Friday, September 4, 2009

கொங்க குலகுருக்கள்: 36. கருமாபுரம் - பெருந்துறை மடம்

1. கருமாபுரம்

ஸ்ரீமத் ஆண்ட சிவசுப்பிரமண்ய பண்டித குருஸ்வாமிகள்,



கொங்க சான்றார் மட பட்டாபிஷேக பத்திரிகை 




சிஷ்யர்கள் : 

கொங்க மூப்பர் (சான்றார்), 

கலியாணி மூப்பர் குலகுரு - கருமாபுரம்.

கொங்கச் சான்றார் பட்டயம்: 





கொங்கச் சான்றார் தலைக்கட்டு கணக்குகளைப் பார்க்க (1930 - 1945):
https://eap.bl.uk/collection/EAP458-26/search
  
முத்துசாமிக்கோனார் "கொங்குநாடு" புத்தகத்தில்:


விலாசம்:
கருமாபுரம் மடம், 
கருமாபுரம்,
திருச்செங்கோடு தாலுகா,
நாமக்கல் ஜில்லா.

போன்: 04288 - 239511
செல்: 99948 49906


2. பெருந்துறை  

ஸ்ரீமத் ஆண்ட சிவசுப்பிரமண்ய 
பண்டித குருஸ்வாமிகள்



சிஷ்யர்கள் : 

மதுரை நாட்டு கிராமணி நாடார் குலகுரு - பெருந்துறை 



கௌண்டின்ய கோத்திரம் பெருந்துறை மடத்து பட்டயம்

பக்கம் - 1
(சந்திர சூரியர், தாரகாசுரனை மிதித்த நிலையில் காளி, காளியின் வலப்புறம் ஏழு வீரர்கள், ஏணி, வடலிப் பனைமரம், காளியின் இடப்புறம் ஏழு மாதர்கள் ஆகிய உருவங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. காளியின் உருவம் நான்கு கரங்களுடன் சித்திரிக்கப்பட்டுள்ளது. முன்கரங்கள் டமரு ஏந்திய நிலையிலும் வரதத்திலும் பின்கரங்கள் பாசம், சூலம் ஏந்திய நிலையிலும் உள்ளன.)

ஜிவமயம்

1. வய்ய நீடுக மாமளு மன்னுக மெய்விரும்பிய அன்பர் விழங்குகை சய்வ நன்னெறிதான் தழைத்தோங்குக தெ

2. ய்வ வெண்டிரு நீறு சிறக்க வே அருழால் ஆதிநந்திகசுரெனுக் கிரகத்துத் (திருவாய்) திருவாய் மொழி

3. ந்தருழினபடி கிறெதத்திறேதத்துவாபரக் கலியுகம் இந்த நாலுயுகங் கொண்டது ஒரு சதுர்யுகம் இப்படி சது

4. ர்யுகம் ஆயிரம் சதுர்யுகங் கொண்டது பிறமாவுக்கு ஒரு பகல் இந்த ஒரு பகலில் பதி நாலு மனுக்கள் சகார்த்

5. தம் யிப்படி யிரவு பகல்க் கொண்டது பிறமாவுக்கு ஒருதினம் யிந்தத் தினம் முன்னுத்தறுபது கொ

6. ண்டது ஒரு வருடம் இந்த வருடம் நூறு கொண்டது ஒரு பிரறம பிரளையம் இப்படி கோடி பிரளையம் கொண்டது விஷ்டுவு

7. க்கு ஒரு பகல் இப்படியிரவு பகல்ரண்டு கொண்டது விஷ்ணுவுக்கு ஒரு தினம் இந்த தினத்தில் முன்னூற்றறுபதுகொண்

8. டது ஒரு வருடம் இந்த வருடம் நூறு கொண்டது விஷ்ணு சகார்த்தம் இப்படி கோடி விஷ்ணு சகாற்த்தங் கொண்டது உமா.

