Showing posts with label அகம்படிய தேவர். Show all posts
Showing posts with label அகம்படிய தேவர். Show all posts

Thursday, September 3, 2009

கொங்கு குலகுருக்கள் 25. வலையபாளையம் மடம் - கருவலூர்

வலையபாளையம் மடம்  - ஒன்று 


ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித குருசுவாமிகள்
(நாயன்மார்களில் சுந்தரரின் சித்தப்பா வழிவந்த மடம்) 


(அவினாசியில் முதலை வாய்சென்ற பாலகனை மீட்கும் சுந்தரர் - இதுவே திருமடத்தின் முத்திரையாக உள்ளது ) 



 கைலாசவாசி பெரியவர்  ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித  குருஸ்வாமிகள்


கைலாசவாசி ஸ்ரீ ஆலாலசுந்தர பண்டித குருஸ்வாமிகள் 

திருமடத்தின்  அடுத்த பட்டம்
ஈசானசிவம் ஸ்ரீ பாலாஜி ஆலாலசுந்தரபண்டித   குருஸ்வாமிகள் 


வலையபாளையம் மடம்  - ஒன்று 
இம்மடத்தின்  சிஷ்யர்கள் 

 காணிகள் - கோத்திரங்கள்:

கொங்க வெள்ளாள  கவுண்டர்கள்

1. திருமுருகன் பூண்டி(ராக்கியாபாளையம்) - ஆந்தை கோத்திரம்  (கொளத்துப்பாளையம், ராக்கிபாளையம் - வாய்ப்பாளையம் - சாம்பக்காடு, ராக்கியாகவுண்டன்புதூர், திருமலையாம்பாளையம், பெரியகுரும்பபாளையம் )

2. ஆறை நாட்டில் காணி கொண்ட காங்கேயம் - தூர கோத்திரம் ( பாப்பம்பட்டி, நெருப்பெரிச்சல், மோப்பிரிபாளையம்-ஆத்திக்காடு  , முறியாண்டாம்பாளையம் , புதுப்பாளையம், வாய்ப்பாளையம், ராக்கியக்கவுண்டன்புதூர், குமாரபாளையம் , கணபதிபாளையம் , சாந்தபுரம் , செலம்பரையாம் பாளையம் , அரசூர் -வாகரையாம்பாளையம், பாப்பம்பட்டி, உருமாண்டம்பாளையம் , ராக்கியாக்கவுண்டன்புதூர்)

3. ஆறை நாட்டில் காணி கொண்ட காங்கேயம் - செங்கண்ண கோத்திரம் (செம்மாண்டாம்பாளையம் -செகுடந்தாழி, பல்லடம் வல்லிபுரம், ஈச்சம்பள்ளம், கூட்டப்பள்ளி, நல்லிக்கவுண்டன்பாளையம் புதூர்)

4. ஈங்கூர் - ஈஞ்ச கோத்திரம் (முறியாண்டாம்பாளையம், மூலகுரும்பபாளையம்) 

5. காளமங்கலம்  கன்னந்தை கோத்திரம் - பு. புளியம்பட்டி - நல்லூர் மசிரியம்மன் கோயில் பிரிவு (வலைய பாளையம் , வாகரையாம்பாளையம், தாண்டுக்காரம்பாளையம்-தாழக்கரை,  அவிநாசிப்புதூர், மூலகுரும்பபாளையம், செலம்பரையாம் பாளையம், கணபதிபாளையம், கரடிவாவி, சங்குவநாயக்கன் பாளையம், கிட்டாம்பாளையம் , சோமநூர் ராயர்பாளையம், பாப்பம்பட்டி)

6. பண்ணை  கோத்திரம் ஒரு பிரிவு - (செல்லாண்டாம்பாளையம், மலைப்பாளையம் புதூர் , கூடலூர்-கந்தப்பக்கவுண்டன் புதூர்) 

7. பயிரன்  கோத்திரம் ஒரு பிரிவு - (ரெங்கசமுத்திரம்-கொங்கலம்பாளையம் -பனப்பட்டி, அவிநாசி-சாலைப்பாளையம் ) 

