Wednesday, September 2, 2009

கொங்கு குலகுருக்கள் 20. இருகூர் மடம்

ஸ்ரீமத் மார்கண்டேய பண்டித குருஸ்வாமிகள் - மருதமலை மடாதிபதி- இருகூர் மடம் 
தற்போதைய குருஸ்வாமிகள் 












Irugur Swamigal on Heritage conservation


 மருதமலை இருகூர் மடாதிபதியிடம் உள்ள கையெழுத்துப் பிரதி
--------------------
கொங்கு நாட்டு வழக்கம்

எமதேவிஅக்கினி பகவான் என்ற ரிசிக்கு ரேணுகா தேவி என்பாள் பெண். அந்த பெண்ணுக்கு புத்திரன் இல்லாமல் ஈஸ்வரனை நோக்கி தவசு செய்தாள். அக்காலத்தில் பரசுராமன் பிறந்தார். அனேக சாஸ்திரம் கற்றார். அக்காலத்தில் ஆறுவகை சக்கரவர்த்தியும், கார்த்தவீரியன் முதலான பேரும் வந்து ரேணுகாதேவியை கண்டு மோசமாய் வருகிறதை கண்டு அந்த பேண்ணுக்காக எனதேவிஅக்கினி பகவான் தலையை வெட்டி அவன் சடை தலையை காமதேனு என்ற பசுவின் கழுத்தில் கட்டி விட்டார்கள். அந்த தலையை கொண்டு வந்ததை கண்டு பரசுராமர் கோவித்துக்கொண்டு மழுவாயுதத்தால் கார்த்தவீரியன் வம்ஷம் 21 வம்ஷமும் வெட்டி அந்த ரத்தத்தை ஒரு குடத்திலே ஏற்று முழுகி இருந்த படியினாலே பரசுராமனை கண்டு பயந்து சத்துரியர்கள் தலையை சிறைத்து அடிமையாக வந்தார்கள். அடிமை புகுந்து அச்சமயம் அக்னி குண்டத்திற்கு காவலாய் இருந்தார்கள். அந்த கொல்லிட்டு வைகை வனத்திலே பரசுராமர் சிறிதுகாலம் இருந்தார். அப்புரம் வைகுண்டம் போற சமயத்திலே அக்னி கார்த்த அரசு மக்களுக்கு அக்னி வீசமர் என்று பெயர் இட்டான். அப்போது அரச மக்கள் அடியேன்களுக்கு தேசம் வேணும் அரச மக்கள் சொல்கையில் பரசுராமர் கோல்கர்னை பரசுரோமன் மந்திரம் ஜபித்து சூழிகை சமுத்திரத்தில் எறிந்தார்.
1400 காதவழி சமுத்திரம் வத்திவிட்டது. அந்த பூமியை அக்னி கார்த்த றாய ஶ்ரீகளுக்கு பூமியை கொடுத்து அரச மக்களுக்கு ஊழியமாது பிராமணரையும், குருவையும், தெய்வத்தையும், பெண் முதலாய் இராஜிய பரிபாலனம் பண்ணுங்கள் என்று சொல்லி வைகுண்டம் சென்றார்.
