Friday, September 4, 2009

கொங்கு குலகுருக்கள் - 43.தலையூர் வள்ளல் மடம்

திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளல் குருஸ்வாமிகள் - தலையூர் மடம்

தற்போதைய குலகுரு பாலசுப்பிரமணிய தேசிகர் 

தலையூர் வேட்டுவகவுண்டர்களுக்கு குலகுரு.

--

கொங்கு நாடு வந்த திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளலார் மட வரலாறு

பூர்வத்திலே ஒருகாரணமாயி சுப்பிரமணிய சுவாமி ‘சீர்காழிபுரம்’ வாசமான கவுணிய கோத்திரமான ‘சிவபாதஹிருதயர்’ அவருக்குப்புத்திரராகப் (பொ)(பி)றந்து, சீர்காழிபுரத்தில் வாசமாயிருக்கும் காலத்தில் ஒரு காரணார்த்தமாக சிவபூசா காலத்திலே அந்தக்குழந்தை ரோதனம் பண்ணின சத்தத்தைக்கேட்டு பார்வதியும், பரமேஸ்வரரும் புத்திர வாஞ்சையினாலே தன்னுடைய ஸ்த்தன்னியத்திலே பாலு பெருகினபடியினாலே அந்தப்பாலே(லை) பொற் கின்னத்தில் கறந்து அந்தக் குழந்தைக்குப் பார்ப்பதியுனுடைய அனுகிரகத்தினாலே ஞானம் வந்து ‘திருஞானசம்பந்தவள்ளலார்’ என்று பேர் வரப்பட்டது. அதின் பேர்கால் திரி(ரு)ஞானசம்பந்த மூர்த்தியானவர் பூமண்டலத்திலே இருக்கப்பட்ட சிவஸ்தலங்களை எல்லாம், பாடலாகத் ‘தேவாரம்’ என்னப்பட்ட தமிழ்க்கிரந்தங்களை சொல்லிப்பிராம்மணர் முதலான பேர்களுக்கு அப்பியாசம் பண்ணும் இடத்தில், வெளங்க மாட்டதென்று தோன்றப்பட்டுத் தமக்குப் பக்தனாயிருக்கப்பட்டபூலஷ்சிய சாதியாயிருக்கப்பட்ட ‘திருநேரி தேசிகர்’ என்னப்பட்டவருக்கு உபதேசம் பண்ணி ஞான உபதேசத்தினாலே யோக்கியம் உண்டாக்கியும், மேற்ப்படி தேவாரம் என்னப்பட்ட கிரந்தங்கள் வெளங்கும்படியாகி நேமகம் பண்ணினார்.


திரிஞானசம்பந்த மூர்த்திகளுடைய அனுகிரகத்தினாலே ‘திருநேரி தேசிகர்’ என்னப்பட்டவருக்குத் திரிஞானசம்பந்தவள்ளல் பண்டாரசந்நிதி’ என்றும் பேர் கொடுத்து ஞான உபதேசம் பண்ணும் படியாகவும், ஸ்தலங்களிலே, தேவாரம், திருவாசகம், வெளங்கும்படி பண்ணிக்கொண்டு வரும்படியாக அனுக்கிரகம் பண்ணினத்தாலே பேர் வரலாச்சுது. இப்படிக்குப்பிசித்தி புருஷர்களாய் ஸ்ரீகாழிபுரத்திலே வாசமாய் வமிசபரம்பரையாய் மடாதிபத்தியம் பண்ணிக்கொண்டு அநேகம் சிஷ்யர்கள் உண்டுபண்ணிக்கொண்டு இருக்குங்காலத்தில் சாலிவாகன சகாப்தம் ‘ந’ வருஷத்துக்கு மேல்ச் செல்லாநின்ற காலத்தில் எங்கள் கூடஸ்த்தரான ‘சட்டநாதப்பண்டாரம்’ என்னப்பட்டவர், சிவபணிவிடைகள் பண்ணிக்கொண்டு இருக்கும் இடத்தில். இந்தக் கொங்கு ராச்சியத்தில் சிவத்தலங்களிலே தேவாரம், திருவாசகம் (வெ)(வி)ளங்கும்படியாகவும் மட்டாதிபதியாகவும், சிஷ்யார்ச்சனை செய்து உண்டு பண்ணிக்கொண்டு இருக்கும்படியாகவும் நேமுகஞ்செய்து ஞானஉபதேசம் பண்ணித்தம்முடைய ‘திருஞானசம்பந்தவள்ளல்’ என்னப்பட்ட பேருங்கொடுத்து அனுப்பிவிச்சார்கள். அன்று முதல், கொங்கு ராச்சியத்திலே சிஷ்யார்ச்சனை பண்ணிக்கொண்டு தலையூரிலே மடம் உண்டு பண்ணிக்கொண்டு இருந்தார்கள். அந்த நாள் முதல், வமிசபரம்பரையாய் சிஷ்யார்ச்சனை பண்ணிக்கொண்டு மடாதிபதியாய் தலையூரிலே குடியிருப்புகாரராய் சீஷாள் பரம்பரையாய் சீஷாள் அனுபவிச்சுக்கொண்டு இருக்கிறார்கள். திருஞானசம்பந்தவள்ளல்ப்பண்டாரம்’, ‘தெய்வசிகாமணிப்பண்டாரம்’, ‘வள்ளல்பபண்டாரம்’ என்றும், இப்படிக்குப் பரம்பரையாகி மட்டாதிபத்தியம் பண்ணுகிறபேர்களுக்கு பேர் வருகிறது.   