8. பில்லன் கோத்திரம் ஒரு பிரிவு - (ஆலத்தூர் -மொண்டிபாளையம்)


பால வெள்ளாளர்

( கீழுள்ள  கோத்திரங்கள் உத்தம பண்டிதரின்  வசூல் என்றே உள்ளது. இருகூர் மார்க்கண்ட  பண்டிதருக்கு உத்தம  பண்டிதர் என்ற பெயர் உண்டு)

1.நீலாம்பூர் - செம்பன் கோத்திரம் (நீலாம்பூர், கணுவாய், காசிநஞ்சேகவுண்டன் புதூர் ) 

2. கஞ்சப்பள்ளி  - முருக கோத்திரம் - (சோமையனூர்) 

3. கருவலூர் - மாடை  கோத்திரம்  - (சோமையனூர் , காளப்பநாயக்கன் பாளையம் , காசி நஞ்சே கவுண்டன் புதூர், சங்கனூர், செம்மங்குடியூர் ) 

 4. புலிய கோத்திரம் - ஒரு பிரிவு - (நீலம்பூர் )
 

கவுண்டர்கள்  (கோட்டூர் வேலம்பாளையம் , சின்னப்புத்தூர் -சுப்பாராய புதூர் , பூலுவ பட்டி-பெருமாநல்லூர், செஞ்சேரிபாளையம்-கினிபாளையம்,அனுப்பர்பாளையம்-செங்காடு, நல்லகவுண்டம்பாளையம் -சல்லிக்காடு , நீலாக்கவுண்டன்பாளையம் , செங்கம்பள்ளி, காசிநஞ்சே கவுண்டன்புதூர் , சென்னிமலை மணியன் காடு ) 


விலாசம்:
ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித குருஸ்வாமிகள் (வலையபாளையம்  மடம்) 

கே.பாலாஜி சிவம், 
4/45, மாதவன் இல்லம்,
 வடக்கு வீதி, கருவலூர்,
அவனாஷி தாலூக்கா,
திருப்பூர் மாவட்டம் - 641670
Phone No. 04296288761 , 077608 99386










------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலையபாளையம் மடம்  - இரண்டு 

ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித குருசுவாமிகள் 
(நாயன்மார்களில் சுந்தரரின் சித்தப்பா வழிவந்த மடம்) 




 வலையபாளையம் மடம்  - இரண்டு 

இம்மடத்தின்  சிஷ்யர்கள் 

காணிகள் - கோத்திரங்கள்:

கொங்க வெள்ளாள  கவுண்டர்கள்

 1. ஆறை நாட்டில் காணி கொண்ட காங்கேயம் - தூர கோத்திரம் - (ராவுத்தூர் , காங்கேயம்பாளையம், செட்டிபாளையம், காரணம்பேட்டை, காடாம்பாடி, காசிக்கவுண்டன்புதூர், ஆத்தூரன் தோட்டம், உமைஞ்செட்டிபாளையம்)

 2. ஆறை நாட்டில் காணி கொண்ட காங்கேயம் - செங்கண்ண கோத்திரம் - (செட்டிபாளையம், காடாம்பாடி புதுவளவு,  காங்கேயம்பாளையம், கவுண்டம்பாளையம்)

3. ஆந்தை கோத்திரம் - ராக்கிபாளையயம் - (செட்டிபாளையம், ராக்கிபாளையம், அம்மாபாளையம், அவிநாசிலிங்கம்பாளையம்)

4. ஈஞ்சன் கோத்திரம் - (அய்யம்பாளையம், சாலையப்பபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், சூரிபாளையம், வையாபுரிக்கவுண்டன் புதூர் , கவுண்டம்பாளையம்) 

5. காடை கோத்திரம் -  (செட்டிபாளையம், வேலாயுதம்பாளையம் )



