரியார்கள் கங்கைக் கிணற்றில் அத்தண்டம் கிடப்பதைக் கண்டு எடுத்து, ஸ்ரீ கருணாம்பிகை கருவறை சுவரில் சாற்றி வைத்தார்கள். காசிக்கங்கைக்கரையில் கைத்தண்டத்தை இழந்த வள்ளல் தம்பிரான் ஞானதிருஷ்டியில் தமது கைத்தண்டம் அவினாசிஸ்தலத்தில்  கருணாம்பிகை கர்ப்பகிரக சுவரில் சாற்றப்படிருப்பதை உணர்ந்தார். உடனே, தமது ஆன்மார்த்த பூஜையை முடித்து விஸ்வநாதரையும் தரிசித்து குளிகை இட்டு ஆகாயமார்க்கமாக அவினாசி வந்து சேர்ந்தார்.  கருணாம்பிகையின் அருளால் தனது கைத்தண்டத்தை சிவாச்சாரியார்களிடமிருந்து பெற்றார்.  பின்பு தனது காசுகளை செலவிட்டு அவினாசி கோயிலில் பைரவரை அமைத்தார். பின்பு நல்லாத்தின் வடகரையில் மடாலயம் அமைத்து தங்கி இறைசேவை புரிந்துவரும் காலத்தில் அவினாசியப்பரின் தேர் வந்தது. அப்போது கொங்கு சோழஅரசனான  வீரவிக்கிரம சோழியாண்டாக்கவுண்டர் அவர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க நினைக்கையில் தேர் நகரவில்லை. ஒண்டிப்பிலி மந்திரவாதியின் சதியால் தேர் நாற்ச்சக்கரத்திலும் பூதத்தால் கட்டப்பட்டது. வீரவிக்கிரமன் கருணாம்பிகையை வேண்டி இருக்கையில் கருணைத்தாய் வெள்ளைத் தம்பிரானிடம் இந்த விஷயத்தை உரைக்கவே,  அவரும் அரசரை வினவ அரசனும் இந்த தேரை தாங்கள் ஓட்டுவித்தால் தங்களை குருவாக ஏற்று தனது அவினாசி கோயில் முதல்மரியாதையையும் அவருக்கே தருவதாக கூறினான். பின்பு சுவாமியார் ஒண்டிப்பிலியின் பூதத்தை அவினாசியின் நாற்த்திக்கிலும் பிரதிஷ்டை செய்து அரை நாழிகையில் தேரை ஒட்டிகாண்பித்தார். அதன் பிறகு வெள்ளைத்தம்பிரான் சிஷ்யார்ச்சனை செய்து பலகாலம் வாழ்ந்து பல மகிமைகள் புரிந்து கோயிலின் வடபுறம் நல்லாற்ங்கரையில்   ஜீவசமாதியடைந்த்தார். இன்றும் அவரது சமாதி வழிவிடு விநாயகர் சன்னிதியாக  உள்ளது. பிற்காலத்தில் வீரவிக்கிரம ராஜாவான சேவூர் பைசல்ய கோத்திர சிஷ்யர்களாலும், மைசூர் ராஜாவாலும் வெள்ளைத்தம்பிரான் அவர்கள் குருமடத்திற்கு அவினாசிக்கு கிழக்கே சட்டநாதநல்லூர் எனும் கிராமம் தோற்றுவிக்கப்பட்டு பின்பு குருவின் மகிமைகளால் பழங்கரை என வழங்கலாயிற்று.

தலையூர் மடத்து மடாதிபதி பழங்கரை மடாதிபதியாக பழைய சிஷ்யர்களுடன்  பரிபாலித்து சாம்ராஜ்ஜிய பட்டத்தோடு விளங்கினார். தற்போதும் அவினாசி கோயிலில் சித்திரைத்திருவிழாவில் முதல் மரியாதை பெற்றுவருகின்றனர் அவரது குருபரம்பரையினர்.

பழங்கரை மட்டுமின்றி தலையூரிலும், மயில்ரங்கத்திலும் திருஞானசம்பந்தவள்ளலார் மடத்து மடாதிபதிகள் இன்னும் தனித்தனி சிஷ்யாக்களை பெற்று மூன்று மடங்களாக பிரிந்து பரிபாலனம் செய்து வருகின்றனர்.



கொங்கு நாடு வந்த திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளலார் மட வரலாறு

