Thursday, September 24, 2009

குலகுருவின் மகத்துவம்


 
 || ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
                    நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம் ||

தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!
- திருமந்திரம்

குரு என்றால் இருளை விலக்குபவர் என்று பொருள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நமது மரபில் நமது முன்னோர் சிறந்து விளங்கினர். மாதாவால் நாம் உண்டாகிறோம், பிதாவால் குலம் வருகிறது. இங்ஙனம் வரும் குலத்தால் நமது குலகுருவும், குலதெய்வமும் கிடைக்கின்றன.
ஆயிரம் தாய்மார் இருந்தாலும் நமது தாய் வழியாகத்தானே தாயன்பை பெற்று உணர்கிறோம்! அதேபோல ஆயிரம் குருக்கள், தெய்வங்கள் இருப்பினும் நமது குலகுரு, குலதெய்வம் மூலமே நன்மை சித்திக்கும்.

தாய் தந்தையைக் காட்டுகிறாள், தந்தை குருவையும், குரு தெய்வத்தையும் காட்டுவதே நமது மரபு. தேவர்களுக்குக் குலகுரு பிருகஸ்பதி, அசுரர்களுக்கு சுக்கிராச்சாரி. இவர்கள் தத்தம் சிஷ்யர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டே செயல்கள் புரிந்து வந்ததனைக் காண்கிறோம். இதேபோல் அரசர்கள்தம் குலகுருக்கள் அவ்வரசர்களுக்கு நல்வழி காட்டியதனையும் ராமாயணம் போன்ற இதிகாசங்களின் வழி அறிகிறோம்.

குருவின் மகத்துவத்தினை உணர்த்த திருமூலர் தமது திருமந்திரத்தில் குருவே மனிதனுக்கு சிவம் என்கிறார்:

"குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உறையுணா பெற்றதோர் கோவே"

இதே கருத்தினை ஆதிமறையாகிய வேதங்களும் கூறுகின்றன :

"குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மகேச்வர:
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீகுரவே நம:"


(பொருள்: குருவே பிரம்மன் அதாவது படைப்பவர், அவரே விஷ்ணு மற்றும் சிவன், அதாவது காத்து, மாற்றமும் அளிப்பவர் என்பதால் அவரே சாட்சாத் கடவுளுமாகிறார். அத்தகைய குருவினை நமஸ்கரிக்கிறேன்)

கொங்கதேசத்தில் இதனை உணர்ந்தே இத்தேசத்திற்கான பூர்வகுடிகள் 51 ஆதிசைவ ஆதீனங்களைநிறுவினர். இவ்வாதீனங்கள் குருகுலங்கள், குருமடாலயங்கள் என்று அழைக்கப்பட்டன. "அய்யம்பாளையம்", "குருக்கள்பட்டி" , "குருக்கள்பாளையம்" என்று ஊர்களையே கொங்கர் தத்தமது குருக்களுக்களித்து மகிழ்ந்தனர். கொங்கர் கொங்கதேசம் வருகையிலேயே குருக்களையும் அழைத்து வந்தனர் என கொங்கு காணிப்பட்டயம் கூறுகிறது (கொங்கு வெள்ளாளர் செப்பேடு பட்டயங்கள் (2007), கொங்கு ஆய்வு மையம், புலவர் செ. ராசு).

குருக்களே அக்காலத்தில் திருமணங்களை நிச்சயித்து வந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "வேதியன் பக்கம் விரைவுடனே சென்று" என்ற வரி மூலம் உணரலாம். கொங்கர் திருமணத்தின் ஆரம்பமே இதுதான். ஏனெனில் பிரும்மச்சாரிகள் அனைவருக்கும் குருவே பொருப்பு. இதனால்தான் "பிரும்மச்சரியங்கழித்தல்" என்ற சீரும் உள்ளது.

இதேபோல் கைகோர்வை சீரின் பொழுது குருக்கள் மறைகூறி ஆசி தந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "மறையோர்கள் ஆசிகூற" என்ற வரிமூலம் உணரலாம். இவ்வாறு திருமணம் நிச்சயிக்கவும், ஆசி கூறவும் செய்த குருக்களுக்கு "மங்கிலியவரி" எனும் மாங்கல்யவரியையும் செலுத்தி வந்துள்ளனர்.

மேலும் குருவிடம் பாதபூசை செய்து, சஞ்சார காணிக்கையாக அவர்களால் முடிந்ததை மனமுவந்து அளித்து, அவர் சொற்படி தீட்சை மகாமந்திரம் உபதேசம் பெற்றுவந்துள்ளனர். ஒவ்வொரு ஆதீனத்திடமும் குறைந்தது 50 தலைக்கட்டுக்கான காணிக்கைக் கணக்கு ஓலைகள் உள்ளன. இவை சரித்திர ஆவணங்களாகும்.

இன்றும் குலகுருக்களை போற்றும் கோத்திரத்தார் நன்றாக பல்கிப்பெருகி உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு நிரந்தர குருபலம் உண்டு. இவற்றை சரியாக செய்யாமல் குருவுக்குக்கொடுத்த வார்த்தை தவறியவர்களே திருமணமின்மை, துன்பங்கள், குடும்பச்சிக்கல்கள், குழப்பங்கள் போன்று துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.

என்னுடைய அனுபவத்தில் குலகுருக்களை மீண்டும் கண்டு ஆசிபெற்று துன்பங்களினின்று மீண்டு வாழ்பவர்கள் ஏராளம். குலகுருவால் தீராத பிரச்சனைகளே இல்லை.

"குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி
"குருபீடம் உயர குடி உயரும்" குரு எவ்வாறு உள்ளார் என்பதனைக் கொண்டே குடிகளின் நிலையும் இருக்கும் என்பது கண்கண்ட உண்மை.

திருமந்திரத்தில் ஆறாம் தந்திரத்தில் சிவகுரு தரிசனம் பற்றிய பதிகங்கள் மேலும் குருவின் சிறப்புகளை விவரிக்கின்றன:
http://www.tamilvu.org/slet/servlet/l4100.l41A0son?x=1549&y=1564

மேலும் குருபுஜை என்ற ஏழாம் தந்திரப் பதிகங்கள் குருவின் சிறப்புகளை கூறுகையில்:
http://www.tamilvu.org/slet/servlet/l4100.l41A0son?x=1814&y=1821


கட்டுரை ஆசிரியர் தொலைபேசி : 91 - 424 - 2274700

British accounts on our spiritual system (ultimately used by their and our government to destroy the system):Account 1:

"Their Gurus are the Siva Brahmanas, or Brahmans who act as Pujaris in the temples of
Siva, and the great gods of his family. These are considered as
greatly inferior to the Smartal, either Vaidika, or Lokika. The
Guru comes annually to each village, distributes consecrated
leaves and holy water, and receives a Fanam from each person,
with as much grain as they choose to give. Some of them purchase an Upadesa
from the Guru; giving for it, according to their circumstances,
from one to ten Fanams. Those who have procured this may make
a Lingam of mud, and perform Pujas worship to this rude emblem
of the deity, by pouring flowers and water over it while they repeat
the Upadesa. Such persons must abstain entirely from animal food.
Those who have no Upadesa must pray without any set form, but
are allowed to eat the flesh of sacrifices." Pg 330.

- FRANCIS BUCHANAN, M. D, Vol. II, JOURNEY FROM மெட்ராஸ் THROUGH THE COUNTRIES OFMYSORE, CANARA, AND MALABAR, 1807Account 2:

"Each Nad has its Brahman Guru. The Guru of Morur and
Molasi Nads is by caste a Gurukkal, and he lives in Natta-
Kadayur , in Kangayam Nad of Coimbatore. The Gurus of
Malla-samudram and Parutti-palli Nads are also Gurukkal
Brahmans, the Guru of the former living at Ayyam-palaiyam, in
Paramati Division, his title being Immudi Sitambala Nayinar,
and the Guru of the latter Nad residing at Kallan-kulam in Salem
Taluk. The Guru of Easipuram Nad is a Dikshitar and lives at
Pasur in Erode Taluk."

- F. J. Richards, ICS, Salem, Madras district gazetteers, Vol.1, 1918

Website of Nagasamy, Director, TN Archeology dep.,
http://www.tamilartsacademy.com/journals/volume5/articles/article7.xml

Wikipedia:
http://en.wikipedia.org/wiki/Kongu_Vellalar#Honoured_SaivacharyasAccount 3:

"Konganattu Brahman", a separate and distinct community in kongu region was referred in the following document (Page 6).
Report on the various census of British India, Eyre and spottis woode printing, London , Page 6, Volume III, 1881

Account 4
The former Archeological Survey of Tamilnadu Director Thiru. Nagaswamy have referred about Kongu Shiva Brahmanars and their Gothrams in his website.

Account 5:

கொங்கு மண்டலத்தில் சோழன் ஸ்ரீகாழி பிராமணர்களை குடியேற்றும் முன்பே கொங்கு நாட்டில் குருத்வமும் உடைய பிராமணர்களும், ஸ்தானிகர்களும் இருந்தததாக கார்மேக கவிஞர் கொங்கு மண்டல சதகத்தில் கூறியுள்ளார்.
  "குலசேகரன் குலோத்துங்கன் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த்
   தலபூசை நன்குறத் தன்னாடு உலாரிற் சமர்த்தர் கண்டு
  நிலையான காணியும் மென்மையு மிய நிதானமுற்று
 வலவாதி சைவர்கள் வாழ்வதன்றோ கொங்கு மண்டலமே"

 ..  (க-ரை) குலசேகர சோழன், குலோத்துங்க சோழன் ஆகிய 
சக்கிரவர்த்திகள் கொங்கு நாட்டின் ஆதிக்கம் பெற்றுள்ள காலத்தில், 
அந்நாட்டிற் சிறந்த தலங்களில் ஆலய பூஜை ஆக மோக்தமாக 
நடத்தக் கருதித் தன்னாட்டுள்ள வல்லவர்களை அழைத்து காணி பூமியும் 
பெருமையும் கொடுக்கப் பெற்றவர்களான ஆதிசைவர்கள் விளங்குவது 
கொங்கு மண்டலம் என்பதாம்.

......கொங்கு மண்டலத்துள்ள மற்ற தலங்களிலும் நிறுவினான். சோழன் குடியேற்றிய சிவத்விஜர்களுக்கும் முன்னம் இங்கிருந்தவர்களுக்கும் சில சாம்பிரதாய பேதங்களிருக்கின்றன. அவர்கள் கிராமாந்தரங்களில் பூஜகர்
களாயும், நாட்டுக் குருத்வமுடையவர்களாயும் இருக்கிறார்கள். புதியவர்கள்
பாடல் பெற்ற தலங்கள், மற்றும் பிரதான ஆலயங்களில் அர்ச்சகர்களாயும்
ஆசாரியத்வமுடையர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

- கார்மேக கவிஞரின் கொங்கு மண்டல சதகம், 55 வது பாடலின் விளக்கவுரையில்

கொங்க பிராமணர்களுக்கும் சோழிய பிராமணர்களுக்கும் உள்ள வித்தியாசங்கள்.  கொங்க பிராமணர்கள்சோழிய பிராமணர்கள்
கொங்க தேசத்தில் தொன்றுதொட்டு பூர்வ குடிகளாக வாழ்ந்து வரும் பிராமணர்கள்சோழ தேசத்தை பூர்விகமாக கொண்டவர்கள்
கலியாண நிச்சயம் மணப்பெண்ணின் வீட்டில் நடைபெறும்..கலியாண நிச்சயம் மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும்...
திருமணம் பெண்வீட்டில்தான் நடைபெறும்....திருமணம் இரு வீட்டாருக்கும் பொதுவான இடத்தில் நடைபெறும்
பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு கொங்கு நாடு..  ஆனால், அதே சமயம், அதிக கட்டுப்பாடுகளும் இருக்கும்..அதிக முக்கியத்துவம் பெண்ணுக்கு தரப்படுவது இல்லை.  கட்டுப்பாடுகளும் கொஞ்சம் கம்மிதான்
கல்யாணம் செய்த பின், மனைவியோடு வந்தால்தான் தீட்சை  கிடைக்கும்கல்யாணத்துக்கு முன்னமே தீட்சை வாங்கலாம்
குழந்தை பெற்று சாந்தி ஆனால்தான் ஆச்சார்ய அபிஷேகம்..குழந்தை பெறுவதற்கு முன்பேவும் ஆச்சார்ய அபிஷேகம் செய்து கொள்ளலாம்
தாய்மாமா தான் பெண்ணுக்கு முதல் மாலை போடுவார்..இல்லை
இணைச்சீர் உண்டு..  கொங்கு நாட்டில் மட்டுமே உள்ள ஒரு வழக்கம்இல்லை....
மாப்பிள்ளையே மணப்பெண் கைப்பிடித்து கூட்டி வர வேண்டும்..நாத்தனார்தான் பெண்ணை கூட்டி வர வேண்டும்...
நிறைகுடம் கையில் வைத்து கொண்டுவரப்படும்..நிறைகுடம் தலைக்கு மேல் வைத்து கொண்டுவரப்படும்..
காமிக ஆகமம் காரண ஆகமம் 
சத்யோஜாத பத்ததி பல்வேறு பத்ததிகள் யஜுர்வேதம் - போதாயன சூத்திரம் - காமிக ஆகமம் -  ஸத்யோஜாத பத்ததி என்பதே நமது கோங்கதேசத்தின் முறை

போதாயன சிரார்த்த காண்டம்: https://www.himalayanacademy.com/view/kamika-agama_grantha
காமிக ஆகமம்: https://www.himalayanacademy.com/view/kamika-agama_grantha
சேர கொங்க தேசத்தின் சில குலகுருக்களுக்குச் சங்கராச்சாரியாரும் தென்னாட்டின் சங்கராச்சாரியாருமான 
ஸ்ரீ சிருங்கேரி பாரதி தீர்த்த ஸ்வாமிகள் அருளாசியுடன்
http://www.sringeri.net/

 கொங்கதேச சரித்திர கலாச்சார கேந்திரம், ஈரோடு.
Author's facebook profile

Wednesday, September 23, 2009

கொங்கு குலகுருக்கள் 1. பாசூர் மடம் - பூந்துறை நாட்டு கொங்கு வெள்ளாளர் குலகுரு

       
                ஸ்ரீ குருப்யோ நம:
                ஸ்ரீ குலகுருப்யோ நம:
               ஸ்ரீ பரமகுருப்யோ நம:
                 ஸ்ரீ பரமேஷ்டி குருப்யோ நம:
                ஸ்ரீ பராபர குருப்யோ நம:
                 ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் துணை
              ஸ்ரீ கவிராஜ குருப்யோ நம:
                                        
      பாசூர்  மடம்
 
பாசூர்மடம் தீக்ஷதர்கள் வரலாறு:
         கொங்கதேசம் மேல்கரை பூந்துறைநாட்டு காராள, காணியாள வெள்ளாளர்களுக்கும், கொங்க பனிரெண்டாம் நகரத்து செட்டிமார்களுக்கும் குலகுரு மடமாக பாசூர்மடம் ஆதிகாலம்தொட்டு விளங்கி வருகிறது. சேரதேசமாகிய கொங்கதேசத்தில் அனைத்து மடங்கள், ஆசாரியார்களுள் தொன்றுதொட்டு நிலவிவரும் விதியான ஸத்யோஜாத பத்தத்தி பாரம்பரியத்தின் ஆணிவேராகவும், அச்சாரமாகவும் விளங்கி வரும் மடம். ஆசார்யர்கள் அனைவரும் எந்த வேத பாடசாலையில் படித்திருப்பினும், இப்பத்தத்திப்படியே கர்மங்களை நிறைவேற்றி வருகின்றனர். இதன் தலைமை பீடம் பாசூர் ஸத்யோஜாத மடம். தீக்ஷதர்களே நமது சேர தேசத்தில் வைதீகத்தையும், பாசுபத மார்க்கத்தையும், போதாயன சூத்திரத்தையும்,  ஸத்யோஜாத பதத்தியையும் காத்து பாடசாலைகள் அமைத்து பிரதிஷ்டாசாரியர்களாக இருந்தவர்கள். ஸத்யோஜாதமே ஆதி முதல் நெறியாகும்.