9. தேவிக்கி அவிழ்ந்த கூந்தல் முடிக்குநேரம் இப்படிப்பட்ட மகாப்பிரளைய காலத்தில் ஒரு பிறமப்பிரளையத்தில் துருவமண்

10. டல பரியந்தம் சலப்பிரளையமான காலத்தில் வுலகமெல்லாமழியுங் காலத்தில் காஞ்சிபுரமென்னு நகரம் அழிவில்

11. லாமல் தோணி போலேமிதந்து பிரளைய முடிந்த பின்பு பிறமதேவன் கரத்திற் பிறந்து லோகசிஷ்டிசெய்தபடியி

12. னாலதற்கு பிரமபுர மென்றுந் தோணிபுரமென்று காஞ்சிபுரமென்று இப்படி பன்னிரண்டு திருநாமத்

13. தையுடைய திருநகரத்தில் அனேகந் தேவாள் அனேகஞ் சதுர்யுகம் புசை செய்தருளிய தேவதேவன் தே

14 வோற்றுமன் தேவதா சாறுவபுமன் பதிப்பிரியன் பாதஙற்சலன் பார்பதி வல்லபன் பார்வதி மனோகரன் பார்

15 பதி பிராண நாயகன் முத்திக்கு வித்து முக்கணீசுரன் நின்ற கோலமழகிய நிமலனனுக்கிரகத்தினால்

16. செம்புத்தீவில் திருவட தேசத்தில் தொண்ட மண்டலத்தில் சிவசுப்பிறமண்ணிய சுவாமியார் சுரலோகரட்ச

17. கர் தெட்சண விப்பிரப் பிரியர் விசுவமூற்தி சரவணபவன் சண்முகப் பிறதாபன் குக்குடத்துவசன் குங்கு

18. மவற்னன் குஞ்சிதாறூடன் கெளரி திருமகன் கணபதி சகோதறன் தெய்வானை வள்ளி மனோகரன்§

19. தவர் சிறைமீட்ட தேவசேனாபதி அமரர்சிறை மீட்ட அமராபதி காவலன் பக்கரைப் பகட்டரக்கர் ப 

20. ட்டிடப் படைக் கெளத்திற் கொக்கரித்துடற்கிளித்த குக்குடத்துவ[ச]ன் சக்கிரவட்ட மெட்டிரட்டி

21. தாவிச் சிரகாலடிக்குற தோகைப் பிரதாபதுரங்கன் சிஷ்டிக்கும் விறுமனைச் சிரசு திண்டாடக்

22. குட்டிக் குடுமியை யெட்டி வாங்குங் கோல விறும பதங் கொடுத்தருளிய குமார கண்டி

23. ரவன் பரமேசுரர் திருவுளப் படிக்கி காஞ்சி நகரத்தில் ஆதிசைவரில் கெளணிரிஷி கோ

24. த்திரத்தில்ச்சிவபாதஇறுதையர் தேவியார் காமாச்சியம்மன் திருவவுதாறத்தில்

25. திருவவு தாரம்(ஞ்) செய்து ஓதாதுணரவுமை தனவமுத மூட்ட வுண்டருளி

26. ய சற்சனசுத்த சிவாசார சைவ சமைய பரிபாலகறாகிய திரிஞான சம்மந்த

27. ப்பெருமாள் மடாதிபறான ஆதிசைவ ஆண்டகுருறாய சுவாமியாரவர்கள் அனுக்கிர

28. கப்படிக்கி ஸெஸ்த ஸ்ரீ மன்மகாமண்டலேசுரன் அரியராயர் விபாடன் பாஷைக்குத்த

29. ப்புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் முதல்வராய கண்டன் மேதினி மீசுர கண்ட

30. ன்சமர கோலாகலன் வீரகஞ்சுகன் வீரப் பிரதாபன் மேதினி காவலன் கண்டனாடு கெ

31. ¡ண்டு கொண்டனாடு கொடாதவன் ஒருகுடை நிழற்கீளுலகமுளுதாண்டவன் இராசாதி 

32. றாசன் றாசபரமேசுரன் றாசமார்த்தாண்டன் றாசபுங்கவன் றாசநாறாயணன் றாசகேச

33. ரி அசுபதி கெசபதி நரபதி நவகோடி நாராயணன் பூறுவபட்சம தெட்சண உத்திர சத்த

34. சமுத்திராதிபதி எம்மண்டலமுந்திறை கொண்டருளிய றாசப்பிரதாபன் றாசாக்க

35. ள்தம்பிறான் றாசமன்னியன் றாசவற்த்தனன் றாசகிரிடி றாசசம்பிரமன் றாசகோலாகலன்

36. றாசவுத்துங்கன் றாச கண்டீரவன் றாசபராக்கிரமன் றாசவுக்கிரமன் றாசசுரோத்துமன்

37. துலுக்கர் தள வி(ய)பாடன் துலுக்கர் மொகந்தவுள்த்தான் ஒட்டிய தளவி(ய)பாடன் ஒட்டி

38. யர்மோகந்தவிழ்த்தான் மட்டடங்காத மாற்றலர் தம்மை வெட்டியெ விரு(து*) கட்டிய சம

39. ர்த்தன் கொட்டத்து மன்னர் குரும்பெலாந்தவிழ்த்துத் திட்ட மடக்கித்திறை கொழும் பெருமான்

