Tuesday, September 1, 2009

கொங்கு குலகுருக்கள் 2. சிவகிரி மடம்

ஸ்ரீஸ்ரீ சிவசமய பண்டித குரு சுவாமிகள்
மடத்தின் வெப்சைட்: http://sivagiriathinam.blogspot.com/
http://sivagiriadheenam.blogspot.in/





மடப்பட்டயத்தின் 1888 நகல் (ஆர்க்கீவ்ஸ்):






காளத்தியிலிருந்து களப்பிரரை அடக்க பாண்டியனால் வந்த வேட்டுவரும் அவர்தம் குருவான ஆத்திரேய கோத்திர உமாபதி பண்டிதர் (நஞ்சை இடையாறு மடம்), தமது தம்பியைக் கோயில் வெள்ளாற்றில் மடம் கட்டி அமர்த்தினர். அம்மடம் காக்காவேரி சென்று, பிறகு சிவகிரி தொப்பபாளையம் வந்து, தற்போது சிவகிரியில் அமைந்துள்ளது. மேல்கரை அரையநாட்டினை அண்ணாமலை வேட்டுவரிடம் கிரையம் வாங்கிய தலையநல்லூர் கூரை கோத்திரத்தாருக்கு, அரையநாட்டு மடம் குலகுரு மடம் ஆனது. (ஆதாரம்: குருகுல காவியம்) ஐந்து தலைக்கட்டுகளுக்கு முன் சிவகிரி மடத்தில் ஏற்பட்ட மூத்தாள், இளையாள் வாரிசுகள் போட்டியால் தொலைவு காரணமாக இம்மடம் பிரிந்து,ஓரு பிரிவு கீழ்சாத்தம்பூர் போனது. 
https://archive.org/details/20240923_20240923_0547

சிவகிரி மட தலைக்கட்டுக் கணக்குகள்:

பழைய சேலம் ஜில்லாவில் உள்ள கீழ்கண்ட கோத்திரத்தார், இம்மடத்தில் தங்கள் ஊர் தலைக்கட்டு கிடைக்கவில்லை எனில்,  பங்காளி மடமான கீழ் சாத்தம்பூர் மடத்தலைக்கட்டுக்கணக்குகளில் தேடிப் பார்க்கவும்:https://kongukulagurus.blogspot.com/2011/05/40.html


காணிகள் -கோத்திரங்கள்:
கிராமிய ஆதிசைவர் - கௌசிக கோத்திரம்

1. தலையநல்லூர் - கூர கோத்திரம், விலைய கோத்திரம்
2. காஞ்சிக்கோயில் - செம்பன் கோத்திரம், கன்ன கோத்திரம்
3. 
காஞ்சிக்கோயிலில் இருக்கும் மொளசி  கன்ன  கோத்திரம்
4. படைவீடு - கூர கோத்திரம்
5. கந்தம்பாளையம் (நல்லூர்) - கூர கோத்திரம்

6. தோளூர் - காட கோத்திரம்
7. அவினாசி - செம்ப கோத்திரம்
8. பிடாரியூர் - கூர கோத்திரம்
9. மோகனூர் - மணிய கோத்திரம்
10. காளிங்கராயன்பளையம் - கூர கோத்திரம்
11. காக்காவேரி - விலைய கோத்திரம்
12. பரமத்தி - பொருளந்தை கோத்திரம்
13. பில்லூர் - காட கோத்திரம்
14. ஒடுவங்குறிச்சி - ஆந்தை கோத்திரம
15. ஆரியூர் - வெண்டுவன் கோத்திரம்
16. கார்வழி - அழகன் கோத்திரம்
17. கத்திக்காரன்கொம்பு - காட கோத்திரம்
18. ஓலப்பாளையம் - மணியகோத்திரம்

சேலம் - சோழிய வெள்ளாளர்


வரலாறு : http://www.sivagiriatheenam.org/
முகவரி:

சிவகிரி ஆதீனம்,
சிவகிரி அஞ்சல்,
ஈரோடு மாவட்டம் - 638109
மின்னஞ்சல்: sivagiriathinam@gmail.com
பிளாக்: http://www.sivagiriatheenam.org/
தொலைபேசி: 04204- 240324
செல்: 94435- 63354


முத்துசாமிக் கோனார் "கொங்குநாடு" புத்தகத்தில்:


2 comments:

  1. 9. மோகனூர் - மணியன் கோத்திரம்

    nandrigal......

    guruvadi kanden. thiruvadi kanden......

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கால...