ஆதியில் கோசலதேசத்தில் (கங்கைக்கும் சரயு நதிக்கும் இடைப்பட்ட பகுதி) சூரியவம்சத்து முதல் அரசரான இக்ஷ்வாகு முதலான அரசர்கள் ஆண்டுவந்தனர். பல தலைக்கட்டுகளுக்குப்பிறகு ஒரு சூரியவம்சத்து அரசி கங்கையில் நீராடுகையில் குழந்தை ஒன்று பிறந்தது. கங்கை அளித்த மகனாதலால் அவனை கங்கதத்தன் என்று வழங்கினர். இவனுக்கு மரபாளன் என்று பெயரும்சூட்டி போதாயனர் என்ற மகரிஷி சகலவிஷயங்களையும் பயிற்றுவித்தார். இம்மரபாளனது வம்சத்தவரே கங்காகுலம் என்று வழங்கப்படுகின்றனர். இவர்கள் அவந்திதேச அரசன் தொடர்ந்து தாக்கிய காரணத்தால் தெற்கே காஞ்சிநகரையும் அதனை சுற்றியிருந்த கானகங்களையும் நாடாக்கி சோழதேசத்தின் வடபகுதில் தென்பெண்ணையின் வடபகுதியில் வாழ்ந்துவருகையில், கரிகாலசோழனது இரண்டாவது மகனும், தாசி வயிற்றில் பிறந்தவனுமான ஆதொண்டன் என்பவனுக்கு இப்பகுதியினை தொண்டமண்டலம் என்று பெயர்சூட்டி பட்டம் கட்டினார் சோழன். முறைதவறி பிறந்த அவன், கொங்கர் வீட்டில் பெண் கேட்க, கொங்கர் வடதிசை நோக்கி இடம்பெயர்ந்தனர். அப்பொழுது வெள்ளாளர்களது அரசரான சேரமான் அவர்களைத் தடுத்து, வனப்பிரதேசமான தனது தேசத்துக்கு வரவழைக்கிறார்.  கொங்கு காணிப்பட்டயம் என்னும் புராதன பட்டயம் கொங்கதேசத்தின் பூர்வகுடிமக்களான நற்குடி  48000 வெள்ளாளர்களும், பசுங்குடி 12000 செட்டிமார்களும் காஞ்சியிலிருந்து இங்கு குடியேறி தமக்கான தேசமாக சேரதேசம் எனும் கொங்கதேசத்தினை அமைத்துக்கொள்கையில் தத்தம் குலகுருக்களுடன் குடியேறினார்கள் என்கிறது.  இக்கொங்கருள் பூந்துறைநாட்டில் காணி அமைத்துக்கொண்டவர்களுக்கும், பனிரெண்டாம் நகரத்து செட்டிமார்களுக்கும் குருவாக இருப்பவர்கள் திருவானைக்காவல் கோயில் தர்மகர்த்தாக்களாக விளங்கும் தீக்ஷதர் வம்சத்தினர்.

சிவபெருமானது ஐந்து முகங்களும், ஐந்து தமிழ் நாடுகளின் பத்தத்தி, குலகுரு மடங்களும்:
1)ஸத்யோஜாதம் - பாசூர் - சேர தேசம் (கொங்க நாடு)
2)வாமதேவம் - கூனம்பட்டி - மகதை மண்டலம் ( நடு நாடு)
3)அகோரம்- நெருஞ்சிப்பேட்டை  திருவாலங்காடு மடம் - திரவிடதேசம் (தொண்டை நாடு) 
4)தத்புருஷம் - பழனி தத்புருஷமடம்  - சோழ தேசம் (சோழிய நாடு)

5)ஈசானம் - விராச்சிலை கலா மடம் - பாண்டிய தேசம் (பாண்டி நாடு)

சிஷ்யர்கள் அளித்துள்ள செப்பேடுகள்:
           விஜயநகர காலத்தில் அனைத்து விஷயங்களும் ஆவணமாக்கப்பட்ட காலத்தில், மேல்கரை பூந்துறைநாட்டு சபையோர் பூந்துறை புஷ்பவனேச்வரர் கோயிலில் வைத்து சிஷ்ய கொங்க வெள்ளாளர்கள் தாமிர சாசனம் எழுதி அளித்தனர்.
                                  பாசூர் குருசுவாமியார் செப்பேடு – 1


(கொங்கதேசம் மேல்கரை பூந்துறைநாடு நாட்டார், காணியாள கொங்க வெள்ளாளர் செப்பேடு)
    ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1258 கல்லியப்தம் 4477 யிதுமேல் செல்லாநின்ற தாது வருசம் தை மாதம் சுக்கில பச்சமும் வெள்ளிக்கிளமையும் பஞ்சமியும் மிருகசீருஷ நட்சத்திறமும் பாலவாகறணமும் பெத்த சுபதினத்தில் ஸ்ரீமது ராஜாதிராஜ ராசாபரமேசுவரன் ராசகெம்பீறன் ஆணைகுந்தி சமஸ்தானத்தில் புக்கறாயறவர்கள் றத்தின சிம்மாசனருடராய் பிறிதிவி சாம்பிறாச்சியம் அருளாநின்ற காலத்தில் சீரங்கப் பட்டிணத்தில் கண்டீரவ நரசறாயர் துரத்தினத்தில் மதுறையரச னாளையில் மேல்கரைப் பூந்துறை நாட்டுக்குச் சேந்த பேரோட்டுக்குப் பிறதிநாமதேயமான விருப்பாட்சிபுரத்திலே யிருக்கும் ஞானசிவாச்சாரியார் இம்முடி அகிலாண்ட தீக்ஷதர் சுவாமியாற் பாதம் மறவாதவறான

மேல்கரைப் பூந்துறை நாட்டிற் காடை கோத்திரம், வெள்ளோடு சாத்த்தந்தை கோத்திரம், பயறன் கோத்திரம், நசையநூறு கண்ணன் கோத்திரம், செம்பன் கோத்திரம், பூச்சந்தை கோத்திரம், கூறை கோத்திரம், கீறை கோத்திரம், பாண்டியன் கோத்திரம், யீஞ்சன் கோத்திரம், யெழுமாத்தூறு ஊராட்சிக்கோட்டை பனங்காடை கோத்திரம், செல்லன் கோத்திரம், காறி கோத்திரம், அனுமன்பள்ளி செல்லன் கோத்திரம், அனுமன்பள்ளீ கூடலூரு பண்ண கோத்திரம், யீங்கூறு ஈஞ்ச கோத்திரம், தோடை கோத்திரம், முருங்கத்தொழுவு பெரிய கோய்த்திரம், திருவாச்சி ஓதாளன் கோத்திரம், அந்துவன் கோத்திரம், ஆந்தை கோத்திரம், பெருந்துறை சாகாடை கோத்திரம், கனகபுரம் எலவமூலை சாத்தந்தை கோத்திரம், காளமங்கலம் கண்ணன் கோத்திரம், ஊத்துக்குளி வண்ணக்கன் கோத்திரம், சத்தியமங்கலம் பில்லன் கோத்திரம், செம்பன் கோத்திரம், மொடக்குறிச்சி தூறன் கோத்திரம், காறி கோத்திரம், கிளாம்பாடி கண்ண கோத்திரம், பிடாறியூறு பெறழந்தை கோத்திரம், கூற கோத்திரம், கண்ண கோத்திரம், கொல்லன்கோயில் பேரோடு வெண்டுவன், பண்ண கோத்திரம், கொடுமணல் பனங்காடை கோத்திரம், பாண்டியன், சேரன் கோத்திரம், மேல்கரை பூந்துறை நாட்டாரும், கிராமத்தாரும் கூடி எழுதிக்கொடுத்த தலைக்கட்டுக்குத் தாம்பற சாதனம்.

சாசனமாவது குருசுவாமியார் பாதத்துக்கு உடல் உயிறு பொருள் மூன்றும் குரு பாதத்துக்கு தெத்தம்பண்ணி எழுதிக்கொடுத்த தாம்பிற சாசனப் பட்டயம். நாங்கள் யெந்த நாட்டிலே யெந்த ஊருலே யிருந்தாலும் யெங்கள் கோத்திறத்தாள் தலைக்கட்டு ஒன்றுக்கு னாகறம் பணம் அஞ்சு வருஷம் பிறதி குடுத்து சஞ்சாரம் வந்தபொழுது சஞ்சாரக் காணிக்கைகளையும் அப்பணைப் படிக்கி ஒபதேசம் பாதபூஜை முதலானதும் பண்ணிக்கொண்டு யெங்கள் வமுசத்தாறு புத்திரபவுத்திர பாறம்பரியமாயி பாத சன்னிதானத்தில் தீட்சை மகாமந்திரம் ஒபதேசம் பண்ணிக்கொண்டு சுவாமியார் தெண்டினை கண்டினை ஆணை ஆக்கினை அபறாதத்துக்குள்பட்டு நடந்துகொள்வோமாகவும். அபுத்திறிகம் சொத்து மடத்துக்கு சேத்தி குடுப்போமாகவும். யெங்கள் கொத்திரத்தார் யெந்த நாட்டிலே ஊரிலே காணிவாங்கி அதிகாரம் பண்ணீனாலும் குடித்தனம் பண்ணினாலும் சுவாமியார் பாதத்துக்கு நடந்துகொண்டு வருவோமாகவும். யிப்படிக்கு நடந்துவரும் காலத்தில் யிதுக்கு விகாதம் சொல்லாமல் பரிபாலனமாயி யெங்கள் வமுசத்தார் பயபக்தியாயி நடத்தி வந்தவன் சுகமாய் தனசம்பத்தும் தான்னிய சம்பத்தும் புத்திரசம்பத்தும் அஷ்டைசுவரியமும் ஆயுளாரோக்கியமும் தேவப்பிறசாதமும் குருப்பிரசாதமும் மென்மேலும் உண்டாகி கல்லும் காவேரிப் பில்லும் பூமி சந்திராதித்தியாள் வரைக்கும் அகிலாண்ட ஈசுவரர் கடாக்ஷத்தினாலே சுகமாயிருப்பார்கள். இந்தக் சாசனம் படித்துப் பார்த்தவர்களும், செவியில் கேட்ட பேரும் சுகமாயிருப்பார்கள். யிதுக்கு விகாதம் சொல்ல குருநிந்தனை சொன்னவர் கெங்கை கரையிலே காறாம்பசுவையும் பிராமணாள்களையும் மாதாபிதாவையும் கொண்ற தோஷத்திலே போவாறாகவும். யிந்தப்படிக்கி யெங்கள் வமுசத்தாறனைவரும் சம்மதிச்சு பூந்துறை புஷ்பவனீசுவரர் சுவாமி பாகம் பிரியாள் சன்னிதானத்திலே சகிறண்ணியோதக தானமாயி எழுதிக்கொடுத்த தலைக்கட்டு தாம்பற சாசனம். பாகம்பிறியாள் சமேத புஷ்பவனீசுவர சுவாமி சகாயம். பாடகவல்லி சமேத சறுவலிங்கமூர்த்தி சகாயம். மரகதவல்லி சமேத மூவேந்திர சுவாமி சகாயம். தானபால யோர்மத்யே தானாத் ஸ்ரேயோனு பாலனம் தானாத் ஸ்வர்க்க மவாப்னோதி பாலனாத் அச்சுதம் பதம்.