தலைய நாட்டு வேட்டுவரில் வள்ளல் கவுண்டன் வம்சாவளி
       வள்ளல் கவுண்டன் யெண்ணப்பட்ட பூற்வத்து பாளையகாரனுடைய, வம்சாவளி முதலான கைபீயிது, புக்கு…. தாறாபுரம் துக்கடி அறவகுறுச்சி தாலூகா கசுபாவுக்கு சேற்ந்த மஞ்சறா பூமிதெலத்துலே யிறுக்கும், வள்ளல்க் கவுண்டன் யெண்ணப்பட்ட தலைய நாட்டுப் பட்டக்காரனுடைய வம்சாவளி முதலான கைபீயிது யென்னவென்றால்:- பூற்வத்தில் குறுகுல வம்சமான செத்திரிய சாதியில் ஸ்ரீகாள ஹஸ்திபுரத்தில் வாசமாயிறுக்கப்பட்ட உடுப்பூறில் நாகறாசாயென்ங்குறவற் குமாரற் திண்ணநாற் யெங்குறவன் தேவாம்சைய குணாதிசயம்கள் நாலே வனத்தில் வேட்டைக்கு போஇ பட்சிகள் மிறுகங்களைக் கொண்டு வந்து, ஈசுவறனுக்கு அதிபகுக்தி, ஓடேன தன்னுடைய ஆசாரத்துடனே மாமிசங்கள் நாலே பூசை பண்ணிக் கொண்டு வந்தான். தின பிறதியாஇ ஆரு நாள் பூசை பண்ணினதில் ஆறானாள் பூசை பண்ணுகுரதுக்கு வந்த சமயத்தில் ஈசுவறனுக்கு தின காலத்தில் பூசை பண்ணப்பட்ட சிவகோசறி யெண்ணப்பட்ட பிராமணற்மாம்சம் பூசை பண்ணி கொண்டு அனாசாரம் பண்ணுகுரவனை பிடிக்க வேணும்படியாக யோசிச்சு யிறுந்து சுவாமி அவனுடைய சொப்பனத்தில் அந்த அனாசாரம் செயிதவனுடைய பகுத்தியைக் காண்பிச்சு குடுக்குரோமே(ன்)றும் னீ வனத்தில் ஒளிஞ்சியிறு யென்று சொன்னாற். அப்போ அந்த காரணாற்த்தத்துக்கு ஆக ஈசுவறன் தம்முடய நேத்திரங்களிலே ஒறு நேத்திரம் ஒளிகும் படியாஇ காண்பித்தாற். அதை பாத்து மாம்ச பூசை பண்ணப்பட்ட திண்ணநாற் யெங்குறவன் சுவாமிக்கு கண்ணு போஇ விட்டது யெண்ணும்படியா யெண்ணி தன்னுடைய கண்ணை ஒண்ணு ஆயுதத்துநாலே யெடுத்து, சுவாமிக்கு வைச்சான். மறுபடி ஈசுவறன் நேத்திரம் ஒளுகும்படியாக பண்ணிநாற். மறுபடி திண்ணனாற் யெங்குறவன் தன்னுடைய ரெண்டான் கண்ணைப் பிடிங்கி வைக்க வேணும்படியாக யெண்ணி, சுவாமினுடைய நேத்திரத்தை தன் காலுனாலே மிதிச்சுக் கொண்டு தன் கண்ணை பிடிங்கி வெச்சான். அந்த சமயத்தில் சுவாமி யிவனுடைய பகுத்திக்கு மிகவும்சந்தோஷப்பட்டு விறுஷப வாகனாறுடறாயி பிறதிட்சணமாஇ னீ யென்னுடைய பகுத்தன் யென்று சொல்லி கைலாசத்துக்கு வறவளைச்சு கொண்டாற். மேல் யெளுதப்பட்ட திண்ணநாற் யெங்குறவன் மாம்ச பூசை பண்ணி முகுத்தி பெற்று வேட குலனென்றும் கண்ணப்ப னென்றும் பேறாச்சுது. அந்த வம்சத்தில் உள்ள வம்ச பரம்பரைக்கு வேட்டுவ சாதியென்று பேற் வுண்டாச்சுது.

