Friday, September 4, 2009

கொங்கு குலகுருக்கள் - 45. மயில்ரங்கம் வள்ளல் மடம்


 திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளல் குருஸ்வாமிகள் - மயில்ரங்கம் 
காசிவாசி காலஞ்சென்ற சட்டநாத வள்ளல் குருஸ்வாமிகள் 
1.    வெள்ளாள கவுண்டகளில் முளையாபூண்டி எழுவூர் காடை கோத்திரத்து குலகுரு. (பிள்ளையப்பம்பாளையம் காடை தவிர)


கொங்கு நாடு வந்த திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளலார் மட வரலாறு

பூர்வத்திலே ஒருகாரணமாயி சுப்பிரமணிய சுவாமி ‘சீர்காழிபுரம்’ வாசமான கவுணிய கோத்திரமான ‘சிவபாதஹிருதயர்’ அவருக்குப்புத்திரராகப் (பொ)(பி)றந்து, சீர்காழிபுரத்தில் வாசமாயிருக்கும் காலத்தில் ஒரு காரணார்த்தமாக சிவபூசா காலத்திலே அந்தக்குழந்தை ரோதனம் பண்ணின சத்தத்தைக்கேட்டு பார்வதியும், பரமேஸ்வரரும் புத்திர வாஞ்சையினாலே தன்னுடைய ஸ்த்தன்னியத்திலே பாலு பெருகினபடியினாலே அந்தப்பாலே(லை) பொற் கின்னத்தில் கறந்து அந்தக் குழந்தைக்குப் பார்ப்பதியுனுடைய அனுகிரகத்தினாலே ஞானம் வந்து ‘திருஞானசம்பந்தவள்ளலார்’ என்று பேர் வரப்பட்டது. அதின் பேர்கால் திரி(ரு)ஞானசம்பந்த மூர்த்தியானவர் பூமண்டலத்திலே இருக்கப்பட்ட சிவஸ்தலங்களை எல்லாம், பாடலாகத் ‘தேவாரம்’ என்னப்பட்ட தமிழ்க்கிரந்தங்களை சொல்லிப்பிராம்மணர் முதலான பேர்களுக்கு அப்பியாசம் பண்ணும் இடத்தில், வெளங்க மாட்டதென்று தோன்றப்பட்டுத் தமக்குப் பக்தனாயிருக்கப்பட்டபூலஷ்சிய சாதியாயிருக்கப்பட்ட ‘திருநேரி தேசிகர்’ என்னப்பட்டவருக்கு உபதேசம் பண்ணி ஞான உபதேசத்தினாலே யோக்கியம் உண்டாக்கியும், மேற்ப்படி தேவாரம் என்னப்பட்ட கிரந்தங்கள் வெளங்கும்படியாகி நேமகம் பண்ணினார்.


திரிஞானசம்பந்த மூர்த்திகளுடைய அனுகிரகத்தினாலே ‘திருநேரி தேசிகர்’ என்னப்பட்டவருக்குத் திரிஞானசம்பந்தவள்ளல் பண்டாரசந்நிதி’ என்றும் பேர் கொடுத்து ஞான உபதேசம் பண்ணும் படியாகவும், ஸ்தலங்களிலே, தேவாரம், திருவாசகம், வெளங்கும்படி பண்ணிக்கொண்டு வரும்படியாக அனுக்கிரகம் பண்ணினத்தாலே பேர் வரலாச்சுது. இப்படிக்குப்பிசித்தி புருஷர்களாய் ஸ்ரீகாழிபுரத்திலே வாசமாய் வமிசபரம்பரையாய் மடாதிபத்தியம் பண்ணிக்கொண்டு அநேகம் சிஷ்யர்கள் உண்டுபண்ணிக்கொண்டு இருக்குங்காலத்தில் சாலிவாகன சகாப்தம் ‘ந’ வருஷத்துக்கு மேல்ச் செல்லாநின்ற காலத்தில் எங்கள் கூடஸ்த்தரான ‘சட்டநாதப்பண்டாரம்’ என்னப்பட்டவர், சிவபணிவிடைகள் பண்ணிக்கொண்டு இருக்கும் இடத்தில். இந்தக் கொங்கு ராச்சியத்தில் சிவத்தலங்களிலே தேவாரம், திருவாசகம் (வெ)(வி)ளங்கும்படியாகவும் மட்டாதிபதியாகவும், சிஷ்யார்ச்சனை செய்து உண்டு பண்ணிக்கொண்டு இருக்கும்படியாகவும் நேமுகஞ்செய்து ஞானஉபதேசம் பண்ணித்தம்முடைய ‘திருஞானசம்பந்தவள்ளல்’ என்னப்பட்ட பேருங்கொடுத்து அனுப்பிவிச்சார்கள். அன்று முதல், கொங்கு ராச்சியத்திலே சிஷ்யார்ச்சனை பண்ணிக்கொண்டு தலையூரிலே மடம் உண்டு பண்ணிக்கொண்டு இருந்தார்கள். அந்த நாள் முதல், வமிசபரம்பரையாய் சிஷ்யார்ச்சனை பண்ணிக்கொண்டு மடாதிபதியாய் தலையூரிலே குடியிருப்புகாரராய் சீஷாள் பரம்பரையாய் சீஷாள் அனுபவிச்சுக்கொண்டு இருக்கிறார்கள். திருஞானசம்பந்தவள்ளல்ப்பண்டாரம்’, ‘தெய்வசிகாமணிப்பண்டாரம்’, ‘வள்ளல்பபண்டாரம்’ என்றும், இப்படிக்குப் பரம்பரையாகி மட்டாதிபத்தியம் பண்ணுகிறபேர்களுக்கு பேர் வருகிறது.   




2 comments:

  1. Not mention aavan kootam in his lines..were is maielaranga madam located give full detail address contact no

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கால...