வெத்தலகார தேவர் (எ) அகம்படிய தேவர் 

இருகூர்  
  1. சூரியமுக்கந்தன் கூட்டம் 
  2. ராக்கமுக்கந்தன் கூட்டம் 
  3. கருப்ப பண்டாரம் கூட்டம் 
  4. பூசாரி கூட்டம் 
  5. கவுண்டத்தேவன் கூட்டம் 
  6. வைரத்தேவன் கூட்டம் 
  7. நன்னாரி கூட்டம் 
  8. நடுவளவு கூட்டம் 
  9. மணியாரங் கூட்டம் 
  10. கணக்கங் கூட்டம் 
  11. ராசிபாளையத்தார் கூட்டம்  

சூலூர் 
  1. அகம்படிய பட்டக்கார கூட்டம் 
  2. வஷ்ரீ கூட்டம் 
  3. முக்கந்தேவன் கூட்டம் 
  4. கீழ்புரம் திருவிடைமருதூர் 
  5. மேல்புரம் திருக்கண்ணபுரம் வைரத்தேவன் 
  6. பூசாரி கூட்டம் 
  7. காமாட்சி தேவன் கூட்டம் 
சிங்கநல்லூர் பள்ளபாளையம் 
  1. முக்கந்தன் கூட்டம் 
  2. காமட்சிதேவன் கூட்டம் 
  3. கொத்தங் கூட்டம் 
  4. கணக்கங் கூட்டம் 
  5. புதுப்பளையத்தான் கூட்டம் 
மேலும் கொங்கு நாட்டிலுள்ள அகம்படிய தேவருக்கு கத்தங்காணி மடமும் குலகுருவாக உள்ளார் 



விலாசம்:
ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித குருஸ்வாமிகள் (வலையபாளையம் மடம் )   

ஸ்ரீ-ல-ஸ்ரீ ராசமாணிக்க  குருக்கள், 
16, மாதையன் வீதி,
தூக்க நாயக்கன் பாலையம்,
கோபி தாலூக்கா, ஈரோடு மாவட்டம்.
போன் - 09788192282, Son - 9487041985, Grand son - 9894417690


மேலும் தகவல்கள் அறிய ஆசிரியரைத் தொடர்புகொள்ளவும்: 0424 - 2274700

கொங்கு குலகுருக்கள் 23. கத்தங்காணி மடம்



ஆறுசெஞ்சடை வேதாந்த மூர்த்தி பண்டித குருஸ்வாமிகள்






மரம் பிடுங்கிப் பட்டக்காரர் செப்பேடு
மூலம்

ஹரிஓம் சுபமஸ்து சுவஸ்திஸ்ரீ மகாமண்டலேசுவரன் அரியதள விபாடன் பாஷைக்குத் தப்புவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதான் துலுக்கர்ரள விபாடன் துலுக்கர்மோகந் தவிள்த்தான் ஒட்டியர்தள விபாடன் ஒட்டியமோகந் தவிள்த்தான் மும்மண்டல ஸ்தாபனாதிபன் கோதண்டராமன் கலியுகராய கண்டன் எம்மண்டலமும் கொண்டு ழுந்த சிம்மாசனாதிபன் அசுவபதி கெசபதி நரபதி சத்திரபதி அரிச்சந்திரசேகர மகாராயர் பிரபுடதேவ மகாராயர் அச்சுததேவமகாராயர் விருபாட்சிதேவ மகாராயர் மல்லிகார்ச்சுனதேவ மகாராயர் யிப்படி மைசூர் சமஸ்தான தளபதிளோடு தளகர்த்தராகிய

விசையாத்புதய சாலிவாகன சகாப்தம் ஆயிரத்து நஊற்று நாற்பத்தாறாம் வருஷம் ஆயிரத்து நாற்பத்தாறாம் வருஷம் கலியுக சகாப்தம் நாலயிரத்து முன்னூற்று இருபத்தைந்தாம் வருஷம் சித்திரபானு வருஷம் மைசூர் நஞ்சராய உடையார் அதிகாரத்தில் செம்புத்தீவில் திராவிட தேசத்தில் கொங்கு மண்டலத்தில் தென்கரை வீரசோழ வளநாட்டில் கத்தாங்கண்ணி அமுக்கயம் முகுந்தனூர் இநத மூன்று கிராமமு மூவராசாக்களால் நாளதுவரை ஆண்டு கொண்டிருக்கிற ஆறுசெஞ்சடை வேதாந்த மூர்த்தியானவர் முகுந்தனூர் குரக்குத்தளி ஆளுடைய நாயனாராகிய சுக்கிரீசுவரசுவாமி கோயில் சிகஸ்தானதைக் கண்டு யிது சீறண உத்தாரணம் செய்கிற கடமை ராசாக்களைச் சேர்ந்ததல்லவோ என்று மைசூர் சமஸ்தானமாகிய நஞ்சராய உடையார் சமூகத்துக்கு நிரூபம் எழுதினார்.