பூந்துறை சின்னத்தம்பிக்கவுண்டன், நல்லதம்பிக்கவுண்டன், பெரியதம்பிக்கவுண்டன் சாச்சி. வாறணவாசிக்கவுண்டன், சின்னவிநாயககவுண்டன், வெள்ளோடு விசுவறாயக்கவுண்டன், கருப்பறாயக்கவுண்டன், பழனிக்கவுண்டன், சென்னிமலைக்கவுண்டன், நசியனூறு பெரிய செங்கோட நல்லதம்பிக்கவுண்டன், கொழந்த மன்னாடிக்கவுண்டன் வெள்ளப்பொறப்பன கவுண்டன், மூத்த மன்னாடிக்கவுண்டன், காசிகவுண்டன், ஆவுடையாக்கவுண்டன், கொழந்தவேல் கவுண்டன், குப்பக்கவுண்டன், முத்துக்கவுண்டன், பழனிக்கவுண்டன், மோளக்கவுண்டன், மருதமலைக்கவுண்டன், பச்சியாக்கவுண்டன், அத்தப்பகவுண்டன், குப்பகவுண்டன், நல்லப்பகவுண்டன், எழுமாத்தூரு கோமறசின்னயகவுண்டன், நல்லயகவுண்டன், அவினாசிக்கவுண்டன், முத்துராமகவுண்டன், கெங்காளிக்கவுண்டன், பொங்காளிக்கவுண்டன், காளியப்ப கவுண்டன், குப்பகவுண்டன், ஊராட்சிக்கோட்டை அருத்தனாரிக்கவுண்டன், பழனிக்கவுண்டன்.
அனுவன்பள்ளி முத்துநல்லய்யன், பெரியமுத்துக்கவுண்டன், முத்துப்பெரியண பழனிக்கவுண்டன், சின்னாயிகவுண்டன், பழனிமலைக்கவுண்டன், காசிக்கவுண்டன், பெரிய ராக்கியாக்கவுண்டன், சின்னத்தம்பிக்கவுண்டன், யீங்கூறு கருமகவுண்டன், பழனிக்கவுண்டன், சென்னிமலைக்கவுண்டன், மருதமலைக்கவுண்டன், முருங்கத்தொழுவு கண்ணுடையாக்கவுண்டன், பெரியசெல்லப்பகவுண்டன், சொக்கநாதகவுண்டன், முத்தப்பகவுண்டன், றாக்கியாக்கவுண்டன், தப்புறாக்கவுண்டன், ராமன்னகவுண்டன், திருவாச்சிபெரியாபொங்காக்கவுண்டன், பெரியகாலியப்பகவுண்டன், பொன்னேகவுண்டன், கருமாண்டகவுண்டன், சோளியப்ப கவுண்டன், ஞானராசாக்கவுண்டன், பெருந்துறை செல்லப்பகவுண்டன், நல்லேகவுண்டன், பழனிக்கவுண்டன், கருப்பகவுண்டன், யெலவமூலை பெரியசின்னயகவுண்டன், சின்னயகவுண்டன், காலிங்கராயக்கவுண்டன், வீரமலைக்கவுண்டன், பழனிக்கவுண்டன்,

காளமங்கலம் சின்னாயிக்கவுண்டன், பெரியண்ணகவுண்டன், நல்லப்பகவுண்தன், குட்டியண்ணக்கவுண்டன், ராசாக்கவுண்டன், முத்துக்கவுண்டன், வெள்ளக்கவுண்டன், கருப்பகவுண்டன், கொழந்தவேல்கவுண்டன், வெத்திவேல்கவுண்டன், பெரியசெல்லப்பகவுண்டன், ஊத்துக்குளி முத்துவேலாயுதகவுண்டன், பெரிய வேலன்ன குட்டியாக்கவுண்டன், குப்பகவுண்டன், பழனிக்கவுண்டன், சத்தியமங்கலம் செல்லப்பகவுண்டன், கொழந்தவேல் கவுண்டன், வெத்திவேல்கவுண்டன், பெரியசெல்லப்பகவுண்டன், மொடக்குறிச்சி கருமாண்டக் கவுண்டன், சின்னமுத்துக்கவுண்டன், பெரியவடமகவுண்டன், கொமறண்ணகவுண்டன், கிளாம்பாடி பாம்பகவுண்டன், கொமரசாமிசின்னாக்கவுண்டன், பெரியசெங்கோடகவுண்டன், சின்னபழனிவேல் கவுண்டன், குப்புச்சிகவுண்டன், முத்துக்கவுண்டன், கொமரவேல் கவுண்டன், வெத்திவேல்கவுண்டன்.
கொளாநல்லி பெரியகொமாரக்கவுண்டன், சின்னப்பொங்காளிக்கவுண்டன், குப்பகவுண்டன், பெரியகுமாறகவுண்டன், முத்துரங்கவுண்டன், திருமலைராயக்கவுண்டன், குப்பணகவுண்தன், வெள்ளைக்கவுண்டன், பெடாரியூர் பெரியதம்பிக்கவுண்டன், சென்னிமலைக்கவுண்டன், குப்பணகவுண்டன், கொல்லங்கோவில் பேரோடு கொமாறநல்லயகவுண்டன், கொமறசின்னயகவுண்டன், முத்துக்கருமணகவுண்டன், முத்துராக்கியாக்கவுண்டன், பெரியசெங்கோடகவுண்டன், சீரங்கராயகவுண்டன், கொடுமணல் பெரியசிவமலைக்கவுண்டன், குட்டியணகவுண்டன், சின்னய கவுண்டன், பொன்னயன், காகம்திருமலைக்கவுண்டன் , பழனிக்கவுண்டன், வேலப்பகவுன்டன் இந்தப்படி சகலசனங்கள் கையிநாட்டு.பாசூர் மடம்

ஸ்ரீமத் வேதமார்க பிரதிஷ்டாபணாச்சார்ய ஸத்யோஜாத ஞான சிவ ஆச்சார்ய

 தற்போதைய குலகுரு
ஸ்ரீ சாம்பசிவ தீக்ஷதர்
குருபாதம்

இளவரசு விசுவநாத தீக்ஷதர் 

பாசூர்  மடம்
பல்லக்குகள்
கைலாசவாசி ஸ்ரீமத் சாம்பசிவ தீக்ஷதர் ஆத்மார்த்த பூஜையுடன்

      

  

கைலாசவாசி பெரியமடம் ஸ்ரீ வெங்கடேச தீக்ஷதர் அய்யா 


பிரம்ம தண்டம்

பாதுகைகள்கொங்க செட்டிமார்களான பனிரெண்டாம் நகரத்து செட்டிமார்களும் மைசூர் காலத்தில் தங்களது தெய்வமான அய்யர்மலை ரத்னாசலேச்வரர் கோயிலில் வைத்து தாமிர சாசனம் எழுதித் தந்தனர்.
பாசூர் குருசுவாமியார் செப்பேடு – 2
்                          (கொங்க பனிரெண்டு நகரத்து செட்டிகள் செப்பேடு)

காலம்: மைசூர்
வருடம்: 1501

ஸ்வஸ்திஸ்ரீ ஸாலிவாஹந ஸஹாப்தம் 1424 கலியப்தம் 4603 யிதுமேல் செல்லாநின்ற பிங்கள வருஷ உத்தரா(ய)னமும் சிம்ம மாஸமும் ஸுக்ல பக்ஷமும் திரிதியையும் குரு வாரமும் ரேவதி நக்ஷத்திரமும் ஸுபநாம யோகமும் பாலவாகறணமும் பெத்த ஸுபதிநத்தில் ஸ்ரீமது ராஜாதிராஜ ராஜபரமேஸ்வர ராஜமார்த்தாண்ட ராஜௌத்தண்ட ராஜதேவண்ட ராஜபிரதாப வீரபிரதாப நரபதி மயிசூரு கிருஷ்ணராஜ உடையாறவர்கள் ஸ் ரீரத்ந ஸிம்மாசநரூடராய் பிருத்வி ஸாம்ராஜ்யம் அருளாநின்ற காலத்தில் மயிசூருக்குச் சேந்த கொங்கு தேசம் மேல்கரை பூந்துறை னாட்டுக்கு குரு சுவாமியாறாகிய மொகனூருலேயிருக்கும் ஸத்யோஜாத ஞான சிவாசாரியாற் குருசுவாமியாற் சன்னிதானத்துக்கு ரத்னாசலேஸ்வர ஸ்வாமி யனுதினமும் மறவாதவறான விபூதி றுத்திராட்சத்துக்கு உள்ப்பட்டவறான பனிறெண்டு நகரத்து  செட்டிகள் மோகனூரு கறூரு பஞ்சமாதேவி நெறூரு கோயம்பள்ளி மயில்ரெங்கம் முதல் பனிறெண்டு நகறத்து செட்டிமாறுகளும் கூடி சன்னிதானத்துலே யெங்களுக்கு சகல சாம்ராஜ்யம் வாள்வாகும்படிக்கி சன்னிதானத்திலே மகா மந்திர உபதேசம் ஆகவேணுமென்று னாங்கள் அரிக்கை பண்ணிக்கொண்டு யெங்கள் குரு யாத்திரை போயி பெகுனாள் ஆச்சுது யெங்களுக்கு நல்ல மாற்கம் யில்லாமல் யிறுக்குது யென்று னாங்கள் சன்னிதானத்திலே அரிக்கை பண்ணிக்கொண்டதுக்கு சன்னிதானத்திலே அப்பணையானது பின்னாலே எங்கள் குரு வந்தால் போகவேண்டியிருக்கும் எங்கள் வகைறா செனங்களெல்லாம் கூடி யோசிச்சு நமக்கு சாசனம் எழுதி தெத்தம் பண்ணினால் னம் அனுகிறகம்ப் பண்ணுகுறதாயி அப்பணையானபடிக்கி னாங்கள் யிப்போ கூடின செனங்கள் றொம்ப ஆனதால் பின்னும் யிறுக்கும் செனங்கள் வேணுமென்று வந்தால் அப்பணைப் படிக்கி நடக்குறார்கள் யிப்போ கூடிய செனங்கள் அப்பணைப்படிக்கி நடக்குறோமென்று அரிக்கைபண்ணிக் கேட்டுக்கொண்டு எழுதிக்குடுத்த தலைக்கட்டு தாம்பற சாசனம் சாசனமாவது குருசுவாமியாற் பாதத்துக்கு ஒடல் உயிர் பொருள் மூன்றும் தெத்தம்பண்ணி எழுதிக் குடுத்த சாசனம் நாங்கள் யெந்த தேசம் யெந்த னாட்டுலே யெந்த பேட்டையிலே யிருந்தாலும் யெங்கள் வமுசத்தாற் தலைக்கட்டு ஒன்னுக்கு னாகறம் பணம் னாலு வருஷம் பிறதி குடுத்து சஞ்சாறம் வந்தபோது சஞ்சாறக் காணிக்கை வகுப்புக்காறன் வாடகை பொதிக்கறான் தினுசு பாத்து பயபக்தி சஞ்சாறக் காணிக்கையும் குடுத்து வறுவோமாகவும் அப்பணைப்படிக்கி உபதேசம் பாதபூசை முதலானதும் பண்ணிக்கொண்டு சுவாமியாரிட தெண்டனை கண்டனை ஆக்கிணை அபறாதத்துக்கு உள்பட்டு நடந்துக்கொள்ளுமாகவும் அபுத்திறாத சொத்து மடத்துக்கு சேத்திக்குடுப்போமாகவும் யிப்படிக்கி நடந்துவறுங் காலத்தில் யிதுக்கு விகாதம் சொல்லாமல் பரிபாலனமாயி யெங்கள் வமுசத்தாற் பயபக்தியாயி நடத்தி வைத்தவன் சுகமாயி தனசம்பத்தும் தான்னிய சம்பத்தும் புத்திற சம்பத்தும் அஷ்ட ஐசுவரியமும் ஆயுறாறோக்கியமும் தேவ பிறசாதமும் குருபிறசாதமும் நவறத்தின வியாபாரமும் மேன்மேலுமுண்டாயி கல்லும் காவேரி புல்லு பூமி சந்திறாதித்தியாள் உள்ளவறைக்கும் ரத்நாசலபதி கடாக்ஷத்துனாலே சுகமாயிறுப்பாற்கள் யிந்த சாசனம் பாத்து படித்தவற்களும் செவியில் கேட்டபேரும் சுகமாயி யிறுப்பாற்கள் யிதுக்கு விகாதம் சொல்லி குருநிந்தனை சொன்னவன் கெங்கக் கறயிலே காறாம் பசுவையும் பிறாமணாளையும் மாதா பிதாவையும் கொண்ட தோஷத்துலே போவாறாகவும் யிந்தப்படிக்கி யெங்கள் கூடிய வமுசத்தாற் அவைறும் சம்மதிச்சு ஸஹிரண்யோதக தாராபூறுவமாயி மதுகரவேணி ரத்நாசலேஸ்வர ஸ்வாமி (ச)ன்னிதானத்திலே எழுதிக் குடுத்த தலைக்கட்டு தாம்பற சாசனம் மதுகரவேணி ஸமேத ரத்னாசலேஸ்வர ஸ்வாமி ஸஹாயம் உமா (ஆரா?) மகேஸ்வரி சமேத ரத்னாசலேஸ்வர ஸ்வாமி ஸஹாயம் மீநாக்ஷி ஸமேத ஸுந்தரேஸ்வர ஸ்வாமி ஸஹாயம் அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புநாத ஸ்வாமி ஸஹாயம் வள்ளி தேவாயானை சமேத சுப்ரமண்யசுவாமி ஸஹாயம் தாந பலந யோர் மத்யே தாநாத் ஸ்ரேயோநு பாலநம் தாநாத் ஸ்வர்க்கமவாப்நோதி பாலநாத் அச்சுதம் பதம்: ஸ்வதத்தாத்வி குணம் புண்யம் பரதத்தாறு பாலனம் பரதத்தாப ஹாரேண ஸ்வதத்தம் நிஷ்பலம் பவேது: சுப்பராய செட்டி வைத்தியனாதா செட்டி பெரிய றத்தினம் செட்டி சின்னச் செலம்ப செட்டி முத்து வீறம செட்டி முத்திருளஞ் செட்டி பெரிய செலம்பஞ் செட்டி சந்திற சேகரஞ் செட்டி செதம்பறஞ் செட்டி வைறம செட்டி கொழந்த செட்டி சாமிசெட்டி றத்தினஞ்செட்டி மோழ செட்டி தோறபஞ் செட்டி மாணிக்கஞ் செட்டி லிங்க செட்டி யிவற்கள் சம்மதியி சாசனம் எழுதின கரூரு அருணாசலாசாரி மகன் னாகாசாரி கய்யெழுத்து அடிச்சது உ

பாசூர் வரலாற்றில் கவி காளமேகம் (முத்துசாமிக் கோனாரது "கொங்குநாடு" புத்தகத்திலிருந்து):

தீக்ஷதர்கள் பூர்வ வரலாறு:
காலம்
சிஷ்யர்கள்
குரு
இதிஹாஸகாலம்
கோசலதேசம் 
புராணகாலம்் 
1. காஞ்சி      
காஞ்சி


2. காஞ்சி (சோழன்)
திருவானைக்காவல்

சங்கம், பிற்காலம்
கொங்கதேசம் – பூந்துறைநாடு
நசியனூர் (பேரோடு)
விஜயநகரம், மைசூர் 
கொங்கதேசம் - பூந்துறைநாடு
பாசூர்
வெள்ளையர்
கொங்கதேசம் – பூந்துறைநாடு
பாசூர் - திருவானைக்காவல்

