Saturday, September 5, 2009

கொங்கு குலகுருக்கள் - 0. கள்ளகவுண்டம்பாளையம் மடம்

கொங்கு குலகுருக்கள் - 5௦. 1. ஸ்ரீமது  குழந்தையானந்த குருசுவாமிகள் 

குருபரம்பரை:


நந்தீஶ்வரர்
|
ஆதி கோரக்கநாதர்
|
மயிலாபுரி ஆனந்தர்
|
ஏலேலசிங்கன்
|
குழந்தையானந்த சுவாமிகள்


ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் மடங்கள் 
50B. கள்ளகவுண்டம்பாளையம்
மடம் (நஞ்சப்பகவுண்டம்பாளையம்
 பிரிவு)
61. பாலக்காடு பகுதி


கள்ளகவுண்டம்பாளையம் குழந்தையானந்த குருமடத்தின் குலகுரு
காசிவாசி ஆனந்த குழந்தையானந்த சுவாமிகள்
சுவாமிகள்


பழமையான குரு பட்டாபிஷேகக் காட்சி மட சேவகர்களுடன்


சுவாமிகள் அவர்களது அதிஷ்டானம் 









காசிவாசி சதாசிவ குருக்கள்
மடத்தின் சேவகர் வில்லை
முடவாண்டார் சத்தியமங்கலம் குழந்தையானந்த சாமிகள் மடத்தின் முத்திரை

சிவபதமடைந்த மடாதிபதிக்குபின் மடத்தை பேண குருவால் சிஷ்யர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை:



சிஷ்யர்கள் தலைக்கட்டு ஏட்டில் ஒரு பக்கம்

கோரக்கரது வாம சிம்மாசன கரத்தர் மட உற்பவ சரித்திரம்:

உற்பவம் 
கைலாசநாதரிடம் நடனமிட்டருள்புரியும் காளிகா தேவி பூசைக்காக வென்றே சிவன்கருத்திலே நினைத்திட காராம்பசுவின் வயிற்றிலிருந்து கங்காளரூபமாய்வரும்போது காதினில் கவச குண்டலமும் முத்திரி கனக சிலம்பும் ஐந்துசடையும் ஐம்புரிக்குள்ளாகவும் ரத்நிலகந்தமும் பூணுலும் உத்திராஷ மாலையும் காணவுள் கட்டு கச்சையும் கம்பிளிக் கயிறுடன் கனக சோளியும் கருதறியாப் பளிங்கு முத்திரி விசிறியும் கழுத்தினில் தவளும் கண்ட கோடாரியும் அயன் மருள் பிர்மா முடியும் ஜெபமிகுந்திடு தின்டு பாத்திரமும் திருக்கரந்தன்னில்சிங்கார மணியும் தவயோகி வேஷ்டியும் செய்யுந் துபலாத்தியுந் திருமேனிதன்னிலே விபூதி பூசை திகழ் திகழ் தன்னிலேருந்து சீரங்கப்பட்டனம் மைசூர் சமஸ்தானத்தில் வந்து விளையாடி தென்மதுரை குகை வாசல் தன்னிலே இருந்து 

பக் 2

சிவயோகி-வடிவமாகி தவ்வுடன் புலித்தோள்லாவினம் விரித்துமே சந்தி சந்தி  யாராதணைக்கருள் சாஸ்திர முறை தவறாமல் அம்மன்பூசை மகேஸ்பரபூசையும் செய்து கொண்டத்து வாசல் தன்னில் கோரக்கர்நாதர் சமூகம் மகோதிரம் பெருவயிர் காமாலை சோகை நோய்பறந்து  பாண்டுகற்ப ரோகங்களும் கனவாய்வு குன்மம் காட்டேரி வீடு பிள்ளி சூனியமும் வைப்புக்கடப்பவரது சிவசக்தி வராது சிவசக்தி யாராதனை்குரிய  மலரினிய கோலாகலி மகுமைதான் யாவர்க்கும் அறியாத வாள் திரிபுவனியை மறவாமல் அர்ச்சனை செய் கங்காள கோத்திரம்  வளமையானந்தமே மிதுவே.










