Tuesday, September 1, 2009

பாசூர் சின்ன மடம் (மேல்கரைப் பூந்துறை நாட்டு அரண்மனை))




குரு பாரம்பரியம்:
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.


ஶ்ரீ நந்திதேவர்
|
|
|
நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளா அது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யானிருந் தேனே.
திருமூலதேவ நாயனார்
|
|
|
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி ஆமே.

கலந்தருள் காலாங்கர்‌ தம்பால்‌ அகோரர்‌ 
நலந்தரு மாளிகைத் தேவர்‌ நாதாந்தர்‌ 
பலங்கொள்‌ பரமானந்தர்‌ போகதேவர்‌    நிலந்தரும் மூலர்‌ நிராமயத்தோரே.



ஶ்ரீ காலாங்கி கஞ்சமலையன்
|
|
|
வந்த மடம் ஏழு மன்னுஞ்சன் மார்க்கத்தின்
முந்தியுதிக்கின்ற மூலன் மடவரை தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரஞ் 
சுந்தர ஆகமச் சொல்மொழிந்தானே.

ஶ்ரீ கஞ்சமலை தவராஜ பண்டிதர்
|
|
|
ஶ்ரீ கவிராஜ குரு



 


              ஶ்ரீகுலகுருப்யோ  நம : 


               ஸ்ரீ பரமகுருப்யோ நம :  


             ஸ்ரீ பரமேஷ்டி குருப்யோ நம :   


                ஸ்ரீ பராபர குருப்யோ நம :   

                 ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் துணை   


              ஸ்ரீ கவிராஜ குருப்யோ நம:


   பாசூர் சின்ன மடம் (மேல்கரைப் பூந்துறை நாட்டு அரண்மனை)

ஸ்ரீமத் வேதமார்க பிரதிஷ்டாபனாசார்ய மந்த்ர சாஸ்த்ர நிரத ஸத்யோஜாத  ஞான சிவாசார்ய குருசுவாமிகள்

பாசூர்மடம் தீக்ஷதர்கள் வரலாறு:

         கொங்கதேசம் மேல்கரை பூந்துறைநாட்டு காராள ,  காணியாள வெள்ளாளர்களுக்கும் ,  கொங்க பனிரெண்டாம் நகரத்து செட்டிமார்களுக்கும் குலகுரு மடமாக பாசூர்மடம் ஆதிகாலம்தொட்டு விளங்கி வருகிறது. சேரதேசமாகிய கொங்கதேசத்தில் அனைத்து மடங்கள், ஆசாரியர்களுள் தொன்றுதொட்டு நிலவிவரும் பாரம்பரியத்தின் ஆணிவேராகவும், அச்சாரமாகவும் விளங்கி வரும் மடம். இதன் தலைமை பீடம் பாசூர் ஸத்யோஜாத மடம். தீக்ஷதர்களே நமது சேர தேசத்தில் வைதீக ஆகமங்களையும், பாசுபத மார்க்கத்தையும், போதாயன சூத்திரத்தையும் காத்து பாடசாலைகள் அமைத்து பிரதிஷ்டாசாரியர்களாக இருந்தவர்கள். ஆகம பாசுபதமா ன சைவ சித்தாந்த சன்மார்க்கமே பாரதத்தின் ஆதி மதமாகும்.

https://ta.m.wikipedia.org/s/xo2

கங்கா குலம் - கொங்க வெள்ளாளர்

ஆதியில் கோசலதேசத்தில் (கங்கைக்கும் சரயு நதிக்கும் இடைப்பட்ட பகுதி) சூரியவம்சத்து முதல் அரசரான இக்ஷ்வாகு முதலான அரசர்கள் ஆண்டுவந்தனர். பல தலைக்கட்டுகளுக்குப்பிறகு ஒரு சூரியவம்சத்து அரசி கங்கையில் நீராடுகையில் குழந்தை ஒன்று பிறந்தது. கங்கை அளித்த மகனாதலால் அவனை கங்கதத்தன் என்று வழங்கினர். இவனுக்கு மரபாலன் என்ற பெயரும்சூட்டி போதாயனர் என்ற மகரிஷி சகலவிஷயங்களையும் பயிற்றுவித்தார். இம்மரபாலனது வம்சத்தவரே கங்காகுலம் என்று வழங்கப்படுகின்றனர். இவர்கள் அவந்திதேச அரசன் தொடர்ந்து தாக்கிய காரணத்தால் தெற்கே காஞ்சிநகரையும் அதனை சுற்றியிருந்த கானகங்களையும் நாடாகி சோழதேசத்தின் வடபகுதி தென்பெண்ணையின் வடபகுதியில் வாழ்ந்துவருகையில் ,  கரிகாலசோழனது இரண்டாவது மகனும் ,  தாசி வயிற்றில் பிறந்தவனுமான ஆதொண்டன் என்பவனுக்கு இப்பகுதியினை தொண்டமண்டலம் என்று பெயர்சூட்டி பட்டம் கட்டினார் சோழன். முறைதவறி பிறந்தவன்,  கொங்கர் வீட்டில் பெண் கேட்க ,  கொங்கர் வடதிசை நோக்கி இடம்பெயர்ந்தனர். அப்போது வெள்ளாளர்களது அரச ரான சேரமான்  அவர்களைத் தடுத்து ,  வனப்பிரதேசமான தனது தேசத்துக்கு வரவழைக்கிற ர் . கொங்கு காணிப்பட்டயம் என்னும் புராதன பட்டயம் கொங்கதேசத்தின் பூர்வகுடிமக்களான நற்குடி   48000  வெள்ளாளர்களும் ,  பசுங்குடி  12000  செட்டிமார்களும் காஞ்சியிலிருந்து இங்கு குடியேறி தமக்கான தேசமாக சேரதேசம் எனும் கொங்கதேசத்தினை அமைத்துக்கொள்கையில் தத்தம் குலகுருக்களுடன் குடியேறியவர்கள் என்கிறார்கள். இக்கொங்கருள் பூந்துறைநாட்டில் காணி அமைத்துக்கொண்டவர்களுக்கும் ,  பனிரெண்டாம் நகரத்து செட்டிமார்களுக்கும் குருவாக இரு ப்பவர்கள்     தீக்ஷதர் வம்சத்தினர்.

சிஷ்யர்கள் அளித்துள்ள செப்பேடுகள்:

           விஜயநகர காலத்தில் அனைத்து விஷயங்களும் ஆவணமாக்கப்பட்டது, மேல்கரை பூந்துறைநாட்டு சபையோர் பூந்துறை புஷ்பவனேச்வரர் கோயிலில் வைத்து சிஷ்ய கொங்க வெள்ளாளர்கள் தாமிர சாசனம் எழுதி அளித்தனர்.

                        பாசூர் குருசுவாமியார் செப்பேடு – 1




(கொங்கதேசம் மேல்கரை பூந்துறைநாடு நாட்டார், காணியாள கொங்க வெள்ளாளர் செப்பேடு)

வருடம்:1336 CE

காலம்:விஜயநகர பிரதிஷ்டாபனை

    சாலிவாஹன சகாப்தம் சகாப்தம் சகாப்தம் 1258 கல்லியப்தம் 4477 யிதுமேல் யிதுமேல் செல்லாநின்ற தாது தை மாதம் சுக்கில பஞ்சமியும் மிருகசீருஷ நட்சத்திறமும் பாலவாகறணமும் பெத்த ஸ்ரீமது ராசாபரமேசுவரன் ஆணைகுந்தி புக்கறாயறவர்கள் றத்தின சிம்மாசனருடராய் பிறிதிவி சாம்பிறாச்சியம் காலத்தில் பட்டிணத்தில் கண்டீரவ நரசறாயர் துரத்தினத்தில் மதுறையரச மதுறையரச னாளையில் னாளையில் னாளையில் னாளையில் மேல்கரைப் மேல்கரை பூந்துறை நாட்டிற்குச் சேந்து யிருக்கும் இம்முடி அகிலாண்ட தீக்ஷதர் சுவாமியாற் பாதம் மறவாதவறான

மேல்கரைப் பூந்துறை நாட்டிற் காடை கோத்திரம், வெள்ளோடு சாத்தந்தை கோத்திரம், பயறன் கோத்திரம், நசையநூறு கண்ணன் கோத்திரம், செம்பன் கோத்திரம், பூச்சந்தை கோத்திரம், கூறை கோத்திரம், கீறை கோத்திரம், பாண்டியன் கோத்திரம், யீஞ்சன் கோத்திரம் கோத்திரம் கோத்திரம், யெழுமாத்தூறு அனுமன்பள்ளீ கூடலூரு பண்ண கோத்திரம், யீங்கூறு ஈஞ்ச கோத்திரம், தோட்டை கோத்திரம், முருங்கத்தொழுவு பெரிய கோத்திரம், திருவாச்சி ஓதாளன் கோத்திரம், அந்துவன் கோத்திரம், ஆந்தை கோத்திரம், பெருந்துறை சாகாடை கோத்திரம், கனகபுரம் ஏலவமூலை சாத்தந்தை கோத்திரம், சத்திய கோத்திரம், காளமன் கோத்திரம். மொடக்குறிச்சி தூறன் கோத்திரம், காறி கோத்திரம், கிளாம்பாடி கண்ண கோத்திரம், பிடாறியூறு பெறழந்தை கோத்திரம், கூற கோத்திரம், கண்ண கோத்திரம்,கொல்லன்கோயில் பேரோடு வெண்டுவன், பண்ண கோத்திரம், கொடுமணல் பனங்காடை கோத்திரம், பாண்டியன், சேரன் கோத்திரம், மேல்கரை பூந்துறை நாட்டாரும், கிராமத்தாரும் கூடி எழுதிக்கொடுத்த தலைக்கட்டுக்குத் தாம்பற சாதனம்.

சாசனமாவது குருசுவாமியர் பாதத்துக்கு உடல் உயிறு பொருள் மூன்றும் குரு பாதத்துக்கு தெத்தம்பண்ணி எழுதிக்கொடு த்த தாம்பிற சாசனப் பட்டயம். நாங்கள் யெந்த நாட்டி லே யெந்த ஊருலே யிருந்தாலும் யெங்கள் கோத்திறத்தாள் தலைக்கட்டு ஒன்றுக்கு நாகறமாகவும் பணம் அஞ்சு வருஷம் பிறதி குடுத்து சஞ்சாரம் வந்தபொழுது சஞ்சாரக் காணிக்கைகளையும் அப்பணைப் படிக்கி ஒபதே சம் பாதபூஜை முதலானதும் பண்ணிக்கொண்டு  யெங்கள் வமுசத்தாறு புத்திரபவுத்திர தேசபந்து  ஆணவத்துடன் நடந்துகொண்டார். அபுத்திறிகம் சொத்து மடத்துக்கு சேத்தி குடுப்போமாகவும். யெ ங்கள் கொத்திரத்தார் யெந்த நாட்டிலே ஊரிலே காணிவாங்கி அதிகாரம் பண்ணீனாலும் குடித்தனம் பண்ணினாலும் சுவாமியார் பாதத்துக்கு நடந்துகொண்டு வருவோமாகவும். யிப்படிக்கு நடந்துவரும் காலத்தில் யிதுக்கு விகாதம் சொல்லாமல் பரிபாலனமாயி யெங்கள் வமுசத்தார் பயபக்தியாயி நடத்தி வந்தவன் சுகமாய் தனசம்பத்தும் தான்னிய சம்பத்தும் புத்திரசம்பத்தும் அஷ்டைசுவரியமும் ஆயுளாரோக்கியமும் தேவப்பிறசாதமும் குருப்பிரசாதமும் மென்மேலும் உண்டாகி கல்லும் காவேரிப் பில்லும் பூமி சந்திராதித்தியாள் வரைக்கும் அகிலாண்ட ஈசுவரர் கடாக்ஷத்தினாலே சுகமாயிருப்பார்கள். இந்தக் சாசனம் படித்துப் பார்த்தவர்களும், செவியில் கேட்ட பேரும் சுகமாயிருப்பார்கள். யிதுக்கு விகாதம் சொல்ல குருநிந்தனை சொன்னவர் கெங்கை கரையிலே காறாம்பசுவையும் பிராமணாள்களையும் மாதாபிதாவையும் கொண்ற தோஷத்திலே போவாறாகவும். யிந்தப்படிக்கி யெங்கள் வமுசத்தாறனைவரும் சம்மதிச்சு பூந்துறை புஷ்பவனீசுவரர் சுவாமி பாகம் பிரியாள் சன்னிதானத்திலே சகிறண்ணியோதக தானமாயி எழுதிக்கொடுத்த தலைக்கட்டு தாம்பற சாசனம். பாகம்பிறியாள் சமேத புஷ்பவனீசுவர சுவாமி சகாயம். பாடகவல்லி சமேத சறுவலிங்கமூர்த்தி சகாயம். மரகதவல்லி சமேத மூவேந்திர சுவாமி சகாயம். தானபால யோர்மத்யே தானாத் ஸ்ரேயோனு பாலனம் தானாத் ஸ்வர்க்க மவாப்னோதி பாலனாத் அச்சுதம் பதம்.