புராணகாலம்:
திருவானைக்காவல் தீக்ஷதர்கள் வரலாறு (சமஸ்கிருத புராணத்திலிருந்து கும்பகோணம் சங்கரமடம் ஆஸ்தான வித்வான் ப. பஞ்சாபகேச ஸ்வாமிகளால் தமிழ் வசனரூபமாக மொழி பெயர்க்கப்பட்டது):
சோணாஷன் என்கிற சோளராஜாவால் சிவபூஜைக்காக ஏற்பதுத்தப்பட்டிருந்த பண்டிதர்கள் காவேரியின் பிரவாகத்தில் சம்புவால் முழுகும்படிசெய்யப்பட்டவர்கள் என்று இந்த அத்தியாயத்தில் கூறப்படுகின்றது.
          ஸுதர்: "ஹே மஹரிஷிகளே சிவாச்சார்ய ஜனங்களுடைய நிலைமையை கூறுகின்றேன் கேளுங்கள்" என்று சொல்லத்தொடங்கினார். சோணாஷ்னென்கிற சோளபூபதியால் கேதாரம் காசீ காஞ்சீ முதலானவிடங்களிலிருந்து அறுபது சிவாச்சார்ய பண்டிதர்கள் அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள். அவர்கள் வேதம் ஆகமம் புராணம் முதலியவைகளால் பண்டிதர்களாயும் சிவபூஜ செய்யும் விஸயத்தில் சிறந்த ஸாமர்த்தியம் பொருந்தியவர்களாயுமிருந்தார்கள். அவர்கள் வந்தவுடன் சோளன் அவர்களுக்கு பசு தனம் வஸ்திரம் முதலானவைகளைக்கொடுத்து நமஸ்கரித்துப்பின்வருமாறு பிரார்த்திக்கிறான் ஹேபிராமணர்களே! நீங்கள் என் வசனத்தை அங்கீகரித்து ஸ்ரீஜம்புகேசுவரரான தேவரையும் அகிலாண்டேசுவரீ என்கிற பார்வதியையும் விதிப்படி பூஜைசெய்யுங்கள். ஆறுகாலம் நடக்கவேண்டும். பிரதோஷ ஸோமவாரம் இந்தப்புண்யதினங்களில் உத்ஸவம் செய்யவேண்டும். மேலும் சிவராத்திரி ஸங்கிராந்தி அயனம் இந்தகாலங்களில் சந்திரசேகரரையும் கௌரீதேவதியையும் விஷேஷமாகப் பூஜிக்கவேண்டும் என்றுசொல்லி அவர்களுக்கு வீடு பூமி தனம் தான்யம் முதலானவைகளைக்கொடுத்து வேண்டிய சௌகரியங்களையும் செய்துவைத்தான். அவர்களும் அரசனால் கொடுக்கப்பட்டவைகளைப் பெற்றுக்கொண்டு ஸகல ஆகமங்களிலும் அதிகமான பாண்டித்தியம் இருந்தபடியால் பண்டிதர்கள் என்று பெயரையுமடைந்தனர். இவ்விதம் சோணாஷனால் ஸ்தபிக்கப்பட்ட அறுபது பண்டிதர்களும் ஜம்புகேசுவரருடைய பூஜையையும் அகிலாண்டேசுவரியின் புஜையையும் மற்றுமுள்ள தேவதைகளையும் நன்கு ஆராதனம் செய்துவந்தார்கள். அவர்கள் சாஸ்திரங்களையறிந்தவர்களும் தர்மத்தில் அபிமானமுள்ளவர்களாயுமிருந்தபடியால் ருதுக்கள் அயனங்கள் மாஸங்கள் மற்றுமுள்ள விசேஷபுண்யகாலங்கள் இவைகளில் தவறாமல் எப்பொழுதும் பக்தியுடன் பூஜித்துவந்தார்கள். இவ்விதம் நடந்துவரும் ஸமயத்தில் ஒருநாள் இவ்விடத்தில் பூஜைக்காக ஒருபாலனையும் ஸ்திரீகளையும் வைத்துவிட்டுபாக்கியுள்ள புருஷர்கள் எல்லோரும் பிக்ஷாடநேசர் கும்பாபிஷேகத்திற்காகச் செல்லும்பொழுது உத்திரகாவேரியில் பிரவாஹம் அதிகமாயிருந்தபடியால் ஓடத்தில்போனார்கள். போகும் பொழுது பிரவாஹம் அதிகமாயிருந்தபடியால் ஓடத்தில்போனார்கள். போகும் பொழுது பிரவாஹத்தினுடைய வேகத்தால் அலைகளாகிற கைகளால் அடிக்கப்பட்டு அந்த ஓடம் கவிழ்ந்தது.உடனே அதிலிருந்த பண்டிதர்கள் யாவரும் பிரவாஹத்திற்கு இரையாய்விட்டார்கள். இந்தப்பிரகாரம் ஜம்புநாதர் அவர்களை நதியில்விட்டு பக்கியிருக்கும் அந்த பாலகனைப்பார்த்துவிட்டு அனுக்கிரகம்செய்து அவனைச்சிறந்த பண்டிதனாகச் செய்தார். அந்த வம்சத்திலுண்டானவர்கள் தான் மஹேசுவரரைப் பூஜிக்கிறார்கள். பிராணிகளுக்கு ஏற்பட்ட சம்சாரபந்தத்தை நிவர்த்திசெய்கிறவராயும் வியாபகராயும் ஜம்புவென்ற புண்ய விருக்ஷத்தின் மூலத்திலிருக்கும் தன் கர்ப்பகிருகத்தில் வஸிப்பவரும் மிருடானீபதியாயுமிருக்கும் எந்த தேவர் சோளமன்னனைத்தவிர பக்கியுள்ளவர்களை தன்னுடைய திருஷ்டியின் அனுக்கிரகவிசேஷத்தால் எப்பொழுதும் விலங்கும் பரிசுத்தமான கணங்களாகச்செய்தாரோ அவ்வித சக்திபொருந்திய மூவுலகங்களையும் பாதுகாப்பதில் தீக்ஷை பூண்டிருக்கும் ஜம்புநாதர் நம்மை ரக்ஷிக்கட்டும். இவர் ஸகல வேதங்களையுடைய அந்தமான உபநிததங்களில் பிரியமுள்ளவரோ எவர் சந்திரகலையை தரிக்கிறாரோ எந்த தேவியானவள் அகிலாண்டகோடிகளையும் ஸிருஷ்டிப்பதில் அதிகமான சக்தி பொருந்தியவளோ இவ்விருவர்களுடைய பாதாரவிந்தங்களைப் பூஜைசெய்கிறவர்கள் தனம் தான்யம் கிருகம் இவைகளுடன் கூடினவர்களாயிருக்கிறார்களோ அந்த ஜம்புநாதர் அவர் பத்நீ இவர்களுடைய விஸ்தாரமான மஹிமையின் லேசமானது நமக்கு புத்திராமித்திர களத்ரபாசு முதலான ஐசுவர்யங்களைக்கொடுத்து அனுக்கிரகிக்கட்டும்".
ஏகவீராம்பாள் மடம்: 
          இங்ஙனம் கோச்செங்கட்சோழனால் திருவானைக்காவல் கோயில் தர்மகர்த்தாக்களாக அமர்த்தப்பட்ட மிகத்தொன்மையான  கௌண்டின்ய  கோத்திரத்து (சங்க இலக்கியத்து  கவுணிய கோத்திரத்துப் புலவர , ஞானசம்பந்தர் போன்றோர்)   தீக்ஷதர்கள், வைதீக பாசுபத மடமான ஏக வீராம்பாள் மடத்தை திருவானைக்காவல் கிழக்கு வாசல் அருகே நிறுவி கோயிலை நிர்வகித்து வந்தனர். பாசுபதம் என்பது மிகத்தொன்மையான அற்புதமான ஒரு வழியாகும். கொங்கதேசத்தின் தலைநகரான கருவூர் ஈசனின் பெயரும் பசுபதீஸ்வரர் என்பதன் மூலம் கொங்கதேசத்தில் பாசுபதம் வலுவாக இருந்ததை அறியலாம். கொங்கர் பசுக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர் என்பது சங்கம் முதல் இன்று  வரை கிடைக்கும் வரலாற்று செய்தி. சரஸ்வதி - சிந்து நதிக்கரை நாகரீகத்திலேயே இருந்ததற்கான ஆதாரங்கள் பரக்க கிடைக்கின்றன. நான்கு  வெவ்வேறு பாசுபதர்களின் முத்திரைகள் கிடைத்துள்ளன. 


http://www.newworldencyclopedia.org/entry/Pasupata

உலகம் முழுவதும் இவ்வழிபாடே பரவி இருந்தமைக்கான சான்று:
http://www.mythicfolk.com/?p=492

பாசுபதர்கள், சிரம் முதல் கால்வரை  விபூதியை  உடல் முழுதும் இட்டு, கௌபீணம்  மட்டும் அணிந்து, ஒருவேளை மட்டும் உண்டு , பசுக்களை ஆயனாக (பதியாக) இருந்து பராமரிப்பவர்கள். 

திருவானைக்காவல் ஈசன் சந்நிதி முன் "செட்டியார்" என்றழைக்கப்படும் சிற்பம் கைகூப்பி, பாசுபதக்கோலத்தில் உள்ளது உண்மையில் நமது மட பூர்வரான சதாசிவ தீக்ஷதர் என்று கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். இவரே இக்கோயிலை விஸ்தாரப்படுத்தி, யாத்திரீகர்களுக்கு இன்றைய தர்மஸ்தலா போன்று வழியில் திருச்சிக்கு முன்  நித்ய அன்னசத்திரம் ஏற்படுத்தி நிர்வகித்து வந்தார். இன்றும் அப்பகுதி சத்திரம் என்றும், அவ்விடம் சத்திரம் பஸ் ஸ்டான்ட் என்றும் உள்ளது.


சதாசிவ தீக்ஷதர்  


சதாசிவதீக்ஷதர் பற்றி மேலும்:

நாகசாமி (தொல்லியல் துறை):
(ஆயினும் சதாசிவ பிரம்மேந்திரர் வேறு)


திருவானைக்காவல் கோயில் தீக்ஷதர்கள் உரிமை கல்வெட்டு 

இன்றோ  இம்மடத்து நிலங்கள் விஷமிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, ஏக வீராம்பாள் மடாலயமே இடிக்கப்பட்டு, சுவாமிகள் மாற்றப்பட்டிருந்தாலும், அக்கோயிலில் உள்ள ஒரு தூண் சாசனம், மட வரலாற்றை தெளிவுற விவரிக்கிறது.


மேலும் நேர் எதிரில் மட கருப்பு தெய்வமான சங்கிலி கருப்பணன் கோயிலும் உள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு அன்றாடம் அன்னசத்திரம் போன இடமே தெரியவில்லை.

கூழங்கை சக்கிரவர்த்திகள் அழைப்பில் இலங்கைக்கு இம்மரபில் வந்த சந்திரசேகர தீக்ஷதர் குமாரர் ராமலிங்க தீக்ஷதர் குலகுருவாக சென்றதை அறிகிறோம். அவரால் உண்டானதுதான் யாழ்பாண பஞ்சாங்கம். இதன்மூலமும், சிருங்கேரி சங்கர மடமே கதிர்காமம் முதலான கோயில்களுக்கு துருஸ்து செய்வதாலும், இலங்கை தமிழர்கள் பாரம்பரியமாக ஸ்மார்த்த பாசுபத சைவர்கள் என்பதனை அறிகிறோம்.
கூழங்கை சக்கிரவர்த்திகள் மரபு
http://www.friendstamilchat.com/forum/index.php?topic=5343.5;wap2
http://www.yarlmann.lk/viewsingle.php?id=949
http://en.wikipedia.org/wiki/Aryacakravarti_dynasty

