Thursday, September 3, 2009

கொங்கு குலகுருக்கள் 26. கூனம்பட்டி மடம்

ஸ்ரீ மாணிக்கவாசகர் திருமடாலயம் 


கூனம்பட்டி மடம் 
(மாணிக்கவாசக நாயனார் சிஷ்ய பரம்பரை)


இப்புத்தகம் கிடைக்குமிடம்: http://www.viruba.com/final.aspx?id=VB0002383


1807 மெக்கின்சி கைபீது ஆவணம்:



மட வெளியீடுகள்:





திருவாசகம் பாடிய மாணிக்க வாசகரின் சிஷ்ய பரம்பரையான கூனம்பட்டி மடத்தின் வரலாறு. வாட்போக்கி (ஐயர் மலை), விசய மங்கலம் ஆகிய இடங்களில் அற நிலையம் அமைத்து சமணர்களாக இருந்த படைத்தலைக்கவுண்டர் பட்டக்காரர் மகள் கூன் நிமிரச் செய்து காணி பெற்ற கூனம்பட்டியில் இப்போது மடம் உள்ள வரலாறு கூறப்படுகிறது. இந்த திரு மடத்து முன்னோர்கள் செய்த அற்புதங்கள் பல குறிக்கப்படுகின்றன. இவர்கள் மரபு பற்றி பற்பல இலக்கியங்களில் உள்ள செய்தியும் கூறப்படுகிறது. 

கொங்கதேசத்தின் கடைசி சுயாட்சி மன்னனான சேரமான் பெருமாள் நாயனார் முதலில் மாணிக்கவாசகர்தம் நெறியால் ஈர்க்கப்பட்டே சுந்தரமூர்த்தி சுவாமிகளை அனுகினார் என்கிறது குருகுல காவியம் என்ற பழம் நூல்:

"துங்க மிக்கதோர் வாதவூர் இறைவனைத் தொழுது
கங்குல் வாழ்க்கையைக் களைந்தருள் தங்கிய கடவுள்
மங்குல் வானவர் மனமகிழ் மாணிக்கவாசகர்
பங்கயப்பதம் காண்கென மனத்திடைப் பதித்தான்"
                 -14) குருகுல காவியம்,
மாணிக்கவாசகரை எண்ணல்

மெக்கின்சி ஆவணங்களில் உள்ள பட்டயங்களில் கூனம்பட்டி கைபீது சேரமான்,கூனம்பட்டி தொடர்பை பறைசாற்றுகிறது.
*******************************************
தற்போதைய நிலை:

காலஞ்சென்ற மடாதிபதி சிஷ்யார்ச்சனையைப் பொருட்டாக மதியாமல் மாந்திரீகத்தில் இறங்கி, பழனி முருகனைக்கட்டி ஆவாகனம் செய்ய ஒரு பொள்ளாச்சி புதுப்பணக்காரனுக்காக, ஒரு துரோகி பட்டக்காரனோடு முயன்றதால், பழனியில் தீப்பிடித்தது. அன்று முதல் பழனிக்கு வரமாட்டோம் என்று உள்ளூர் ஆதிசைவர்களிடம் சத்தியம் செய்து வெளியேறினார். இறுதியில் கண்பார்வை பாதிக்கப்பட்டு இறந்தார். பட்டக்காரர் அதே பழனி வீதியில் வெட்டப்பட்டு மாண்டார் என்று பழனி ஆதிசைவர் கூறுகின்றனர்.
ஆகம விரோதியான பொள்ளாச்சி தொழிலதிபருக்காகப் பழனி முருகனுடனே விளையாடி கண்பார்வை இழந்தவர் என்ற அவப்பெயர் பெற்ற காலஞ்சென்ற மடாதிபதி

நமது மூவேந்தர், முன்னோர் நமது கோயில்களில் நியமித்த பாரம்பரிய பூஜகர்களை வெளியேற்றி, பூஜகத்துவத்தை சர்க்காரே நியமிக்கும் கொடிய பாதகத்தை ஆதரிக்கும் பேரூர் லிங்கங்கட்டி, சரவணம்பட்டி காவி போன்றவர்களைப் போற்றி நூற்றாண்டு கொண்டாடும் சமண பௌத்த நாத்திகர்தான் RSS.

 அயோத்தியில் ராமர் என்ற பெயரில் மதக்கலவரத்தை செய்து ஜென்மஸ்தான கட்டிடத்தை இடித்தது. தற்போது அங்கு ராமர் என்ற பெயரில் மாயனின் பத்து அவதாரங்கள் என்று திருவாச்சியில் வேண்டுமென்றே சாக்கிய புத்த நாத்திகனின் சிலையை வேத, ஆகம, சங்க இலக்கிய, திருமுறை விரோதமாகப் புகுத்தியுள்ளது.