பூந்துறை சின்னத்தம்பிக்கவுண்டன், நல்லதம்பிக்கவுண்டன், பெரியதம்பிக்கவுண்டன் சாச்சி. வாறணவாசிக்கவுண்டன், சின்னவிநாயககவுண்டன், வெள்ளோடு விசுவறாயக்கவுண்டன், கருப்பறாயக்கவுண்டன், பழனிக்கவுண்டன், சென்னிமலைக்கவுண்டன், நசியனூறு பெரிய செங்கோட நல்லதம்பிக்கவுண்டன், கொழந்த மன்னாடிக்கவுண்டன் வெள்ளப்பொறப்பன கவுண்டன், மூத்த மன்னாடிக்கவுண்டன், காசிகவுண்டன், ஆவுடையாக்கவுண்டன், கொழந்தவேல் கவுண்டன், குப்பக்கவுண்டன், முத்துக்கவுண்டன், பழனிக்கவுண்டன், மோளக்கவுண்டன், மருதமலைக்கவுண்டன், பச்சியாக்கவுண்டன், அத்தப்பகவுண்டன், குப்பகவுண்டன், நல்லப்பகவுண்டன், எழுமாத்தூரு கோமறசின்னயகவுண்டன், நல்லயகவுண்டன், அவினாசிக்கவுண்டன், முத்துராமகவுண்டன், கெங்காளிக்கவுண்டன், பொங்காளிக்கவுண்டன், காளியப்ப கவுண்டன், குப்பகவுண்டன், ஊராட்சிக்கோட்டை அருத்தனாரிக்கவுண்டன், பழனிக்கவுண்டன்.
அனுவன்பள்ளி முத்துநல்லய்யன், பெரியமுத்துக்கவுண்டன், முத்துப்பெரியண பழனிக்கவுண்டன், சின்னாயிகவுண்டன், பழனிமலைக்கவுண்டன், காசிக்கவுண்டன், பெரிய ராக்கியாக்கவுண்டன், சின்னத்தம்பிக்கவுண்டன், யீங்கூறு கருமகவுண்டன், பழனிக்கவுண்டன், சென்னிமலைக்கவுண்டன், மருதமலைக்கவுண்டன், முருங்கத்தொழுவு கண்ணுடையாக்கவுண்டன், பெரியசெல்லப்பகவுண்டன்சொக்கநாதகவுண்டன், முத்தப்பகவுண்டன், றாக்கியாக்கவுண்டன், தப்புறாக்கவுண்டன், ராமன்னகவுண்டன், திருவாச்சிபெரியாபொங்காக்கவுண்டன், பெரியகாலியப்பகவுண்டன்பொன்னேகவுண்டன், கருமாண்டகவுண்டன், சோளியப்ப கவுண்டன், ஞானராசாக்கவுண்டன், பெருந்துறை செல்லப்பகவுண்டன், நல்லேகவுண்டன், பழனிக்கவுண்டன், கருப்பகவுண்டன், யெலவமூலை பெரியசின்னயகவுண்டன், சின்னயகவுண்டன், காலிங்கராயக்கவுண்டன், வீரமலைக்கவுண்டன், பழனிக்கவுண்டன்,

காளமங்கலம் சின்னாயிக்கவுண்டன், பெரியண்ணகவுண்டன், நல்லப்பகவுண்தன், குட்டியண்ணக்கவுண்டன், ராசாக்கவுண்டன், முத்துக்கவுண்டன், வெள்ளக்கவுண்டன், கருப்பகவுண்டன், கொழந்தவேல்கவுண்டன், வெத்திவேல்கவுண்டன், பெரியசெல்லப்பகவுண்டன், ஊத்துக்குளி முத்துவேலாயுதகவுண்டன், பெரிய வேலன்ன குட்டியாக்கவுண்டன்குப்பகவுண்டன், பழனிக்கவுண்டன், சத்தியமங்கலம் செல்லப்பகவுண்டன், கொழந்தவேல் கவுண்டன், வெத்திவேல்கவுண்டன், பெரியசெல்லப்பகவுண்டன், மொடக்குறிச்சி கருமாண்டக் கவுண்டன்சின்னமுத்துக்கவுண்டன், பெரியவடமகவுண்டன், கொமறண்ணகவுண்டன், கிளாம்பாடி பாம்பகவுண்டன், கொமரசாமிசின்னாக்கவுண்டன், பெரியசெங்கோடகவுண்டன்,  சின்னபழனிவேல் கவுண்டன்,  குப்புச்சிகவுண்டன்,  முத்துக்கவுண்டன்,  கொமரவேல்  கவுண்டன்,  வெட்டிவேல்கவுண்டன். கொளங்கோநல்லி  பெரியகொமாரக்கவுண்டன்,  சின்னப்பொங்காளிக்கவுண்டன்,  குப்பகவுண்டன்,  பெரியகுமாறகவுண்டன்  ,  முத்துரங்கவுண்டன்,  திருமலைராயக்கவுண்டன்,  குப்பணகவுண்டன்  ,  வெள்ளைக்கவுண்டன்  ,  பெடாரியூர்  பெரியதம்பிக்கவுண்டன்  ,  சென்னிமலைக்கவுண்டன்  ,  குப்பணகோயக்கவுண்டன்  ,  குப்பணகோயக்கவுண்டன்  
சீரங்கராயகவுண்டன்,  கொடுமணல்  பெரியசிவமலைக்கவுண்டன்,  குட்டியணகவுண்டன்,  சின்னய கவுண்டன்,  பொன்னயன்,  காகம்திருமலைக்கவுண்டன்,  பழனிக்கவுண்டன்,  வேலப்பகவுண்டன் இந்தப்படி  சகலசனங்கள்  கைநாட்டு  . 




சின்ன மடம் முப்பெரும் பிரிவுகளாக உள்ளது.சிஷ்யர்கள், தத்தம்  ஊர்,முன்னோர் பெயர்கள் எவரது தலைக்கட்டு கணக்கு ஏடுகளில் உள்ளதோ, அவரே தங்களது குலகுரு :

சின்னமடம் மூன்று பிரிவுகளாகப் பிரிந்துள்ளது:


A.பாண்டியதேச ஆறூர் நாடார் குலகுரு

B.மேல்கரைப் பூந்துறை நாட்டிற்குள் பூர்வீக கிராமம்  (காணிகளுக்குள்) இருப்பவர்கள் (நாட்டு குலகுரு), அகரம் வெள்ளாஞ்செட்டியார் பிரிவு

C. மேல்கரைப் பூந்துறை நாட்டிற்கு  (காணிகளுக்கு) வெளியில் பூர்வீக கிராமம் இருப்பவர்கள் (நாட்டுப்புறம்), அகரம் வெள்ளாஞ்செட்டியார் பிரிவு

சின்ன மடம் B. மேல்கரை பூந்துறை நாட்டுக்குள் இருப்பவர்கள் குலகுரு (பார்க்க நாட்டு வரைபடம்), அகரம் வெள்ளாஞ்செட்டியார் பிரிவு:


 காசிவாசி மட இளவரசு ஸ்ரீ  சாம்பசிவ தீக்ஷதர் 


சின்ன மடம் Bக்குக் கட்டுப்பட்ட  பூந்துறை நாட்டு கிராமங்கள்:

  1. பேரோடு
  2. சித்தோடு
  3. நல்லகவுண்டம்பாளையம்
  4. குமிளம்பரப்பு
  5. மேட்டுநாசுவன்பாளையம்
  6. கரை எல்லபாளையம்
  7. எலவமலை
  8. அணை நாசுவம்பாளையம்
  9. சூரியம்பாளையம்
  10. சர்க்கார் அக்ரஹாரம்
  11. பி.பி. அக்ரஹாரம்
  12. ந.தளவாய்பாளையம்
  13. பெரியசேமூர்
  14. எல்லப்பாளையம்
  15. கங்காபுரம்
  16. நொச்சிபாளையம்
  17. தயிர்பாளையம்
  18. வேட்டைபெரியாம்பாளையம
  19. சாமிகவுண்டம்பாளையம்
  20. ஆட்டையாம்பாளையம்
  21. நசியனூர்
  22. ராயபாளையம்
  23. மூலக்கரை
  24. கூரபாளையம்
  25. தோட்டாணி
  26. வேப்பம்பாளையம்
  27. புத்தூர் புதுப்பாளையம்
  28. கதிரம்பட்டி
  29. பவளத்தாம்பாளையம்
  30. நஞ்சனாபுரம்
  31. வில்லரசம்பட்டி
  32. திண்டல்
  33. சூரம்பட்டி
  34. ஈரோடு
  35. வைரபாளையம்
  36. சர்கார் சின்ன அக்ரஹாரம்
  37. பி. எஸ். அக்ரஹாரம்
  38. பீளமேடு
  39. வெண்டிபாளையம்
  40. ஓலப்பாளையம்
  41. முள்ளம்பட்டி
  42. கந்தாம்பாளையம்
  43. பெரியவிளாமலை
  44. சின்னவிளாமலை
  45. திருவாச்சி
  46. புவம்பாளையம்
  47. கருமாண்டி செல்லிபாளையம்
  48. ஈங்கூர்
  49. பெருந்துறை
  50. வடமுகம் வெள்ளோடு
  51. புங்கம்பாடி
  52. கவுண்டிச்சிபாளையம்
  53. முகாசிபுலவம்பாளையம்
  54. தென்முகம் வெள்ளொடு
  55. முகாசிப் பிடாரயூர்
  56. அட்டவனைபிடாரியூர்
  57. சென்னிமலை
  58. எல்லை கிராமம்
  59. எக்கட்டாம்பாளையம்
  60. பசுவபட்டி
  61. முருங்கத்தொழுவு
  62. குப்பிச்சிபாளையம்
  63. ஆனந்தம்பாளையம்
  64. அட்டவணை அனுமான்பள்ளி
  65. எழுமாத்தூர்
  66. ஈஞ்சம்பள்ளி
  67. கணபதிபாளையம்
  68. காகம்
  69. கனகாபுரம்
  70. குளூர்
  71. கண்டிகாட்டுவலசு
  72. குலவிளக்கு
  73. லக்காபுரம்
  74. மொடவாண்டி சத்தியமங்கலம்
  75. முகசி அனுமான்பள்ளி
  76. லக்காபுரம்-முத்துகவுண்டம்பாளையம்
  77. நஞ்சை ஊத்துக்குளி
  78. நஞ்செய் காளமங்கலம்
  79. பழமங்கலம்
  80. பூந்துறை சேமூர்
  81. புதூர்
  82. புஞ்சை காளமங்கலம்
  83. துய்யம்பூந்துறை
  84. வேலம்பாளையம்
  85. விளக்கேத்தி
  86. நஞ்சை கிழாம்பாடி
  87. புஞ்சை கிழாம்பாடி
  88. நஞ்சை கொளாநல்லி. 
  89. புஞ்சை கொளாநல்லி

பாசூர் சின்ன மடம் (மேல்கரைப் பூந்துறை நாடு) குருபாதம் ( காசிவாசி ஸ்ரீ சாம்பசிவ தீக்ஷதர்)






பாசூர் சின்ன மடம் (மேல்கரைப் பூந்துறை நாடு) 



பாசூர் குருசுவாமியர் செப்பேடு – 2


காலிங்கராயன் செப்பேடு
(இச்செப்பேட்டால்தான் காலிங்கராயனின் காலமும்,இனமும்,வரலாறும் உறுதிப்படுத்தப்பட்டது)






வருடம் : 1331

காலம் : வீரபாண்டியன்(மாலிக் காபர் படையெடுப்பு,மதுரை பட்டாணி சுலதான்

ஸ்வஸ்திஸ்ரீ விஜயாப்த்புதய சாலிவாஹந சகாப்தம் 1253 கலியப்தம் 4432யிது மேல் செல்லாநின்ற ப்ரஜோத்பத்தி வருஷம் உத்தராயணமும் வ்ருஷப மாசமும் சுக்ல பக்ஷமும் பிரதிமையும் குருவாரமும் ரேவதி நக்ஷத்ரமும் சுபநாமயோகமும் கௌலவாகரணமும் பெத்த சுபதினத்தில் ஸ்ரீராஜாதிராஜ ராஜபரமேஸ்வர ராஜ மாத்தாண்ட உத்தணடராஜ தேவாண்டராஜ பிரதாப வீரப்பிரதாப நரபதி மயிசூரு கிருஷ்ணராஜ உடையாறய்யறவர்கள் ஸ்ரீரத்ன சிங்காஜநரூடராய் ப்ருதிவி ஸாம்ராஜ்யம் அருளாநின்ற காலத்தில் மயிசூருக்குச் சேந்த கொங்குதேசம் மேல்கறைப் பூந்துறைநாட்டுக்குச் சேந்த பேரோட்டுக்கு பிரதிநாமதேயமான விருப்பாக்ஷிபுரத்திலேயிருக்கும் ஸ்த்யோஜாத ஞானசிவாசாரியாற் யிம்முடி அகிலாண்டதீக்ஷித ஸ்வாமியாறவற்கள் பாத சன்னிதானத்துக்கு பூந்துறை நாட்டுக்குச் சேந்த வெள்ளோடு தென்முகம் கனகபுரம் யெலவமலை சாத்தந்தை கோத்திரமானகுருகடாஷத்துனாலேயும் வேதநாயகியம்மன் வறபிறசாதத்துனாலேயும் வாணியை அணையாயிக் கட்டி கொங்கு தேசம் பூந்துறைனாட்டில் சென்னெல் வைத்தவறான பட்டக்காறர் யிம்முடி காலிங்கறாயக் கவுண்டரவர்கள் குருசுவாமியார் பாதத்துக்கு எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம்.