அது கேட்டு ராசமானிய ராசஸ்ரீ நஞ்சராய உடையார் தம்முட தளபதிகளோடுகூடிப் பயணம் புறப்பட்டு முகுந்தனூருக்கு வருகிற வழியில் தொரவலூர் கண்டது. அங்கே வந்து பாளையம் இறங்கி அங்கே தங்கியிருந்த மற்றாநாள் முகுந்தனூர் வந்து சேர்ந்து ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்தியைக் கண்டு பேசிக்கொண்டு இருவகைப்பேரும் கூதி கோவிலெ சுத்திப் பார்த்து நல்ல முகூர்த்தமிட்டு வேலை துடங்கி நடந்து வருகுறபோது

ராசா முகுந்தனூருக்கு நல்லாத்திலே ஏரி போட்டு குளம் உண்டாக்கி கோவிலும் குளமும் வேலை நடத்த வருகுறபோது ராசா மைசூருக்கும் முகுந்தனூருக்கும் போகவர தங்கல் செய்து போறதாயிருக்கும் போது தொரவலூருக்கு அதிபனாகிய பால வேளாளரில் அபிஷேக கவுண்டன் அங்கமுத்துக்கவுண்டன் லிங்கக்கவுண்டன் அத்தப்பகவுண்டன் யிந்த நாலு பேரு ராசபோக வர தங்கல் வைக்கும்போது சறுப்பராசி செய்து வருவார்கள்.

இப்படி யிருக்குற காலத்திலே தொரவலூருக்குப் பக்கக் கிராமங்களிலேயிருக்கிற வேட்டுவக் கவுண்டர்கள் யிந்த தொரவலூர் பாலவெளாளக் கவுண்டர்கள் பேரில் ஒரு வாக்கு விஷயங்களிலே பவிறிஷமுண்டாகி யிவர்கள் பேரில் குமுக்கு கூடி வந்து யிவர்களைச் சம்மாறம் பண்ண எத்தனிச்சார்கள். அநதத் தகவல் இவர்கள் அறிந்து முகுந்தனூருக்கு வந்து கோயில் வேலைத்தரப்பிலே யிருக்கிற ராசாவைக் கண்டு அறிக்கை செய்தார்கள். அப்போது ராசாவுக்கு அதிக கோபமாயி நம்மிட அதிகாரம் அப்படி ஆச்சுதோ என்று ஆக்கிரமித்து தம்முட தண்டு தாணையங்களுக்கு ஆளனிப்பி வரவழைத்து அவர்களைச் சரிப்படுத்தி விடுகிறே னென்றார்.

அது கேட்டு யிவர்கள் தங்கள் தண்டு தாணையம் வாரதுக்குள்ளாக எங்களைச் சரிப்படுத்தி விடுவார்களென்று சொன்னார்கள். அது கேட்டு ராசாவும் முகுந்தனூரு குருவாகிய ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்தியை வரவழைத்து ஆலோசனை பண்ணினார். அது கேட்டு ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்தியும் தம்முட தானக்கிராமமாகிய முகுந்தனூரில் காணி குடுத்து வைத்திருக்கிற சீஷப் பிள்ளைகளாகிய செல்லகுலத்தில் செம்பெரிச்சாக்கவுண்டனையும் தூரன் குலத்தில் முத்துக்கவுண்டனையும் பவளகுலத்தில் வாணவராயக்கவுண்டனையும் வரவழைத்து யோசனை செய்யும்போது அதிலே செல்லகுல செம்பெரிச்சாக்கவுண்டன் என்பவன் சுவாமியாரைப் பார்த்து சுவாமி தங்களுடைய மந்திரசித்தி அனுக்கிரகம் செய்து குடுத்தால் ஒரு கை பார்க்கிறோம் என்றான்.