பலராமரை நீக்கீயும் உள்ளது. இந்த சூனியவாத புத்தனை மாணிக்கவாச, சிவத்துரோகச்செயலாகப் பிரதிஷ்டை செய்ய வெள்ளிச் செங்கலை RSSக்கும், இந்து முன்னணிக்கும் அளித்த கூனம்பட்டி:
அயோத்தியில் கள்ளப் பௌத்த விகாரம் அமைக்க வேத,ஆகம, சங்க இலக்கியங்கள்,திருமுறை விரோதி RSSஇன் கைக்கூலியாகி, மாணிக்கவாசகர் உள்ளிட்ட நாயன்மாருக்குச் சிவத்ரோகம் செய்த கூனம்பட்டி. மாத்வ சாக்கிய பௌத்த, ஶ்ரீ வைஷ்ணவ சமணர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட srjbtkshetra trust செய்த பௌத்த மோசடிக்குத் துணை போனார்.


தற்போது இளைய மடாதிபதி சரவண மாணிக்க பண்டிதர் சிஷ்யார்ச்சனையை பொருட்டாக மதியாமல் பேரூர் லிங்காயத் ஆதீனம், சரவணம்பட்டி ஆதீனம் ஆகிய நூதனக்கூட்டத்தோடு சேர்ந்து வேத, ஆகம விரோதமானவற்றை செய்து வருவதால், அவரது சித்தப்பா நடராஜ சிவாச்சாரியார் மனக்கசப்பால் தனியாக வெளியேறிவிட்டார்.
நடராஜ சிவாச்சாரியாரும் வாம மடமான குழந்தையானந்த மடத்தின் சீஷ்ய பரம்பரையாக இருந்து தி.கவோடு இணைந்த ஒரு  வாம மதத்துரோகிக்கு ஆகம துரோகமாகவும், மிஶ்ரனமாக, சைவ சித்தாந்தப்படி சிவ ஆகம துஷ்பிரயோகமாக புதியதாக ஒரு மடாதிபதியாக ஆசார்ய பட்டாபிஷேக பிரதிஷ்டை செய்து வைத்துள்ள காட்சி. இந்த நபர் ஏற்கனவே ஆகம, நீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமாக நமது முன்னோர் நியமித்த சகல ஆகமப் பாரம்பரிய அர்ச்சகர்களை நீக்கித் தி.க சார்பு அர்ச்சகர்களை நியமனம் செய்யத் தான்தோன்றித்தனமான பயிற்சி அளித்து வருபவர் ஆவார் (பார்க்க: தி.கவின் விடுதலைப் பத்திரிக்கைச் செய்தி): https://viduthalai.in/62396/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/


மயிலாப்பூர் குலகுரு குழந்தையானந்தர் எனத்தெரிந்தும், அவர் பெயரைப்போட்டே போலியாக மேற்கண்ட தி.கவோடு இணைந்த வாம மட சிஷ்யன்  ஆகம மிஶ்ரன துரோகமாகக் கூனம்பட்டி நடராஜ சிவாச்சாச்சாரியார் என்ற சிவாகமத்துரோகியை வைத்து சைவ சித்தாந்தத்திற்கு மதம் மாறி செய்து கொண்ட துரோக சம்பவம்:
*******************************************
சிஷ்ய பரம்பரை:
காணிகள் - காணியாளர்கள்:
கொங்க வெள்ளாளர்:

  1. பொங்கலூர் - பொன்ன கோத்திரம்
  2. திங்களூர் - வண்ணக்கன் கோத்திரம் 

குறுப்பு நாடு - படைத்தலை வெள்ளாளர்கள் 

 நரம்புகட்டி கவுண்டர்களில் ஒரு பிரிவு 

கொங்க கைக்கோலரில் ஒரு பிரிவினர் 

பாலக்காடு கொடும்பு சுப்பிரமணியர் கோயிலில் உள்ள கீழ்மடத்து செங்குந்த முதலியார்கள் 

எம்மாம்பூண்டி 501ஆஞ் செட்டியாரில் ஒரு பிரிவினர் 

NH 47 தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை - செங்கப்பள்ளி இடையே பல்லக்கவுண்டன்பளையம் பேருந்து நிருத்ததினருகில் உள்ளது.

Website: http://srikalyanapuriadhinam.org/historyE.html

5 comments:

  1. பொங்கலூர் நாட்டின் பொன்னன் கூட்டத்துக்கு, கூனம்பட்டி மடத்தை சேர்ந்தவர் தான் குலகுரு...
    ஏன் பொன்னன் கூட்டத்தை குறிப்பிடவில்லை பொன் தீபங்கர் மச்சான் அவர்களே !!!

    ReplyDelete
  2. சரிங்க மச்சா. இன்னும் விரிவா போட்டு இருந்தா எங்களுக்கு சவுரியமா போயிருக்கும்.

    ReplyDelete
  3. ஆறுநாட்டு பட்டக்கரர் கூட்டத்தை சேர்ந்த செங்குந்த முதலியார்(பெரியதாலி கைக்கோளர்) க்கு கூனம்பட்டி மடம் குலகுரு ஆவர்.

    ReplyDelete
  4. Kongukulala kurppunadu

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கால...