னான் மகாமந்திர உபதேசம் பண்ணிக்கும்போது குருசுவாமியார் அப்பணையானது. உங்கள் வமுசத்தாற் பெரியோருகள் பூந்துறை னாட்டுலே அதிகாரம் செலுத்தி அணையும் கட்டி நமக்கு குருக்கள் மானியமும் குடுத்து சஞ்சார காணிக்கையும் தலைக்கட்டு வரியும் குடுத்து வந்தாற்கள். யிப்போ ஊத்துக்குளி சீமையிலே ஒங்கள் பெயரற்கள் காணிவாங்கி அதிகாறம் செலுத்தறபடியினாலே வெகு சமூகம் நமக்கு ஞாபகம் யிருக்கும்படிக்கி சாசனம் எழுதிக்கொடுக்கச்சொல்லி சுவாமி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி குருசுவாமியாற் பாதத்துக்கு ஒடல் உயிற் பொருள் மூன்றும் தெத்தம்பண்ணி எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம். தீட்சை மகாமந்திற ஒபதேசம் பண்ணிக்கொண்டு வறுஷம் பிரதி தலைக்கட்டு காணிக்கை னாகறம் பணம் னாலு குடுத்து சஞ்சாரம் வந்தபோது சஞ்சாறக் காணிக்கையும் குடுத்துவறுவோமாகவும். ஆதீனத்து சிவபூசை மீனாட்சி சுந்தறேசுவற சுவாமிக்கு பிறதோஷக் கட்டளை நடப்பிவிக்கும்படி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி நடப்பிவிக்குறது. அபிஷேகம் மேறைக்கி வருஷம் ஒன்னுக்கு பொன் 36 பிரதோஷக் கட்டளை சாசுவதமாயி நடப்பிவிக்குற படிக்கி னாங்கள் யெந்த னாட்டிலே யெந்த தேசத்துலே யென் வமுசத்தாற் காணிவாங்கி அதிகாரம் பண்ணி பட்டம் செலுத்தினாலும் யிந்தப்படிக்கி வருஷம் பிரதி நடத்திவறுவோமாகவும். சுவாமியாரிட்ட தென்டனை கண்டினை ஆக்கினை அபறாதத்துக்கு உள்பட்டு நடந்து வறுவோமாகவும்.

யிப்படிக்கி நடந்துவருங்காலத்தில் யென் வமுசத்தாற் யிதுக்கு விகாதம் சொல்லாமல் சன்னிதானத்துக்கு பயபக்தியாயி நடத்திவைத்தவன் சுகமாயி தனசம்பத்தும் தான்னிய சம்பத்தும் அஷ்டைஸ்வர்யமும் ஆயுளாறோக்கியமும் தேவபிரஸாதமும் குரு பிஸாதமும் மென்மேலும் உண்டாயி கல்லு காவேரி புல்லு பூமி ஆசந்திரார்க்க உள்ளவறைக்கும் பாடகவல்லி சறுவலிங்கமூர்த்தி அகத்தூறம்மன் கடாக்ஷத்துனாலே சுகமாயி யிறுப்பாற்கள். யிந்த சாசனம் பாத்து படித்தபேறும் செவியில் கேட்ட பேறும் சுகமாயி யிறுப்பாற்கள். யிதுக்கு விகாதம் சொல்லி குரு நிந்தநை சொன்னவன் கெங்கைக் கறையிலே காறாம் பசுவையும் பிறாமணாளையும் மாதா பிதாவையும் கொண்ண தோஷத்துலே போவாறாகவும் யிந்தப்படிக்கி பவாநி வேதநாயகி சங்கமேஸ்வர சுவாமி சன்னிதானத்திலே ஸஹிரண்யோதக தாராபூறுவமாயி யெழுதிக் கொடுத்த தாம்பற சாசனம். வேதநாயகி ஸமேதர சங்கமேசுவர ஸ்வாமி ஸஹாயம். மீநாக்ஷி ஸுந்தரேஸ்வர ஸ்வாமி ஸஹாயம் அகத்தூறம்மன் துணை.

தாநபாலன யோர்மத்யே தாநா ஸ்ரயோநு பாலனம் தானாத் ஸ்வர்க்க மவாப்நோதி பாலநாதி அச்சுதம் பதம்:
ஸ்வதத் தாத்வி குணம் புண்யம் பரதத்தாநு பாலநம் பரத்தாப ஹரேண ஸ்வதத்தாம் நிஷ்பலம் பவேது:

ஊத்துக்குழி காலிங்கறாயக்கவுண்டற் யிவற் சம்மதியில் யிந்தச் சாசனம் எழுதினவன் பவாநி கூடல் அருணாசலாசாரி மகன் சொக்கலிங்காச்சாரி கய்யெழுத்து உ.

பாசூர் வரலாற்றில் கவி காளமேகம் (முத்துசாமிக் கோனாரது "கொங்குநாடு" புத்தகத்திலிருந்து):


பாசூர் மட குரு பாரம்பரியம்:


 

தீக்ஷதர்கள் பூர்வ வரலாறு:
குரு பரம்பரை:

ஶ்ரீ நந்தி

கைலாயம்


ஶ்ரீ சுந்தரர் திருமூலர்

கைலாயம் 


8000 BCE - அகத்தியரது முதற்சங்ககாலம்



ஶ்ரீ காலாங்கி கஞ்சமலையன்

கஞ்சமலை


சேரர் காலத்தில்

மடம் ஸ்தாபனம்

கலிங்கதேசம் வேதமங்கலம் - கொங்கதேசம்

மடாதிபதிகள்: 

சேரர், செட்டி சிவப்பிராமணர்

கொங்கதேசம்

ஶ்ரீதவராஜ பண்டிதர் மடம்


Circa 900ல் சேரமான் பெருமாள் கைலாயம் செல்கையில் கொங்கதேசத்தின் குரு


கஞ்சமலை காடையாம்பட்டி

வித்யாநகரம் - பாண்டியர்

கொங்கதேசம்

கஞ்சமலை காடையாம்பட்டி ஶ்ரீ கவிராஜ குரு மடம்


1485/1504 - திருவானைக்கோயில் ஆயிரவரான மகாசைவ சோழிய அந்தணச் சிறுவர்களை பரம்பரையாக ஏற்றல்

கஞ்சமலை காடையாம்பட்டி

வித்யாநகரம்
(விஜயநகரம்) 
கொங்கதேசம் -  பூந்துறைநாடு

1504/05 - பிரபுடதேவ ராயர்,நாகம நாயக்கர் காலத்தில் பாசூர் பட்டவர்த்தி கிராமம் மானியம்.மடம் பேரோட்டிலிருந்து பாசூர் மாற்றமானது.
பேரோடு (பிரமகுட்டைத்தயிர்ப்பாளையம்) ஊரிலிருந்து பாசூரில் ஸ்தாபனம்
 மைசூர் 

கொங்கதேசம் -  பூந்துறைநாடு
1689/90- ஒரே மடமாக இருந்தது

1695/96 - பெரிய,சின்ன மடங்கள் கட்டாயம் பாகப்பிரிவினை


1696/97 - மைசூர் துரைகள் சிக்கதேவராஜ உடையாரின் ஊமை மகன் "மூக்கரச" எனும் கண்டீரவ நரசராஜ உடையாரை பேச வைத்தது.இதற்காக பெரிய மடம் கொடுமணல் கிராமம் மானியமாக பெற்றது.
https://en.m.wikipedia.org/wiki/Kanthirava_Narasaraja_II

1646/47-1739/40 - அமைதியான காலம்

1740/41 - பத்தே சிங் கலாபத்தில் மடம் கொள்ளையடிப்பு

1741/42 - 1763/64 - ஹைதர் அலி காலத்தில் மானியப்பணத்தை கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்பட்டது.

1764/65 - ஹைதர் அலி காலத்தில் மீண்டும் மானியங்கள் ஒழுங்கமைக்கப்பட்டது 1767/68

ஆவணி/கார்த்திகை- கும்பினி வரி வாங்கியது

1767-68 மார்கழி - ஹைதர் அலி மீண்டும் சர்வமானியம் ஆக்கியது

1782/83 - 1799 - டீப்பு சுல்தான் பாசூர் மானியத்தை ஜப்தி செய்தது
பாசூர்
சாக்கிய யூத பிரீமேசன் கும்பினி  வெள்ளையர்
கொங்கதேசம் – பூந்துறைநாடு
1799/1800 - கும்பினி பாசூர் மானியத்தை ஜப்தி செய்தது.பட்டவர்த்தி சாதாரண சொத்தாக தாசில்தார் கிருஷ்ணய்யரால் அறிவிப்பு

1801-02 - மடம்,மானியங்கள்,தேவஸ்தானம் ஆகிய சொத்துக்கள் கல்வி,மதம்,மருத்துவத்தை அழிக்க திட்டமிட்டு கும்பினியால் பிரிப்பு
பாசூர்


 வெள்ளொடு ராசா கோயிலில் வெள்ளொடு ராசா கோயிலில் மீனாக்ஷி சுந்தரேஶ்வர லிங்கத்தோடு கிரீடத்துடன் கவிராஜ குரு

கவிராஜ குருபரம்பரை:


இமயமலையிலிருந்து தன் சிநேகிதரான அகத்தியரைப் பார்க்க சுந்தரநாதர் என்ற முனிவர் கயிலை, கேதாரம், நேபாள பசுபதி வழியாகத் தென்னாடு வந்தார். அப்போது பசுக்கள் சில தங்கள் இறந்துபோன ஆயனது உடலைச்சுற்றி நின்று கண்ணீர் வடித்ததனைக் கண்டு இரங்கினார். அவ்வாயனான மூலனின் உடலில் பிரகாமிய சித்தியைக்கொண்டு பிரவேசித்து பசுக்களை ஊரில் சேர்த்தார்.

பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்  சிறப்பு: —  திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருமூல நாயனார் புராணம் 

அந்தி இளம் பிறைக் கண்ணி 

  அண்ணலார் கயிலையினில்

முந்தை நிகழ் கோயிலுக்கு 

  முதற்பெரு நாயகம் ஆகி

இந்திரன் மால் அயன் முதலாம் 

  இமயவர்க்கு நெறி அருளும்

நந்தி திருவருள் பெற்ற 

  நான் மறை யோகிகள் ஒருவர்.   1  மற்றவர் தாம் அணிமாதி 

  வருஞ்சித்தி பெற்று உடையார்

கொற்றவனார் திருக் கயிலை 

  மலை நின்றும் குறுமுனிபால்

உற்றது ஒரு கேண்மையினால் உடன் 

  சில நாள் உறைவதற்கு

நற்றமிழின் பொதிய மலை 

  நண்ணுதற்கு வழிக்கொண்டார்.   2  மன்னு திருக் கேதாரம் 

  வழிபட்டு மாமுனிவர்

பன்னு புகழ்ப் பசுபதி 

  நேபாளத்தைப் பணிந்து ஏத்தித்

துன்னு சடைச் சங்கரனார் 

  ஏற்ற தூ நீர்க் கங்கை

அன்ன மலி அகன் துறை 

  நீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார்.   3 

அப்போது அவ்வாயன் மனைவியான ஆய்ச்சி, தன் கணவரெணக்கருதி அவரை நெருங்க, அவர் தான் சுந்தரநாதர் என்ற முனிவர் என்று விலகினார்.