வேடகுல சாதியில் காள அஸ்தி பிறதேசங்களுக்கு றாசாவா இறுக்கப்பட்ட வம்ச பறம்பரையிலே முத்துறாசாக்கள் கூட்டமென்று பேற் பிறசுத்திப்பட்டு யிறுக்கும் நாளையில்…. அக்காலத்தில் கொங்கு தேசமான சேறன் றாச்சியத்தில் சிவ பிறாமணாள்,செட்டியள் காணியாட்சிக்காறறாயி இறுக்கும் நாளையில் அக்காலத்தில் றாச்சியாதிபதிகளான சோளசேற பாண்டிய மூணு றாசாக்களிடத்திலேயும் வல்லுவக்கானும் அச்சுத களப்பாளன் ஒட்டியன் யிந்த மூன்று பேறும் யிந்த றாச்சியங்களிலே அங்காமி பண்ணிக் கொண்டு யிறுக்கும் நாளையில் சிவபிறாமண செட்டிகள், அங்காமிக்கு பொறுக்க மாட்டாமல், பாண்டிய றாசா அவற்கள் யிடத்தில் போஇ சொல்லி கொண்டாற்கள் அப்போ அந்த மூன்று பேரையும் பிடிக்குரதுக்கு அகப்படாமல் போனபடியநாலே அந்தத் திறுடனெ பிடிக்கத் தக்க மனுஷாளை யேற்ப்படுத்திக் கொண்டு வந்தால் அவாளுக்கு ஆதீனம் உண்டு பண்ணி குடுக்குரோமென்று பாண்டிய றாசா வுத்திர பண்ணிநாற். காளஅஸ்தி பிறதேசத்துலே யிறுக்கப்பட்ட முத்து றாசாக்கள் கூட்டத்தில் சிவபிறாமணாள் செட்டியள் போஇ யிந்த அங்காமி சேதிகள் யெல்லாம் சொல்லிக் கொண்டு பாண்டிய றாசா வுத்திரவு செயித சேதி அறிய பண்ணினார்கள். அப்போ புன்னாடி கோத்திரத்தில் தன்ண்டெறி முத்துறாசா யெங்குற பேறுண்டானவன் சிறுது சனத்துடனே பிறக்கப்பட்டு சிவ பிறாமண செட்டியளையும் கூட்டிக் கொண்டு பாண்டிய றாசாயிடத்து வந்து அந்த சில்லரை பண்ணிண மூன்று பேரையும் பிடிச்சி குடுக்குரோமென்று சொல்லிக் கொண்டு பாண்டிய றாசாயிடத்தில் பாக்கு வெத்தலை வாங்கிக் கொண்டு ஒட்டியன் யெண்ணப்பட்டவனையும், அவனைச் சேற்ந்த சனங்களையும் வெட்டி செயித்து செயம் கொண்டு வந்தபடிநாலே பாண்டிய றாசா மிகவும் சந்தோஷப்பட்டு, வேட்டுவ றாசாக்களென்று பேறும் குடுத்து யிந்த நாட்டில் பாடி பனிரெண்டு மூன்றி முப்பத்தி ஆறுக்கு மேலான காணியாஷ்சியும் உண்டு பண்ணி குடுத்து அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியான சவுந்திர பாண்டிய றாசா அவற்கள் ரொம்பவும் தயவுநாலே தம்முடைய பேறான சவுந்திர பாண்டிய தண்டேறி முத்துறாசா யென்ங்குற பெரையும் குடுத்து முன் முத்து றாசாவுக்கு வுண்டான வசவசெங்கறடால், புலிக்கொடி, வெள்ளைக்கொடை முதலான விறுதுகள் அல்லாமல் பல்லக்கு,சாமதுரோக ஹரவெண்டயம்,குதிரை மேல் டக்கா, ஒட்டகை மேல் நகாறு, ஆனைமேல் நலபத்து, யெறுத்து மேல் தம்மட்டம், சங்கீத மேளம், பூறிகை, காஹள பேறி சின்னம், பக்கா-யிது முதலான பிறுதுகளும் குடுத்து மணலூறுக்கு சேந்தபாடி பனிரெண்டு முப்பத்தி ஆறு கிறாமங்கள், உள்ப்பட்டட சீமைகழு பட்டாதி காறியாஇ பட்டாபிஷேகம் பண்ணிவிச்சு குடுத்தாற்கள்.