40. மன்னற் மன்னியர்கள் வந்தடி பரவப் பொன்முடி கவிழ்த்துப் புவி புரந்திடுவோன் நீ

41. திசேரமைக்ஷர் நின் கொலுமுன்றில் கோதிலா மொழியைக் கொடுசெவிக்குறைக்க(வு*)

42. ற்றது கேட்டுவொருகுடை நிழலிற் பெற்றரசாளும் பிறபல தீறன் ஐந்தரு நிகரோன் மந்தி

43. ரகிரியோன் சந்திரவதனன் இந்திரலோலன் கங்கை மானதியோன் சங்கமானிதி

44. யோன் பொங்கமாயு(ல*)க மெங்குமே யாழுவோன் நீதியாய்ச் செங்கோல்க் காதியாயமைந்

45. தோன் தீது தானகற்றி யேதுவாய் யிரித்திப் பூதலந்தனிலே புண்ணிய மென்னு

46. ம் ஆதுலசாலை அந்தணர் வேள்வி ஓதுவாற்குணவு உபையமடங்கள் இப்படிமு

47. ப் பத்திரண்டரமும் வழுவா(ம*)ல் நடாத்திய வேதநான் மறையும் மிகுந்(த*)தோற்சைவம்

48. ஆமெனுஞ் சமையம் ஆறுதானின்று போதவேயுலகில் பூற்தியாய் விழங்கத் தாழ்வ

49. துகளைந்து தாஷ்டிக முடனே வாள்வது கொண்டு மனமிகுந்தன்பற் சேகரமா

50. க செகந்தனை யாழும் கண்டர்கண்ட கட்டாரி க்ஷ¡ழுவ துஷ்டர் கண்டதுஷ்டர்

51. மோகந்தவிழ்த்த ஒட்டியர் சுரதான றாசமனோ பயங்கர றாசதேவேந்திர வனதுர்க

52. சல துற்ககிரிதுற்க பதிதுற்க மனுச்சக்கிறயீசுர ராயக்குலிங்கங் குச்சரங் குடகங் குருச்சேத்

53. திரங்கலிங்கங் கற்னாடங் கலியாணங் கடாரங் கவந்தி கவுடங் கன்னோசி கம்பபடி முதலா

54. ன அன்பத்தாரு தேசங்களுக்கு முதலான பிறதிஷ்டாபனாசாரி எண்டிசை முகம் புரக்குமி

55. ந்திரசுரத்தன் அபகடறாய மகுடவிபாடன் அஷ்ட்டதிக்கு மனோபயங்கரன் அட்டலட்சுமி

56. பொருந்திய மார்பன் திக்குவிசையங் கொண்ட சூரசிங்கன் துஷ்ட்ட நிக்கிர சிஷ்ட்டப

57. ரிபாலன் அஷட்ட போகபுரந்தரன் நவரற்றின கெசித கிரீடமகுட நவரற்றின மாலையாபர

58. பரன்ரற்றின சிம்மாசனாதீசன் சங்கீத சாயித்திய வித்தியாவினோதன் கொடிமன்னி

59. யறாசதானன் பூலோக தேவேந்திரன் ந(¡)கலோகறாச கண்டன்ரணமுக சுத்தவீரன்

60. சொக்கப்புவறாயகண்டன் புண்டரீக புருடோத்துமன் சகலசாம்பிறாச்சிய லட்சுமிவாசன்

61. பூலோகநாதன் பூமண்டலாதீசுரன் சண்டப்பிறசண்டன் கண்டற்கொரு கண்டன் சத்து

62. ருக்கள் மணவாழன் சமையகெம்பீரன் சமையநாராயணன் சமையத்துரோகர் கண்

63. டன் தகமைபெறு சற்கார் தயவுழ சகாயன் தனகனக விஷ்திறாபரண கழதழ சத்திர

64. ன் சாமரை வைபவேந்திரன் சொல்லுக்கு அரிச்சந்திரன் வில்லுக்கு விசையன் அறிவு

65. க்கு அகஷ்தியன் பொருமைக்குத் தற்மன் பரிக்கு நகுலன் கரிக்கு உதையன் ஞானத்துக்கு சகா

