மடம் அழகிய தில்லை சிற்றம்பல குருசுவாமிகள்திருமடம்
கல்லங்குளம் மடாலயம்:
காணிகள் - கோத்திரங்கள்:
கொங்க வெள்ளாளரில்,
- ராசிபுரம் நாடு - விழிய கோத்திரம் (கோனமடுவு வகையாறா)
- பருத்திப்பள்ளி - செல்லன் கோத்திரம்
- குலங்கொண்டை - கண்ணன் கோத்திரம்
- அலவாய்பட்டி - தனஞ்செயன் கோத்திரம்
- கருமனூர் - ஈஞ்ச கோத்திரம்
- சிராப்பள்ளி - தூரன் கோத்திரம்
- பட்டணம் - கண்ணன் கோத்திரம்
- கீரம்பூர் - பண்ணை கோத்திரம்
- கோனூர் - பனங்காடை கோத்திரம், சேரன் கோத்திரம்
- இடையார் - தூரன் கோத்திரம், செல்ல கோத்திரம்
- ஆத்தூர் - காடை கோத்திரம்
- அத்தனூர் - பயிரன் கோத்திரம்
- கலியாணி - தூரன் கோத்திரம்
- பாலமேடு - பனையன் கோத்திரம்
- ராக்கிபட்டி - பண்ணை கோத்திரம்
- இருகாலூர் - தேவேந்திர கோத்திரம்
- பல்லக்குழி - காரி கோத்திரம்
இளங்கம்பரில் (தொண்டு வெள்ளாளர்)
- சமுத்திரம் - கூரை கோத்திரம் (தாரமங்கலம் அருகில்)
- கீரம்பூர் - பண்ணை கோத்திரம் (தாரமங்கலம் அருகிலுள்ள அத்திகாட்டானூர்,பவளாத்தானூர், சமுத்திரம் பகுதியில் உள்ளவர்கள் மட்டும்)
- நீலன், நீருண்ணி கோத்திரம் - கெட்டிமுதலி வகையறாக்கள் (தாரமங்கலம் கட்டிமுதலி என்ற வெள்ளாள மன்னர்கள்.)
- சேலம் நாடு - தொண்டைமண்டல முதலி
- ஸ்ரீ கர்ண கோத்திரம்
- இராசிபுரம் மண்ணுடையார் செட்டுமைகாரர்கள்
- பருத்திப்பள்ளி மண்ணுடையார் செட்டுமைகாரர்கள்
- கொங்க கைக்கோல முதலி
- ஆதிசைவ பிராமணரில்,
- வாழவந்தி நாடு - காசிப கோத்திரம் ,
- பருத்திபள்ளி நாடு - கெளசிக கோத்திரம்
- ஆத்ரேய, பரத்வாஜ, கவுண்டின்ய கோத்திரம்
விலாசம்:
க.உமாபதி குருக்கள்,
கல்லங்குளம் மட இளவரசு,
21, சிவன்கோயில் வீதி,
ராசிபுரம், நாமக்கல் ஜில்லா.
செல்: 94435 15036
வீடு: 04267 223233
மட வரலாறு :
21, சிவன்கோயில் வீதி,
ராசிபுரம், நாமக்கல் ஜில்லா.