இந்த படிக்கு இராஜ்ய பரிபாலனம் பண்ணியிருந்த மூன்று பேருக்கு பூமியை பிரித்து கொடுத்து சேர சோழன் பாண்டியன் என்று மூன்று பேர் முடி பொருந்தவர்கள். சேரமான் பெருமானாருக்கு கொங்கன் என்றும் பேர், சோழ மண்டலம் என்றும் பேர் ஆனது. இதற்கு சிறப்பு கொங்கு மண்டலம் என்றும் பேரானது. கொங்கு மண்டலத்து பெருமை வானி, நொய்யல், காவேரி, ஆன்பெருநல், ஆளியாறு, திருமணிமுத்தாறு, தர்பையாறு. ஏழுகாவூர் வெஞ்சமாங்கூடல், திருநணாவும், திருமுருகன்பூண்டி, அவினாசி, பேரூர் ஆக சுந்தரமூர்த்தி வாக்கினால் பாடல் பெற்ற ஊர் ஏழுதிட்டை புராணம் கண்ட
ஏழுகரை என்று சொல்லப்பட்ட கொங்குமண்டலத்து முந்தினது தில்லைபுரம், வஞ்சிபுரம், லாடபுரம் இந்த 4 புரமும் 4 யுகம் கண்டது. இந்த தாராபுரத்திற்கு சேர்ந்த 24 நாட்டார் விவரம்: நரையனூர் நாடு, வைகாவூர் நாடு, அரைய நாடு, தலைய நாடு, மணலூர் நாடு, வெங்கல நாடு, இடைபூசல் நாடு, பூசல நாடு, தட்டை நாடு, அண்ட நாடு, கொண்ட நாடு, தென்கரை நாடு, வீரசோழவள நாடு, கிழங்கு நாடு, மேல்கரை பூந்துறை நாடு, வஞ்சி நாடு, வண்டி சூழ்ந்த ஆறுநாடு, வடபாரிச நாடு, ஒடுவங்க நாடு, குறிப்பு நாடு, 4 ஊர்பற்று நாடு, வடகரை பேரூர், வடகரை வீரசோழவளநாடு ஆக வண்டி சூழ்ந்த ஆறுநாட்டுக்கு துர்க்கத்திற்கு சேர்ந்த இரண்டு நாடு இரண்டு நாடானது: பூவாணி நாடு, ராசிபுர நாடு, எழுகாவூர் பக்க நாடு, பருத்திப்பள்ளி நாடு, முகவ நாடு, வாழவந்தி நாடு, விடலி நாடு, வடகரை நாடு,
 கீழ்கரை நாடு பூந்துறை நாடு, கீழ்கரை அரைய நாடு ஆக துர்க்கத்திற்கு சேர்ந்த நாடு 12. கொங்கு மண்டலத்திற்கு சேர்ந்த நாடு 42. இந்த 42 நாட்டிலேயும் மிகுந்து பூந்துறை பட்டணமாக்கி கொண்டு சேரமான் பெருமாள் இராஜ்யம் பாரம் பண்ணினான்.
 இப்பால் தொண்டமண்டலத்து கொதப்ப நாடு உடுப்பூரிலே புல்வேடர் நூற்று பதினாயிரம் பேராம். இவர்கள் பெண்களுக்கு காதோலை, மூக்குத்தி, இரண்டு கைவலையல், நெறிபிடித்து புடவை உடுத்துகிறது. தண்ணி, விறகு, முதுமுதல் ஆம்பிளேக்கு பெண்கள் வீட்டில் சமைக்கும்படி சேர்ந்த வேடன் நூற்றி பதினாயிரம் பேரும் உடுப்பூரில் ஒக்காயில் இருந்தார்கள். அதிலே ஒருத்தன் அவன் பேரு நாகன். அவன் பெண்ஜாதி தத்தை. இவர்களுக்கு பிள்ளை இல்லாத படியினாலே சுவாமியை நொக்கினார். பிள்ளை பிறந்து 12 வயது ஆச்சுது. வரைதுடி, அறைதடி, அலைஎரியம்பு, சூரியது இதுமுதல் கற்றார்கள். அவனுக்கு திண்ணன் என்று பெயர் வைத்தார்கள்.
அந்த திண்ணன் சிவனை பூசை பண்ணி திருகாளத்தி அப்பனால் மோக்ஷம் அடைந்தார்.
சேரமான் பெருமாள் இதை சேவித்து கொண்டு புல்வேடர் இருக்கிற வனத்திலே வந்து நிலமை கண்டு பதினாயிரம் பேரை அழைத்துக்கொண்டு பூந்துறை நாட்டிலே வைத்து சேரமான் பெருமாள் கற்பித்த ஊழியமாவது பூந்துறை பட்டணத்தில் தினமும் ஈஸ்வரனுக்கு தினம் ஒன்றுக்கு 108 பூவெடுத்து திருசந்திய காலமும் கொடுக்கும்படி கட்டளை இட்டார்.
ஊர்வழி படிக்காவலுக்கு சிலரை வைத்தார். கள்ளர் திட்டரை செயிக்கும்படி சிலரை வைத்தார். இப்படிக்கு 3 வகுப்பு ஊழியர் கற்பித்த படியினாலே திருமேனி காவலர் சிலரை தான் கற்பித்த படிக்கு நடந்து வந்தார். பூந்தோட்டம் காத்தவன் பூலுவன். திருமேனி காவலாய் இருந்தவன் காவலன், கல்லெறிந்து படாது செய்தவன் வேடன்  இந்த மூன்று வகுப்புலே மூன்று பேராச்சுது. இந்த வேடர் குலம் பிரிந்து வடக்கு காதோலை, மூக்குத்தி, வலையலுடன் இருக்கிறார்கள். சிறிது வேடர் பிரிந்து கொங்கு நாட்டுக்கு வந்தவர்கள் கொங்கன் ஆனார்கள். இவர்கள் பல குலமாய் பெயர் இட்டுக்கொண்டது 
பச்சை வேட்டுவன்
பால வேட்டுவன்
குன்றாடி வேட்டுவன்
கொற்றாங்கனி வேட்டுவன்
அந்துக வேட்டுவன்
அக்னி வேட்டுவன்
இப்படி பல குலம் பெயர் இட்டுக்கொண்டு வேட்டுவராய் இருக்கிறார்கள்.