அப்போது சுவாமியாரானவர் செம்பெரிச்சாக்கவுண்டனை ஸ்நானஞ் செய்து கிட்டவரச்சொல்லி மரம்பிடுங்கி யுத்தம் பண்ணும்படியாக மந்திர உபதேசம் பண்ணி ஒரு மூலிகையும் குடுத்து விபூதியளித்து அனுப்பிவச்சார்.

அப்போது செம்பெரிச்சாக்கவுண்டன் சிறிது குமுக்குடனே போயி சுவாமியார் சொன்ன மந்திரத்தை உச்சரித்து மரங்களைப் பிடுங்கிக்கொண்டு போறபோது எதிரிப்படை பயந்துபின்வாங்கினார்கள். அதுகண்டு பின்னும் சிலசில மரங்களைப் பிடுங்கிக்கொண்டு படையிலே புகுந்து மோதியடிக்கிறபோது படைக்குத் தலைவனாகிய வேட்டுவன் வணங்காக்கவுண்டன் கண்டு எதுத்தான் அவனைக்கண்டு மரத்தினாலே சிதறடிச்சு மரணப்படுத்தினான் அதுகண்டு படைமுறிந்து ஓடிப்போனார்கள் யிவர்களும் தங்கள் குமுக்குடனே முகுந்தனூருக்கு வந்து சுவாமியாருடைய கிருபையினாலேயும் தங்களுடைய வரத்தினாலேயும் செயம்பண்ணி வந்தோம் என்றார்கள்.

அதுகேட்டு ராசாவும் வெற்றிமாலை சூட்டி வந்தாயே என்று சந்தோஷப்பட்டு பாலவேளாளராகிய அபிஷேகக்கவுண்டன் வகையறா நாலுபேரையும் வரவழைத்து வைத்துக்கொண்டு உங்களுடைய எதிரிகளை நம்மாலே விலக்கப்பட்டதல்லவே யிந்த சுவாமி யாருடைய மந்திர சக்தியினாலேயும் யிந்த செம்பெரிச்சாக்கவுண்டனாலேயும் வெற்றியாச்சுதல்லவோ யிப்ப அவர்களுக்கு என்ன குடுக்கிறீர்களென்று கேட்கிறபோது

தங்கள் சித்தத்துக்கு சம்மதமானபடி குடுத்துவிடுகிறோமென்றார்கள் அதுகேட்டு ராசா உங்களுக்கு முன் மூவராசாக்கள் வேட்டுவன நீங்கள் செயித்து உங்களுக்கு காணி குடுத்த தொரவலூரில் முகுந்தனூர் செல்லங் குலத்தானாகிய செம்பெரிச்சாக்கவுண்டனென்பவன் முன்பகை தீர்த்து மரம்பிடுங்கி செயம்பண்ணிவந்தபடியினாலே மரம்பிடுங்கி செம்பெரிச்சாக்கவுண்டனென்று பேருங்குடுத்து சாதியாவுக்கும் மதாசாரப்படிக்கி விசாரணை பட்டக்காரனாகப் பதினெட்டு விருதுங்குடுத்து பட்டங்கட்டி நாட்டுகிறோம். மானியங்கள் அவனுக்கும் அவன் குருவாகிய ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்திக்கும் இந்தத் தொரவலூரில் அரை வரிசை காணி குடுத்துச் சந்திராதித்தர் உள்ளவரைக்கும் நடத்திவருகிறோமென்று தாம்பிர சாசனத்தில் எழுதிக் கொடுக்கச் சொல்லிச் சொன்னார்.