செல்: 94435 15036
வீடு: 04267 223233
ஓட்டஞ்சத்திரம் ஜவ்வாதுபட்டியில் இருக்கும் கீரம்பூர் பண்ண கூட்ட மடத்து சிஷ்யர்கள் குலகுருவுக்கு எழுதிய வாழ்த்து மடல் - 14-7-1944
மட வரலாறு :
கல்லங்குளம்
மடத்து பட்டய நகல் -1
திவ்ய
க்ஷேத்ரமாகிய இராசிபுரம் நாடு ராசிபுரத்தில் சிவபக்தியில் சிறந்த கெட்டிமுதலியார்
என்னும் நாங்கள் ஆதிசைவ பரம்பரையில் மடாதிபத்யம் கல்லங்குளம் என்னும் கிராமத்தில்
தங்களுக்கு சர்வமானியமாக விழிய குலமாகிய துலுக்கண்ணகவுண்டரால் சர்வமானியம்
இரன்னியயோதநமாக தாரை வார்த்து இருப்பதாகவும் இராசிபுரம் நாட்டுக்கடுத்த சில
கிராமங்களிலும் இராசிபுரத்திலும் சர்வமானியமாக தாரைகுடுத்தும் ஸ்ரீ கைலாசகோவிலில்
ஜீரணத்தோதாரண வேலை செய்தும் கும்பாபிசேகம் தாங்களே நடத்தி வரவும் எங்களுக்கு
குருவாக தங்களையே வைத்து கொண்டதாகவும் சேலம் நாடு – வாழவந்தி நாடு – தாரமங்கலம்
நாடு – திருச்செங்கோடு நாடு இன்னும் அநேக கிராமங்களிலும் சர்வமான்யமாக
குடுக்கப்பட்டும் இந்த கிராமங்களிலுள்ள கோயில்களுக்கு சாந்திசம்ப்ரோக்ஷனம்
கும்பாபிசேக – அஷ்டபந்தனம் நடத்தி வரவும் எங்கள் வம்சத்தாருக்கும் இன்னும் இந்த
சாசனத்தில் கண்ட குலகோத்திரத்தாருக்கும் குருபாலனம் பண்ணி ஆண்டு அனுபவித்து வரவும்
தங்களுக்கு கோயில் எள்ளை காணி தெற்கு – காவேரிக்கும் வடக்கு சேலம் குகை
அம்பலவானசுவாமி கோயில் முதலாக கூகமலைக்கு மேற்கு – சங்ககிரிமலைக்கு கிழக்கு இந்த
எல்லைக்குட்பட்ட கிராமங்களிலுள்ள கோயில் ஈஸ்வரன் – மாரியம்மன் – பத்திரகாளி
இன்னும் இருக்கப்பட்ட சுவாமிகளுக்கு கும்பாபிசேகம் நடத்திவரவும் இந்த சாசனத்தில்
கண்ட குல கோத்திரத்தாருக்கும் குருவாகவும் இந்த கோத்திரத்தாருக்கு உள்ள
காணிக்கையும் வசூல் செய்து கொண்டு தீர்த்தபிரசாதம் கொடுத்து எங்களை ஆண்டனுபவித்துக்கொள்ளவும்.
கலியுக சகாப்தம் ச ள ங ய (4430) ஆனந்த வருஷம் சித்திரை மாதம் 15 ஆம் தேதி
பௌர்ணமியும் சித்திரா நக்ஷத்திரம் சோமவாரமும் சுபயோகமும் பெத்தநாளில்
முன்னுவாய்சூழ்ந்த குன்னத்தூருக்கு சேர்ந்த இராசிபுரம் நாட்டிலிருக்கும்
கெட்டிமுதலியாராகிய நாங்களும் வெள்ளாளரில் விழிய குலத்தில் துலுக்கண்ண கவுண்டனும் –
அன்னகாளிகவுண்டன்- தாதகாளிக்கவுண்டன் – ஸ்ரீ கர்ணநிர் குமாரசாமி
கணக்குப்பிள்ளையும் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சாசனம் எழுதப்பட்டது. ஸ்ரீ கைலாசநாத
சுவாமி சாட்சி – அழகுநாச்சி அம்மன் சாட்சி – ஆகாசவாணி சாட்சி – பூமாதேவி சாட்சி –
சந்திரசூரியர் சாட்சி – இந்தப்படிக்கு நாங்கள் எழுதிகொடுத்த சாசனம் இதை
யாதுமொருவர் இந்த தர்மத்தை அஜிதம் பண்ணினவாரால் மாதாபிதாவையும் காசி விஸ்வநாத
சுவாமி சந்நிதியிலும் – கங்கை கரையிலும் காரம்பசுவையும் பிராமனாளையும் கொன்ன