பூந்தோட்டம் பார்த்தவன் இரண்டு உலகமாய் பெருந்தலை பூலுவர் என்றும் சிறுகுல பூலுவர் என்று பேராச்சுது.
காவலன் பிரியாமல் காவிலியன் என்று கொங்கில் இருக்கிறார்கள்.
 கலியுக சகாப்தம் 3707 மேல் செல்லா நின்ற காலம் வீர ராஜேந்திர சோழர் உடைய பெண்ஜாதி ஆயிக என்றொரு கர்ப்பிணி இருந்தார். அந்த பெண் அப்பழங்காய் கேட்டாள். காரிய பேரை அழைத்து அப்பமங்காயிக்கு சேரமான்கிட்டே அனுப்பி வைத்தார்கள். சேரமான் அப்பழங்காயும் கொடாமல் காரியபேரையும் மூனு வருஷம் காவல் செய்ய முடிக்கி விட்டார். அதுகண்டு மேற்படி சோழன் படையெடுத்து கோட்டையும் மதிலும் கடந்து வந்து யுத்தம் செய்து சேரமான்
 படைமுறிந்து அதன் பின்பு கொங்கு மண்டலத்திலே ஊர் பிரித்து ஊர் கட்டியது. உரையூர் என்று கட்டி வைத்து செவ்வந்தியில் ஈஸ்வரனை பிரதிஸ்டை செய்து வைத்து தெய்வ தலங்களை செய்வித்து பூசையும் கட்டளையிட்டார். பூர்வம் தஞ்சாவூர் பட்டணம் விட்டு கரூர் பட்டணம் ஆக்கிக்கொண்டு வீரராஜேந்திர சோழன் ராஜ்ய பாரிமாறம் பண்ணினது. வீரசோழன், விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன், ராஜேந்திர சோழன், ராஜ்ஜியபாரம் பண்ணிகிர நாளிலே செவ்வந்தி புஷ்பத்தாலே குறை புகுந்து மண்மாரியால் ஊர் அழிந்துபோக, அச்சமயத்தில் குலோத்துங்கன் மனைவி சிங்கம்மாள் அசையாமல் இருந்து, சிங்கம்மாள்,சேமாளம்மாள் மேல்திசை நோக்கி புறப்பட்டு வருகிறார்கள். வரும் வழியில் அனேக கஷ்டம் பட்டு ஒருநாள் இரவு கழித்து காலையில் நொய்யல் நதி தீரத்தில் ராமபட்டர் சந்திரபட்டர் பிராமணனைக் கண்டு ஊர்காட்டிக்கொண்டு ஆடு மாடு வைத்து திரவியம் எடுத்துக்கொண்டு ஒக்கலாய் இருந்தார். அவர்களிடத்திலே தங்கி நெல்குத்தி ஜீவனம் செய்து வந்தனர்.அப்படியிருக்க கர்பிணி இருந்த சிங்கம்மாள் சாமளம்மாள் இவர்களுக்கு நல்ல சுபதினத்தில் புத்திரன் உற்பவித்தான். உற்பவித்து 7 1/2 வயதில் உரையூரில் ராசா இல்லாமல் பட்டத்தக்குரிய அரசனை தேர்ந்தெடுக்க பட்டத்து யானையை அனுப்பினாள். அந்த யானை வந்து தங்கிய இடத்தில் வெள்ளையானைப்பட்டி என்று, வெள்ளைகோயில் என்று, வெள்ளைதுறை என்று, வெள்ளமடை என்று ஊர் கட்டினார்கள். அந்த ஊரின் வடபுரத்திலே மறுநாள் ஒரு மடுவுலே படுத்திருந்து ஒருநாள் தங்கினபடினால் அயிராவததீர்த்தம் என்றும் வெள்ளலூர் பட்டியிலிருக்கின்றபோது பிள்ளையான் விளையாடிக்கொண்டு வந்தார்கள். வெள்ளையானை பிள்ளையான் பானைக்கிளப்பார்த்து நம்ப இராசா இவ்விடத்திலே இருக்கிறான் என்று வாரி எடுக்க முடியாமல் இருக்கும் சமயம் கூக்குரல் இட்டார்கள். அந்த பிராமணனர் எல்லாம் வந்து பார்க்கும்போது இராசாவின் தேவி சிங்கம்மாள் பிள்ளையான் காலிலே கரியை கிழித்தாள். அதனால் ஆறு யானை பலம் குறைந்தது. அதனால் கரிகால் சோழன் என்ற பேர் உண்டானதும், அப்போது வாரி எடுத்து விட்டபடியால் யானைவாரிக்குளம் என்று பெயர்.