அவள் தனது இனத்தாரைக்கூட்டி நியாயம் கேட்க, மூலன் வடிவில் இருந்த சுந்தரநாதர், தனது உண்மையான உடலினைக்காட்ட மேய்ச்சல் மந்தைக்கு அனைவரையும் அழைத்துச் சென்றார். அங்கு தன்னுடலைக்காணாது, இது ஈசன் ஆணை என உணர்ந்தார்.

ஊராரும் இவர் செயல்கள் நடவடிக்கைகள் கண்டு வணங்கினர். இவரே சித்தரான திருமூல நாயனார் எனப் பெயர் பெற்றார்.

இவரது சீடரான கலிங்கநாட்டு அந்தணன் சுந்தரர் என்பார் கஞ்சமலையில் சஞ்சரிக்கையில்  கருநெல்லியின் மகத்துவத்தினைக் கொண்டு கிழப்பருவம் நீங்கி பாலபருவம் எய்தினார். தனது குருவுக்கும் இதனைப் புகட்டி பாலபருவம் எய்தவைத்தார்.

இச்சுந்தரரே காலாங்கி கஞ்சமலையன் என்ற பெயரில் மடத்தினைத் தோற்றுவிக்க திருமூலரால் பணிக்கப்பட்டார்.

குருகுல காவியம் சுருக்கம்:

https://archive.org/details/20240923_20240923_0547/mode/1up

கஞ்சமலை காடையாம்பட்டியில் இம்மடம் கிராமிய ஆதிசைவரான காசிப கோத்திரம் ஶ்ரீ தவராஜ பண்டிதர் மடம் என சேர மன்னருக்கும் அவரது கொங்கதேச தேசம் முழுமையிலும் அன்றிருந்த அந்தணர், ஆதிசைவர், வெள்ளாளர்,  செட்டியார் உள்ளிட்டோர் அனைவரின் ஆதி குருமடமாக இருந்தது.

https://archive.org/details/20200416_20200416_1704

சேரமான் கயிலை சென்றபோது, சுந்தரமூரத்தி நாயனாருக்கு இந்நாட்டை தானமாக அளித்தார். சுந்தரரும் கயிலை சென்றதால், நாட்டின் ஆதிசைவர் ஏழுகோத்திரத்தாருக்கு நாட்டினைப் பட்டமாக்கி அளித்தார். அவர்களுக்கெல்லாமும் குருவாகத் தவராஜ பண்டிதர் விளங்கினார்.

கவிராஜ குரு பரம்பரை:

ஶ்ரீ தவராஜ பண்டிதர் மடம் பாசுபத பிரம்மச்சாரி மடமாக இருந்தது. ஒவ்வொரு தலைக்கட்டிற்கும் சர்க்கார் வாழவந்தியில் காசிப கோத்திரத்து கிராமிய ஆதிசைவரான தனது தம்பி வீட்டிலிருந்து மூத்த மகனை சுவீகாரமாக எடுத்து அடுத்த குருவாகப் பட்டம் சூட்டும் வழக்கம் இருந்துள்ளது. கவிராஜ பண்டிதர் என்ற பெயர்கொண்ட குருநாதர் அவ்வாறு கேட்டார். அவர் தம்பியோ தனது மகனுக்குக் கல்யாணம் செய்துவைக்கவிருப்பதால், சுவீகாரம் தரமுடியாது என மறுத்தார். அன்றுமுதல் வாழவந்தி ஸ்தானிகர்களுக்கு ஆண்வாரிசு உண்டாகாது எனச்சாபம் விடுத்து காசி ராமேசுவர யாத்திரை மேற்கொண்டார். (தகவல்: கஞ்சமலை ஸ்தானிகர், கருமாபுரம் மடாதிபதி, மோகனூர் ஸ்தானிகர் உள்ளிட்டோர்)

கருமாபுரம் மடாதிபதி கஞ்சமலை தவராஜ பண்டிதர் மடம் பற்றி அளித்த பேட்டி

நஞ்சை இடையாறு வேட்டுவர் குலகுரு மட ஏடுகளில் கொங்க கிராமிய ஆதி சைவரில், காசிப கோத்திரக் கவிராஜ குரு எழுதிய 'குருகுல காவியத்தில்' கொங்க கிராமிய ஆதி சைவர்கள், பிறகொங்கர் குலகுருவான காசிப கோத்திரம் ஶ்ரீ கஞ்சமலை தவராஜ பண்டிதர் பற்றி:











நஞ்சை இடையாறு மடத்திலிருந்த மேலுள்ள ஏடான குருகுல காவியத்தை 1918 ரிச்சர்ட்சன் சேலம் ஜில்லா கெஜட்டியரில் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ள பகுதி:
 





திருவானைக்கா ஆயிரவரான சோழிய அந்தண மகாசைவரைப் பரம்பரையாக ஏற்றது:

புராணகாலம்:

திரு ஆனை காவல் தலத்தில் திரு என்ற சிலந்தியும், ஆனையும் சிவனுக்கு கைங்கரியம் செய்கையில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு மடிந்தன.சிலந்தி மறுபிறவியில் ராஜகுருவான ஏகவிராம்பாள் மட தீக்ஷதராக கோயில் கட்ட திட்டம் வகுத்தது .ஆனையோ அவரது சிஷ்யனான கோச்செங்கற் சோழ மன்னனாக பிறந்து,அவர் அறிவுரைப்படி திருவானைக்காவல் கோயிலைக் கட்டியது.

திருவானைக்காவல் தீக்ஷதர்கள் வரலாறு (சமஸ்கிருத புராணத்திலிருந்து கும்பகோணம் சங்கரமடம் ஆஸ்தான வித்வான் ப. பஞ்சாபகேச ஸ்வாமிகளால் தமிழ் வசனரூபமாக மொழி பெயர்க்கப்பட்டது):

“சோணாக்ஷன் என்கிற சோளராஜாவால் சிவபூஜைக்காக ஏற்பதுத்தப்பட்டிருந்த பண்டிதர்கள் காவேரியின் பிரவாகத்தில் சம்புவால் முழுகும்படிசெய்யப்பட்டவர்கள் என்று இந்த அத்தியாயத்தில் கூறப்படுகின்றது.

          சுதர்: "ஹே மஹரிஷிகளே சிவாச்சார்ய ஜனங்களுடைய நிலைமையைக் கூறுகின்றேன் கேளுங்கள்" என்று சொல்லத்தொடங்கினார். சோணாஷ்னென்கிற சோளபூபதியால் கேதாரம் காசீ காஞ்சீ முதலானவிடங்களிலிருந்து அறுபது சிவாச்சார்ய பண்டிதர்கள் அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள். அவர்கள் வேதம் ஆகமம் புராணம் முதலியவைகளால் பண்டிதர்களாயும் சிவபூஜை செய்யும் விஷயத்திலும் சிறந்த சாமர்த்தியம் பொருந்தியவர்களாயுமிருந்தார்கள். அவர்கள் வந்தவுடன் சோளன் அவர்களுக்கு பசு தனம் வஸ்திரம் முதலானவைகளைக்கொடுத்து நமஸ்கரித்துப்பின்வருமாறு பிரார்த்திக்கிறான் ஹேபிராமணர்களே! நீங்கள் என் வசனத்தை அங்கீகரித்து ஸ்ரீஜம்புகேசுவரரான தேவரையும் அகிலாண்டேசுவரீ என்கிற பார்வதியையும் விதிப்படி பூஜை செய்யுங்கள். ஆறுகாலம் நடக்கவேண்டும். பிரதோஷ சோமவாரம் இந்தப்புண்யதினங்களில் உத்ஸவம் செய்யவேண்டும். மேலும் சிவராத்திரி சங்கிராந்தி அயனம் இந்தகாலங்களில் சந்திரசேகரரையும் கௌரீதேவதியையும் விசேஷமாகப் பூஜிக்கவேண்டும் என்றுசொல்லி அவர்களுக்கு வீடு பூமி தனம் தான்யம் முதலானவைகளைக்கொடுத்து சௌகரியங்களையும் செய்துவைத்தான். அவர்களும் அரசனால் கொடுக்கப்பட்டவைகளைப் பெற்றுக்கொண்டு ஸகல ஆகமங்களிலும் அதிகமான பாண்டித்தியம் இருந்தபடியால் பண்டிதர்கள் என்று பெயர்பெற்றனர். இவ்விதம் சோணாஷனால் ஸ்தாபிக்கப்பட்ட அறுபது பண்டிதர்களும் ஜம்புகேசுவரருடைய பூஜையையும் அகிலாண்டேசுவரியின் பூஜையையும் மற்றுமொரு தேவதைகளையும் நன்கு ஆராதனம் செய்துவந்தார்கள். அவர்கள் சாஸ்திரங்களையறிந்தவர்களும் தர்மத்தில் அபிமானமுள்ளவர்களாயிருந்தபடியால் ருதுக்கள் அயனங்கள் மாஸங்கள் மற்றுமொரு விசேஷபுண்யகாலங்கள் இவைகளில் தவறாமல் எப்பொழுதும் பக்தியுடன் பூஜித்துவந்தார்கள். இவ்விதம் நடந்துவரும் சமயத்தில் ஒருநாள் இவ்விடத்தில் பூஜைக்காக ஒருபாலனையும் ஸ்திரீகளையும் வைத்துவிட்டுபாக்கிய புருஷர்கள் எல்லோரும் பிக்ஷாடநேசர் கும்பாபிஷேகத்திற்காகச் செல்லும்பொழுது உத்திரகாவேரியில் பிரவாஹம் அதிகமாயிருந்தபடியால் ஓடினார்கள். போகும் பொழுது பிரவாஹம் அதிகமாயிருந்தபடியால் ஓடத்தில்போனார்கள். போகும் பொழுது பிரவாஹத்தினுடைய வேகத்தால் அலைகளாகிற கைகளால் அடிக்கப்பட்டு அந்த ஓடம் கவிழ்ந்தது.உடனே அதிலிருந்து பண்டிதர்கள் யாவரும் பிரவாஹத்திற்கு இரையாய்விட்டார்கள். இந்தப்பிரகாரம் ஜம்புநாதர் அவர்களை நதியில்விட்டுப் பக்கியிருக்கும் அந்த பாலகனைப்பார்த்துவிட்டு அனுக்கிரகம்செய்து அவனைச்சிறந்த பண்டிதனாகச் செய்தார். அந்த வம்சத்திலுண்டானவர்கள் தான் மஹேசுவரரைப் பூஜிக்கிறார்கள்.  

இவ்வாறு பரம்பரைகளாக திருவானைக்காவலில் பூஜை செய்துவரும்பொழுது ஒருசமயம்  ஸ்ரீ கவிராஜகுரு ராமேசுவர யாத்திரையாக நடந்து வந்தவர், வடக்கு வாசலில் உள்ள ஸ்ரீராஜராஜேசுவரர், ஸ்ரீராஜராஜேசுவரி தங்கி பூஜை செய்துகொண்டு, ஸ்ரீஜெம்புநாதர், ஸ்ரீ அகிலாண்டேசுவரியையும் தரிசித்துவந்தார். அச்சமயம் அகிலாண்ட தீக்ஷதர் (12 வயது), ராமலிங்க தீக்ஷதர் (10 வயது) என்கிற சிறுவர்கள் மேற்படி சன்யாசியையும் அவருடைய புஜை, வரலாறுகளைக் கேள்வியுற்று பின் தங்களையும் அழைத்துச் செல்லுமாறு வேண்டினர். ராமேசுவரம் சென்று திரும்பும் சமயம் சொல்வதாக ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். யாத்திரையை முடித்துகொண்டு திரும்ப இந்த க்ஷேத்திரத்தில், ஸ்ரீ பஞ்சமுகேசுவரர் கோயில் இருக்குமிடத்தில் வந்து தங்கினார். அது சமயம் மேற்படி அகிலாண்ட தீக்ஷதர், ராமலிங்க தீக்ஷதர் என்ற சிறுவர்கள் இருவரும் மேற்படி யதியின் பூஜை முதாலியவைகளால் ஆகர்ஷிக்கப்பட்டு, தங்களை சிஷ்யர்களாக ஏற்றுக்கொள்ளும்படியும் கைலயங்கிரிக்கு அழைத்துச்செல்லும்படி பிரார்த்தித்தார்கள்.