கவிராஜ குருபரம்பரை:
இவ்வாறு பல பரம்பரைகளாக பூஜை செய்துவரும்பொழுது ஒருசமயம் இமாச்சலத்திலிருந்து (நேபாளம்) ஸ்ரீ கவிராஜகுரு என்ற யதி ஒருவர் ராமேசுவர யாத்திரையாக நடந்து வந்தவர், வடக்கு வாசலில் உள்ள ஸ்ரீராஜராஜேசுவரர், ஸ்ரீராஜராஜேசுவரி தங்கி பூஜை செய்துகொண்டு, ஸ்ரீஜெம்புநாதர், ஸ்ரீ அகிலாண்டேசுவரியையும் தரிசித்துவந்தார். அச்சமயம் அகிலாண்ட தீக்ஷதர் (12 வயது), ராமலிங்க தீக்ஷதர் (10 வயது) என்கிற சிறுவர்கள் மேற்படி சன்யாசியையும் அவருடைய புஜை, வரலாறுகளைக் கேள்வியுற்று பின் தங்களையும் அழைத்துச் செல்லுமாறு வேண்டினர். ராமேசுவரம் சென்று திரும்பும் சமயம் சொல்வதாக ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். யாத்திரையை முடித்துகொண்டு திரும்ப இந்த க்ஷேத்திரத்தில், ஸ்ரீ பஞ்சமுகேசுவரர் கோயில் இருக்குமிடத்தில் வந்து தங்கினார். அது சமயம் மேற்படி அகிலாண்ட தீக்ஷதர், ராமலிங்க தீக்ஷதர் என்ற சிறுவர்கள் இருவரும் மேற்படி யதியின் பூஜை முதாலியவைகளால் ஆகர்ஷிக்கப்பட்டு, தங்களை சிஷ்யர்களாக ஏற்றுக்கொள்ளும்படியும் கைலயங்கிரிக்கு அழைத்துச்செல்லும்படி பிரார்த்தித்தார்கள்.
         அப்பொழுது மேற்படி யதியானவர் "நீங்கள் மிகவும் சிறியவர்கள். உங்கள் தாயார் தகப்பனார், பந்துக்கள் நிறைய இருக்கிறார்கள். மேற்படி ஸ்ரீஜம்புநாதர், ஸ்ரீஅகிலாண்டேசுவரி கோயில் பூஜை முறைமையும் இருக்கிறது. நான் செல்லும் மலையானது பல ஆயிரகாதங்கள் பாத யாத்திரையாகத்தான் செல்லவேண்டும். தங்குமிடம், உணவு வசதிகள் இருக்காது. இங்கேயே இருந்துகொண்டு பூஜை செய்துவாருங்கள்" என்று சொன்னார். சிறுவர்கள் இருவரும் எவ்வளவு வற்புறுத்தியும் அவர் சரி என ஒப்புக்கொள்ளவில்லை. ஆயினும் சிறுவர்கள் இருவரும், யதி புறப்படும் சமயம் என்பதை அறிந்துகொண்டு வந்துவிட்டார்கள். அவர் குறித்தகாலத்தில் போய்ப்பார்க்கும்பொழுது அவர் சென்றுவிட்டதையறிந்து, அவர் போகும் மார்க்கத்தையறிந்து இருந்ததால், நடையும் ஓட்டமுமாகச் சென்று அவரை அடைந்துவிட்டனர். (சுமார் 10 மைல்).
         இவர்களைப் பார்த்தவுடன் யதியானவர் கவலையடைந்து, திரும்ப அனுப்ப மனம் இல்லாதவராய் ஸ்ரீஅம்பாளின் திருவுளப்படி நடக்கும் என்று நினைத்தவராய் அழைத்துச்சென்றார். செல்லுங்காலத்தில், தான் வைத்திருந்த ஸ்ரீபூஜைப் பெட்டியை சிறுவனிடமும் மற்றுமுள்ள இரு சுமைகளை, தானும் பெரியவனுமாகச் சுமந்துகொண்டு அங்காங்கே தங்கி பூஜை ஆகாராதிகளை முடித்துக்கொண்டு சென்றார்கள்.
         இவ்வாறு பலகாலம் மூவருமாக நடந்து சென்றுகொண்டிருந்தபொழுது, ஒரு பகல் காலத்தில் வெயில் அதிகமாக இருந்ததால் பூஜை பெட்டியை எடுத்துக்கொண்டுவந்த சிறியவன் பாதையைவிட்டு ஒதுங்கியே சென்றான். அப்பொழுது யதியாகப்பட்டவர், சிறுவனை நோக்கி "குழந்தாய்! ஓரம் போக வேண்டாம். கல், முள் இருக்கும்" என்றார். அதற்கு சிறுவன், "ஒரு அம்மா எனக்குக்குடைபிடித்து வருகிறார். அவர் என்மேல் இடிபடுவதால் ஒதுங்கி்ச்செல்கிறேன்" என்றான். உடனே யதியானாவர் "பல வருஷங்களாக பூஜை செய்துகொண்டு யாத்திரை சென்று வருகிறேன், எனக்குக் ஸ்ரீ அம்பாளின் காக்ஷி கிடைக்கவில்லை. நீ புண்ணியசாலி. அந்த பாக்கியம் ஸ்ரீ  அம்பாள் எனக்குக் கொடுப்பாளோ!" என்று கதறினார்.
         உடன் அம்பாள் அசரீரியாக "கவலைப்படாதே. காசி கங்கைக்கரையில் காக்ஷியளித்து முக்தியளிக்கிறேன். இச்சிறுவர்கள் இருவரும் எனது பூஜைக்காக ஏற்பட்டவர்கள். உனது சிஷ்யாள்களாக ஏற்றுக்கொண்டு பூஜைவிதிகளை உபதேசம் செய்" என்று ஆஞாபித்தாள். யதியானவர் சந்தோஷத்தையடைந்து, சிறுவர்கள் இருவருக்கும் அம்பாள் உத்தரவுப்படி பூஜைமுறையை உபதேசித்து காசியை அடைந்தார். ஸ்ரீ அம்பாளின் ஆசீர்வாதத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.
         மேலும் "என்னுடைய அந்திம காலம் பிரதோஷ காலம். நீங்கள் சிறுவர்களாக இருப்பதால் என்னுடைய சரீரத்தை இந்த கங்கை பிரவாகத்தில் விட்டுவிடுங்கள். நான் முக்தியடைந்துவிடுகிறேன். கவலைப்படவேண்டாம். ஸ்ரீ அம்பாள் உபதேசித்தபடி பூஜை சரிவர செய்துகொண்டுவாருங்கள். க்ஷேமத்தை அடைவீர்கள்" என்று ஆசீர்வாதம் செய்தார்.
         அதேபோல் ஒரு தைமாதம் கிருஷ்ணபக்ஷ துவாதசியன்று நிர்யாணம் அடைந்தார். சிறுவர்களும் குரு சொன்னவாறே செய்ய வேண்டிய கிரமப்படி மேற்படியார் உடலை கங்கையில் சேர்த்தார்கள் அதுசமயம் காசிராஜாவின் காவலர்கள் கங்கைக்கரையை காவல்காத்துவந்தவர்கள், இதைப்பார்த்துவிட்டார்கள். அவர்கள் இந்த இரு சிறுவர்களைப்பார்த்து நீங்கள் செய்தது பெருந்தவறு. அரசரின் ஆணையின்படி கைது செய்வதாகாச்சொல்லி காசிராஜா அராண்மனையில் பாதுகாவலில் வைத்துவிட்டார்கள். இரவு சமயமானாதால் விசாரிக்கவில்லை.
         அன்று காசிராஜா தூங்கும்பொழுது, மூன்றுதரம் சாட்டையடிபோல் அரசன் சரீரத்தில் விழுந்தது. திடுக்கிட்ட அரசன் விழித்தபொழுது "நீங்கள் வேட்டைக்குச் சென்று வந்ததால் ஏற்பட்ட வலி" என்று சமாதானப்படுத்தினார்கள். இரண்டாவது தடவை, மூன்றாவது தடவை அடி விழுந்ததும் காசிராஜா உடனே மந்திரிகள் குரு முதலானவர்களை ஆசு சபையக் கூட்டி அன்றைய தினம் காலையிலிருந்து நடந்த விபரங்களை விசாரிக்கலானான். அன்று மாலையில் அழைத்துவந்த சிறுவர்கள் இருவரையும் அழைத்து வரச்சொல்லி விசாரிக்கலானான்.
         மேற்படி சிறுவர்கள் இருவரும் தாங்கள் தென்தேசத்திலிருந்து வந்த விபரங்களை அன்று மாலைவரை நடந்ததைச் சொல்லி, கவிராஜகுரு சித்தியடைந்ததால் மாலை பூஜை (பிரதோஷ கால பூஜை) செய்யவில்லை என்றார்கள். அரசன் சந்தோஷத்துடன் அன்றைய இரவே அரண்மனையில் பூஜைக்கு ஏற்பாடு செய்து, பூஜையை தரிசித்து புளகாங்கிதம் அடைந்தவனாய் மேலும் அங்கேயே சிலநாள் தங்கி பூஜை செய்ய பிரார்த்தித்தான். மன்னன் பிரார்த்தனைக்கு பலநாள் பூஜை செய்து வந்தார்கள். அதுசமயம் அங்கு விஜயநகர அரசர் சேனைத்தலைவன் நாகமநாய்க்கன் கூட இருந்து தரிசனம் செய்து வந்தான். சிலநாள் சென்றபின் சிறுவர்கள் இருவரும் தென்தேசம் திருவானைக்காவல் திரும்பவேண்டும் என்று அரசனிடம் சொன்னார்கள். அரசன் வெகு சந்தோஷம்கொண்டு ஆசீர்வதிக்க பிரார்தித்து, தகுந்த வெகுமதிகளுடன் விருதுகளுடன் சேனைத்தலைவன் நாகமநாய்க்கனுடன் அனுப்பிவைத்தான். திரும்பிவரும் காலத்தில் பலமுக்கியமான க்ஷேத்திரங்களையும், உஜ்ஜையினி க்ஷேத்திரத்திலும் தங்கி தரிசித்து விஜயநகரம் வந்து சேர்ந்தார்கள்.
                           பாசூர் அகிலாண்ட தீக்ஷதர் ஓலைச்சுவடி - 1
                                            
காலம்: விஜயநகரம்
கிருஸ்தவ வருடம்: 1383
                                         
      ஸ்ரீ றாம செயம்
ஈரோட்டுத் தாலுக்கு ஏகபோகம் பாசியூர் அக்கிறாறம் சறுவ மானியமா விட்டதுக்கு மகாசெனங்கள் எழுதி வைச்ச வாக்குமூலம் துந்துபி வருஷம் தையி மாசம் 20 தேதி முதல் அகிலாண்ட தீட்சதர் கெங்கா யாத்திரைக்கி போயிறுந்தார். அங்கே போன யிடத்தில் பிறபுடதேவறாயர்கிட்ட யிறுக்குற கொட்டியம் விசாறணை நாகம னாய்க்கனென்குறவனும் கெங்கா ஸ்தானத்துக்கு ஸ்தானத்துக்கு போயிறுந்தான் போயிறுந்தவிடத்தில் இந்த அகிலாண்ட தீட்சதர்க்கும் அந்த னாகம னாயக்கனுக்கும் அவ்விடத்திலே பரிட்சையாகி ரொம்ப சினேகிதம் ஆச்சுது அப்போ ரெண்டு பெறும் ஆனைகுந்தி றாய வே(லூ)றுக்கு வந்து பிறபுட தேவறாயர் கிட்ட கூட்டிப் பொயி ...............விச்சான் அதுமுதல் கொண்டு அந்த பிறபுடதேவறாயர்கிட்ட பற்று மாசம் இந்த அகிலாண்ட தீட்சதர் காத்துக்கொண்டிருந்தார் அப்போ பிறபுட தேவறாயர் சமூகத்திலே பிறாமண வித்துவாமுசாள் அனேகம் பேரு கட்சி பிரிதி கச்சியாய்ப் பிறசங்கங்கள் பண்ணிக்கொண்டிருந்தார்கள் அந்த வேளையில் யிவறும் அவிடத்தில் இறுந்த இவரை பிறபுட தேவறாயர் பாத்து அகிலாண்ட தீட்சதரே நீறும் ஒரு கட்சியிலே சேந்து பிறசங்கம் பண்ணுங்களென்று சொன்னார் அப்போயிவர் சொன்னது  னான் பிறசங்கம் பண்ண வேண்டியது யென்னயிறுக்குது என்னுடைய சிஷ்யனுடனே பிறசங்கம் பண்ணி அவனுக்கு யிவர்கள் உதாறணை சொன்னால்ப் போதுமென்று சொல்லி சிஷ்யனுக்கு வாக்குவாதிலி என்குறு மந்திறத்தை ஆவாகனம்பண்ணி அந்தச் சிறுவனுக்கு முதுகை திறந்தபடி சிஷ்யனை பிறசங்கம் பண்ணச் சொன்னார் அப்போ அந்தச் சமூகத்திலே யிறுந்த வித்துவாமூசான்  யாவத்துப்பெறும் இவறுட சிஷ்யனுக்கு உதாறணை சொல்ல மாட்டாமல்ப்போனார்கள் அப்போ பிறபுடதேவறாயறும் நடத்தையெல்லாம் பாத்திறுந்து றொம்ப சந்தோஷப்பட்டுக்கொண்டு நீறும் நம்ம பக்கத்திலேயிறுக்க வேணுமென்று சொன்னதுக்கு இவர் சொன்னது நான் வெகு சமுசாரி நூறு சனமுள்ளவன் இவ்விடத்திலே யிறுக்க மாட்டேன் பூமிதானமாயி ஸ்தலத்திலே குடுத்தால் ஸ்தானம் பண்ணி செபம் பண்ணிக்கொண்டு யிறுக்குறேனென்று சொன்னார் அதின்பிரகு அப்படியே ஆகட்டுமென்று பூமிதான் பண்ணின விபறம் சாலிவாகன சகாப்தம் 1306 கலியுகம் 4485 இதின் மேல் செல்லானின்ற குறொதன வரிஷம் தையி மாசம் உத்தராயண புண்ணிய காலத்திலே பிறபுட தேவறாயரவர்கள் சசிறணியோதக தானபூர்வமாக பாசியூறுக் கிறாமத்தை ஏகபோக அக்கிறாறமாய் நிருபாதிக சறுவமானியமாய் பூமிதானம் பண்ணி தாம்பிற சாசனமும்பண்ணி வைச்சுக் குடுத்தார் அந்தப்படிக்கி தானம் வாங்கிக்கொண்டு அகிலாண்ட தீட்சதர் ஸ்தலத்துக்கு வந்து பத்து வருஷம் வரைக்கும் இந்தக் கிறாமத்திலேயிறுந்து யின்னம் ஆறு கோத்திரக்காரரையும் தறுவிச்சு தங்கள் சொந்தச்சனங்களாய் ஒறு சாதியாயித் தறுவிச்சு அவர் அவர்களுக்கு தானபூறுவமாய் பூமி அக்கிறாறங் கட்டிவைச்சுக்குடுத்து மத்த பூமிகளை தான் சொந்தமாய் வைச்சுக்கொண்டு வந்த பேருக்கு அன்னதானம்பண்ணிக்கொண்டு வந்தார் அந்தப்படி  மூணு தலமுறை அகிலாண்ட தீட்சதர் அப்ப(ய) தீட்சதர் வெங்கிடபதி தீட்சதர் இந்த மூணு தலைமுரைக்கும் புரிவில்லை இதின்மேல் 303 வருஷ சுக்கில வருஷத்தில் வெங்கிடபதி தீட்சதர் பிள்ளை ஸ்ரீவெங்கிடேஸ்பற தீட்சதர் அகிலாண்ட தீட்சதர் பிள்ளை றாமலிங்க தீட்சதர் இவர்கள் ரண்டு பேறும் பாபியம் பண்ணிக்கொண்டார் 301 வருஷம் யுப வருஷத்தில் தேவறாசருடைய துரைத்தனத்தில் சறுவ மானியமாய் நடந்தது தாது வருஷத்தில் யிந்த தேவறாசருடையரு அக்கிறாறத்தை செபித்தி பண்ணி அந்த வறசம் பணம் வசூல்ப்பண்ணிப் போட்டார்கள் அதின் பிற(கு) றாமலிங்க தீட்சதர் ஸ்ரீரங்கப்பட்டனத்துக்கு போயி தேவறாசருடையாரை காண விசாறிச்சுக்கொண்டு யெங்கள் அக்கிறாறத்தை செபித்தி பண்ணி பணம் போட்டீர்களே னான் சீவனத்துக்கு யென்ன பண்ணட்டுமென்று கேட்டு கொண்டார்கள் அதுக்கு அவர் சொன்னது உனக்கு யிந்த அக்கிறாறம் விட்ட பூறுவித்திற யென்னவன்று கேட்டார்கள் கேட்டதுக்கு மேலே எழுதியிருக்கிற பிறகாறம் நடந்த வற்தமானயாவது சொன்னார் அதின் பிரகு அப்படியா நல்லதாச்சுது நிங்கள் மகா மந்திறவாதிகளிறுக்குரீர்கள் நம்ம அறமனையிலே நம்ம பிள்ளையாண்டானுக்கு வாற்தை சொல்லத் தெரியாமல் ஊமையாயிறுக்குறான் யிவனுக்கு வாற்தை வறுகுறாப்போலே பண்ண வேணுமென்று சொல்லி நீறும் நம்முட சமூகத்திலேயிறுக்க வேணுமென்று சொன்னார் நல்லது அப்படியே யிருக்குரேன் கிறாமம் செபித்தியாயிறுக்குதென்று கேட்டுக்கொண்டார் அதின்பிறகு செபித்திப் பணத்தை குடுத்துவிடாச் சொல்லி பிறதானிதினம் பண்ணுகுற சிங்கப்பெருமாளைய்யங்காறுக்கு சொல்லிப் பணத்தை அவிடத்திலே தோசெகானுலேயிருந்து குடுத்துவிட்டார்கள் அந்தப் பணத்தை வாங்கி ஸ்தலத்துக்கு அனுப்புவிச்சுப் போட்டு றாமலிங்க தீட்சதர் பட்டணத்திலே யிறுந்தார் யிறுந்து துரையினுட குமாறன் ஊமை வாற்தை சொல்லுகுறாப்போலே பண்ணிவிச்சார் அதின் பிறகு சந்தோஷப்பட்டுக்கொண்டு கொடுமணலெங்கிற கிறாமத்தை உம்பணிக்கையாய்க் குடுத்து நடப்பிவிச்சுக்கொண்டு வந்தார் இந்த தாது வருஷம் முதல் சித்தார்ற்திரி வருஷத்துக்கு 44 வருஷ நிறுபாதிக சறுவ மானியமாயி அனுபவிச்சுக் கொண்டு வந்தார் ரவுத்தி(ரி) வருஷம் பத்தேசிங்கு கலாபத்தில்ப் பாத்திறங்களோடே தாம்பற சாசனமும் பதனம்பண்ணிப் போட்டுப் போயிட்டார்கள் அந்தக் கலாபத்திலே தாம்பிற சாசனமும் பாத்திரங்கள் யெல்லான் போய்விட்டுதுயென்று பெரியவாள் சொல்லியிறுக்குறாள் அதுக்கு யிப்பறம் துற்ம்மதி வருஷம்முதல் சுபானு வருஷக்கு வாருஷம் 23 வருஷம் நிறுபாதிக சறுவமானியமாய் நடந்து வந்துது தாருண வருஷம் அயிதர் னாளையில் அக்கிறாறத்தாரைப் பட்டணத்துக்கு தறுவிச்சு அந்த மானியப்பணம் வசூல்ப்பண்ணினான் மறு வருஷபாற்திபவருஷத்தில் எதாப்பிறகாரம் சிறுவமானியமாய் விட்டு விடச் சொல்லி கெடிக்குப் புறமானிகற் வந்து விட்டுவிட்டார்கள் அதுமுதல்க்கொண்டு சறுவசித்து வருஷ3வருஷசறுவ மான்னியமாயி நடந்துது சறுவதாரி வருஷம்கலாபம் வந்து சீமை கும்பினியாற்கு ஆயி ஆனணி மாசம் முதல் காற்திகை மாசத்துக்கு அறவாசிப்பனம் வசூல்ப்பண்ணிப் போட்டார்கள் திறும்ப மார்களி மாசம் அயிதற் வந்தான் அதுமுதல்கொண்டு பிலபவவருஷத்துக்கு சறுவ மான்னியமாய் நடந்து வந்துது டீப்பு னாளையில் சுபகிறுது வருஷம் செபித்திபண்ணி அக்கிறாறத்தைப் பணம் நிகுதி பண்ணி பேசிசு மேரைக்கு நிகுதி பண்ணி பணம் வசூல்ப்பண்ணினான் அது முதல் கொண்டு காள்யுக்தி வருஷத்துக்கு 17 வருஷமும் செபித்தியாலேயிருந்துது செபுத்திப் பணம் குடுத்துக் கொண்டு வந்தோம் கும்பினி சீமை ஆன பிறகு சித்தார்த்தி வருஷம் ரவுத்திரி வருஷம் ரண்டு அதே பிறகாறம் செபித்திப் பிறகாறம் பணம் குடுத்து வந்தோம் இந்த அக்கிராறத்துக்கு முன்னாலே கோசவிபறம் பங்கு விபறம் பட்டவற்தி நிலமென்று சொல்லுவார்கள் அந்தப்படியிறுந்துது ரவுத்திரி வருஷத்துக்கும் தாசில்தாறன் கிருஷ்னறாயர் யெங்களைத் தருவிச்சு உங்க அக்கிறாறத்தை யினிமேல் பட்டவற்த்தியென்று சொல்ல தேவையில்லை அசூறுலேயிருந்து அப்பணை வந்திருக்குது பங்கு விபறமாயி கோச விபறங்கண்டு உண்டுபண்ணிப் பங்கு விபறமாய் எளுதி வைக்கச் சொன்னார் அந்தப் படிக்கு எங்கள் அக்கிறாறத்த 92 முக்காலே 4 மா பங்கு ஏற்படுத்தி எழுதி வைச்சு கச்சேரிக்கி ஒரு பிரிதி எழுதி வைச்சுப்போட்டு னாங்களும் ஒறு பிரிதி எளுதிக்கொண்டு வந்துவிட்டோம் இதிலே தேவஸ்தானத்துக்குப் போனபங்கு 4 காலே 4 மா தண்ணிப்பந்தல் மானியம் பங்கு முக்கால் ஆக பங்கு 4 காலேமுக்கால் 4 மா நீக்கிநின்ன பங்கு 87 3/4 யிந்தப்படி ரவுத்திரி வருஷம் பங்கு நிகுதி ஆச்சுது ரவுத்திரி வருஸத்துக்கு செபித்தி பிறகாறம் நதந்து வந்துது குற்மதி வருஷத்துக்கு மிகு நஷ்டமா போனது கோபாலய்யன் பங்கு சறுக்காருர்தானால் பங்கு அரை நீக்கி நின்ன பங்கு அக்கிறாறம் பங்கு 87 1/4 யிந்த யென்பத்தேழேகால்ப் பங்குக்கு தற பிறகாரம் நிகுதி பண்ணி நிகுதி ஆன பணத்தில் மூணுலே ஒறு பங்கு மாப்பு தள்ளி நின்ன பங்கு சற்க்காறுக்கு நிகுது பண்ணி திட்டப்படுத்தினார்கள் அந்தப்படிக்கி பணங் குடுத்து கொண்டு வறுகுறோம் இந்தப் பங்குகளுக்கெல்லாம் தரியாபித்தியில்த் தான போக்கியம் யாவத்துங் கண்டு தரியாபத்துக்காரர் வசம் எளுதி வைச்ச வாக்குமூலத்தில் ரபலேசம் வித்தியாசப் பிறட்டுகளில்லை யிந்தப்படி மகா செனங்கள் வாசிப்பாய் உள்ளபடி எளுதி வைச்சிறுக்கிறோம் மாகா செனங்கள் ருசு உ
திருவானைக்காவலிலிருந்து பூந்துறைநாடு, நசையனூர் சமஸ்தானத்திற்கு சேர்ந்தது விருபாக்ஷிபுரம் என்று வழங்கப்பட்ட பேரோடு. இவர்களது குலதெய்வமான அங்காளம்மன் இன்றும் சமஸ்தான ராஜதானியான நசியனூரில் விளங்கி வருகின்றது. பின்னர் விஜயநகரகாலத்தில் தீக்ஷதர்களுக்கு பாசியூர் (பாசூர்) அக்கிரகாரம் சர்வமான்யமாய் விடப்பட்டது. தீக்ஷதர்கள் பேரோட்டிலிருந்து பாசூருக்கு குடியேறி சிஷ்யபரிபாலனம் செய்து வருகின்றனர்.