நல்லதென்று சம்மதிச்சு எழுதிக்குடுக்கும்போது ராசா சொன்னது அவர்களுக்கு காணி குடுத்ததுக்கு நடக்கிற வரிசையென்னயென்றால் ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்திக்கு இந்தத் தொரவலூரிலுள்ள் தேவதைகளுக்கு பிரதிஷ்டை கும்பாபிஷேகம் அவரைச் சார்ந்தது. அவர் வகையறாவில் பூசையும் நம்பியூர் கெடாரை முதல் அவர் மானுபத்தில் நடக்கும்படி வைத்திருக்கின்றோம் அவருக்கு மானியமும் விடுறோம் நீங்கள் அவரை மோட்ச குருவாக வைத்துக்கொண்டு வருஷம் ஒன்றுக்குக் கட்டின வீட்டுக்கு கால் ரூபாய் கொடுத்து வரவும். அது தப்பிதம் பண்ணும் காலையில் ஒரு தோஷம் கிடைக்கும் அது அறிந்து நடந்து கொள்ளவும்

மரம்பிடுங்கிப் பெரிச்சாக்கவுண்தனுக்கு நாமள் பட்டங்குடுக்கிறபடியினாலே நம்ம சிவத்தலத்துக்கு முந்திய விபூதியும் ராச தெரிசனமும் நடத்திவரவும் உங்களுக்கு முப்பாட்டு மிராசு படைக்கலமிராசு உங்களைச் சேர்ந்தது பாக்கு வெத்திலை மட்டும் சன்னதி சபையில் பட்டக்காரன் வந்திருந்தால் குடுத்துப்போட்து எடுத்துக்கொள்ளவும் அல்லாத வரையில் நேர்ந்தபடி குடுடுத்துக்கொள்ளவும்

என்று ராசா சொல்லவும் அந்தப்படிக்கு பாலவேளாளகவுண்தர்கள் சம்மதிச்சு அபிஷேகக்கவுண்தன் அங்கமுத்துக்கவுண்டன் லிங்கக்கவுண்டன் அத்தப்பகவுண்டன் யிவர்களெல்லாம் நான்கு பேர்களும் கூடி ராசாவை வைத்துக்கொண்டு சாமியாரும் மரம்பிடுங்கிப் பெரிச்சாக்கவுண்டனும் கையெழுத்து வைத்து எழுதிக் குடுத்த தாம்பர பட்டயம்

அதன் பிறகு ராசாவும் ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்தி கையினாலே மரம்பிடுங்கிப்பெரிச்சாக்கவுண்டனுக்கு கலியுகம் நாலாயிரத்து இருபத்தைந்து வருஷம் சாலிவாகன சகாப்தம் ஆயிரத்து நூற்று நாற்பத்தாறு வருஷம் சித்திரபானு வருஷம் வையாசி மாதம் பதினைந்தாம் தேதி சுக்கில பட்ச சுக்கிரவாரமும் தெசமியும் அசுபதி நட்சத்திரமும் சுபநாமயோகமும் கெறச வாகரணமும் பெற்ற சுபதினத்தில் அபிஷேகனாதசுவாமி சன்னிதியில் பட்டம் வைத்து குடை, குதிரை, பல்லாக்கு விசிறி வெண்சாமரை மூலை ஆயுதங்களும் வெகுமானங்குடுத்து குடியேற்றிவைத்து முகுந்தனூரிலே வேலை நிறைவேறச்செய்து பிரதிஷ்டை கும்பாபிஷேகம் செய்துவைத்து ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்திக்கு அந்தப்படிக்கு வெகுமானங்குடுத்து முகுந்தனூரிலிருந்த அண்ணமார்சுவாமியை தொரவலூரில் கட்டி இந்த சா,இயார் கையினாலே பிரதிஷ்டை கும்பாபிஷேகம் செய்யச் சொல்லி மரம்பிடுங்கி பெரிச்சாக்கவுண்டனைக் கூப்பிட்டு உங்கள் குருவாகிய ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்தியாலே உங்களுக்கு காணியும் மேன்மையும் கிடைத்தபடியினாலே அவருக்கு நீங்கள் வரிசைக் காணிக்கை வீடொன்றுக்கு நாகரம் பணம் அஞ்சு பணம் குடுத்து வரவுமென்று கட்டளையிட்டு