சவுந்திர பாண்டிய றாசா அவற்கள் கடாட்சயத்துநாலே மணலூறுக்கு சேற்ந்த சீமைக்கு பாளைகற் பிறுபுத்துவக் காறாயி சகல பிறுதுகளும் பெற்றவற்களாயி சவுந்திர பாண்டிய முத்து றாசா யென்ங்குற பேற் பிறசுத்தி பட்டவ றாயின தலையூறுலே கெடி உண்டு பண்ணி கொண்டு பாளைகற் ஆதிபத்தியம் பண்ணிக் கொண்டு வந்தாற்கள்.

அந்த நாள் முதல் பரம்பறையாஇ மணலூறு சீற்மைக்கு சேற்ந்த பாளையகற் பிறபுத்துவத்துக்கு பட்டதிகாறியானவற் களுக்கு சவுந்திர பாண்டிய னென்ங்குற பேற்பெறசுத்தியாஇ உண்டான சொற்களாயி பிறபுத்துவம் பண்ணிக் கொண்டு வந்தாற்கள். அதின் பிற்க்காலம் வம்ச பறம்பறையிலெ பட்டாதிகாறியான சவுந்திர பாண்டிய வேட்டுவன் நாளையில் அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியானவற்கள் பேரில் சோள றாசா உயுத்தம் பண்ணி கொண்டு யிறுந்த சமயத்தில் சோள சமுஸ்தானத்தின் பேறில் பாண்டிய சமுஸ்தானாதிபதி தண்டு யெடுக்கும்போது தமக்குள்ளாக யிறுக்கப்பட்ட பாளையப்பட்டாற் முதலான பேரையும் வறச் சொல்லி உத்திரவு ஆயி மதுரை சமுஸ்தானத்துக்குப் போயிறுக்கும் போது தண்டு யெடுத்து பாளையம் யெறங்கின சமயத்தில் கூடாரம் அடிக்க வேண்டியதுக்காக கல்லுகளை யெடுத்துக் கொண்டு வரச் சொல்லி மணலாற் சீற்மைக்கு பாளைகறான செனங்களுக்கு உத்திரவு பண்ணினாற்கள். அப்போ அந்த கல்லுயெடுத்துக் கொண்டு வாரவேலை வெட்டி வேலையென்றும், அப்படிவெட்டி வேலை நாங்கள் செயிகுரதுயில்லை யென்று சொன்னார்கள். அது சேதி பாண்டிய றாசா அவற்கள் கேள்விப்பட்டு சவுந்திர பாண்டிய வேட்டுவரை தரிவிச்சு வுன்னுடை சனங்களை கல்லுகள் யெடுத்துக் கொண்டு வறச் சொன்னதுக்கு வெட்டி வேலை செயிகுரதுயில்லை யென்று சொன்னாற்களே, ஒனக்கு அடுப்புக்கு கல்லு வேணுமே அது யெடுத்துக் கொண்டு வாரதுயில்லையா வென்று கேட்டாற்கள். அது வெட்டி வேலையானதால் கல்லை யெடுக்குரது யில்லை யென்று சொன்னாற். பாண்டியறாசா அது சேதிகளுக்கு மனசுலே ஆயாசம் தோண்ணி னீ சமயல் யெப்படி பண்ணுவாஇ யென்று கேட்டாற். நான் அதுக்கு தலையெ வெட்டி அடுப்பு வச்சு சமயல் பண்ணு ஓமென்று சொன்னாற். அன்னேறத்தில் ரெண்டு மூணு பேரை தலெயெ வெட்டி அடுப்பு கூட்டி சமயல் பண்ண சொல்லி சொன்ன யிடத்தில் சமயலும் ஆயி, தலையும் வெடியாமல் யிறுந்த படியனாலே, பாண்டிய றாசா அதைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டு, யிவாள் யிடத்தில் சாத்திர தற்மமும் ரொம்பவும் யிறுக்குரது யென்று தோணப்பட்டு யினிமேல் யிப்படிக்கு செய்ய வேண்டா மென்று உத்திரவு செயிது, மணலூறு நாட்டாரென்று உண்டான பாளையகறுக்கு தலையநாடு யென்று பேர் குடுத்தாற்கள். அதுநாலே தலையனாடு யென்றும் தலையூர் நாட்டு பாளையகற் ஆதீனத்துக்குப் பட்டக்காறு யென்றும் தலைய நாட்டு பாளையகாற் ஆதீனத்துக்குப் பட்டக்காறு யென்று வம்ச பறம்பறையிலே சவுந்தறபாண்டிய பாளையகரென்று பிறசுத்திப்பட்டு யிறுந்தாற்கள்.