சிஷ்யர்களது குருபக்தி:
                                இவ்வாறு பாசூர் மடத்தில் தங்கி வாசம் செய்துகொண்டு வந்தார்கள். அப்பொழுது பூந்துறை, வெள்ளோடு பட்டக்காரர்களான சாகாடை கோத்திரரான நன்னாவுடையார், தென்முகம் வெள்ளோடு உலகபுரம் சாத்தந்தை கோத்திரரான உலகுடையார் ஆகியோர் தங்களுடைய பரிஜனங்களுடன் ராமேசுவர யாத்திரை சென்றார்கள். செல்லும் மார்க்கத்தில் அப்பொழுது மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரர் தரிசனம் செய்துகொண்டு அன்று இரவு அங்கு தங்கினார்கள். அன்று இரவு மதுரை மன்னர் (திருமலை நாயக்கர்) அரண்மனையில் திருட்டு நடந்துவிட்டது. மறுநாள் மன்னர் விபரம் தெரிந்தவுடன் அந்நிய நாட்டவர்கள் சந்தேகத்துக்கு இடமாக இருந்தால் கைது செய்ய உத்தரவிட்டான். அதன்படி காவலாளிகள் வெள்ளோடு பூந்துறை மன்னர்களை பரிஜனங்களுடன் கைது செய்து காவலாளிகள் காவலில் வைத்தார்கள். இவர்களும் மன்னர்களாகையால் இவ்வாறு அசம்பாவிதம் ஏற்பட்டதற்கு மனவருத்தத்துடன் (அதிகாரத்துக்கு உட்பட்டு) தங்கினார்கள். அன்று இரவு இவர்கள் பாசூரில் மைசூர் அரசனால் வெகுமானிக்கப்பட்ட தங்கள் மந்திரசக்திவாய்ந்த குருமார்கள் ஞாபகத்துக்கு வந்தார்கள். மறுநாள் மதுரை மன்னர், இவ்விரு மன்னர்களையும் (மரியாதையுடன்) விசாரிக்கும் காலத்தில். இவர்கள் தங்களை அறியாமலேயே சொன்னதாவது. "நாங்கள் இருவரும் பூந்துறை நாட்டைச் சேர்ந்தவர்கள். இராமேசுவர யாத்திரையாக வந்தோம். ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவர சுவாமியை தரிசித்துவிட்டு தங்கினோம். மேலும் எங்களுக்கு பாசூர் சுவாமிகள் குலகுரு ஆகையால் நாங்கள் பாசூர்சென்று குருவை தரிசனம் செய்து வருகிறோம். தங்கள் விசாரணைக்குக் கட்டுப்படுகிறோம்" என்றார்கள். மதுரை மன்னருக்கு குருவானபடியால், பயபக்தியுடன் இவர்களை பாசூர் சென்றுவாருங்கள் என்று அனுப்பினான். இவ்விரு மன்னர்களும் தங்கள்  பரிஜனங்களுடன் பாசூர் வந்தார்கள். தீக்ஷதர் இருவரும் தங்கள் பூஜையை முடித்து வந்தார்கள். இம்மன்னர்கள் இருவரும் பரிவாரங்களுடன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தவுடன், குரு "மகராஜனாக இருங்கள்" என்று விபூதி பிரசாதம் அளித்தார்கள். சுவாமி மூன்று தரம் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். பிரகு இவர்கள் தங்களுக்கு நடந்த கதைகளைச்சொல்லி "தங்கள் வாக்கு எங்களுக்கு ஆசீர்வாதம் ஆக வேண்டும்" என்று சொன்னார்கள். அதற்கு சுவாமியார்," இது எங்கள் வாக்கல்ல, ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரரின் ஆசீர்வாதம், கவலையை விடுங்கள்" என்று அவர்களுக்கு அதிதி உபசாரப்படி அன்னபானாதிகள் அளித்து தகுந்த உபசரிப்புடன் வழியனுப்ப்பினார்கள். அதேசமயம் மதுரை மன்னர் கனவில், "அவர்களிருவரும் மன்னர்கள், யாத்திரையாக வந்தார்கள், எனது பக்தர்களான குருமார்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தகுந்த உபசரிப்புகளுடனும் மரியாதைகளுடன் ராமேசுவர யாத்திரைக்கு வேண்டிய ஏற்பாடுகளுடன் அனுப்பிவை" என மீனாக்ஷி சுந்தரேசுவரர் உத்தரவிட்டார். மதுரை மன்னனும் தன் மந்திரி பிரதானிகளை பாசூருக்கு அனுப்பினான். இருவர்களும் கரூர் அமராவதி நதிக்கரையில் சந்தித்தபின் மரியாதைகளை ஏற்றுக்கொண்டு வெள்ளோடு, பூந்துறை மன்னர்கள் திரும்ப பாசூர் வந்து குருசுவாமிகளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, பின்வருமாறு பட்டயம் எழுதிக்கொடுத்தார்கள்.
         அதில், நாங்களும் எங்கள் ஆட்சிக்குட்பட்ட பூந்துறை நாட்டு 44 கொங்கு வெள்ளாள கோத்திரத்தாரும், இன்று முதற்கொண்டு மங்கிலிய காணியக்கையாக வருஷம் ஒன்றுக்கு பிரதி நாகரம் பணம் அளிப்போம் என்று பக்தியுடன் பட்டயம் கொடுத்துள்ளனர்.
பாசூர் குருசுவாமியார் செப்பேடு – 3
          (பிரசுரிக்கப்படும்)
பாசூர் குருசுவாமியார் செப்பேடு - 4
     காலிங்கராயன் செப்பேடு


வருடம்: 1331
காலம்: மைசூர்

ஸ்வஸ்திஸ்ரீ விஜயாப்த்புதய சாலிவாஹந சகாப்தம் 1253 கலியப்தம் 4432யிது மேல் செல்லாநின்ற ப்ரஜோத்பத்தி வருஷம் உத்தராயணமும் வ்ருஷப மாசமும் சுக்ல பக்ஷமும் பிரதிமையும் குருவாரமும் ரேவதி நக்ஷத்ரமும் சுபநாமயோகமும் கௌலவாகரணமும் பெத்த சுபதினத்தில் ஸ்ரீராஜாதிராஜ ராஜபரமேஸ்வர ராஜ மாத்தாண்ட உத்தணடராஜ தேவாண்டராஜ பிரதாப வீரப்பிரதாப நரபதி மயிசூரு கிருஷ்ணராஜ உடையாறய்யறவர்கள் ஸ்ரீரத்ன சிங்காஜநரூடராய் ப்ருதிவி ஸாம்ராஜ்யம் அருளாநின்ற காலத்தில் மயிசூருக்குச் சேந்த கொங்குதேசம் மேல்கறைப் பூந்துறைநாட்டுக்குச் சேந்த பேரோட்டுக்கு பிரதிநாமதேயமான விருப்பாக்ஷிபுரத்திலேயிருக்கும் ஸ்த்யோஜாத ஞானசிவாசாரியாற் யிம்முடி அகிலாண்டதீக்ஷித ஸ்வாமியாறவற்கள் பாத சன்னிதானத்துக்கு பூந்துறை நாட்டுக்குச் சேந்த வெள்ளோடு தென்முகம் கனகபுரம் யெலவமலை சாத்தந்தை கோத்திரமானகுருகடாஷத்துனாலேயும் வேதநாயகியம்மன் வறபிறசாதத்துனாலேயும் வாணியை அணையாயிக் கட்டி கொங்கு தேசம் பூந்துறைனாட்டில் சென்னெல் வைத்தவறான பட்டக்காறர் யிம்முடி காலிங்கறாயக் கவுண்டரவர்கள் குருசுவாமியார் பாதத்துக்கு எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம்.
னான் மகாமந்திர உபதேசம் பண்ணிக்கும்போது குருசுவாமியார் அப்பணையானது. உங்கள் வமுசத்தாற் பெரியோருகள் பூந்துறை னாட்டுலே அதிகாரம் செலுத்தி அணையும் கட்டி நமக்கு குருக்கள் மானியமும் குடுத்து சஞ்சார காணிக்கையும் தலைக்கட்டு வரியும் குடுத்து வந்தாற்கள். யிப்போ ஊத்துக்குளி சீமையிலே ஒங்கள் பெயரற்கள் காணிவாங்கி அதிகாறம் செலுத்தறபடியினாலே வெகு சமூகம் நமக்கு ஞாபகம் யிருக்கும்படிக்கி சாசனம் எழுதிக்கொடுக்கச்சொல்லி சுவாமி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி குருசுவாமியாற் பாதத்துக்கு ஒடல் உயிற் பொருள் மூன்றும் தெத்தம்பண்ணி எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம். தீட்சை மகாமந்திற ஒபதேசம் பண்ணிக்கொண்டு வறுஷம் பிரதி தலைக்கட்டு காணிக்கை னாகறம் பணம் னாலு குடுத்து சஞ்சாரம் வந்தபோது சஞ்சாறக் காணிக்கையும் குடுத்துவறுவோமாகவும். ஆதீனத்து சிவபூசை மீனாட்சி சுந்தறேசுவற சுவாமிக்கு பிறதோஷக் கட்டளை நடப்பிவிக்கும்படி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி நடப்பிவிக்குறது. அபிஷேகம் மேறைக்கி வருஷம் ஒன்னுக்கு பொன் 36 பிரதோஷக் கட்டளை சாசுவதமாயி நடப்பிவிக்குற படிக்கி னாங்கள் யெந்த னாட்டிலே யெந்த தேசத்துலே யென் வமுசத்தாற் காணிவாங்கி அதிகாரம் பண்ணி பட்டம் செலுத்தினாலும் யிந்தப்படிக்கி வருஷம் பிரதி நடத்திவறுவோமாகவும். சுவாமியாரிட்ட தென்டனை கண்டினை ஆக்கினை அபறாதத்துக்கு உள்பட்டு நடந்து வறுவோமாகவும்.