தோஷத்தாலும் குருத்ரோகம் பண்ணின தோஷத்தாலும் போகக்கடவது. இந்த தர்மம் செய்தவன்
நாகரத்திலும் தமிழிலும் போடப்பட்டிருக்கிறது தெலுங்கிலும் போடப்பட்டிருக்கிறது. சிவபிராமணன்
கவுசி நம்பியிர் சீராப்பள்ளி கேடி அரசு பண்ணின பூசகவுண்டன் புத்திரன் சின்னத்தம்பி
கவுண்டன் – அன்னகாளி கவுண்டன் – கந்தவேலு பிள்ளை – கொமரவேலு கவுண்டன் – வேதகி
கணக்குப்பிள்ளை
காவேரிததிக்கும்
தெற்கு ஆம்பிராவதி நதிக்கு வடக்கில் சில கிராமங்களில் கும்பாபிசேகம் முதலானது
சர்வமாநியமும் விடப்பட்டிருக்கிறது அதையும் புத்திர பௌத்திர நியமாய் ஆண்டு
அனுபவித்து வரவும்
என்னாட்டிற்கும்
நன்னாடாய் பொழியும் சேலம் தேசத்தின் கண்ணுள்ள சேல ராசிபுரம் டிவிசன் சேர்ந்த
போதகிரி என்னும் புண்ணியகிரியின் சிவச்தலாகிய கல்லங்குளம் மடாதிபத்யம் பெற்ற
சிந்தாந்த பிரவர்த்தகாசார்யவனாய் பஞ்சதீக்ஷாஸ ஸஸ்காரியாப் ஸகலாகம ப்ரவீனராய்
ஆன்மாக்களுக்கு மலமாயைகளை எமன்கிற பாசங்களை நமது ஞான சக்தியில் கிரஹித்து கிரநோக்கம்
பிரசாதிக்கம் அழகிய சிற்றம்பல குருசுவாமிகள் அவர்கள் பிரதிஷ்டை உற்சவம் நடத்தும்
க்ஷேத்திரங்களும் கிராமங்களிலும் பின்னாள் குறிப்பிட்டிருக்கிறது.
சுபம்
கல்லங்குளம்
மடத்து பட்டய நகல் -2
சொஸ்தி
ஸ்ரீ மகா மண்டலேஸ்வரன் ஹரிராயன் விபாடன் பாஷைக்கு தப்புவாராய கண்டன் மேதினி மகா
கண்டன் சமகால கோலாகலன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதவன் எம்மண்டலமும் திரை
கொண்டு அருள வள்ளல் பரமேஸ்வரன் ராசவல்லவன் ராசநாராயணன் ராசமார்த்தாண்டன் அசுபதி
கெஜபதி நரபதி நவகோடி நாராயணன் பூர்வ தக்ஷிண பக்ஷிம உத்திர சப்த சமுத்திர
கூபாநிராமதேவம் ஹராய ஹரிஹராய பண்றுடனே மஹராய வீரசிங்கராய அச்சுதராய ராமராச்சதாவராய
சீரங்கராய வெங்கடாதிராயர் ராமதேவ மஹராய பிரதவிசாம்ராஜ்யம் பண்ணி அருளிய நாளில்
கலியுக சாகப்தம் 4430 இதன்
மேல் செல்ல நின்ற ஆனந்த வருஷம் சித்திரை மாதம் 15 ஆம் தேதி
பௌர்ணமியும் சித்திணாம யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் எங்கள்குலகுருவாகிய
குருக்களாம்பாளையம் சுவாமியார் சன்னிதானங்களுக்கு ராசிபுரம் விழியகுலம்
நாட்டுக்கவுண்டர் பாச்சல் சுப்பராய கவுண்டர் குமாரர்கள் ரங்கன்னகவுண்டர்
துலுக்கன்னகவுண்டர் செம்பராய கவுண்டர் ஆலத்தூர் வேலப்பகவுண்டர் குமாரர்
கைலாசகவுண்டர் நாங்கள் எழுதின சீட்டு தாங்களும் எங்கள் குலத்தவர்களும் வீட்டவர்களுக்கும்
குலதெய்வமாய் விளங்கும் அத்தனூர் பத்ரகாளியம்மன் கோயில் கட்டி முடித்து விட்டோம்
சம்ரோக்ஷனைக்கு நாள் வைத்து கொடுக்கவும் சுப்பராய கவுண்டர் குமாரர் மகன் ரங்கண்ணகவுண்டர்
துலுக்கன்னகவுண்டர் செம்பராய கவுண்டர் ஆலத்தூர் வேலப்பகவுண்டர் குமாரர்