ஶ்ரீ குழந்தையானந்த குலகுருவுக்கு ஆதேஶ் மந்திரப்படி பூஜை





திருச்செங்கோடு ஜோகியார் மடத்தில் உள்ள குழந்தையானந்த குருசாமிகள் (8.9.2026) சன்னிதியில் சிஷ்யார்ச்சனை


கள்ளகவுண்டம்பாளையம் மடத்து சிஷ்யர்கள் : 

A. கொங்கு வெள்ளாளரில்,

1. மேழியபள்ளி - செங்குன்னி கோத்திரம்
2. மின்னாம்பள்ளி - விளையன் கோத்திரம்
3. கூத்தம்பூண்டி (மாணிக்கம்பாளையம்) - விளையன் கோத்திரம்
4. துக்காச்சி - மணிய கோத்திரம் (ஒரு பிரிவு)
5. பில்லூர் - காடை கோத்திரம் (ஒரு பிரிவு)
6. மோகனூர் - மணிய  கோத்திரம் (ஒரு பிரிவு-புத்தூர், காரைக்குறிச்சி)
7. நாகம்பள்ளி - அந்துவன் கோத்திரம் மட்டும்
8. கொன்னையாறு  - செல்லன் கோத்திரம் (ஒரு பிரிவு-  மேட்டூர்,சித்தார்,பூனாட்சி புதூர்)
9. தொட்டம்பட்டி - தேவந்தை கோத்திரம் (தேவேந்திரன் கூட்டம்) 


B. கொங்க ஆண்டிபண்டாரம் (கோமணாண்டி கோவம்சம்) 
1. சேலம் நாடு
2.ராசிபுர நாடு
3. பருத்திப்பள்ளி நாடு
4. வாழவந்தி நாடு
5. ஏழூர் நாடு
6. கீழ்கரை பூந்துறை நாடு
7. கீழ்கரை அரைய  நாடு
8. காங்கேய நாடு
9. தென்கரை நாடு
1௦. கிழங்கு நாடு
11. தட்டய நாடு
12. நல்லுருக்கா நாடு
13. பொங்கலூர் நாடு
14. மண நாடு
15. வெங்கல நாடு
16. வையாபுரி நாடு
கொங்கு கோமணாண்டி கோவம்ச பண்டாரம்  ஆதேஶ் மந்திரம், மோக்ஷதீபம் ஆகியவற்றில்  குழந்தையானந்த குரு பற்றி :



C. கொங்க நாவிதர் (ஒரு பிரிவு) 
கொங்க நாவிதர் உற்பத்தி பட்டயம் நகல்:
கொடுமுடி கணபதிபாளையம் நாவிதர் தலைக்கட்டுக் கணக்கு:




D. கொங்கு தேச வேட்டுவ கவுண்டரில் 

  1. பிள்ளை வேட்டுவர் - வேட்டமங்கலம்
  2. பொன்ன வேட்டுவர் - கூடற்சேரி
  3. மாட வேட்டுவர் - ஆவணி பேரூர் (பூவாணி)


E.கொங்க கைக்கோல முதலி - ராசிபுரம்அத்தனூர், குருசாமிபாளையம் 

F. கொங்கு நாட்டு முடவாண்டி பண்டாரம் 

G.  வன்னிய குல படையாச்சி - சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள படையாச்சி கண்டர் வகையில்  - அரசப்பள்ளி மட்டும்.

H. செட்டுகாரர் - பாலசெட்டி - சேலம், நாமக்கல் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ளோர்.

I. பிள்ளைமார்கள் - பரமத்தி மரவபாளையம்

J. கொங்க பள்ளர் வகையில் - கத்தான்காணி




K. கொங்க சாம்பான் (பறையர்) : http://konguparayan.blogspot.in/


முடவாண்டி பட்டயம் (கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள் - புலவர் செ.ராசு):





மேலுள்ள பக்கத்தில் கடைசி ஆறு செய்யுள் வரிகளில் குழந்தையானந்த குருவின் மகதுவம் உள்ளது. மடத்தில் சாக்த (சக்தி) வழிபாடு பிரதானமாக உள்ளதென "தேவியர்ச் சனைசெய’ என வருவதன் மூலம் அறியலாம். பண்டாரங்களுக்கு சக்தி கோயில் முறைகளை போதித்துள்ளனர். இசை வளர்த்த பறையர்களும் தேவி கோயில்களில் "தப்பட்டை சேவிப்பது", பம்பை, கரடி உள்ளிட்டவை இசைக்கும் பம்பைக்காரர்கள்  என்ற தொன் சாம வேத வழிபாட்டு முறையினை இன்றளவும் செய்து வருகின்றனர். எனவே அவர்களுக்கும் இவற்றை போதித்தவர் எனக் கொள்ளலாம்.