         அப்போது மேற்படி யதியானவர் "நீங்கள் மிகவும் சிறியவர்கள். உங்கள் தாயார் தகப்பனார் ,  பந்துகள் நிறைய இருக்கிறார்கள். மேற்படி ஸ்ரீஜம்புநாதர் ,  ஸ்ரீஅகிலாண்டேசுவரி கோயில் பூஜை முறைமையும் உள்ளது. நான் செல்லும் மலையானது பல ஆயிரகாதங்கள் பாத யாத்திரையாகத்தான் செல்லவேண்டும். தங்குமிடம் ,  உணவு வசதிகள் இருக்காது. இங்கேயே இருந்து பூஜை செய்துவாருங்கள்" என்று சொன்னார்கள். சிறுவர்கள் இருவரும் எவ்வளவு வற்புறுத்தியும் அவர் சரி என ஒப்புக்கொள்ளவில்லை. ஆயினும் சிறுவர்கள் இருவரும் ,  கவிராஜர் புறப்படும் சமயம் என்பதை அறிந்துகொண்டு வந்துவிட்டார்கள். அவர் குறித்தகாலத்தில் போய்ப்பார்க்கும்பொழுது அவர் சென்றுவிட்டதையறிந்து ,  அவர் போகும் மார்க்கத்தையறிந்து இருந்ததால் , நடையும் ஓட்டமுமாகச் சென்று அவரை அடைந்துவிட்டனர். (சுமார்  10  மைல்).

         இவர்களைப் பார்த்தவுடன் கவிராஜர் கவலையடைந்து ,  திரும்ப வந்த மனம் இல்லாதவராய் ஸ்ரீஅம்பாளின் திருவுளப்படி நடக்கும் என்று நினைத்தவராய் அழைத்துச் சென்றார். செல்லுங்காலத்தில் ,  தான் வைத்திருந்த ஸ்ரீபூஜைப் பெட்டியை சிறுவனிடமும் மற்றுமொரு இரு சுமைகளையும் ,  தானும் பெரியவனுமாகச் சுமந்துகொண்டு அங்காங்கே தங்கி பூஜை ஆகராதிகளை முடித்துக்கொண்டு சென்றார்கள்.

         இவ்வாறு பலகாலம் மூவருமாக நடந்து சென்றுகொண்டிருந்தபொழுது, ஒரு பகல் காலத்தில் வெயில் அதிகமாக இருந்ததால் பூஜை பெட்டியை எடுத்துக்கொண்டுவந்த சிறியவன் பாதையைவிட்டு ஒதுங்கியே சென்றான். அப்பொழுது அவர், சிறுவனை நோக்கி "குழந்தாய்! ஓரம் போக வேண்டாம். கல், முள் இருக்கும்" என்றார். அதற்கு சிறுவன், "ஒரு அம்மா எனக்குக்குடைபிடித்து வருகிறார். அவர் என்மேல் இடிபடுவதால் ஒதுங்கி்ச்செல்கிறேன்" என்றான். உடனே அவரோ "பல வருஷங்களாக பூஜை செய்துகொண்டு யாத்திரை சென்று வருகிறேன், எனக்குக் ஸ்ரீ அம்பாளின் காக்ஷி கிடைக்கவில்லை. நீ புண்ணியசாலி. அந்த பாக்கியம் ஸ்ரீ  அம்பாள் எனக்குக் கொடுப்பாளோ!" என்று கதறினார்.

         உடன் அம்பாள் அசரீரியாக "கவலைப்படாதே. காசி கங்கைக்கரையில் காக்ஷியளித்து முக்தியளிக்கிறேன். இச்சிறுவர்கள் இருவரும் எனது பூஜைக்காக ஏற்பட்டவர்கள். உனது சிஷ்யாள்களாக ஏற்றுக்கொண்டு பூஜைவிதிகளை உபதேசம் செய்" என்று ஆஞாபித்தாள். குரு சந்தோஷத்தையடைந்து, சிறுவர்கள் இருவருக்கும் அம்பாள் உத்தரவுப்படி பூஜைமுறையை உபதேசித்து காசியை அடைந்தார். ஸ்ரீ அம்பாளின் ஆசீர்வாதத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.

         மேலும் "என்னுடைய அந்திம காலம் பிரதோஷ காலம். நீங்கள் சிறுவர்களாக இருப்பதால் என்னுடைய சரீரத்தை இந்த கங்கை பிரவாகத்தில் விட்டுவிடுங்கள். நான் முக்தியடைந்துவிடுகிறேன். கவலைப்படவேண்டாம். ஸ்ரீ அம்பாள் உபதேசித்தபடி பூஜை சரிவர செய்துகொண்டுவாருங்கள். க்ஷேமத்தை அடைவீர்கள்" என்று ஆசீர்வாதம் செய்தார்.

         மேலும் ஒரு தைமாதம் கிருஷ்ணபக்ஷ துவாதசியன்று நிர்யாணம் அடைந்தார். சிறுவர்களும் குரு சொன்னவாறே செய்ய வேண்டிய கிரமப்படி மேற்படியார் உடலை கங்கையில் சேர்த்தார்கள் அதுசமயம் காசிராஜாவின் காவலர்கள் கங்கைக்கரையை காவல்காத்தவர்கள் ,  இதைப்பார்த்துவிட்டார்கள். அவர்கள் இந்த இரு சிறுவர்களைப்பார்த்து நீங்கள் செய்தது பெருந்தவறு. அரசரின் ஆணையின்படி கைது செய்வதாகச்சொல்லி காசிராஜா அரண்மனையில் பாதுகாவலில் வைத்துவிட்டார்கள். இரவு சமயமானதால் விசாரிக்கவில்லை.

         அன்று காசிராஜா தூங்கும்பொழுது ,  மூன்றுதரம் சாட்டையடிபோல் அரசன் சரீரத்தில் விழுந்தது. திடுக்கிட்ட அரசன் விழித்தபொழுது "நீங்கள் வேட்டைக்குச் சென்று வந்ததால் ஏற்பட்ட வலி" என்று சமாதானப்படுத்தினார்கள். இரண்டாவது தடவை ,  மூன்றாவது தடவை அடி விழுந்ததும் காசிராஜா உடனே மந்திரிகள் குரு முதலானவர்களை ஆசு சபையக் கூட்டி அன்றைய தினம் காலையில் நடந்த விபரங்களை விசாரிக்கலானான். அன்று மாலையில் அழைத்து வந்த சிறுவர்கள் இருவரையும் அழைத்து வரச்சொல்லி விசாரிக்கலானான்.

         மேற்படி சிறுவர்கள் இருவரும் தென்தேசத்திலிருந்து வந்த விபரங்களை அன்று மாலை வரை நடந்ததைச் சொல்லி ,  கவிராஜகுரு சித்தியடைந்ததால் மாலை பூஜை (பிரதோஷ கால பூஜை) செய்யவில்லை. அரசன் சந்தோஷத்துடன் அன்றைய இரவே அரண்மனையில் பூஜைக்கு ஏற்பாடு செய்து ,  பூஜையை தரிசித்து புளகாங்கிதம் அடைந்தவனாய் மேலும் அங்கேயே சிலநாள் தங்கி பூஜை செய்து பிரார்த்தித்தான். மன்னன் பிரார்த்தனைக்கு பலநாள் பூஜை செய்து வந்தார்கள். அதுசமயம் அங்கு விஜயநகர அரசர் சேனைத்தலைவன் நாகமநாயக்கன் கூட இருந்து தரிசனம் செய்து வந்தான். சிலநாள் சென்றபின் சிறுவர்கள் இருவரும் தென்தேசம் திருவானைக்காவல் திரும்பவேண்டும் என்று அரசனிடம் சொன்னார்கள். அரசன் வெகு சந்தோஷம்கொண்டு ஆசீர்வதிக்க பிரார்த்தித்து , தகுந்த வெகுமதிகளுடன் விருதுகளுடன் சேனைத்தலைவன் நாகமநாய்க்கனுடன் அனுப்பிவைத்தான். திரும்பிவரும் காலத்தில் பலமுக்கியமான க்ஷேத்திரங்களையும் ,  உஜ்ஜையினி க்ஷேத்திரத்திலும் தங்கி தரிசித்து விஜயநகரம் வந்து சேர்ந்தார்கள்.

                           பாசூர் அகிலாண்ட தீக்ஷதர் ஓலைச்சுவடி  - 1

                                            

காலம் விஜயநகரம் - மைசூர் - கும்பினி

கிருஸ்தவ வருடம்:  1485 - 1801 CE

                                         