பூர்வத்திலே ஒருகாரணமாயி சுப்பிரமணிய சுவாமி ‘சீர்காழிபுரம்’ வாசமான கவுணிய கோத்திரமான ‘சிவபாதஹிருதயர்’ அவருக்குப்புத்திரராகப் (பொ)(பி)றந்து, சீர்காழிபுரத்தில் வாசமாயிருக்கும் காலத்தில் ஒரு காரணார்த்தமாக சிவபூசா காலத்திலே அந்தக்குழந்தை ரோதனம் பண்ணின சத்தத்தைக்கேட்டு பார்வதியும், பரமேஸ்வரரும் புத்திர வாஞ்சையினாலே தன்னுடைய ஸ்த்தன்னியத்திலே பாலு பெருகினபடியினாலே அந்தப்பாலே(லை) பொற் கின்னத்தில் கறந்து அந்தக் குழந்தைக்குப் பார்ப்பதியுனுடைய அனுகிரகத்தினாலே ஞானம் வந்து ‘திருஞானசம்பந்தவள்ளலார்’ என்று பேர் வரப்பட்டது. அதின் பேர்கால் திரி(ரு)ஞானசம்பந்த மூர்த்தியானவர் பூமண்டலத்திலே இருக்கப்பட்ட சிவஸ்தலங்களை எல்லாம், பாடலாகத் ‘தேவாரம்’ என்னப்பட்ட தமிழ்க்கிரந்தங்களை சொல்லிப்பிராம்மணர் முதலான பேர்களுக்கு அப்பியாசம் பண்ணும் இடத்தில், வெளங்க மாட்டதென்று தோன்றப்பட்டுத் தமக்குப் பக்தனாயிருக்கப்பட்டபூலஷ்சிய சாதியாயிருக்கப்பட்ட ‘திருநேரி தேசிகர்’ என்னப்பட்டவருக்கு உபதேசம் பண்ணி ஞான உபதேசத்தினாலே யோக்கியம் உண்டாக்கியும், மேற்ப்படி தேவாரம் என்னப்பட்ட கிரந்தங்கள் வெளங்கும்படியாகி நேமகம் பண்ணினார்.

திரிஞானசம்பந்த மூர்த்திகளுடைய அனுகிரகத்தினாலே ‘திருநேரி தேசிகர்’ என்னப்பட்டவருக்குத் திரிஞானசம்பந்தவள்ளல் பண்டாரசந்நிதி’ என்றும் பேர் கொடுத்து ஞான உபதேசம் பண்ணும் படியாகவும், ஸ்தலங்களிலே, தேவாரம், திருவாசகம், வெளங்கும்படி பண்ணிக்கொண்டு வரும்படியாக அனுக்கிரகம் பண்ணினத்தாலே பேர் வரலாச்சுது. இப்படிக்குப்பிசித்தி புருஷர்களாய் ஸ்ரீகாழிபுரத்திலே வாசமாய் வமிசபரம்பரையாய் மடாதிபத்தியம் பண்ணிக்கொண்டு அநேகம் சிஷ்யர்கள் உண்டுபண்ணிக்கொண்டு இருக்குங்காலத்தில் சாலிவாகன சகாப்தம் ‘ந’ வருஷத்துக்கு மேல்ச் செல்லாநின்ற காலத்தில் எங்கள் கூடஸ்த்தரான ‘சட்டநாதப்பண்டாரம்’ என்னப்பட்டவர், சிவபணிவிடைகள் பண்ணிக்கொண்டு இருக்கும் இடத்தில். இந்தக் கொங்கு ராச்சியத்தில் சிவத்தலங்களிலே தேவாரம், திருவாசகம் (வெ)(வி)ளங்கும்படியாகவும் மடாதிபதியாகவும், சிஷ்யார்ச்சனை செய்து உண்டு பண்ணிக்கொண்டு இருக்கும்படியாகவும் நேமுகஞ்செய்து ஞானஉபதேசம் பண்ணித்தம்முடைய ‘திருஞானசம்பந்தவள்ளல்’ என்னப்பட்ட பேருங்கொடுத்து அனுப்பிவிச்சார்கள். அன்று முதல், கொங்கு ராச்சியத்திலே சிஷ்யார்ச்சனை பண்ணிக்கொண்டு தலையூரிலே மடம் உண்டு பண்ணிக்கொண்டு இருந்தார்கள். அந்த நாள் முதல், வமிசபரம்பரையாய் சிஷ்யார்ச்சனை பண்ணிக்கொண்டு மடாதிபதியாய் தலையூரிலே குடியிருப்புகாரராய் சீஷாள் பரம்பரையாய் சீஷாள் அனுபவிச்சுக்கொண்டு இருக்கிறார்கள். திருஞானசம்பந்தவள்ளல்ப்பண்டாரம்’, ‘தெய்வசிகாமணிப்பண்டாரம்’, ‘வள்ளல்பபண்டாரம்’ என்றும், இப்படிக்குப் பரம்பரையாகி மட்டாதிபத்தியம் பண்ணுகிறபேர்களுக்கு பேர் வருகிறது.        




இம்மடத்தைப்பற்றி தினமலரில் வெளியான செய்தி 

அவினாசியிலிருந்த சொக்க ஞான சம்பந்த வள்ளல் மடத்துக்கு பழங்கரையூரில் உள்ள நிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. 