அதன் பின்பு காரிய பேரை விசாரித்து சங்கதி தெரிந்து உரையூர் பயணமானான். அப்போது பிராமணரை அழைத்து என்ன வேணுமென கேட்க, கல்லும், காவிரியும், புல்லும், பூமியும் உள்ள அளவிற்கு பூமி தாரையாய் கொடுக்க வேணுமென்று கேட்டு கொண்டபடியினால் யானைவாரிகுளத்திற்கு தெற்கே குப்பண கவுண்டர் எல்லைக்கு, இதற்கு வடக்கு பிள்ளையந்தை பேருக்கு நல்ல மசக்காளி மன்றாடியாரு இரண்டு பேரும் பூமிதாரை வார்த்து பரை நாச்ச கட்டுதறி சுதந்திரம் கொடுக்கும்படி கட்டளையிட்டு போரபோது மற்றொரு பட்டம் பிரிந்து சாமளாபுரத்தில் பூமிகளும் தாரை வார்த்து அதற்கு தன் பேருக்கு ஊரும் கட்டி வைத்தார்.
அதன்பின்பு உறையூர் சென்று 4 தேசத்தார் கூடி வெண்ணைநல்லூர் குமார சடைய கவுண்டன் மகன் குமார சடைய கவுண்டன்  முதலான பேரும் கூடி இராசாவுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்து இராஜ்ஜிய பாரிபாரம் செய்து வருகின்ற சமயத்தில் கரிகால சோழன் அரிதிவருதல் அரிந்து பேரூருக்கு வந்து பட்டீஸ்வர சுவாமி மரகதவள்ளியும், அரசம்பலவாணரை சேவித்து, சிறிதுநாள் தங்கி காஞ்சிமாநதியில்
கூண்டோடு கைலாசத்திற்கு போனபடியால் சோழன்துறை என்று பேராச்சுது. இப்படிக்கு சிங்கநல்லூர், சாமளபுரம், சோழன்துறையில்; இதற்கு எல்லை பொன்னூர் படுகரட்டிற்கு மேற்கு, விளிங்குறிச்சி பழனிகவுண்டன் எல்லைக்கு தெற்கு புளியகுள மதகடிக்கும் பாறைக்கும் கிழக்கு, சிவனைத்தான் குளத்திற்கு தெற்குள்பட்ட பூமி என்று அறியவும். 
கரிகால சோழன் ஆண்ட பின்பு பாண்டியன்,  கொங்கை ஆண்ட சந்தர பாண்டியன் திரிபுவனசக்ரவர்த்தி கோசோட்மாரன் கோனேராண்மைகொண்டான் ஆண்ட பின்பு மூன்று குடிக்குரிய முனிய பெருமான் என்பவன் பாண்டியன் 2வது கொங்கு ஆண்டபடியினால் கொங்கில் பெருமாள் என்று பேராச்சுது.
கொங்கு மண்டலம் பூர்வம் பூவலன், காவலன், வேட்டுவன் கூடி பிரிந்து ஒழுக்கம் தவறி, மது குடித்து, அஞ்சுமணி கோமணத்திலே கட்டிக்கொண்டு, ஆய்குழழூதிக்கொண்டு, துண்டுபறை கொட்டிக்கொண்டு போனார்கள்.