கைலாசகவுண்டர் எங்கள் கையொப்பம் கவுண்டம்பாளையம் மிட்டா கணக்குபிள்ளை ராமநாத
பிள்ளை ஆனந்த வருஷம் வைகாசி 15 ஆம் நாள் நடந்து பாச்சல் சுப்பராயகவுண்டர் குமாரர்கள் 454 பங்காளிகளிடம்
ஏத்தும் குருக்களாம்பாளையம் (கல்லங்குளம் எங்கள் குலகுருவாய் வந்த காணிக்கை
கொடுத்து வரவும்) வீடு ஒன்றுக்கு எங்களால் இயன்றதை கொடுத்துவந்தோம் காணிக்கை
கொடுக்காதோர் கங்கைகரையிலும் காராம்பசுவையும் பிள்ளையையும் கொன்ற தோஷத்தாலும் குரு
துரோகம் பண்ணிய தோஷத்தாலும் போகக்கடவது எங்கள் குலத்தவர்கள் 454 பேர்கள்
சபையில் தீர்மானிக்கப்பட்டது. அத்தனூர் பத்ரகாளி சாட்சி பேளுக்குறிச்சி மேல்நாடு
பழனி வேல்கவுண்டர் சின்னாகவுண்டர் பாலக்காடு செம்பாகவுண்டர் இதர எங்கள் குல
கவுண்டர்கள் சம்மதித்தார்கள்
வெள்ளாளபட்டி
பரமேஸ்வர கவுண்டர் என் குலத்தார்கள் உள்ள காணிக்கையும் வசூல்செய்து கொண்டு
தீர்த்தமும் பிரசாதமும் கொடுத்து எங்களை ஆண்டு அனுபவித்து வரவும்
சேலம் அம்பலவாணசுவாமி
கோயில் (குகை) முதலின தெற்கு கூககிரி மலைக்கும் மேற்கு சங்ககிரி மலைக்கும் கிழக்கு
இன்னம் காவேரிக்கும் வடக்கு இன்னம் காவேரிக்கும் தெற்கு அமராவதிக்கு வடக்கு
அதில்சில கிராமங்களிலும் இந்த எங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள கோயில்கள்
ஈஸ்வரன் மாரியம்மன் கருப்பண்ணன் பிடாரி துர்க்கை இன்னும் கிராமங்களில் நடக்கும்
கும்பாபிசேகங்களை நடத்தியும் இதில் கண்ட குலகோத்திரத்தார்க்கு குலகுருவாகவும் இந்த
கோத்திர வாழவந்தி நாடு தாரமங்கலம் நாடு அரைய நாடு இந்த நாட்டு கிராமங்களிலுள்ள
கோயில்களுக்கும் சாந்தி சம்ரோக்ஷன அஷ்டபந்தனம் முதலாகிய கும்பாபிசேகங்களும் நடத்தி
வருவதுடன் எங்கள் வம்சத்தாருக்கும் இன்னும் இந்த சாசனத்தில் கண்ட
குலகோத்திரங்களுக்கும் குருமடமாயிருந்து பரிபாலனம் பண்ணி ஆண்டு அனுபவித்து வரவும்
1.
வண்டிநத்தம் – கிராமதேவதைகளும்
2.
எர்ணாகுளம் – ஈஸ்வரர் – கிராமதேவதைகளும்
3.
ராக்கிபட்டி – மாரியம்மன் – கிராமதேவதைகளும்
4.
செங்கோடம்பாளையம் – அங்காளம்மன்- கிராமதேவதைகளும்
5.
கண்டகுலமாணிக்கம் – பத்ரகாளி – கிராமதேவதைகளும்
6.
சேலம் நாடு குகை – அம்பலவாண சுவாமி – கிராமதேவதைகளும்
7.
காவேரிக்கு தெற்கு – ஆத்தூர் வாலீஸ்வரர் கோயில்
8.
வெண்ணைமலை – பாலசுப்ரமணியர் – காசி விஸ்வநாதர்
9.
இராசிபுரம் நாட்டில் கிராமதேவதைகளும்
10.
கல்குறிச்சி – பசுபதீஸ்வரர் கோயில் – கிராமதேவதைகளும்
11.
கூகமலை – பாலசுப்ரமணியர் – கிராமதேவதைகளும்
12.
கூனவேலம்பட்டி – சித்தேஸ்வரன் – கிராமதேவதைகளும்
13.
வாழவந்தி நாடு கிராமம் – பசுபதீஸ்வரர் – கிராமதேவதைகளும்
14.
கோனூர் கிராமம் – சீர்காழிநாதர் - கிராமதேவதைகளும்
15.