சைவ, வைணவ ஒற்றுமை

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013,00:47 IST

அவிநாசிக்கு கிழக்கே, பழங்கரையில் அமைந்துள்ள பொன் சோழீஸ்வரர் கோவில், கி.பி., 10ம் நூற்றாண்டில் கொங்கு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பெருமை வாய்ந்தது. முற்காலத்தில், வணிக பெருவழியாக இருந்த, இதே தேசிய நெடுஞ்சாலையில், சைவ வணிகர்கள் வணங்குவதற்காக, இக்கோவில் கற்றளியாக கட்டப்பட்டது. கொங்கு நாட்டின், 24 பிரிவுகளில் அவிநாசி வட்டார பகுதிகள் அடங்கியது வடபரிசார நாடு என்றழைக்கப்பட்டது. அதில், பழங்கரையும் ஒன்று. ஒரு காலத்தில், கோவிலுக்கு மேற்கில் (பின்புறத்தில்) "அக்னிமா நதி' என்ற ஆறு ஓடியுள்ளது. நீரை தேக்கி வைக்கும், செக் டேம் இன்றும் காட்சியளிப்பது, ஆறு இருந்ததற்கான அடையாளத்தை நினைவு படுத்துகிறது.

கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம், கோவில் கட்டிய காலத்தை அறிய முடிகிறது. கொங்கு சோழன் வீர ராஜேந்திர சோழனின் (கி.பி., 1207 - 1256) மூன்று கல்வெட்டுகளும், மூன்றாவது விக்கிர சோழனின் (கி.பி., 1273 - 1303) ஒரு கல்வெட்டும், விஜயநகர அரசர் அச்சுதராயரின் (கி.பி., 1530 - 1542) இரண்டு கல்வெட்டுகளும் கோவிலில் காணப்படுகின்றன.

கல்வெட்டுகள் கூறுவதென்ன?
அக்கல்வெட்டுகளில் இருந்து, பழங்கரையில் கோவில் கொண்டுள்ள இறைவனின் பெயர் "முன் தோன்றீச்சுர முடையார்' எனவும், இறைவியின் (அம்மன்) பெயர் "சுரும்பார் பூங்குழலி அம்பிகை' எனவும் அறியப்படுகிறது. ஆனால், அம்பிகைக்கு கி.பி., 13 அல்லது 14ம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டது. சோழர்களால் கட்டப்பட்ட கோவில் என்பதால், "பொன் சோழீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறது. இறைவன் பெயரிலிருந்த "முன்' என்ற சொல், காலப்போக்கில் திரிந்து, பொன் ஆகியுள்ளது. அவிநாசிக்கு கிழக்கிலும், திருமுருகன்பூண்டிக்கு அருகிலும், "நாக கன்னிகாபுரி' என்ற ஊரும், நாக கன்னிகாபுரி கோட்டையும் இருந்ததாக, சோழன் பூர்வ பட்டயம் எனும் நூலில் குறிப்புகள் உள்ளன. அதன் மூலம், தற்போதுள்ள பழங்கரை, நாக கன்னிகாபுரியாக இருந்துள்ளது என்பதை அறியலாம். திருமுருகன்பூண்டி கோவிலிலுள்ள கல்வெட்டில், பழங்கரை அருகே படை வீடு (படை வீரர்கள் தங்கியிருந்த இடம்) இருந்ததாக குறிப்பு காணப்படுகிறது. எனவே, பழங்கரையில் கோட்டையும், படை வீடுகளும் இருந்துள்ளது உறுதியாகிறது.
அமுதுபடிக்காக நெல்மணிகளை நீர்வார்த்து கொடுத்தும், யானை சின்னம் பொறித்த காசுகளை திருக்கார்த்திகை நாளன்று சிறப்பமுது செய்யக் கொடுத்ததும், பழங்கரை ஊர்ச்சபையாரும், குடிமக்களும் கம்பு அளித்ததும், அவிநாசி சொக்கஞான சம்பந்த வள்ளல் மடத்தின் சிவபூஜைக்கும், ஆகியவற்றுக்கு பழங்கரையூரில் உள்ள நிலங்கள் தானமாக கொடுத்த செய்திகளும் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன.

ஒற்றுமைக்கு உதாரணம்
தமிழகத்தில் சைவம் மற்றும் வைணவ சம்பிரதாயங்களுக்கு இடையே நிகழ்ந்த பல்வேறு பிரச்னைகள் இன்றளவும் பேசப்படுகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல், இக்கோவிலுக்குள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக நித்ய கல்யாண சீனிவாசப் பெருமாள் அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னதியின் ஈசானிய மூலையில் (வட கிழக்கு பகுதி) முன் மண்டபத்துடன் இணைத்து பெருமாள் சன்னதி கட்டப்பட்டுள்ளது.

பெருமாளுக்கு, சிவாச்சாரியரே, தினமும் அனைத்து கைங்கர்யங்களையும் மேற்கொள்கிறார். விஜயநகர அச்சுதராயர் காலத்தில், சிவன், பெருமாள், அம்மன் சன்னதிகள், திருமதில் ஆகிய திருப்பணிகள் செய்திருக்க வேண்டும். சைவ, வைணவ ஒற்றுமைக்கு மிகச்சிறந்த உதாரணமாக, பழங்கரை கோவில் இன்றும் விளங்குகிறது, என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=760430

விலாசம்:
ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த குருக்கள்,
ஐடியல் பள்ளி அருகில்,
நரசிம்மநாயக்கன்பாளையம்,
கோவை.

போன்: 9942049145

1 comment:

  1. Thanks for this details, we need more about mallanur sellandiamman temple history

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கா...