66. தேவன் கோபத்துக்கு காலாக்கினி உக்கிரத்துக்கு நரசிம்மன் தேசத்துக்கு மாற்தாண்டன் செகத்து

67. க்கறாவசல்லவன் ஆண்மைக்கு காற்த்திகேயன் ஆயிசுக்கு பிறமதேவன் ஸ்ரீகிஷ்ட்டணன் சங்க

68. ¡ரத்துக்கு ருத்திரன் போகத்துக்கு இந்திரன் பிறதிக்கனைக்குப் பரசுராமன் பிறபைக்கு சூரியன் கா

69. ந்திக்கு சந்திரன் சாந்திக்கு வீஷ்ட்டுமன் ஆசாரிக்கு வதிஷ்ட்டன் தானத்துக்கு கற்னன் மான

70. த்துக்கு திரியோதினன் பிலத்தில் ஆதிசேஷன் விஷ்ட்டுமையில் விசுவாமித்திரன்

71. சகாவில் விக்கிரமாதித்தன் சாயித்தியத்தி(ல்) வால்மீகற் போருக்கு வீமன் கெம்பீரத்தி

72. ல் சமுத்திரன் சங்கீதத்தில் தும்புறு ஆக்கினைக்கு சுக்கிறீபன் சாமிகாரியத்தில் அனுமந்த

73. ன் காவியத்திற் காளிதாசன் உச்சிதத்தில் போசன் சத்தியில் விரபத்திரன் சுத்தியில் ஆங்கா

74. ரகன் பத்தியில் பிரகல(ந)¡தன் புத்தியில் விபூஷணன் புத்திரனிற் குரு புத்திரன் மதியிற்

75. சறஷ்சுபதி சதிக்குப் பாஞ்சாலி ரூபத்தில் மன்மதன் வாலிபத்தில் மார்க்கண்டன் எ

76.த்தினத்திற் பகீரதன் கெற்சிதத்திற் சத்த மேகம் தனத்திற் குபேரன் பிலவந்தத்தில்


பக்கம் 2

1. வாலி இரட்சண்ணியத்தில் நாறாயணன் இத்தினை சத்தியவாய்மையால் தத்துவக்கியான

2. ராய் மனுவுக்கியான சாஷ்த்திரப் பிரமாணராய் வெகுவிதமான மேகப்பரிட்சையும் இதியா

3. சந்தானும் இபலோக்கியமும் இரதவாதமும் இந்திரப்புஞாலம் ஆகம சாஷ்த்திரம்

4. அஷ்டாங்கயோகம் அத்திப்பரி(ட்*)சை அசுவப்பரிட்சை முதலான அறுபத்துநாலுகலை

5. க்கியான ரூடராய் ஒப்பாருமிக்காருமின்றச் சிராக்கியமானாபிரமானராய் அசுவத்தாமன் மாபெ

6. லிவேதவியாசர் அனுமார் விபூடணன் கிறுபையாசாரியார் பறசுறாமன் இவற்களை

7. ப்போல அதிய சிரஞ்சீவியாய் செம்பொன் மேருவுக்கிணையாய் நம்பினோர் க(ளு)

8. பாயத்தம்பிரான் தனக்கொப்பாய் சத்ததீவும் சத்தசாகரமும் ஷட்பாலகரும் அஷ்டகுல

9. பறுபதமும் அட்டவாரணமு மட்டமானாகமுஞ் சூழ்ந்தமையாலடங்கிய(ச*)த்த தீவுக்குஞ்ச

10. ங்குதாமறை காமதேனு சிந்தாமணி யென்னும் ஐந்து தறுப்போல கெங்கை

11. யமுனை கோதாவிரி சிந்து கிஷ்ணவேணி காவேரி சரஷ்பதி யென்னுஞ் சத்தமகா

12. னதியும் படைத்துக் தராதலந்தனக்கு தானவனாக நரர்பதியாக நாற்றிசை யிரஞ்சரத

13. கெசதுரகபதாதியென்னுஞ் சதுறங்க பலதாஷ்டீக வல்லவராய் விசைய நகற

14. த்தில் வீறசிம்மாசனத்திலெழுந்தருளிய ஸ்ரீவிருப்பாச்சிறாயர் வீறவசந்தறாயர் போச

15. றாயர் வீரநரசிங்க தேவமகாறாயர் தன்மறாயபூபதிறாயர் அகழங்கதேவமகாறாய தேவ

16. றாயர் சூடும்புலி தேவ மகாறாயர் உச்சமவலி தேவ மகாறாயர் உத்துங்க மகாறாயர் கட்டாரிறாயர்