சாத்தம்பூர் - மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் – கிராமதேவதைகளும்
16.
திண்டமங்கலம் – தேணீஸ்வரர்- கிராமதேவதைகளும்
17.
வள்ளிபுரம்- தான்தோன்றீஸ்வரர் – கிராமதேவதைகளும்
18.
இராசிபுரம்நாடு இராசிபுரம் கைலாசநாத சுவாமி – கிராமதேவதைகளும்
19.
சந்திரசேகரபுரம் – விஸ்வநாதர் – கிராமதேவதைகளும்
20.
சீராப்பள்ளி – செவ்வந்தீஸ்வரர் – கிராமதேவதைகளும்
21.
புதுப்பட்டி – பத்ரகாளி- கிராமதேவதைகளும்
22.
கன்னூர்ப்பட்டி – கைலாசநாதரும் – கிராமதேவதைகளும்
23.
காசா நல்லூர் – ஈஸ்வரரும் – கிராமதேவதைகளும்
24.
மூணுசாவடி – காசி விஸ்வநாதரும் – கிராமதேவதைகளும்
25.
பாச்சல் – ஈஸ்வரரும், பத்ரகாளியும் – கிராமதேவதைகளும்
26.
நாமகிரிபேட்டை – பத்ரகாளியும் – கிராமதேவதைகளும்
27.
சிங்களந்தாபுரம் - திருவள்ளிநாதரும் – கிராமதேவதைகளும்
28.
பெரமனூர் – ஈஸ்வரர் – கிராமதேவதைகளும்
29.
முத்துகாகவுண்டனூர் – பிடாரியாம்மனும் – கிராமதேவதைகளும்
30.
அத்தனூர் – அத்தீஸ்வரரும் – அத்தனூர் அம்மனும்
31.
மொஞ்சனூர் ஈஸ்வரரும் – கிராமதேவதைகளும்
32.
அலைவாய்மலை –சித்தேஸ்வரர் – அழியா இலங்கை அம்மனும்
33.
குருக்கபுரம் – சுப்பிரமணியர் – கிராமதேவதைகளும்
34.
போத்தாங்குறிச்சி ஆயி பாளையம் – சுப்ப்ரமணிரும் – முத்துகுமாரரும்
35.
முருங்கம் – கிராமதேவதைகளும்
36.
மின்னாம்பள்ளி காமாட்சி அம்மனும் – கிராமதேவதைகளும்
37.
அக்கரைப்பட்டி – மாரியம்மனும் – கிராமதேவதைகளும்
38.
அலைவாய்மலை – பாலசுப்ரமணிரும் கிராமதேவதைகளும்
39.
வெண்ணந்தூர் – தீர்த்தகிரீஸ்வரரும் – கிராமதேவதைகளும்
40.
மின்னக்கல் – ஜலகண்டேஸ்வரரும் – கிராமதேவதைகளும்
41.
தாதூகாபட்டி – ஈஸ்வரரும் – கிராமதேவதைகளும்
42.
மல்லூர்- ஏகாம்பரேஸ்வரரும் – கிராமதேவதைகளும்
43.
காருகுறிச்சி – ஈஸ்வரரும் – கிராமதேவதைகளும்
44.
தோட்டகாரபட்டி – கிராமதேவதைகளும்
45.
பல்லகுழி ஈஸ்வரரும் – கிராமதேவதைகளும்
46.
பேளுக்குறிச்சி பல்லிபட்டி – மாரியம்மனும் – கிராமதேவதைகளும்
47.
இருகாலூர் – காசிவிஸ்வநாதரும் – கிராமதேவதைகளும்
48.
தாழையூர் – ஈஸ்வரரும் – ள இன்னும்
குலகோத்திரத்தார்கள்
கொங்க வெள்ளாளரில்,
1.
ராசிபுரம் நாடு - விழிய கோத்திரம் (கோனமடுவு வகையாறா) – வீட்டுக்கு இரண்டு
பணம்
2.
பருத்திப்பள்ளி - செல்லன் கோத்திரம்
3.
குலங்கொண்டை - கண்ணன் கோத்திரம்
4.
அலவாய்பட்டி - தனஞ்செயன் கோத்திரம்
5.
கருமனூர் - ஈஞ்ச கோத்திரம்
6.
சிராப்பள்ளி - தூரன் கோத்திரம்
7.