      ஸ்ரீ றாம செயம்


ஈரோட்டுத் தாலுக்கு ஏகபோகம் பாசியூர் அக்கிறாறம் சறுவ மானியமாக்கு விட்டது மகாசெனங்கள் எழுதி வைச்ச வாக்குமூலம் துந்துபி வருஷம் தையி மாசம்  20 தேதி முதல் அகிலாண்ட தீட்சதர் கெங்கா யாத்திரைக்கி போயிறுந்தார். அங்கே போன யிடத்தில் பிறபுடதேவறாயர்கிட்ட யிறுக்குற கொட்டியம் விசாறணை நாகம நாய்க்கனென்குறவனும் கெங்கா ஸ்தானத்துக்கு ஸ்தானத்துக்கு போயிறுந்தான் போயிறுந்தவிடத்தில இந்த அகிலாண்ட தீட்சதர்க்கும் அந்த நாகம நாயக்கனுக்கும் அவ்விடத்திலே பரிட்சையாகி ரொம்ப சினேகிதம் ஆச்சுது அப்போ ரெண்டு பேரும் ஆனைக்கு வந்து ஆனைக்குற ஆணைக்கு ...... 1306  கலியுகம்  4485  இதின் மேல் செல்லானின்ற குறொதன வரிஷம் தையி உத்தராயண புண்ணிய காலத்திலே சசிறணியோதக தானபூர்வமாக பாசியூறுக் கிறாமத்தை ஏகபோக சறுவமானியமாய் பண்ணி சாசனமும்பண்ணி வைச்சுக் அந்தப்படிக்கி தானம் தானம் வாங்கிக்கொண்டு தீட்சதர் ஸ்தலத்துக்கு வந்து பத்து வருஷம் இந்தக் இந்தக் கிறாமத்திலேயிறுந்து கிறாமத்திலேயிறுந்து யின்னம் கிறாமத்திலேயிறுந்து அவர் அவர்களுக்கு தானபூறுவமாய் பூமி அக்கிறாறங் கட்டிவைச்சுக்குடுத்து மத்த பூமிகளை தான் சொந்தமாய் வைச்சுக்கொண்டு வந்த பேருக்கு அன்னதானம்பண்ணிக்கொண்டு வந்தார் அந்தப்படி மூணு தலமுறை அகிலாண்ட தீட்சதர் அப்ப(ய) தீட்சதர் வெங்கிடபதி தீட்சதர் இந்த மூணு தலைமுரைக்கும் புரிவில்லை இதன்மேல்  303 வருஷ சுக்கில வருஷத்தில் வெங்கிடபதி தீட்சதர் பிள்ளை ஸ்ரீவெங்கிடேஸ்பற தீட்சதர் அகிலாண்ட தீட்சதர் பிள்ளை றாமலிங்க தீட்சதர் இவர்கள் இரண்டு பேரும் பாபியம் பண்ணிக்கொண்டார்  301 வருஷம் யுப வருஷத்தில் தேவறாசருடைய துரைத்தனத்தில் சறுவ மானியமாய் நடந்தது தாது வருஷத்தில் யிந்த தேவறாசருடையரு அக்கிறாறத்தை செபித்தி பண்ணி அந்த வறசம் பணம் வசூல்ப்பண்ணிப் போட்டார்கள் அதின் பிற(கு) றாமலிங்க தீட்சதர் ஸ்ரீரங்கப்பட்டனத்துக்கு போயி தேவறாசருடையாரை காண விசாறிச்சுக்கொண்டு யெங்கள் அக்கிறாறத்தை செபித்தி பண்ணி பணம் போட்டீர்களே னான் சீவனத்துக்கு யென்ன பண்ணட்டுமென்று கேட்டு கொண்டார்கள் அதுக்கு அவர் சொன்னது உனக்கு யிந்த அக்கிறாறம் விட்ட பூறுவித்திற யென்னவன்று கேட்டார்கள் கேட்டதுக்கு மேலே எழுதியிருக்கிற பிறகாறம் நடந்த வற்தமானயாவது சொன்னார் அதின் பிரகு அப்படியா நல்லதாச்சுது நிங்கள் மகா மந்திறவாதிகளிறுக்குரீர்கள் நம்ம அறமனையிலே நம்ம பிள்ளையாண்டானுக்கு வாற்தை சொல்லத் தெரியாமல் ஊமையாயிறுக்குறான் யிவனுக்கு வாற்தை வறுகுறாப்போலே பண்ண வேணுமென்று சொல்லி நீறும் நம்முட சமூகத்திலேயிறுக்க வேணுமென்று சொன்னார் நல்லது அப்படியே யிருக்குரேன் கிறாமம் செபித்தியாயிறுக்குதென்று கேட்டுக்கொண்டார் அதின்பிறகு செபித்திப் பணத்தை குடுத்துவிடாச் சொல்லி பிறதானிதினம் பண்ணுகுற சிங்கப்பெருமாளைய்யங்காறுக்கு சொல்லிப் பணத்தை அவிடத்திலே தோசெகானுலேயிருந்து குடுத்துவிட்டார்கள் அந்தப் பணத்தை வாங்கி ஸ்தலத்துக்கு அனுப்புவிச்சுப் போட்டு றாமலிங்க தீட்சதர் பட்டணத்திலே யிறுந்தார் யிறுந்து துரையினுட குமாறன் ஊமை வாற்தை சொல்லுகுறாப்போலே பண்ணிவிச்சார் அதின் பிறகு சந்தோஷப்பட்டுக்கொண்டு கொடுமணலெங்கிற கிறாமத்தை உம்பணிக்கையாய்க் குடுத்து நடப்பிவிச்சுக்கொண்டு வந்தார் இந்த தாது வருஷம் முதல் சித்தார்ற்திரி வருஷத்துக்கு .  _  _  _ அந்த மானியப்பணம் வசூல்ப்பண்ணினான் மறு வருஷபாற்திபவருஷத்தில் ஏதாப்பிறகாரம் சிறுவமானியமாய் விட்டு விடச் சொல்லி கெடிக்குப் புறமானிகற் வந்து விட்டுவிட்டார்கள் அதுமுதல்கொண்டு சறுவசித்து வருஷ 3வருஷசறுவ மான்னியமாயி நடந்துது சறுவதாரி வந்து கும்பினியாற்கு ஆயி மாசம் காற்திகை மாசத்துக்கு வசூல்ப்பண்ணிப் திறும்ப மார்களி மாசம் வந்தான் பிலபவவருஷத்துக்கு மான்னியமாய் வந்துது டீப்பு சுபகிறுது வருஷம் வருஷம் செபித்திபண்ணி பணம் பண்ணி மேரைக்கு நிகுதி பண்ணி பணம் பணம் வசூல்ப்பண்ணினான் வசூல்ப்பண்ணினான் வசூல்ப்பண்ணினான் அது அது வருஷத்துக்கு  17 வருஷமும் செபித்தியாலேயிருந்துது செபுத்திப் பணம் கொண்டு கும்பினி சீமை பிறகு சித்தார்த்தி ரவுத்திரி வருஷம் பிறகாறம் செபித்திப் பிறகாறம் பணம் வந்தோம் அக்கிராறத்துக்கு பங்கு விபறம் பட்டவற்தி நிலமென்று சொல்லுவார்கள் அந்தப்படியிறுந்துது ரவுத்திரி தாசில்தாறன் கிருஷ்னறாயர் தருவிச்சு உங்க அக்கிறாறத்தை யினிமேல் பட்டவற்த்தியென்று    வந்திருக்குது  அப்பணை  விபறமாயி கோச விபறங்கண்டு உண்டுபண்ணிப் பங்கு விபறமாய் எழுதி வைக்கச் சொன்னார் அந்தப் படிக்கு எங்கள் அக்கிறாறத்த  92  முக்காலே  4  மா பங்கு போட்டு எழுதி வைச்சு கச்சேரிக்கி ஒரு பிரிதி எழுதி வைச்சுப்போட்டு நாங்களும் ஒரு பிரிதி எழுதிக்கொண்டு வந்துவிட்டோம் இதிலே தேவஸ்தானத்துக்குப் போனபங்கு  4 காலே  4  மா தண்ணிப்பந்தல் மானியம் பங்கு முக்கால் ஆக பங்கு  4  காலேமுக்கால்  4  மா நீக்கிநின்ன பங்கு  87 3/4  யிந்தப்படி ரவுத்திரி வருஷம் பங்கு நிகுதி ஆச்சுது ரவுத்திரி வருசத்துக்கு செபித்தி பிறகாறம் நதந்து வந்து குற்மதி வருஷத்துக்கு மிக நஷ்டமான பங்குகள் 8 நீக்கி வருஷத்துக்கு மிக நஷ்டமா பங்குகள் 8 நீக்கி வருஷத்துக்கு மிக நஷ்டமான பங்குகள்4  . யிந்த யென்பத்தேழேகால்ப் பங்குக்கு தற பிறகாரம் நிகுதி பண்ணி நிகுதி ஆன பணத்தில் மூணுலே ஒரு பங்கு மாப்பு தள்ளி நின்ன பங்கு சற்க்காறுக்கு நிகுது பண்ணி திட்டப்பட்டது அந்தப்படிக்கி பணங் குடுத்து வறுகுறோம் இந்தப் பங்குகளுக்கெல்லாம் தரியாபித்தியில் தான போக்கியம் யாவத்துங்க எல்லாம் தரியாபத்தியில் தான போக்கியம் யாவத்துங்கறதுங்கற வசம் உள்ள துரியோதசப் படிகள். ருசு உ

திருவானைக்காவலில் இருந்து பூந்துறைநாடு ,  நசையனூர் சமஸ்தானத்திற்கு சேர்ந்தது விருபாக்ஷிபுரம் என்று பேரோடு வழங்கப்பட்டது. இவர்களது குலதெய்வமான அங்காளம்மன் இன்றும் சமஸ்தான ராஜதானியான நசியனூரில் விளங்கி வருகின்றது. பின்னர் விஜயநகரகாலத்தில் தீக்ஷதர்களுக்கு பாசியூர் (பாசூர்) அக்கிரகாரம் சர்வமான்யமாய் விடப்பட்டது. தீக்ஷதர்கள் பேரோட்டிலிருந்து பாசூருக்கு குடியேறி சிஷ்யபரிபாலனம் செய்து வருகின்றனர்.

சிஷ்யர்களது குருபக்தி :

                                இவ்வாறு பாசூர் மடத்தில் தங்கி வாசம் செய்து கொண்டு வந்தார்கள். அப்போது பூந்துறை , வெள்ளோடு பட்டக்காரர்க லான சாகாடை கோத்திரரான நன்னாவுடையார் , தென்முகம் வெள்ளோடு உலகபுரம் சாத்தந்தை கோத்திரரான உலகுடையார் ஆகியோர்      தங்களுடைய பரிஜனங்களுடன் ராமேசுவர யாத்திரை சென்றார்கள். செல்லும் மார்க்கத்தில் அப்பொழுது மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரர் தரிசனம் செய்துகொண்டு அன்று இரவு அங்கு தங்கினார்கள். அன்று இரவு மதுரை மன்னர் (திருமலை நாயக்கர்) அரண்மனையில் திருட்டு நடந்துவிட்டது. மறுநாள் மன்னர் விபரம் தெரிந்தவுடன் அந்நிய நாட்டவர்கள் சந்தேகத்துக்கு இடமாக இருந்தால் கைது செய்ய உத்தரவிட்டான். அதன்படி காவலாளிகள் வெள்ளோடு பூந்துறை மன்னர்களை பரிஜனங்களுடன் கைது செய்து காவலாளிகள் காவலில் வைத்தார்கள். இவர்களும் மன்னர்களாகையால் இவ்வாறு அசம்பாவிதம் ஏற்பட்டதற்கு மனவருத்தத்துடன் (அதிகாரத்துக்கு உட்பட்டு) தங்கினார்கள். அன்று இரவு இவர்கள் பாசூரில் மைசூர் அரசனால் வெகுமானிக்கப்பட்ட தங்கள் மந்திரசக்திவாய்ந்த குருமார்கள் ஞாபகத்துக்கு வந்தார்கள். மறுநாள் மதுரை மன்னர், இவ்விரு மன்னர்களையும் (மரியாதையுடன்) விசாரிக்கும் காலத்தில். இவர்கள் தங்களை அறியாமலேயே சொன்னதாவது. "நாங்கள் இருவரும் பூந்துறை நாட்டைச் சேர்ந்தவர்கள். இராமேசுவர யாத்திரையாக வந்தோம். ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவர சுவாமியை தரிசித்துவிட்டு தங்கினோம். மேலும் எங்களுக்கு பாசூர் சுவாமிகள் குலகுரு ஆகையால் நாங்கள் பாசூர்சென்று குருவை தரிசனம் செய்து வருகிறோம். தங்கள் விசாரணைக்குக் கட்டுப்படுகிறோம்" என்றார்கள். மதுரை மன்னருக்கு குருவானபடியால், பயபக்தியுடன் இவர்களை பாசூர் சென்றுவாருங்கள் என்று அனுப்பினான். இவ்விரு மன்னர்களும் தங்கள்  பரிஜனங்களுடன் பாசூர் வந்தார்கள். தீக்ஷதர் இருவரும் தங்கள் பூஜையை முடித்து வந்தார்கள். இம்மன்னர்கள் இருவரும் பரிவாரங்களுடன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தவுடன், குரு "மகராஜனாக இருங்கள்" என்று விபூதி பிரசாதம் அளித்தார்கள். சுவாமி மூன்று தரம் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். பிரகு இவர்கள் தங்களுக்கு நடந்த கதைகளைச்சொல்லி "தங்கள் வாக்கு எங்களுக்கு ஆசீர்வாதம் ஆக வேண்டும்" என்று சொன்னார்கள். அதற்கு சுவாமியார்," இது எங்கள் வாக்கல்ல, ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரரின் ஆசீர்வாதம், கவலையை விடுங்கள்" என்று அவர்களுக்கு அதிதி உபசாரப்படி அன்னபானாதிகள் அளித்து தகுந்த உபசரிப்புடன் வழியனுப்ப்பினார்கள். அதேசமயம் மதுரை மன்னர் கனவில், "அவர்களிருவரும் மன்னர்கள், யாத்திரையாக வந்தார்கள், எனது பக்தர்களான குருமார்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தகுந்த உபசரிப்புகளுடனும் மரியாதைகளுடன் ராமேசுவர யாத்திரைக்கு வேண்டிய ஏற்பாடுகளுடன் அனுப்பிவை" என மீனாக்ஷி சுந்தரேசுவரர் உத்தரவிட்டார். மதுரை மன்னனும் தன் மந்திரி பிரதானிகளை பாசூருக்கு அனுப்பினான். இருவர்களும் கரூர் அமராவதி நதிக்கரையில் சந்தித்தபின் மரியாதைகளை ஏற்றுக்கொண்டு வெள்ளோடு, பூந்துறை மன்னர்கள் திரும்ப பாசூர் வந்து குருசுவாமிகளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, பின்வருமாறு பட்டயம் எழுதிக்கொடுத்தார்கள்.

         அதில், நாங்களும் எங்கள் ஆட்சிக்குட்பட்ட பூந்துறை நாட்டு 44 கொங்கு வெள்ளாள கோத்திரத்தாரும், இன்று முதற்கொண்டு மங்கிலிய காணியக்கையாக வருஷம் ஒன்றுக்கு பிரதி நாகரம் பணம் அளிப்போம் என்று பக்தியுடன் பட்டயம் கொடுத்துள்ளனர்.

கொங்க செட்டிமார்களான பனிரெண்டாம் நகரத்து செட்டிமார்களும் மைசூர் காலத்தில் தங்களது தெய்வமான அய்யர்மலை ரத்னாசலேச்வரர் கோயிலில் வைத்து தாமிர சாசனம் எழுதித் தந்தனர்.