17. அல்லமாப்பிறபு தேவ மகாறாயர் சென்ன வசவ தேவ மகாறாயர் யெரிதிம்மறாயர் திரும

18. லைறாயர் சிக்கறாயர் ஆனைகுந்தி வெங்கிட்டறாயர் கஷ்த்தூரி றாயர் கதம்பறாயர் பிறவிட தேவம

19. காறாயர் யீசுரப்பனாயக்கமகாறாயர் கிரு(ஷ்)ணதேவ மகாறாயர் வில்வறாயர் பவழேந்திற தேவ

20. மகாறாயர் சதாசிவ மகறாயர் றாமறாயர் கிஷ்ணறாயர் விக்கிரம தேவ மகாறாயர் சீரங்கறா

21. யர் பிறுதிவிறாச்சிய பறாக்கிற(ம*)ம் பண்ணியருழா நின்ற காலத்தில் தெட்சண சிம்மாசனாதிப

22. தியாகிய பாண்டிய வம்மிஷத்தில் சந்திறகுல தீபறாகிய பாண்டியனென்பவன் மதுரை¨

23. யயாண்டு(க்) கொண்டிருக்குங் காலத்தி[ல்] ஸொஷ்தஸ்ரீ விசையாற்புத சாலியவாகன சகாற்

24. த்தம் ௩௱௨௰அ அப்போது கலியுக சகாற்த்தம் ௩௲௪௱அ௰௩ வருடமாயிற்று யிதின்மேற் செ

25. ல்லானின்ற சித்தி[ர*]பானு வருடம் வைகாசி மீ பூருவ பட்சம் நவமி மிருகசீர நட்செத்திரம் சித்திய

26. நாம யோமுங் கவலவாகறணமுங் கூடிய சுபதினத்தில் கொங்குமண்டலத்தில் மேல்க

27. ரைப்புந்துரை நாட்டில் எழுந்தருளிய ஆண்டகுருசுவாமி யாறவற்கள் பாதசன்னிய் தானத்துக்கு

28. கண்டனாடு கொண்டு கொண்ட நாடு கொடாதவறான மாட்டுதலையைமான்ந்தலையாக்கின மகாபெ

29. ரியோறான மதுப்பானையைபால்ப் பானையாக்கினவற் அரிபூசை குருபூசை மயேஷ்வற பூசை மறவாத தீ

30. றன் விபூதி ருத்திறாட்ச மாலிகாபரணறான பத்திரக்காளி பரிவுடன் வழர்த்த யீஷ்வர குமாறன் ஆண்டதம்பி

31. றான்பாதத்தை அனுதினமும் மறவாதவன் மேதினியில் மேல்மிசை கொண்டவறான விகடாதிசூர

32. னைவென்று நிமலி சிறைமீட்டவற் குபேரனற்க்குதவி செய்தவறான கருணாகடாட்சமுள்ளவ

33. றான சம்பறாசூரனை வென்றவன் தேவற்சிறை மீட்டவன் தெய்வலோகங் குடியேத்தி தே

34. வேந்திரனுக்கு முடிசூட்டி வைய்த்தவன் பார்பதி தேவிபுத்திரன் வாலியை வென்ற சூரியப்பிறதாபன் சேனா

35. பதிப் பட்டமும் பெற்றவன் தெய்வலோகத்துக்குச் சென்று கருமல்லிகை பிடிங்கிக் குடுத்தவன் பூ

36. வேந்தியசோளன் பிறவற நெரிகண்டவன் அறுபத்திமூவரிலொருவன் யேநாதி நாதனென்று பேறு

37. பெற்றவன் சூறபாண்டி நாதரைச் சிறப்புடன் கண்டவன் வாது காத்தவன் தம்பித்துணை நாடகங்கட்டி

38. வைத்தவன் சமற சங்கு சமையசங்கு மோகினிசங்கு மூன்று சங்கமுள்ளவன் மணிக்கெங்கைவ

39. ழநாடன் உத்திர தேசத்தில் யயோத்தி மானகரில் தாயார் தமக்கு சத்திறவர்ணத்தினால் நாயக்கப் பட்டமு[ம்]