பட்டணம் - கண்ணன் கோத்திரம்
8.
கீரம்பூர் - பண்ணை கோத்திரம்
9.
கோனூர் - பனங்காடை கோத்திரம், சேரன் கோத்திரம்
10.
இடையார் - தூரன் கோத்திரம், செல்ல கோத்திரம்
11.
கூனவேலம்பட்டி –செம்பூதன், பனங்காடை
12.
ஆத்தூர் - காடை கோத்திரம்
13.
அத்தனூர் - பயிரன் கோத்திரம்
14.
கலியாணி - தூரன் கோத்திரம்
15.
பாலமேடு - பனையன் கோத்திரம்
16.
ராக்கிபட்டி - பண்ணை கோத்திரம்
17.
இருகாலூர் - தேவேந்திர கோத்திரம்
18.
பல்லக்குழி - காரி கோத்திரம்
19.
சமுத்திரம் - கூரை கோத்திரம்
20.
மண்மங்கலம் – வெண்டுவன்
இதர சிஷ்யரில்,
1.
நீலன், நீருண்ணி கோத்திரம் - கெட்டிமுதலி வகையறாக்கள் (தாரமங்கலம் கட்டிமுதலி என்ற வெள்ளாள மன்னர்கள்.)
2.
சேலம் நாடு - தொண்டைமண்டல முதலி
3.
ஸ்ரீ கர்ண கோத்திரம்
4.
இராசிபுரம் மண்ணுடையார் செட்டுமைகாரர்கள்
5.
பருத்திப்பள்ளி மண்ணுடையார் செட்டுமைகாரர்கள்
6.
செங்குந்த முதலிமார்கள்
7.
ஆதிசைவ பிராமணருக்கு – வீடு 1 க்கு பணம் 3
1. வாழவந்தி நாடு - காசிப கோத்திரம் – வீடு 1
க்கு பணம் 3
2. பருத்திபள்ளி நாடு - கெளசிக கோத்திரம் – வீடு 1 க்கு பணம் 3
3. ஆத்ரேய, பரத்வாஜ, கவுண்டின்ய கோத்திரம் - வீடு 1 க்கு பணம் 4
இந்த
படிக்கு பணம் வாங்கிக் கொள்ளவேண்டியது.
ஸ்ரீமது குருக்களாம்பாளையம் அழகிய சிற்றம்பல குருஸ்வாமிகள் எங்களுக்கு
கலியுக வருஷம் 4...... பிரமாதி சித்திரை ௪ ஆம் நாள் இராசிபுரம் கைலாசநாதர் ரத
உற்ச்சவத்தை தாங்கள் வந்து நடத்தி கொடுக்குமாறு குருசன்னிதானத்தை கேட்டுகொள்கிறோம்
துலுக்கன
கவுண்டர் குமாரர் ராசக்கவுண்டர் – கைலாசநாதர் துணை
************
கலியுக
சகாப்தம் 4425 இராசிபுரம் கோயில் தேர் ஆரம்பம்
------------
ஏட்டுப்பிரதியில்
இருந்து தொகுத்து வழங்கப்பட்டது.
ந.கனகராஜ்
சிவாச்சாரியார்,கல்லங்குளம் ஸ்ரீமது அழகிய சிற்றம்பல குருஸ்சவாமிகள் மடம் –
இராசிபுரம் (சிவாலயம்)
சுபம்
முத்துசாமிக்கோனார் "கொங்குநாடு" புத்தகத்தில்:
தற்போது சிதம்பரத்தில் உள்ள நம் மடத்திற்கான முறைகார தீக்ஷிதர்,
- சி. சந்திரசேகர தீக்ஷிதர்,
- S/O சின்மயானந்த சுப்ரமணிய தீக்ஷிதர்,
- சின்மய நிவாஸ்,
- ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்தி கோயில்,
- ஸ்ரீ சபாநாயகர் கோயில் டிரஸ்டி & பூஜை
- 63/152, கீழரத வீதி,
- சிதம்பரம்-608001
- செல்: 95970 19366
real y a hard work has to appreciate continue it sir we are with u to help u as our level
ReplyDeleteReally it's very good.
ReplyDeleteIt’s Very Nice To Connect Here. Back To Home.
ReplyDeleteArunachalam palamedu
ReplyDelete