அதின் பிற்க்காலும் தலைய நாட்டு பளையகற் ஆதீனத்து வம்ச பறம்பறையிலே கனக சபாபதி பாண்டியன் யென்னப் பட்டபேற் உண்டானவற் நாளையில் திறுஞான சம்பந்த கண்ணுடைய வள்ளலாற் மடத்துக்கு சீஷநான படியனாலே வள்ளல் யென்று பேற் வரப்பட்டது. அந்த நாள் முதல் சிவ சமயசையில் சித்தாத்த ஆசாரங்களாஇ நடந்து கொண்டு அறமனையாற் குடுத்த கிதாபும் குறுமனையிலே வுண்டான பேறும் கூட்டி கனகசபாபதி பாண்டிய வள்ளல் யென்று பேற் பிறசுத்தி பட்டாற்களாயிருந்தார்கள். மேல் யெளுதப்பட்ட வம்ச பறம்பறைகளுக்கு போகுகாலமான படியனாலேயும் தகவலாயிறுக்கப்பட்ட ஆதறவுகள் ராசீகங்களிலே கைதப்பி போனபடியநாலேயும் யித்தினை தலைமுரை யென்று தெறியவில்லை.

சாலீவாகன சகாபுதம் 1315 முதல் நாளத வரை பட்டம்ங்களும் வறிசைகளும் அவாளவாளுடைய நடைதைகளும் யிதின் கீளை யெளுதி வறுகுரது.

1. அலகடம் செயித கையிக்கு ஆளியிடு பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 37
2. யிவற் குமாரன் தண்டெறி முத்தய பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 22
3. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 23
4. யிவற் குமாரன் அன்னதான பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 34
5. யிவற் குமாரன் வாரணவாசி பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 45
6. யிவற் குமாரன் மெயிப் பொறுள் நாத பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 10
7. யிவற் குமாரன் சொக்கய பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 44
8. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 53
9. யிவற் குமாரன் கனக சபாபதி பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 35
10. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 50
11. யிவற் குமாரன் கனக சபாபதி பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 15
12. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 18

——— ———– 12 391 ———– ————
சாலிவாகன சகாபுதம் 1706 வருஷம் வரைக்கும் தலைமுரை 12க்கும் வருஷம் 391க்கு அவாளவாளுடைய னாளையில் நடந்த நடத்தையள் கீளே யெளுதி வறுகுரது.