பாசூர் குருசுவாமியார் செப்பேடு – 3


(கொங்க பனிரெண்டு நகரத்து செட்டிகள் செப்பேடு)

காலம்: மைசூர்

வருடம்: 1501

     





ஸ்வஸ்திஸ்ரீ ஸஹாப்தம் ஸஹாப்தம் 1424 கலியப்தம் 4603 யிதுமேல் யிதுமேல் செல்லாநின்ற பிங்கள வருஷ (ய) னமும் சிம்ம மாஸமும் ஸுக்ல பக்ஷமும் திரிதியையும் குரு நக்ஷத்திரமும் யோகமும் பெத்த ஸுபதிநத்தில் ராஜாதிராஜ ராஜபரமேஸ்வர ராஜபரமேஸ்வர ராஜமார்த்தாண்ட ராஜபிரதாப வீரபிரதாப நரபதி மயிசூரு கிருஷ்ணராஜ உடையாறவர்கள் உடையாறவர்கள் கொங்கு தேசம் மேல்கரை னாட்டுக்கு சுவாமியாறாகிய ஸத்யோஜாத ஞான சிவாசாரியாற் சன்னிதானத்துக்கு ஸ்வாமி மறவாதவறான றுத்திராட்சத்துக்கு உள்ப்பட்டவறான நகரத்து கறூரு கறூரு பஞ்சமாதேவி கோயம்பள்ளி முதல் பனிறெண்டு நகறத்து செட்டிமாறுகளும் சன்னிதானத்துலே யெங்களுக்கு சகல சாம்ராஜ்யம் சாம்ராஜ்யம்மகா மந்திர உபதேசம் ஆகவேணுமென்று நாம் அரிக்கை பண்ணிக்கொண்டு யெங்கள் குரு யாத்திரை போயி பெகுனாள் ஆச்சுது யெங்களுக்கு நல்ல மாற்றம் யில்லாமல் யிறுக்குது யென்று நாங்கள் சன்னிதானத்திலே அரிக்கை பண்ணிக்கொண்டதுக்கு சன்னிதானத்திலே அப்பணையானது பின்னாலே எங்கள் குரு வந்தால் எங்கள் வகையறா செனங்களெல்லாம் கூடி யோசித்து யோசித்து யோசித்து நமக்குச் சாசனம் பண்றாங்க. பின்னும் யிறுக்கும் செனங்கள் வேணுமென்று வந்தால் அப்பணைப் படிக்கி நடக்குறார்கள் யிப்போ கூடிய சேனங்கள் அப்பணைப்படிக்கி நடக்குறோமென்று அரிக்கைபண்ணிக் கேட்டுக்கொண்டு எழுதிக்குடுத்த தலைக்கட்டு தாம்பற சாசனம் சாசனமாவது குருசுவாமியாற் பாதத்துக்கு ஓடல் உயிர் பொருள் மூன்றும் தெத்தம்பண்ணி எழுதிக் குடுத்த யெந்த தேசம் நாங்கள் யெந்தத் தலை தேசம்ஒன்னுக்கு னாகறம் பணம் னாலு பிறதி சஞ்சாறம் வந்தபோது காணிக்கை வகுப்புக்காறன் பொதிக்கறான் தினுசு சஞ்சாறக் காணிக்கையும் குடுத்து வறுவோமாகவும் உபதேசம் முதலானதும் தெண்டனை கண்டனை ஆக்கிணை அபறாதத்துக்கு உள்பட்டு நடந்துக்கொள்ளுமாகவும் அபுத்திறாத மடத்துக்கு சேத்திக்குடுப்போமாகவும் நடந்துவறுங் காலத்தில் யிதுக்கு விகாதம் சொல்லாமல்  நடத்தி பயபக்தியாயி சுகமாயி தனசம்பத்தும் தான்னிய சம்பத்தும் புத்திற சம்பத்தும் அஷ்ட ஐசுவரியமும் ஆயுறாறோக்கியமும் தேவ பிறசாதமும் குருபிறசாதமும் நவறத்தின வியாபாரமும் மேன்மேலுமுண்டாய் கல்லும் காவேரி புல்லு பூமி சந்திராதித்தியாள் உள்ளவறைக்கும் ரத்நாசலபதி கடாக்ஷத்துனாலே சுகமாயிறுப்பாற்கள் கேட்டது.சொல்லி குருநிந்தனை சொன்னவன் கெங்கக் காறாம் பிறாமணாளையும் மாதா பிதாவையும் கொண்ட போவாறாகவும் யிந்தப்படிக்கி யெங்கள் வமுசத்தாற் அவைறும் சம்மதிச்சு ஸஹிரண்யோதக தாராபூறுவமாயி மதுகரவேணி ஸ்வாமி (ச) ன்னிதானத்திலே எழுதிக் தலைக்கட்டு தாம்பற சாசனம் மதுகரவேணி மதுகரவேணி ரத்னாசலேஸ்வர ஸ்வாமி உமா மகேஸ்வரி சமேத ரத்னாசலேஸ்வர ஸ்வாமி ஸுந்தரேஸ்வர ஸ்வாமி ஸஹாயம் அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புநாத ஸ்வாமி ஸஹாயம் வள்ளி தேவயானை ஸமேத ஸுப்ரமண்யசுவாமி ஸஹாயம் தாந பலந யோர் மத்யே தாநாத் ஸ்ரேயோநு பாலநம் தாநாத் ஸ்வர்க்கமவாப்நோதி பாலநாத் அச்சுதம் பரவி: ஸ்வர்க்கமவாப்நோதி பாலநாத் அச்சுதம் பரவி: ஸ்வதாபலதத்3தா3ம்சுப்பராய செட்டி வைத்தியநாதா செட்டி பெரிய றத்தினம் செட்டி சின்னச் செலம்ப செட்டி முத்து வீறம செட்டி முத்திருளஞ் செட்டி பெரிய செலம்பஞ் செட்டி சந்திற சேகரஞ் செட்டி செதம்பறஞ் செட்டி வைரம செட்டி கொழந்த செட்டி சாமிசெட்டி றத்தினஞ்செட்டி மோழ செட்டி தோறபஞ் மகன் செட்டி றத்தினஞ்செட்டி மோழ செட்டி தோறபஞ் செட்டி றத்தினஞ்செட்டி மோழ செட்டி தோறபஞ் செட்டி றத்தினஞ்செட்டி மோழ செட்டி தோறபஞ் செட்டி மாணிக்கச் சம்மேளனச் செட்டி லிங்கச் செட்டி.

மைசூர் காலம் – மட தெய்வங்கள் வரலாறு:

         மைசூர் மகாராஜாவின் குழந்தை ஊமையாகவும் ,  புது அரண்மனை கட்ட இயலாமையாகவும் இருந்தது. ஏற்கனவே மேற்படி மைசூர் மன்னர்கள் பாசூர் சாமியார் மந்திர சக்தியைக் கேள்விப்பட்டவர்களாதலால் இவர்களே நவராத்திரி பூஜையை அரண்மனையில் வைக்கச்சொல்லி விஜயதசமியன்று குழந்தையைப் பேசவைத்து ,  அரண்மனையை மேற்கொண்டு விரிவாகக் கட்ட ஏற்பாடு செய்தனர். அந்த வெகுமதியாக கொடுமணல் கிராமம் மான்யம் விட்டதுடன் தனக்கு குருவாக இருக்குமாறு பிரார்த்தித்தான். 

         மேலும் தீக்ஷதர்களுக்கு சொந்தமான பாசுபதவிரத தீக்ஷதர்களுக்கு சில மானியங்களைவிட்டு - மேற்பார்வைக்காக மைசூர் அரண்மனை மூலமாகவே சில அதிகாரிகளையும் நியமித்தார்.

         மேற்படி அரசகுமாரனைப்பேசவைத்து திரும்புகையில் பேரோடு (விருபாக்ஷிபுரம்) மடம் ஸ்தாபித்து தங்கியிருந்த காலத்தில் தங்கள் உபாசனை தெய்வமான அம்மனையும், பெரமகுட்டை தயிர்பாளையம் (பிரம்மதீர்த்தம்) என்ற க்ஷேத்திரத்தில் ஸ்ரீசுவாமி பைரவரை ஸ்தாபித்தார். தற்காலம் இவ்வூரில் தீர்த்தக்குளமும் அருகில் ஸ்ரீ சங்கிலிக்கருப்பணஸ்வாமியும் இருந்து ஆசிவழங்கிவருகின்றனர்.

         பிறகு நசியனூர் கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை ஸ்தாபனம் செய்தார். இன்றும் சின்னமடம் சுவாமியாருக்கு சொந்தமான குலதெய்வமாக விளங்கி வருகிறது. பாசூர் மான்யமாக ஸ்ரீபிரபுடதேவராயர் வழங்கும்பொழுது தனக்கு அருகாமையிலிருக்க வேண்டுமென்றதற்கு இணங்கியும் ஸ்ரீ உபாசனை தெய்வம் ஸ்ரீ மஹாகாளேசுவரபைரவர் ஆக்ஞைக்குட்பட்டும் திருவானைக்காவல் க்ஷேத்திரத்துக்கும், மைசூருக்கு மையமாக ஸ்ரீ காவேரி தென்வடலாக தக்ஷிணவாஹினி என்று புண்ணியநதியாக ஓடும் க்ஷேத்திரத்தை தேர்ந்தெடுத்து காவேரிக்கரையில் ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேசுவரர் கோயிலையும், ஸ்ரீ மஹாகாளேசுவரர் ஸ்தாபனம் செய்து, ஸ்ரீ மடத்தையும் கட்டி வாழ்ந்து வந்தார்கள். திருச்சி - கரூர் - ஈரோடு வழிச்சாலையில் - யாத்ரீகர்களுக்காக சத்திரம்கட்டி அன்னதானம் செய்துவந்தார். இன்றும் சத்திரம் என்ற பெயருடன் வீடுகள் இருகின்றன.

         இவ்வாறு வாழ்ந்து வருங்காலத்தில் ஒருசமயம் காவேரியில் அதிகாலை மீன் பிடிக்கும் வலையில் ஸ்ரீ அம்பாள் பதிவாக வந்து, தனக்குக்கோயில்கட்டி வழிபட வேண்டுமென்று உத்திரவானதால் சின்னமடம் சுவாமியார் ஸ்ரீ மாரியம்மன் என்ற பெயருடன் கோயில்கட்டி வழிபட்டுவருகிறார்கள். மேலும் ஸ்ரீ அம்பாளுக்கு மாசி பங்குனியில் வரும் சமயம் பத்து தினங்கள் - பச்சை பூஜைக்கு அரிசி - நெய் கொடுத்துவந்தார்கள். தீமிதி விழாவானது - முதல் கட்டை விறகும் - கிடாவெட்டுபொங்கல் சமயத்தில் "அரண்மனைக்கிடா" என்றழைக்கப்படும் முதல் பலியான கிடாயும் வழங்கிவந்தார்கள். உத்ஸவத்தின்பொழுது ஸ்ரீஅம்பாள் ஊர்வலமாக வந்தால் முதல்பூஜை சின்னமடத்தார் வருவதும் இன்றும் வழக்கத்தில் உள்ளது. மேலும் "தீமிதி" விழாவானது குண்டத்துக்கு முதல் கட்டை, நெய், சூடம் கொடுப்பது வழக்கத்திலுள்ளது.

         ஸ்ரீ அமாவாசை போன்ற புண்ய தினங்களில் ஸ்ரீ சங்கிலி கருப்பண ஸ்வாமிக்கு பூஜை - கரகம் எடுத்துவந்து பூஜை செய்ய முதல் மாலையைக் கையில் எடுத்து ஸ்ரீஸ்வாமி சாத்தும் பொழுது ஸ்ரீ ஸ்வாமியை பாசூர் ஸ்ரீமடாதிபதிகள் அழைத்துவந்து பிரதிஷ்டை செய்த விவரம் பாடலாகப் பாடி மாலை சார்த்திய பிறகு பூஜை நடை பெறுவது வழக்கத்தில் இன்றும் உள்ளது.




2023 அமாவாசை புண்ய தின ஸ்ரீ சங்கிலி கருப்பண ஸ்வாமி முப்பூஜை ஆரம்பமான சீர்கூடை பூஜை




ஶ்ரீ அரண்மனை (மடம்) முதல் ஶ்ரீ கோயில் வரை ஶ்ரீ மடாதிபதி சீர்கூடை எடுத்தல்

பெரிய மடம் - சின்ன மடம் பிரிவினை:
மதுரை நாயக்கர் ஆட்சி முகலாயரின் ஆற்காடு நவாப்பால் வீழ்ந்த பதினேழாம் நூற்றாண்டில், மைசூரார் வந்து ஈரோட்டில் மதுரையைத் தோற்கடித்துக் கொங்கதேசத்தைக் கட்டிக்கொண்டனர்.