40. நலம்பெற பெற்றவன் கொங்கு மண்டலமு(ம்*) குடகுறாச்சியமு(ம்*)சோழ மண்டலத்துக்கு சிவந(¡*)யக்க

41. பட்டமும் பெற்றவன் சவுந்திற பாண்டியன் றன்னுடமண்டலத்தில் தாடாழ்வானென்று நாடாழ்

42. வாரென்று சோழ மண்டலத்திற் கவுண்டு பட்டமும் பேறு பெற்றவன் சந்திற குலதீறச

43. மைய நாறாயணப்பட்டமும்பேறு பெற்று விருதுமுடையவன் மாவிலிவாணன் வைகைக்கரை

44. நாடு முகுந்தப் பட்டமும் பேறுபெற்றவன் கற்பகனாடு கடகரை நாடுமடைக்கிப் பட்டமுடையவன்

45. அரிதான வடதிசை வேட்டைக்கருளிய(வ*)றான நாக கொடியு(ம்*)சிங்க கொடியு(ம்*)சமையவிசே

46. ஷமுள்ளவன் நாகலோகத்தில் நவமணி தரித்த மணிமாற்பன் அன்னவன்னப் பாவா

47. டையுமுள்ளவன் சந்தனமாலையு(ம்*) சதுரொளி மாலையு(ம்*) புஷ்கனியு(ம்*) பெறுமையுமுடையவன்

48. யீழ நாடுயிலங்காபுரி வாழால்வழி திரந்த பெரியோற் மதியாத மன்னரை மகுடந்தகுத்து பரிசூ

49. ரரைக்கொல்லு பாக்கியப் பிறதாபன் மதுறாபுரியில் பாண்டியனுக்கு வாளது பத்தி மதுரைமண்ட

50. லிகர் சோழ மண்டலமுந் தொண்ட மண்டலமு கம்பமானதியுங் கலியாணபுறமு காணியு

51. ம் பெற்றவன் வையகமளை பொழிய வைத்தவன் கொட்டுப்பிடித்து கூடையுமெடுத்து வெட்டிம

52. ண்சுமந்ததில்லை யென்று வீரப்பிறதாபன் அகாசூரன் விக்கிறமாதித்தன் பொன்னுலோகமும்

53. பெற்று புகள் கீற்த்தியு பெற்றவன் அற்சுனவலங்கை பிறதாபன் எழுநூற்று வங்கிஷமகா

54. தேவர் பூசை பத்திப் பிரியாதவன் அருள்பெற பெற்றவன் தாழ்ந்தவற்கினிய தாபமாற்றினவற் வா

55. ழைக்கிரண்டு குலை வறவளைத்தவன் காவேரி கரை கண்டவன் சத்த சமுத்திரமுமசையாத எழுநூத்

56. துக்கோடி பேறுமுடையவன் பொய்த்தலைக்கி மெய்த்தலையரிந்து வெட்டினவன் குலமு முப்புரிநூலுமு

57. டையவன் தாரை சின்னமும்றட்டை வெண்சங்கு அமுர்தமுடைய சிங்கத்தை வங்கத்திலேற்றி சேற

58. சோழன் பாண்டியன் மூவறாசாகளுஞ் சிங்காசனத்தில் வைத்து வெள்ளவட்டக் குடையு விருதும் வெஞ்

59. சாமறமும் வெள்ளப் புறவிய முள்ளவன் வெள்ளானை வேந்தன் செட்டியளபிமானமும் பட்டங்கா

60. த்தவன் செட்டி தோளேறிய செல்வக் குமாற அமந்தியாசூரனையுத்த சத்திறாதிகளைய் வெட்டி நிலையிட்டவ

61. ன்றாச மெச்சிய காளாஞ்சியு பலவரிசையு வெகுமானமும் பெற்றவன் வாடாத மாலையு வணங்கா முடி

62. பட்டமும் பெற்றவன் ஒரு நொடியிலுலக மாண்டவன் வருவ துன்பமும் வண்மையாயிநீ(க்)கினோற் பத்திற

63. மாத்துபசும் பொன்னுடையோற் உத்திர தேசத்திலுயர்ந்த பட்டமுள்ளோற் மாடக்காசு மறகத கொடியு.