அபிஷேககவுண்டன் வகையராப் பேர்களை கூப்பிட்டு இந்தப்படிக்கு யாமிருந்து செய்த காரியத்துக்கு எப்போ நிந்தனை செய்கிறீர்களோ அப்ப உங்கள் குடி நசுஞ்சு போகும் கங்கைக் கரையிலே காரம்பசுவையும் பிராமனரையும் கொன்ற தோஷத்தில் போகக்கடவீர்கள் ஆகையால் இதை பரிபாலனம்பண்ணி வந்தீர்களானால் சகல பாக்கியமும் சகல விசயமும் பெற்று சுகமாயிருப்பீர்கள் என்று ராசா இருந்து இந்தப்படிக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி வாங்கிக் குடுத்த தாம்பர சாதனப்பட்தயம் யிதுக்கு சாட்சி ஆண்டிமன்றாடி சோழியாக்கவுண்தன் அறிவேன் ஆண்டவர் துணை.

காணிகள் - கோத்திரங்கள்:
சிவ பிராமணர்கள்:
அல்லாளபுரம் - மார்க்கண்டேய கோத்திர ஸ்தானிக கோயில் சிவாச்சாரியார்கள்

கொங்க வெள்ளாளர்கள்:
1.கத்தாங்காணி-வெண்டுவ கோத்திரம் (தோக்கவாடி, தாளக்கரை - காளியம்மன்)
2. கத்தாங்காணி - பண்ண கோத்திரம் - அழகு நாச்சியம்மன் (பெரியபாளையம்)
3. கத்தாங்காணி - செவ்வந்தி கோத்திரம் (இலுப்புலி-பொன்னாச்சி அம்மன்)
4. பிடாரியூர் - கூரை கோத்திரம் (முருங்கையம்மன்)
5. பிடாரியூர் - பிறழந்தை கோத்திரம் (முருங்கையம்மன்)
6.முகுந்தனூர் (சர்க்கார் பெரியபாளையம்) - தூர கோத்திரம் + குப்பிபாளையம் (நம்பியூர்)
7.முகுந்தனூர் (சர்க்கார் பெரியபாளையம்) - செல்ல கோத்திரம்
8. அமுக்கயம் - பிறழந்தை கோத்திரம்
9. தொறவலூர் - செல்ல கோத்திரம் (அண்ணமார்)

கொங்க கைக்கோளர் (பெருந்தாலி):
அமுக்கயம் - கரிய காளியம்மன் கோயில்

வெத்தலக்கார  தேவர்கள்:
1. கொடுமணல் - தங்கம்மன் கோயில் (பெரிச்சிபாளையம்)
2. வெள்ளலூர் - அரசண்ணன் கோயில்
வெத்தலக்கார தேவர் (எ) அகம்படிய தேவர் (மேலும் கொங்கு நாட்டிலுள்ள அகம்படிய தேவருக்கு வலையபாளைய மடமும் குலகுருவாக உள்ளார் )

பாண்டிய வெள்ளாள பிள்ளைமார்:
அமுக்காயம் - கரியகாளியம்மன்

பவள கோத்திரத்து வாணவராயர் (சமத்தூர் ஜமீன்) குலகுரு என்று பட்டயம் சொல்கிறது.

முகவரி:
மகன்:
S.நல்மணி வேதாந்த பண்டித குருஸ்வாமிகள்,
34/17, செல்வ விநாயகர் கோவில் வீதி,
குமரானந்தபுரம்,
திருப்பூர் - 2.
செல்: 99761 77007
போன்: 0421 - 2472535

பெரியவர்:
நல்மணி வேதாந்த பண்டித குருஸ்வாமிகள்
வரசித்திவினாயகர் ஆலயம்,
ராம் நகர் ஒன்றாம் வீதி,
திருப்பூர்.
போன்: 0421 - 2208010

தற்பொழுது திருப்பூர் அருகிலுள்ள சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீச்வரர் கோயிலில் ("கொங்கில் குருமால் குரக்குத்தளியாய்" என்று சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலம்) உள்ளார் .

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கால...