முதல் தலைமுறை பட்டக்கார் அலகடம் செயித கையிக்கு ஆளியிடு பாண்டிய வள்ளல் நாளையில் சிறு புள்ளையாஇ யிறுக்குர போது, சிறுது ஆபரணங்கள் அலங்கரிச்சு யிறுக்குர சமயத்தில் கம்மாள சாதியில் ஒறுவன் னோட்டக் காரர் உத்தியோகத்திலே யிறுக்கப்பட்டவன். அந்த ஆபறணங்களுக்கு ஆசைப்பட்டு அந்த கொளந்தை பேறில் யிறுக்கப்பட்ட ஆபறணங்களெ யெல்லாம் வாங்கிக் கொண்டு அந்த கொளந்தைய்யை கெணத்துலே தள்ளி போட்டான். அந்த சமயத்தில குளந்தையானவன் கிணத்துக்குளேயிறுந்து விறுஷசத்தின் வேரை ஆதறவு பத்திக் கொண்டு கிணத்த வாறியிலே மேடேறி ஒளிஞ்சி கொண்டு யிறுந்தான். அந்த சமயத்திலே தாயாறு தொப்பனாற் சனங்கள் யெல்லாம் குளந்தைய்யெ காணமென்று தேடி கிணத்துலே யிறுந்த குளந்தையெ கண்டுபிடிக்கும் யிடத்தில் அபொ தாயாரை தோப்ப நாறை தன்னை வதை பண்ண வேணுமென்று னினத்து கிணத்துலே தள்ளின கைக்கு விறுது போடுவிக்க வேணுமென்று மனுவு கேட்டுக் கொண்டு அநத கம்மாள சாதி னோட்டக்காரனை தரிவிச்சி அவன் கைக்கு பொன்னாளி மோதிரமும் போட்டு அவனுக்குப் பொன்னாளி நோட்டக்கார னென்று பேறும் குடுத்து யிந்த தலைய நாட்டில் சேற்ந்த முடக்காறு முதலான கிறாமங்களிலே னோட்டக்கார காணியாட்சி உண்டு பண்ணி குடுத்த பாடியனாலே அலகடம் செயித கையிக்கு ஆளியிட்ட பாண்டிய வள்ளல் யென்று பேற் பிறசுத்தி பட்டவறாயி பட்டம் ஆண்டு கொண்டு பேறியவாள் சம்பாதிச்ச ஆதீனம் பறிபாலனம் பண்ணிக் கொண்டு வந்தாற்கள். ரெண்டான் தலைமுரை முதல் னாலான் தலைமுறை அன்னதான பாண்டிய வள்ளல் நாள் வரைக்கும் பூற்வத்தில் பெறியவாள் சம்பாதிச்சு பூமிதெலத்தில் கோட்டை கொத்தளம் போட்டுவிச்சுக் கொண்டு அன்னதானகாற் யென்று பேற் பெறகத்திப் பட்டவளாயிறுந்தாற்கள். அஞ்சான் தலைமுரை வாணவாசி பாண்டிய வள்ளல் நாளையில் அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியான னாயக்கற் அவற்கள் துரைதனம் ஆண்டு வறும் காலத்தில் றாசாக்கள் தயவுக்குப் பாத்திரனாயி காத்துக் கொண்டுயிறுந்துஅறமனை யாற் கட்டு(லேயிருந்த) வூளியத்தில் சாகுறுதயாஇ முன்னிலைக்காரனாயி யிறுந்து… தலைய நாட்டு கிறாமங்களில் சேற்ந்த சீற்மைய்யை சுத்த சாரியாஇ அனுபவிச்சுக் கொண்டு பூமீதெலத்தில் போயி கிணறுகள் உண்டு பண்ணிக் கொண்டு பிறசுத்தி புறுஷனாயி யிறுந்தாற்கள். அக்காலத்தில் பூமிதெலம் பாளைகற் கெடியில் ஆனை, குதிரை முதலான சங்கத்துடனே யிறுக்கும் வேளையில் சிலுக்கால் பொம்மய னாயக்கனுக்கு குமாற வற்க்கமென்று பேறும் குடுத்து ண்டிபட்டி கிறாமமும் உம்பளிக்கையாக விட்டாற்கள்.