மொடவாண்டி சத்தியமங்கல மானிய சிலா சாசனம் - விஜயநகர மூன்றாம் அரச வம்சாவளியான துளுவ வம்சாவளி காலம் (1554 CE) 


சிதிலமடைந்துள்ள கள்ளகவுண்டம்பாளையம் மடத்து அரண்மனை


கூத்தம்பூண்டி (மாணிக்கம்பாளையம்) விலையன் கோத்திரக் கொங்க வெள்ளாளக் கவுண்டர்கள் சஞ்சாரம் (08/11/2022):






குலகுருவுக்கு சிஷ்யர்கள் சார்பாக வரவேற்பு பாதபூஜை.

மின்னாம்பள்ளி விலைய கோத்திரத்தார் குலகுரு ஆசி வழங்கல்:




கோவம்சத்தார் குலகுரு பூஜை:

கோவம்ச பண்டாரத்தார் குலகுருபூஜை:





2026 கரூர் நாகம்பள்ளி அணைக் கருப்பண சாமி கோயில் கும்பாபிஷேகத்தின் போது


2026 கரூர் நாகம்பள்ளி ஶ்ரீ செல்லாண்டியம்மன்  கோயில் கும்பாபிஷேகத்தின் போது அந்துவ கோத்திரத்துச் சிஷ்யர்களுக்கு ஆசி



விலாசம்:
செந்தில் குமார் குருக்கள்,
சதாசிவ குருக்கள் மகன்,
குருக்கள் வீடு,
கஸ்பாபேட்டை,
மொடவாண்டி சத்தியமங்கலம் பஞ்சாயத்,
ஈரோடு ஜில்லா

பொன்:
94861 53444


---------------------------------------------------------------------------

           5௦B. ஸ்ரீமது            குழந்தையானந்த    குருசுவாமிகள் - கள்ளகவுண்டம்பாளையம் 2. நஞ்சப்பகவுண்டம்பாளையம்
 பிரிவு
(கள்ளகவுண்டம்பாளையம் மடத்தின் மருமக்களாக வந்து பிரித்துக்கொடுக்கப்பட்ட மடம்)

காசிவாசி நல்லமுத்து குழந்தையானந்த குருக்கள்
காசிவாசி ராஜாமணி குருக்கள்



சிஷ்யர்கள்:
1.நாகம்பள்ளி-ஆதி கோத்திரம்
2.நாகம்பள்ளி-அந்துவ கோத்திரம் (மேலுள்ள மடத்திற்குச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றோர்)
3.நாகம்பள்ளி-சாத்தந்தை கோத்திரம்
4.நாகம்பள்ளி-பூச்சந்தை கோத்திரம்
5.துக்காச்சி-மணிய கோத்திரம்
6.கொல்லங்கோயில்-பண்ணை கோத்திரம்
7.கீரம்பூர்-பண்ணை
(மேலும் பல)

கோவணாண்டி பண்டாரம்:
அவினாசி பகுதி (ராயர் கோயில்)
கொங்கு கோமணாண்டி கோவம்ச பண்டாரம்  ஆதேஶ் மந்திரம், மோக்ஷதீபம் ஆகியவற்றில்  குழந்தையானந்த குரு பற்றி :



வேட்டுவக்கவுண்டர்:
அரவக்குறிச்சி பகுதி

பள்ளர் மற்றும் பலர்

விலாசம்:
வாசு குருக்கள்,
மூலப்பாளையம்,
ஈரோடு 

போன்: 82489 88618

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை  (பாசூர் சோழிய மஹா சைவ மடம்) திருமூலர் காலம்  (அகத்தியரது முதல், இடைச் சங்க காலம்): ஶ்ரீ நந்திதேவ...