கொங்கு மண்டலத்தில் ஒழுக்கமுள்ள குடியாக்க வேண்டுமென்று பாண்டி மண்டலத்திலே இருந்து திருபாளையிலே பாளைகாத்து பால வேளாளரின் மூலன் என்கிறவன், செம்பான், வரகுணாதன், புளியன், சிட்டர்க்குந்தூளியான், முருகன், கொட்டாரன்
கொங்கு மண்டலத்திலே குடிவைத்தார். கொங்கு மண்டலத்திலே வந்தவர் 8 பேர் மத்த 10 குலத்து வேற்றுமைபட்டு ராஜேந்திர சோழன் சீமை தஞ்சாவூருக்கு வந்து 9 பேர் மற்ற 1 குலம் பிள்ளந்தயொருவன். இராஜேந்திர சோழன் கிட்டே காண்பித்து கொண்டு பிம்பனி அடுத்த சிறுமலையில் இருந்தான். சிறிது வேளாளர் வேற்றுமை பட்டு பாளவேளாளராய் சிறுமலையில் இருந்தார். இப்படி இருக்கும் நாளிலே பாலவேளாளரில் பிள்ளந்தை என்கிறவன் இராக்கிசன் ஆகிறவன் ராஜேந்திர பக்கலிலிருந்தான். மலையில் இருந்த 18 குலமும் வேற்றுமைப்பட்டு கூடி பிரிந்து பலகாலம் வந்து மடிந்துபோய் 17 மீது மிஞ்சியிருந்தது, விஞ்சியது 1 குலம் அழிந்து போச்சுது, மற்ற 8 குலம் பிள்ளையந்த உடப்டிக்கு குலம் 18 குலமும் மலை இருந்தார்கள். 
தென்திசை வேளாளர் மோருவித்து, தயிருவித்து, பல ஊழியம் செய்வித்து ஆடுமாடுகள் வைத்துக்கொண்டு மலையில் இருந்தபடியினால் தென்திசை வேளாளர் ஆனார்கள். பாலைகாத்த கூட்டத்தில் இருந்த படியால் பால வேளாளர் ஆனார்கள். தென்திசை வேளாளர்களுக்கு மன்றாடி என்ற பட்டமும், இடையருக்கு பிள்ளை என்ற பட்டமும் முதலி என்ற பட்டமும் உண்டு. முன் பூர்வத்தில் இடையர் சோறுவித்து, தண்டிகை சுமந்து,
காலடி சுமந்து திரிந்தபடியால் இடையர் என்று பேயராச்சு. கொங்கு மண்டலத்தில் பால வேளாளர் இருக்கிறார்கள். பரசுராமர் சமுத்தரத்து தண்ணீரை அகத்தி 1400 காதவழியான பூமியை சேரமான் பெருமானுக்கு கொங்கில் சேரன் .சோழன், பாண்டியன். இவர் ராஜ்ய பாரம் செய்த போது சோழனுக்கு புலி கொடியும், பாண்டியன் மீன் கொடி, சேரமோன் வில் கொடி ஆண்டார்கள். 

குடிசனம் விவரம்
-----------------
கெங்களர், சிங்களர், வங்களர், தெலுங்கர், துலுக்கர், துருவாளர், துட்சரர், பப்பரார், மகராட்டர், ஒட்டியரர், சேராளகார், ஶ்ரீநகரர், துவக்கத்தார், கவரிகண், கன்னடியர், அவசிகர், பாவளர், பரங்கியன், வங்கியர், மலையாளர்.
மற்ற குடிவகை இளியார், குருபர், குன்றுவர், வெள்ளாளர், இடையர், மறவர், ஒக்கலியர், குரும்பர், வியாபாரி கொங்கன் செட்டி, கைக்கோலர், சானார், வலையன், அனுப்பன், உப்பிலியர், அரசுமக்கள், அரசு பள்ளி, கோமணாண்டி, சோழியன், சேரகுல வேளாளர், பூலுவன், காவலன், வேட்டுவர், சக்கார், ஒத்தை எருது செக்கான், இரட்டை எருது செக்கன் இப்படிக்கு 98 ஜாதி இதிலிருந்து பிரிந்தது மற்ற ஜாதி. மாடு மேச்சலுக்கு ஓட்டி வந்தார். புலுவதியான் பெருமனும், அவனுக்கு இளையவன் செவ்விழையான், ஏத்தனூர் பழனதிதான், பெருமசுத்தான். இவர்கள் நாலு பேர்வந்து ஏத்தனூர் வேட்டைக்கும் வந்தது. முயலகளை நாய் முடிக்கி, முயல்கள் பாய்ந்ததை கண்டு, தன் பேருனாலே கோவேரு பூமியிலே ஒற்றையூர் என்று