ஆறான் தலைமுரை பட்டக்காரன் முதல் ஒன்பதான் தலைமுரை கனகசபாபதி பாண்டிய வள்ளல் நாள் வரைக்கும் பூற்வத்தில் பெறியவாள் சம்பாதிச்சு யிறுக்கப்பட்ட ஆதீனம் விளங்க பண்ணிக் கொண்டு அவாளுக்கு உண்டான பிறுதுகள் ளொடனே அந்தந்த காலத்தில் பிறபுத்துவம் பண்ணப்பட்ட றாசாக்கள் தயவுக்கு பாத்திறநாயி காத்துக் கொண்டு அறமனை யாற்கட்கு பண்ணினபடிக்கு பணமும் செலுத்திவிச்சு கொண்டு பிறசுத்தி புருஷாளாயிறுந்தாற்கள்.

பத்தான் தலைமுரை சவுந்திற பாண்டிய வள்ளல் நாளையில் அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியான னாயக்கற வற்கள் சமட்சமத்தில் தயவுக்கு பாத்திரனாயி காத்துக் கொண்டு யிறுக்கும் நாளையில்யிந்த தலையநாட்டு சீற்மைக்கு பெஷ்க்கா வருஷம் 1 க்கு முவ்வாயிரம் பொன்னும், அரமணை காரியத்துக்காக வறப்பட்ட மனுஷாள் னித்திராபங்கம் பண்ணாத யிறுக்கும்படியாஇ நித்திரை வேளைக்கு யெளுப்பாமல் யிறுக்குரதுக்காக வருஷம் 1 க்கு ஆயிறம் பொன்னும் செலுத்திக் கொண்டு கிறாமங்கள் அனுபவிச்சுக் கொண்டு பிறசிதி புறுஷாளா யிறுந்தாற்கள்.

பதினோறாம் தலைமுரை கனகசபாபதி பாண்டிய வள்ளல் நாளையில் அக்காலத்தில் றாச்சிய பிறபுத்துவம் பண்ணப்பட்ட மயிசூறு சமுஸ்தானம் ஆளப்பட்ட கர்த்தாக்கள் நாளையில் கடைசியில் யிந்த நாட்டுக்குச் சேற்ந்த கிறாமங்களையெல்லாம் அறமனைக்கு சபுத்தி பண்ணிக் கொண்டு தலையனாட்டு கிறாமங்களிலே நஞ்சை காணியில் 12 புஞ்சையில் 500 யிது தண்டிகை மானியமென்று சுத்த சுறுவ மானியமாயி விட்டாற்கள். அதுமுதல் மானியம் அனுபவிச்சுக் கொண்டு பிறசுத்தி புறுஷறாயி இறுந்து கொண்டு யிந்த நாட்டில் மகமை ஆதாயத்தில் வருஷம் 1 க்கு 100 பொன்அனுபவிச்சுக் கொண்டு வந்தாற்கள்.

சாலீவாகன சகாபுத்தம் 170(7)க்கு விசுவாசவசு வருஷம் காற்த்திகை மீ 23 தேதி சோமவாரம் பச்சமீ யிந்த சுப தினத்தில் சவுந்தற பாண்டிய வள்ளல் கவுண்டன் யென்னப்பட்ட பட்டகாற் தெயிவகெதி அடஞ்ச நாளையில் அவர் குமாரனான வறுக்கு அக்காலத்தில் றாச்சியம் பிறபுத்துவம் பண்ணப்பட்ட டிப்புசுலுதான் துரைத்தனத்தில் அறமனை மனுஷாளும் யிறுந்து நாடூறு பாளையபட்டாற் அனவறும் வந்து பட்டமும் கட்டிவெச்சு கனகசபாபதி பாண்டிய வள்ளல் யெண்ணப்பட்ட பேற் வௌங்க பண்ணிநாற்கள். அந்தனாள் முதல் தலையானாட்டுப் பட்டக்காறனென்று பேற் உண்டானவனாகி மகா றாச றாச ஸ்ரீ கும்பினியாற் தயவுக்கு பாத்திரனாயி காத்துக் கொண்டு குடித்தினக்காரனாகி யிறுந்து கொண்டு சறுக்காறுலே கட்டுப்பண்ணின படிக்கு மிகவும் வணக்கத்துடனே காத்து யிறுக்குரேன்.

நாளது ஆசறுலே யிறுக்கப்பட்ட வள்ளல் கவுண்டன் பூமி தெலத்திலே குடியிருப்புக்காரனாயி முப்பது வயிசு புறுஷனாயி காத்துக் கொண்டு யிறுக்கிறேன். - வள்ளல் கவுண்டன் ருசு


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கால...