1689-90 வரை பாசூர் மடம் ஏக மடமாக பிரம்மச்சாரி மடாதிபதியால் ஆளப்பட்டு வந்தது. அச்சமயம் இருந்த மடாதிபதி மைசூர் மன்னனின் மகனுக்கு ஊமை போக்கி உதவியதால் கொடுமணல் கிராமம் மடாதிபதிக்கு மானியமாக வழங்கப்பட்டது. சிஷ்யர்களுக்குள் மதுரை - மைசூர் எனக் கட்சி பேதங்கள் உருவாயின. இதனால் மடாதிபதி, தனது தம்பியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாரம்பரிய முறைப்படி தம்பியின் மூத்த மகனை ஸ்வீகாரம் எடுத்து, அடுத்த பிரம்மச்சாரி மடாதிபதியாக அமர்த்த மறுத்தார். மேலும் மைசூரார் கட்சி சார்பாக திருச்சி பெருவளப்பூரில்  குலதெய்வமாகக் கொண்ட ஒரு உறவுக்கார இளைஞனை ஸ்வீகாரம் எடுத்து மடாதிபதியாக அறிவித்தார்.

இதனை அறிந்த அன்றைய நாட்டுப்பெரியதனம் பூந்துறை குப்பக்கவுண்டன்வலசு மணியகாரர், கவிராஜ குருவின ஆணைப்படி நசியனூர் அங்காளாயி கோயிலுக்குச்சேர்ந்த கௌண்டின்ய கோத்திரத்துத் தம்பி மகனே ஸ்வீகார பிரம்மச்சாரி மடாதிபதியாக வரவேண்டும்,  அன்னியத்தில் ஸ்வீகாரம் செல்லாது என அறிவித்து, தம்பி மகனுக்குக் கவிராஜ குரு பூஜையுடன்  கஸ்பா பாசூரில் பட்டம் கட்டினார். இதற்கு மைசூர் ஆதரவு எடுத்திருந்த குமாரவலசு தலைமையிலானோர் ஒத்துக்கொள்ளாமல், பெருவளப்பூர் பிரம்மச்சாரியை குருவாக  ஏற்றனர். மைசூர் கட்சியினரான ராசிபுரம் நாட்டுக்கவுண்டர்களும் அவ்வாறே ஏற்றனர்.

இவ்வாறு பழைய நசியனூர் அங்காளம்மன் கோயிலுக்குச் சேர்ந்த தம்பி மகனது பங்கு சின்ன மடம் என்று கஸ்பா பாசூரிலும், பெருவளப்பூர் ஸ்வீகார பிரம்மச்சாரியினது பங்கு பெரிய மடம் என்றும் மடத்தினை 1695/96இல் பாகப்பிரிவினை செய்து கொண்டனர்.

பெருவளப்பூர் ஸ்வீகார பிரம்மச்சாரி கஸ்பா பாசூரிலிருந்து வெளியேறி முக்குடி வேலம்பாளையத்தில் பெரிய மடம் என்று கட்டி அமர்ந்தார். ஸ்வீகாரம் வந்தவர்கள் ஆதலால் கவிராஜ குரு காசியில் சமாதியான தை கிருஷ்ணபக்ஷ துவாதசியில் பெரிய மடத்தில் பிராமண சமாராதனை செய்து கொள்கின்றனர். நேர் வாரிசுகள் ஆதலால் சின்ன மடத்திலோ கவிராஜ குருபீடமான பேரோடு பிரமகுட்டைத் தயிர்ப்பாளையத்தின்  மண்ணை எடுத்து மடத்தில் பீடம் (சிறு மேடை) அமைத்து அதன்மேல் அமர்ந்து ஆசார்ய அபிஷேகம் செய்துகொள்கின்றனர்.

இதன்பின் ஒருவர் மடத்துவாசலை மற்றார் மிதியோம் என்று இருதரப்பும் விளக்கணைத்துச் சத்தியமும் செய்து கொண்டனர்.

பாசூர் குருசுவாமியார் செப்பேடு - 4

ஆறூர் நாடார் செப்பேடு: http://kongukulagurus.blogspot.com/2012/05/blog-post.html?m=1

நவீன காலத்தில் சீடர்களை முன்னேற்ற மடத்தின் பணிகள்:


"திருவானைக்காவல் ஆயிரவரான மகாசைவ சோழிய பிராமணரான இவர், கொங்கு வேளாளர், அகரம் வெள்ளாஞ் செட்டியார் குலகுருவாகப் பாசூர் பெரிய மடம் மடாதிபதியாகவும் இருந்து 2006 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். மேற்படி சமூகங்கள் படிப்பறிவு அடைய திருச்சி தேசியக் கல்லூரியில் ஈரோடு பகுதியினரான தனது சீடர்கள் பெருமளவில் சேர்ந்து படிக்கக் காரணமாக மடாதிபதியான இவர் குடும்பம் இருந்ததால், இவரை ஈ.வே.ரா வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதனால் ஶ்ரீரங்கம் ஈ.வே.ரா சிலை இவரை வைத்தே திறக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டும் அங்கு உள்ளது."


1900கள் முதல், மடத்தின் சீடர்களான கொங்க நாட்டுமைப் புலவர்களிடம் திண்ணைப்பள்ளியை (Traditional Elementary Education)

http://kongupulavanars.blogspot.com/?m=1 முடித்து, குருகுல மேற்படிப்புக்காகத் தங்களிடம் வரும் சீடர்களை மடமே ஆங்கிலம் உள்ளானவற்றைப் பயிற்றுவித்ததற்கான ஏடுகள் இன்னும் பெரிய மடத்தில் உள்ளன. அதற்கு மேல் மேற்படிப்பு முடித்தால்தான் ஆங்கிலக்கல்வியில் பின்தங்கியிருந்த சீடர்கள் முன்னேற முடியும் எனப் போட்டி போட்டுக்கொண்டு சின்ன மடமும், பெரிய மடமும் முன்னேறிய சமூகங்களாக (FC) சர்க்காரால் அன்று அறிவிக்கப்பட்டிருந்த கொங்கர் சமூகங்களை தங்கள் பொறுப்பில் (Guardianship) திருச்சி St.Jospeh's, தேசியக் கல்லூரி முதலான கல்லூரிகளில் சேர்த்துவிட்டனர். இதனால்தான் அக்காலத்தைய கவுண்டர்களும், செட்டியார்களும் அன்றைய அகண்ட கோவை ஜில்லாவின் தலைநகரான கோவையில் படிக்காமல், மடாதிபதியின் சம்மந்திகள்  ஊரான திருச்சியில் படித்தனர். இவ்வாறு மடாதிபதிகள் உந்துதலில் திருச்சி தேசியக்கல்லூரியில் படித்த சின்ன மடம் (நாட்டுப்புறம்)த்தின் சீடரும்,  இக்கட்டுரை ஆசிரியரின் பெரிய அப்பாறும், எழுமாத்தூர் பனங்காடை கோத்திர பட்டக்காரர் வம்சத்தில் பிறந்த பேராசிரியர் C.A.பழனிசாமி B.A B.L (Former Director of Legal studies, Former Principal of Madras Law College) தான் சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத்தினை அமைத்தார். பிரீமேசானியர்களான பொள்ளாச்சி C.சுப்பிரமணியம், பழையகோட்டை N.S.S மன்றாடியார் ஆகிய மிட்டா மிராசு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு துரோகங்களையும் மீறி, 1975இல் சமூகம் பிற்பட்ட சமூகமாக அறிவிக்கப்படக் காரணமாக இருந்தார்: http://kongupattakarars.blogspot.com/2011/03/1.html?m=1



பாசூர் மதத்தின் சேவகன் சிவிகையார் (பல்லக்கு தூக்கிகள்) அணியும் டவாலி வில்லை (badge) 


மடத்திற்கு மானிய காணி ஊர்கள் (கொங்கு நாடு):

பேரோடு (பூந்துறை நாடு)


பாசூர் (பூந்துறை நாடு) 


                         மடத்திற்கு சேர்ந்த கொங்க தேசத்து  நாடுகள்:

மேல்கரை பூந்துறை நாடு 

தற்போதைய முகவரிகள் 
(உங்கள் ஊர்,பெயர்கள் எந்த தலைக்கட்டு கணக்கு கீழ்கண்டவர்களில் எவரது  பதிவேட்டில் உள்ளதோ,அவரே குலகுரு ):

மேல்கரை பூந்துறை நாடு கவுண்டர்கள் (பகுதி), அகரம் வெள்ளாஞ்செட்டியார் (பகுதி)

பாசூர் பெரிய, சின்ன (நாடு), சின்ன (நாட்டுப்புறம்) மடங்களுக்கான சிஷ்யர்களது ஊர்-கோத்திர-குடிகள் தலைக்கட்டுப் பட்டியல்:

இந்த மடத்திற்குச் சேர்ந்த சிஷ்யர்களின் ஊர்/கூட்டம் தலைக்கட்டு கணக்குஆவணங்களைப் பார்க்கவும்:

https://drive.google.com/drive/folders/1aWqScbft4B_xu6tfiA_u8OWNOS1twGzz?usp=sharing



ஶ்ரீ மட இளவரசு புதல்வனார். ஶ்ரீ கண்ணன் தீக்ஷதர் (எ) சந்திரசேகர தீக்ஷதர்,

S/O காசிவாசி ஸ்ரீ சாம்பசிவ தீக்ஷதர் ,  

மீனாக்ஷி நிலையம் , 

26, வடக்கு ரதவீதி,

திருவானைக்காவல் ,

திருச்சி  - 620005 .
செல் :  88700 20624 

பாசூர் முகாம் (சஞ்சார நிரல் அறிய வாட்ஸேப் குழுவில் சேரவும்):

4/1, கஸ்பா பாசூர்,

(கொத்துக்காரர் ரவி வீட்டுக்கு எதிர்வீடு),

கொடுமுடி வட்டம்,

ஈரோடு மாவட்டம்.

https://maps.app.goo.gl/R3i619NoyASgcgJx6

வாட்ஸேப் குழுவில் சேர:








கீழே இக்குலகுருவுக்குக் கட்டுப்பட்ட கூட்டங்களின் பட்டியல் :

பூந்துறை காடை  கோத்திரம், 


வெள்ளோடு சாத்தந்தை  கோத்திரம்,  பயறன்  கோத்திரம், 


நசையநூறு கண்ணன்  கோத்திரம்  , செம்பன் கோத்திரம்  ,  பூச்சந்தை  கோத்திரம்,  கூறை  கோத்திரம்,  கீறை  கோத்திரம்,  பாண்டியன்  கோத்திரம்,  யீஞ்சன்  கோத்திரம், 


யெழுமாத்தூறு  ஊராட்சிக்கோட்டை  பனங்காடை  கோத்திரம்,  செல்லன்  கோத்திரம்,  காறி  கோத்திரம்,


அனுமன்பள்ளி செல்லன்  கோத்திரம், 


அனுமன்பள்ளீ கூடலூரு பண்ண  கோத்திரம், 


யீங்கூறு ஈஞ்ச  கோத்திரம் 


முருங்கத்தொழுவு பெரிய  கோத்தரம், 


கனகபுரம் இலவமூலை சாத்தந்தை  கோத்திரம் 


மோகனூரு கறூரு பஞ்சமாதேவி நெறூரு கோயம்பள்ளி மயில்ரெங்கம்  கொங்க பனிரெண்டாம் நகரத்து செட்டியார்கள்

கொங்க அகரம் 
வெள் ளாஞ் செட்டியார்கள் 

பூந்துறை நாட்டு புலவனார்கள்

ஸ்தலத்து கணக்கப்பிள்ளைகள்

இம்மடத்தில் தலைக்கட்டு கணக்கு இல்லாதோர் பாசூர் பெரிய, சின்ன (நாட்டுப்புறம்) மடங்களுக்கான சிஷ்யர்களது ஊர்-கோத்திர-குடிகள் தலைக்கட்டுப் பட்டியல்களில் தேடவும்:

https://pasursishyas.blogspot.com/2023/04/blog-post.html


வந்தே கவிராஜகுரு பரம்பராம்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கிராமியர் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகங்களை கூடயிருந்து எழுதிய கையேட்டுக்காரர்கள். குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கா...