யிப்படிக்கி நடந்துவருங்காலத்தில் யென் வமுசத்தாற் யிதுக்கு விகாதம் சொல்லாமல் சன்னிதானத்துக்கு பயபக்தியாயி நடத்திவைத்தவன் சுகமாயி தனசம்பத்தும் தான்னிய சம்பத்தும் அஷ்டைஸ்வர்யமும் ஆயுளாறோக்கியமும் தேவபிரஸாதமும் குரு பிஸாதமும் மென்மேலும் உண்டாயி கல்லு காவேரி புல்லு பூமி ஆசந்திரார்க்க உள்ளவறைக்கும் பாடகவல்லி சறுவலிங்கமூர்த்தி அகத்தூறம்மன் கடாக்ஷத்துனாலே சுகமாயி யிறுப்பாற்கள். யிந்த சாசனம் பாத்து படித்தபேறும் செவியில் கேட்ட பேறும் சுகமாயி யிறுப்பாற்கள். யிதுக்கு விகாதம் சொல்லி குரு நிந்தநை சொன்னவன் கெங்கைக் கறையிலே காறாம் பசுவையும் பிறாமணாளையும் மாதா பிதாவையும் கொண்ண தோஷத்துலே போவாறாகவும் யிந்தப்படிக்கி பவாநி வேதநாயகி சங்கமேஸ்வர சுவாமி சன்னிதானத்திலே ஸஹிரண்யோதக தாராபூறுவமாயி யெழுதிக் கொடுத்த தாம்பற சாசனம். வேதநாயகி ஸமேதர சங்கமேசுவர ஸ்வாமி ஸஹாயம். மீநாக்ஷி ஸுந்தரேஸ்வர ஸ்வாமி ஸஹாயம் அகத்தூறம்மன் துணை.

தாநபாலன யோர்மத்யே தாநா ஸ்ரயோநு பாலனம் தானாத் ஸ்வர்க்க மவாப்நோதி பாலநாதி அச்சுதம் பதம்:
ஸ்வதத் தாத்வி குணம் புண்யம் பரதத்தாநு பாலநம் பரத்தாப ஹரேண ஸ்வதத்தாம் நிஷ்பலம் பவேது:
ஊத்துக்குழி காலிங்கறாயக்கவுண்டற் யிவற் சம்மதியில் யிந்தச் சாசனம் எழுதினவன் பவாநி கூடல் அருணாசலாசாரி மகன் சொக்கலிங்காச்சாரி கய்யெழுத்து .             
மைசூர் காலம் – மட தெய்வங்கள் வரலாறு:
         மைசூர் மகாராஜாவின் குழந்தை ஊமையாகவும், புது அரண்மனை கட்ட இயலாமையாக இருந்தது. ஏற்கனவே மேற்படி மைசூர் மன்னர்கள் பாசூர் சாமியார்கள் மந்திர சக்தியைக் கேள்விப்பட்டவர்களாதலால் இவர்களே திரும்ப அழைத்து நவராத்திரி பூஜையை அரண்மனையில் வைக்கச்சொல்லி விஜயதசமியன்று குழந்தையை பேசவைத்து, அரண்மனையை மேற்கொண்டு விரிவாகக் கட்ட ஏற்பாடு செய்தனர். அதன் வெகுமதியாக கொடுமணல் கிராமம் மான்யம் விட்டதுடன் தனக்கு குருவாக இருக்குமாறு பிரார்த்தித்தான். மேலும் தீக்ஷதர்களுக்குப் பூர்வீகம் திருவானைக்காவல் க்ஷேத்திரம் என்று தெரிந்து சில நிபந்தங்களை ஏற்படுத்தினான். அரண்மனை க்ஷேமத்துக்காக ஸ்ரீஅகிலாண்டேசுவரி சன்னிதியில் விடாமல் தீபம் எரிய வெள்ளி குத்துவிளக்கும், உச்சிகாலத்தில் அர்ச்சனையும், தவிர அம்பாள் பிரசாதமாக மைசூர் தசரா விஜயதசமியன்று சிம்ஹாசனாரூடராய் இருக்கும்பொழுது முதல் பிரசாதம் அளிக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தான். மேலும் மைசூர் அரண்மனை க்ஷேமத்திற்காக அகிலாண்டேசுவரியை சாமுண்டேசுவரியாக நினைத்து ஸ்ரீ அம்மன்கோயிலிலிருந்து ஸ்ரீஸ்வாமி கோயிலுக்குப்போகும் கோபுரவாசல் இடதுபுறம் ஸ்ரீகொலுமண்டபத்தெதிரிலும் 20 புஜங்களுடன் கூடிய சாமுண்டீசுவரியாக சித்திரமாக வரைந்து விளக்கெரியவும், நிவேதனம் நடக்கவும் சில கட்டளைகளையும் ஏற்படுத்தினான். (இன்றும் பாசூர் மட தீக்ஷதர் பரம்பரையினர் விஜயதசமியன்று பிரசாதம் கொடுத்து மரியாதை பெற்றுவருகின்றனர். ஆரூர் பண்டிதர் - முன்னாள் அய்யாசாமி தீக்ஷதர் மகன் - பேரன் தியாகராஜ பண்டிதர், தம்பி சுந்தரேச பண்டிதர்) சுதந்திரம் பெறும் வரை மன்னர் ஸ்ரீ ஜெயசாமராஜ உடையார் உள்ளவரை தன் குடும்ப சகிதம் தன் ஜென்ம நக்ஷத்திரத்தன்று திருவானைக்காவல் வந்து ஸ்ரீ அகிலாண்டேசுவரி ஸ்ரீ ஜெம்புகேசுவரரை தரிசித்து ஸ்ரீகுருபரம்பரை என்ற முறையில் ஆரூர் பண்டிதர் (தீக்ஷதர்) ஆசிர்வாதம் பெற்று சன்மானம் செய்துகொண்டு வந்தார்.
         மேலும் தீக்ஷதர்களுக்கு சொந்தமான பாசுபதவிரத தீக்ஷதர்களுக்கு சில மானியங்களைவிட்டு - மேற்பார்வைக்காக மைசூர் அரண்மனை மூலமாகவே சில அதிகாரிகளையும் நியமித்தார்.
         மேற்படி அரசகுமாரனைப்பேசவைத்து திரும்புகையில் பேரோடு (விருபாக்ஷிபுரம்) மடம் ஸ்தாபித்து தங்கியிருந்த காலத்தில் தங்கள் உபாசனை தெய்வமான அம்மனையும், பெரமகுட்டை தயிர்பாளையம் (பிரம்மதீர்த்தம்) என்ற க்ஷேத்திரத்தில் ஸ்ரீசுவாமி பைரவரை ஸ்தாபித்தார். தற்காலம் இவ்வூரில் தீர்த்தக்குளமும் அருகில் ஸ்ரீ சங்கிலிக்கருப்பணஸ்வாமியும் இருந்து ஆசிவழங்கிவருகின்றனர்.
         பிறகு நசியனூர் கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை ஸ்தாபனம் செய்தார். இன்றும் சின்னமடம் சுவாமியாருக்கு சொந்தமான குலதெய்வமாக விளங்கி வருகிறது. பாசூர் மான்யமாக ஸ்ரீபிரபுடதேவராயர் வழங்கும்பொழுது தனக்கு அருகாமையிலிருக்க வேண்டுமென்றதற்கு இணங்கியும் ஸ்ரீ உபாசனை தெய்வம் ஸ்ரீ மஹாகாளேசுவரபைரவர் ஆக்ஞைக்குட்பட்டும் திருவானைக்காவல் க்ஷேத்திரத்துக்கும், மைசூருக்கு மையமாக ஸ்ரீ காவேரி தென்வடலாக தக்ஷிணவாஹினி என்று புண்ணியநதியாக ஓடும் க்ஷேத்திரத்தை தேர்ந்தெடுத்து காவேரிக்கரையில் ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேசுவரர் கோயிலையும், ஸ்ரீ மஹாகாளேசுவரர் ஸ்தாபனம் செய்து, ஸ்ரீ மடத்தையும் கட்டி வாழ்ந்து வந்தார்கள். திருச்சி - கரூர் - ஈரோடு வழிச்சாலையில் - யாத்ரீகர்களுக்காக சத்திரம்கட்டி அன்னதானம் செய்துவந்தார். இன்றும் சத்திரம் என்ற பெயருடன் வீடுகள் இருகின்றன.
         இவ்வாறு வாழ்ந்து வருங்காலத்தில் ஒருசமயம் காவேரியில் அதிகாலை மீன் பிடிக்கும் வலையில் ஸ்ரீ அம்பாள் பதிவாக வந்து, தனக்குக்கோயில்கட்டி வழிபட வேண்டுமென்று உத்திரவானதால் சின்னமடம் சுவாமியார் ஸ்ரீ மாரியம்மன் என்ற பெயருடன் கோயில்கட்டி வழிபட்டுவருகிறார்கள். மேலும் ஸ்ரீ அம்பாளுக்கு மாசி பங்குனியில் வரும் சமயம் பத்து தினங்கள் - பச்சை பூஜைக்கு அரிசி - நெய் கொடுத்துவந்தார்கள். தீமிதி விழாவானது - முதல் கட்டை விறகும் - கிடாவெட்டுபொங்கல் சமயத்தில் "அரண்மனைக்கிடா" என்றழைக்கப்படும் முதல் பலியான கிடாயும் வழங்கிவந்தார்கள். உத்ஸவத்தின்பொழுது ஸ்ரீஅம்பாள் ஊர்வலமாக வந்தால் முதல்பூஜை சின்னமடத்தார் வருவதும் இன்றும் வழக்கத்தில் உள்ளது. மேலும் "தீமிதி" விழாவானது குண்டத்துக்கு முதல் கட்டை, நெய், சூடம் கொடுப்பது வழக்கத்திலுள்ளது.
         ஸ்ரீ அமாவாசை போன்ற புண்ய தினங்களில் ஸ்ரீ சங்கிலி கருப்பண ஸ்வாமிக்கு பூஜை - கரகம் எடுத்துவந்து பூஜை செய்ய முதல் மாலையைக் கையில் எடுத்து ஸ்ரீஸ்வாமி சாத்தும் பொழுது ஸ்ரீ ஸ்வாமியை பாசூர் ஸ்ரீமடாதிபதிகள் அழைத்துவந்து பிரதிஷ்டை செய்த விவரம் பாடலாகப் பாடி மாலை சார்த்திய பிறகு பூஜை நடை பெறுவது வழக்கத்தில் இன்றும் உள்ளது.
மூலம்

ஸ்வஸ்திஸ்ரீ விஜயாப்த்புதய சாலிவாஹந சகாப்தம் 1253 கலியப்தம் 4432யிது மேல் செல்லாநின்ற ப்ரஜோத்பத்தி வருஷம் உத்தராயணமும் வ்ருஷப மாசமும் சுக்ல பக்ஷமும் பிரதிமையும் குருவாரமும் ரேவதி நக்ஷத்ரமும் சுபநாமயோகமும் கௌலவாகரணமும் பெத்த சுபதினத்தில் ஸ்ரீராஜாதிராஜ ராஜபரமேஸ்வர ராஜ மாத்தாண்ட உத்தணடராஜ தேவாண்டராஜ பிரதாப வீரப்பிரதாப நரபதி மயிசூரு கிருஷ்ணராஜ உடையாறய்யறவர்கள் ஸ்ரீரத்ன சிங்காஜநரூடராய் ப்ருதிவி ஸாம்ராஜ்யம் அருளாநின்ற காலத்தில் மயிசூருக்குச் சேந்த கொங்குதேசம் மேல்கறைப் பூந்துறைநாட்டுக்குச் சேந்த பேரோட்டுக்கு பிரதிநாமதேயமான விருப்பாக்ஷிபுரத்திலேயிருக்கும் ஸ்த்யோஜாத ஞானசிவாசாரியாற் யிம்முடி அகிலாண்டதீக்ஷித ஸ்வாமியாறவற்கள் பாத சன்னிதானத்துக்கு பூந்துறை நாட்டுக்குச் சேந்த வெள்ளோடு தென்முகம் கனகபுரம் யெலவமலை சாத்தந்தை கோத்திரமானகுருகடாஷத்துனாலேயும் வேதநாயகியம்மன் வறபிறசாதத்துனாலேயும் வாணியை அணையாயிக் கட்டி கொங்கு தேசம் பூந்துறைனாட்டில் சென்னெல் வைத்தவறான பட்டக்காறர் யிம்முடி காலிங்கறாயக் கவுண்டரவர்கள் குருசுவாமியார் பாதத்துக்கு எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம்.