64. தனம் பெறகாசஞ் சறுவமும் படைத்தவன் கோட காலத்தில் குழுந்த வனத்தில் சிவனுமுமையு தாகத்துடநே

65. தயங்கின வேளையில் வேதப்பனையை விரலால் வளைத்து போத அமுர்த்தத்தை புடிசொம்பிலிறக்கிநாத

66. னுமைக்கு நன்றாய் கொடுத்து மனமகிழ்ந்த(ன்)னார் மந்திர வாழும் வரிசையுங் கொடுத்து துலங்கு மகுடமு

67. டியதுசூடியிலங்காபுரி[க்]கி மீழந்தனக்குவணங்காதேயேன்று வைத்த வங்கிசத்தோறான மாந்துளிர்

68. மேனியன் மகாதேவர் புத்திரன் கொங்கன் நாடான் ம(¡)துரையான் கலியாணியன் யிள யிந்த ஐந்து

69. வகுப்பாருஞ்சேற்ந்து காஞ்சிபுரத்தில் நாடு கூடி நம்மளுக்கு சுவாமியாற் வேணுமென்று மேல்கரைப்

70. புந்துரை நாட்டிலிருந்த ஆண்டகுருசுவாமியாறென்பவரை அழைத்துக்கொண்டுபோய் பட்டாபிஷேகஞ் செய்து எ

71. ழுதிக் கொடுத்த த(¡*)ம்பிற சாசினமாவது ஆண்டகுரு சுவாமியாற் பாதத்துக்கு உடல்பொருழாவி மூன்றுந்தெத்தம்ப

72. ண்ணி வருடமொண்ணுக்கு தலைகட்டு ஒண்ணுக்கு தன்காசிலே கால்க்காசும் கலியாணத்துக்கு இரண்டு சந்திரப்ப

73. ணமும் எங்கள் வம்மிசத்தோற் எந்த தேசம் எந்த நாட்டிலேயிருந்தபோதிலும் யிந்தப்படிக்கிக் குடுத்துக்

74. கொண்டு சுவாமியாரிட்ட கண்டினை தெண்டினை யாக்கினை ஆபறாதத்துக்கு உட்பட்டு நடந்துகொள்

75. வோமாகவும் யிந்தப்படிக்கி நடவாமல் எங்கள் வம்மிசத்தில் ஆறாமொருவன் குருநிந்தனை சொல்குறா

76. னோ அவன் கெங்கைக் கரையிலே காறாம் பசுவையு பிறாமணாளையு மாதா பிதாக்களையு கொன்ற தோச

77. த்திலே போகக் கடவது யிதை யாதாமொருவன் பயபத்தியாய் பரிபாலினம் பண்ணி வருகுறானோ அவ

78. னுக்குத் தனசம்பத்தும் பாக்கிய சம்பத்தும் புத்திர சம்பத்து மேமேலு முண்டாகி வளரும் படிக்கி அம்பலவா

79. ண மூர்த்தியு ஆதிபறமேஷ்பரியுந் துணையாக லட்சிப்பாற் பத்திர காளியம்மன் துணை சுலோகம் தான

80. பாலனை யோற்மத்தியே தானாத்து சிரேயோன் பானொதானாதுரே சற்கம் காப்புனோதி பாலனதச்சுதன்பதம்

81. றாக்கிசனாடான் காளிநாடன் யிருளநாடான் மருதகாளி நாடான் குப்பநாடான் பழனிநாடான் பாண்டிய நாடன்

82. பச்சநாடான் விரும நாடன் வீரநாடன் பெரியநாடன் சொக்கநாடன் சோமசுந்தர நாடன் சவுந்தற நாடன்கு

83. ணவீரநாடன் சம்மநாடன் அகழங்க நாடன் சிதம்பறநாடன் வெங்கிடாசல நாடன் குலோதுங்கு

84. நாடன் ரகுநாத நாடன் சிவமயம் கணபதிதுணை பத்திர காளியம்மன் துணை யிலங்காபுரி மாணிக்க

85. த்தாள் னரலங்கறாயனுக்கு யேனாபதி உண்டு பண்ணினமாடப் பொன்காசில் கால்காசும் ஆலத்துக்கு கால்

86. காசும் யிந்தபடிக்கு போட்டு எளுதிக் கொடுத்த தாம்பற சாசனம்

விலாசம்:
கார்த்திகேய சிவம்,
பெருந்துறை சிவன் கோயில்,
பெருந்துறை.

செல்: 94430 - 14544




1 comment:

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கால...