னான் மகாமந்திர உபதேசம் பண்ணிக்கும்போது குருசுவாமியார் அப்பணையானது. உங்கள் வமுசத்தாற் பெரியோருகள் பூந்துறை னாட்டுலே அதிகாரம் செலுத்தி அணையும் கட்டி நமக்கு குருக்கள் மானியமும் குடுத்து சஞ்சார காணிக்கையும் தலைக்கட்டு வரியும் குடுத்து வந்தாற்கள். யிப்போ ஊத்துக்குளி சீமையிலே ஒங்கள் பெயரற்கள் காணிவாங்கி அதிகாறம் செலுத்தறபடியினாலே வெகு சமூகம் நமக்கு ஞாபகம் யிருக்கும்படிக்கி சாசனம் எழுதிக்கொடுக்கச்சொல்லி சுவாமி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி குருசுவாமியாற் பாதத்துக்கு ஒடல் உயிற் பொருள் மூன்றும் தெத்தம்பண்ணி எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம். தீட்சை மகாமந்திற ஒபதேசம் பண்ணிக்கொண்டு வறுஷம் பிரதி தலைக்கட்டு காணிக்கை னாகறம் பணம் னாலு குடுத்து சஞ்சாரம் வந்தபோது சஞ்சாறக் காணிக்கையும் குடுத்துவறுவோமாகவும். ஆதீனத்து சிவபூசை மீனாட்சி சுந்தறேசுவற சுவாமிக்கு பிறதோஷக் கட்டளை நடப்பிவிக்கும்படி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி நடப்பிவிக்குறது. அபிஷேகம் மேறைக்கி வருஷம் ஒன்னுக்கு பொன் 36 பிரதோஷக் கட்டளை சாசுவதமாயி நடப்பிவிக்குற படிக்கி னாங்கள் யெந்த னாட்டிலே யெந்த தேசத்துலே யென் வமுசத்தாற் காணிவாங்கி அதிகாரம் பண்ணி பட்டம் செலுத்தினாலும் யிந்தப்படிக்கி வருஷம் பிரதி நடத்திவறுவோமாகவும். சுவாமியாரிட்ட தென்டனை கண்டினை ஆக்கினை அபறாதத்துக்கு உள்பட்டு நடந்து வறுவோமாகவும்.

யிப்படிக்கி நடந்துவருங்காலத்தில் யென் வமுசத்தாற் யிதுக்கு விகாதம் சொல்லாமல் சன்னிதானத்துக்கு பயபக்தியாயி நடத்திவைத்தவன் சுகமாயி தனசம்பத்தும் தான்னிய சம்பத்தும் அஷ்டைஸ்வர்யமும் ஆயுளாறோக்கியமும் தேவபிரஸாதமும் குரு பிஸாதமும் மென்மேலும் உண்டாயி கல்லு காவேரி புல்லு பூமி ஆசந்திரார்க்க உள்ளவறைக்கும் பாடகவல்லி சறுவலிங்கமூர்த்தி அகத்தூறம்மன் கடாக்ஷத்துனாலே சுகமாயி யிறுப்பாற்கள். யிந்த சாசனம் பாத்து படித்தபேறும் செவியில் கேட்ட பேறும் சுகமாயி யிறுப்பாற்கள். யிதுக்கு விகாதம் சொல்லி குரு நிந்தநை சொன்னவன் கெங்கைக் கறையிலே காறாம் பசுவையும் பிறாமணாளையும் மாதா பிதாவையும் கொண்ண தோஷத்துலே போவாறாகவும் யிந்தப்படிக்கி பவாநி வேதநாயகி சங்கமேஸ்வர சுவாமி சன்னிதானத்திலே ஸஹிரண்யோதக தாராபூறுவமாயி யெழுதிக் கொடுத்த தாம்பற சாசனம். வேதநாயகி ஸமேதர சங்கமேசுவர ஸ்வாமி ஸஹாயம். மீநாக்ஷி ஸுந்தரேஸ்வர ஸ்வாமி ஸஹாயம் அகத்தூறம்மன் துணை.
தாநபாலன யோர்மத்யே தாநா ஸ்ரயோநு பாலனம் தானாத் ஸ்வர்க்க மவாப்நோதி பாலநாதி அச்சுதம் பதம்:
ஸ்வதத் தாத்வி குணம் புண்யம் பரதத்தாநு பாலநம் பரத்தாப ஹரேண ஸ்வதத்தாம் நிஷ்பலம் பவேது:
ஊத்துக்குழி காலிங்கறாயக்கவுண்டற் யிவற் சம்மதியில் யிந்தச் சாசனம் எழுதினவன் பவாநி கூடல் அருணாசலாசாரி மகன் சொக்கலிங்காச்சாரி கய்யெழுத்து .
 மேலும் மங்கிலியவரி பற்றி மற்றொரு செப்பேடும் உள்ளது.


பாசூர் குருசுவாமியார் செப்பேடு - 5


ஆரூர் நாடார் செப்பேடு 

இப்பட்டயம் அகிலாண்ட தீக்ஷதருககு ஆரூர் நாடார்கள் எழுதித்தந்தது. திருச்செந்தூர் கோயில் நுழைவு கேசில் குலகுருவால் ஆதாரமாக சேர்க்கப்பட்டது. இவ்வழக்கில் நாடார்கள் நுழைவு உரிமை மீட்டுத்தரப்பட்டது. (Calendar Case No.88 of 1972 of Tinnevely District Magistrate). இன்றும் இவர்களது மாங்கல்யத்தில் மடத்தின் தெய்வங்களான மீனாட்சி சுந்தரேஸ்வரர் உருவமே பொறிக்கப்படுகிறது. 
ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வர சுவாமி சகாயம். விஜயஸ்ரீ விஜயாஹர உயலிக்கிறம் சகாப்தம் எயரு கலியுக சகாப்தம் மீது செல்லா நின்ற குயேர்விளம்பி வருஷம் அர்ப்பதி  மாதமும் சுக்கில பக்ஷம் வியாழக்கிழமை பிரதமையும் அஸ்வதி நக்ஷத்திரமும்  பாலவாகரணமும் பெத்த சுபதினத்தில் 

ஸ்ரீமது ராஜாதி றாஜ பரமேஸ்வர ராஜ பிரத்திர ராஜ மார்த்தாண்ட ராஜ உபய சேகர ராஜஷனையாராகிய சேரன் சோழன் பாண்டியன் முன் ராஜாக்களும் இரத்தின சிம்மாசனருடராயி பிரிதிவிகாம் ராச்சியம் உள்நின்ற காலத்தில் க்ஷ கோத்திரரான குருசுவாமியாராகிய கஜாரண்ய க்ஷேத்திரத்திலிருக்கும் சிலந்தி முடிதரித்த ஞானசிவ மாணிக்கர் சுவாமியார் குருபாதம் மறவாதவரான சம்புத்த கான்னிட சத்திரரான பக்திகளால் பரிவுடன் வகுத்தவரான மெதனில் மௌ மீனாக்ஷி கண்டவரான விகடாதி சூரரான வென்றவரான விமலசேனரை மீட்டவரான சுமந்துக்கு உதவி செய்தவறான கருணா கடாக்ஷமுள்ளவறான சமீமி சூரனை வெண்டவறான சூரியப் பிரதா பறான சேனாதிபம் பெற்றவனாக தெய்வலோகமும் போத்தி தேவேந்திரனுக்கு முடிசூட்டினவறான பரமேஸ்வரன் குமாறறான வாலியை வென்றவனான தங்கம் பொன் காச்சி உருவமும் பெத்தவரான சங்கராச்சாரிய சுவாமியார் தயவு பெத்தவறான வெள்ளியை தங்கமாக்கி வந்தவறான ஏனபிதினாதனானென்றும் பேற்பெத்து அறுபத்தி மூவரில் பேர் பெத்தவறான  தம்பி சுந்தரதாண்டவ கண்டவறான எளவரிசை காத்தவறான வண்ணத் தடுக்கும், வாடா மல்லிகையும், வலம்புரி சங்கமும் உள்ளவரான அங்களங்களிலிருந்து பெத்தவறான அஞ்சு பஞ்சவரமும் பெத்தவறான அங்களங்கருமள வரிசையினதும் அஞ்சு கொஞ்சலிச சேரன் சோழன் பாண்டியன் மூவ் ராஜாக்களும் சிங்காசனம் யேத்திவச்சி வெள்ளைக் கொடையும், வெண்சாமரமும், விருது கொடுத்து துவிபறமுள்ள நாடார்கள் பல வாழைகசி ரெண்டு கொலை வரவளத்தவறான ராஜ சேவித்தபடி, வெளிமுத்து வாணிபத்தொழில் ஏரினவறான தராமிருகா தார மடியாத கோல கோத்திரறான நவரத்தின வியாபரத்துக்குடையவர்கறான சகல ஆயுத பாணிக்குடையவறான சகல விருதுக்குடையவர்களான, சத்தியாவாகாகறான சிவகோத்திரனான மார்க்கண்டேய ரிஷி அனுக்கிரகத்தினாலே காமாட்சியம்மன் அபயப் பிரசாதனான விபூதி ருத்திராட்சத்துக்கு உள்பட்டவனான சாத்தாங்குடியூரார், திருமங்கலம், விருதுப்பட்டி, திருச்சுளி, அகலூரு, சிந்தாமணி, சிவகாசி, பாலையம்பட்டி, பழனி முதல் கொண்டு நாடார்கள் அனைவரும் கூடி எழுதிக் கொடுத்த தலைக்கட்டு தாம்பர சாசனம்.

 குருசாமியார் பாதத்திற்கு உடன் உயிர் பொருள் மூன்றும் குருபாதத்துக்கு தத்தம் பண்ணி எழுதிக் கொடுத்த சாசனம். நாங்கள் எந்த திசை எந்த நாட்டிலேயிருந்தாலும் எங்கள் வம்சத்தார் தலைக்கட்டு ஒன்றுக்கு நான்கு பணம் ஐந்து வருஷம் பிரதி கொடுத்து சஞ்சாரம் வந்த போது சஞ்சாரம் காணிக்கையும் கொடுத்து அர்ப்பணப்படிக்கு உபதேசம் பாத பூசை முதலானதும் பண்ணிக்கொண்டு எங்கள் வம்சத்தார் புத்திர பவுத்திர பாரம்பரியமாய் பாத சந்நிதானத்திலே தீட்சை மகா மந்திரம் உபதேசமும் பண்ணிக்கொண்டு சுவாமியிட்ட கண்டினை தண்டனை ஆணை ஆக்குனை அபராதத்திற்குற்பட்டு நடந்து கொள்வோமாகவும்.

ஆபுத்திரிகம்  சொத்து மடத்துக்கு   சேர்த்துக் கொடுப்போமாகவும். இப்படிக்கு நடந்து வருங்காலத்தில் இதுக்கு விகாதம் சொல்லாமல் பரிபாலன்னமாயி எங்கள் வம்சத்தார் பயபக்தியாயி நடந்து வந்தால் சுகமாய் தன சம்பத்தும், தானிய சம்பத்தும், புத்திர சம்பத்தும், அஸ்ட்ட ஐஸ்வரியமும் , ஆயுளாரோக்கியமும், தேவப்பிராசாதமும், குருப்பிரசாதமும், மேன்மேலும் உண்டாயி கல்லும், காவேரி புல்லும் பூமி சந்தராதித்தாள் உள்ள வரைக்கும் அகிலாண்டேஸ்வரி கடாக்ஷத்தினாலே சுகமாயிருப்பார்கள். இந்த சாசனம் பார்த்துப் படித்தவர்களும், செவியில் கேட்ட பேரும், சுகமாயிருப்பார்கள். இதுக்கு விகாதம் சொல்லி குருநிந்தனை சொன்னவன் கெங்கைக் கரையிலே காராம்பசுவையும், பிரும்மணனையும், மாதாவையும் கொன்ன தோசத்திலே போவானகவும்.

மடத்திற்கு மானிய காணி ஊர்கள் (கொங்கு நாடு):

 1. பேரோடு (பூந்துறை நாடு)
 2. பாசூர் (பூந்துறை நாடு) 
 3. கொடுமணல் (குறுப்பு நாடு)
 4. குருக்கள்புரம் (ராசிபுர நாடு) 
                              மடத்திற்கு சேர்ந்த கொங்க தேசத்து  நாடுகள்:

தற்போதைய முகவரி:

ஸ்ரீ சாம்பசிவ தீக்ஷதர்,

மீனாக்ஷி நிலையம்,

26, வடக்கு ரதவீதி,

திருவானைக்காவல்,

திருச்சி -620005.
செல்: 94438 74910, 88700 20624கிழே இக்குலகுருவுக்குக் கட்டுப்பட்ட கூட்டங்களின் பட்டியல் :

 1. பூந்துறை காடை கோத்திரம்,
 2. வெள்ளோடு சாத்த்தந்தை கோத்திரம், பயறன் கோத்திரம்,
 3. நசையநூறு கண்ணன் கோத்திரம், செம்பன் கோத்திரம், பூச்சந்தை கோத்திரம், கூறை கோத்திரம், கீறை கோத்திரம், பாண்டியன் கோத்திரம், யீஞ்சன் கோத்திரம்,
 4. யெழுமாத்தூறு ஊராட்சிக்கோட்டை பனங்காடை கோத்திரம், செல்லன் கோத்திரம், காறி கோத்திரம்,
 5. அனுமன்பள்ளி செல்லன் கோத்திரம்,
 6. அனுமன்பள்ளீ கூடலூரு பண்ண கோத்திரம்,
 7. யீங்கூறு ஈஞ்ச கோத்திரம், தோடை கோத்திரம்,
 8. முருங்கத்தொழுவு பெரிய கோய்த்திரம்,
 9. பெருந்துறை சாகாடை கோத்திரம்,
 10. கனகபுரம் எலவமூலை சாத்தந்தை கோத்திரம்,
 11. சத்தியமங்கலம் பில்லன் கோத்திரம், செம்பன் கோத்திரம்,
 12. பிடாறியூறு பெறழந்தை கோத்திரம், கூற கோத்திரம்,
 13. கொல்லன்கோயில் பண்ண கோத்திரம்,
 14. கொடுமணல் பனங்காடை கோத்திரம், பாண்டியன், சேரன் கோத்திரம்,
 15. ராசிபுரம் விழிய கோத்திரம்

மோகனூரு கறூரு பஞ்சமாதேவி நெறூரு கோயம்பள்ளி மயில்ரெங்கம் கொங்க பனிரெண்டாம் நகரத்து செட்டியார்கள்

கொங்க அகரம் செட்டியார்கள்

பூந்துறை நாட்டு புலவனார்கள்

ஸ்தலத்து கணக்கப்பிள்ளைகள்

பூந்துறை நாட்டுக் குடிபடைகள்


பாண்டிய தேசம் ஆரூர் நாடார்கள்:  சாத்தாங்குடியூரார், திருமங்கலம், விருதுப்பட்டி, திருச்சுளி, அகலூரு, சிந்தாமணி, சிவகாசி, பாலையம்பட்டி, பழனி வகையறா

இம்மடத்தின் சகோதர மடங்களில் ஒன்றான ஆரியசக்கரவர்த்தி குலகுரு மடம் - இலங்கைக்கு.தமிழக அரசியல் இணையத்திலிருந்து:
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2516&rid=110

தமிழ் ஹிந்து இணையத்திலிருந்து: 
http://www.tamilhindu.com/2011/01/tholseelai-kalagam-book-review/


பாண்டியதேசத்திற்கும், கொங்கதேசத்தின் சில  மடங்களுக்கும்  சிருங்கேரியே சங்கராச்சாரியாராதலால் நமது மடத்தின் ஆச்சாரியாரும் அவரே:    http://www.sringeri.net/வந்தே கவிராஜகுரு பரம்பராம்

 Author's facebook profile