ஊர்கட்டி வைத்தாள். செவ்விழையான் வெவ்விளையான் வெவ்விளைபூண்டி என்று ஊர் கட்டி வைத்தான். செவ்விழைபூண்டி - சேவூர், பெருமாத்தான் தன் பேருனாலே பெருமநல்லூர், செம்மியான் பேருநாள் ஊர் கட்டினான். மாடு மேய்க்கும் இடத்தில் சேவூர் கட்டி வைத்தான். செங்கன் செங்கப்பள்ளி ஊர் கட்டி வைத்தான், அன்னியன் அன்னூர் கட்டி வைத்தான், வின்னாடன் வின்னப்பள்ளி கட்டினான். இப்படி பூலுவரில் அப்படி கட்டி வைத்த ஊராம். வடபாரிச ஆறுநாட்டுக்கு நற்காவேரி என்று வருங்காலத்தில் பாண்டிய மண்டலத்தில் பஞ்சம் வந்து சங்கத்து புலவர் நிர்வகிக்க மாட்டாமல் எல்லாரும் வந்து முடுதுறையில் இருந்தார்கள். அதற்கு ஆலாஞ்சேரி அன்று பேரு. அங்கே ஆந்திரன் என்ற வெள்ளாளன் இருந்தான். அவன் புலவனைக்கண்டு அன்னமும், சொர்ணம், வஷ்திரம் கொடுத்து வந்த படியனால் புலவர்கள் சந்தோசப்பட்டு நம்முடைய வடத்தனத்தை தீத்தபடியினால் வடபாரிசநாடு என்று பேரிட்டு இந்த வடபாரிச ஆறுநாட்டில் இருக்கிற பூலுவர் அண்ணந்தம்பி சண்டை பண்ணிக்கொண்டு ஊர்்பிரித்து கடிந்து 4 ஊர் பற்று நாடு என்று பேர். இடிகரை, துடியலூர், கூடலூர், கவயன்புத்தூர். இந்த நாலுபேர் பிரிந்து கட்டியபடியினால் 4 ஊர்பற்று நாடு என்று நெய்யலில் ஏற்பட்டது 4 ஊர் பற்றுநாடு என்று அறியவும். கோவன்புத்தூர், பொன்பதி, வடகரை, பேரூர்நாடு என்று பேர். வெள்ளாய் அவன் பேரில் வெள்ளாவி ஊர் கட்டினான். ஒருவாண்டாடையோன் என்ற புலவன் ஒடுவங்க என்ற ஊர் கடடி வைத்தான். முகந்தநல்லூர், மன்னரை ஊர் கட்டி வைத்தார். இந்த இரண்டும் வீரசோழவளநாடு ஆனது. குருமந்தன் என்பவன் குருமந்தஊரும்,  கோசனம் கட்டி வைத்து. இந்த ஊரு இந்த 10 ஆறுநாடு என்று பேரானது. இடிகரை வில்லை ஈஸ்வரமுடையார் சோழ பிரதிஷ்டை. மன்னிய ஊர் மேற்கு சலகை விரப்பாடு மானியம் விட்டது. இடிகரைக்கு செல்லுவபுரம் வில்லுவபுரம் என்று பேர். 

இருகூர்  மட சிஷ்யர்கள் :

பால வெள்ளாளர்

  1. முருக குலம் - கஞ்சப்பள்ளி - கரியகாளியம்மன் - மருதமலை வடவழி, கஞ்சபள்ளி, கஸ்தூரிநாயக்கன்பாளையம், சோமையனூர், சுக்கிராம்பாளையம், புளியகுலம், இடிகரை, தெற்குபாளையம், சாமநாயக்கன்பாளையம், பல்லடம், நீலம்பூர், வடக்கலூர். 
  2. செம்ப குலம் – நீலாம்பூர் – பிச்சாண்டராயர் கோயில் - வடவழி, கஸ்தூரிநாயக்கன்பாளையம், செம்மண்ணுகுழியாம்பாளையம், சோமையனூர், வீரபாண்டி, சாமநாயக்கன்பாளையம், பல்லடம்
  3. புலிய குலம் – அன்னூர் பெரியம்மன் - நரியம்பள்ளி, சன்னமலை, காளிபாளையம், பாப்பநாயக்கன்பாளையம், சுக்கிராம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சாமநாயக்கன்பாளையம், நீலம்பூர்
  4. வேம்ப குலம் – தடத்துகாளி கூட்டம் - காளிபாளையம்
  5. சாம குலம் – கவையகாளியம்மன், குன்னத்தூர் பட்டத்தரசியம்மன்                                                    நரியம்பள்ளி, கருவலூர், குரும்பபாளையம், கானூர், மோரப்பன்பாளையம், சாமநாயக்கன்பாளையம், இடிகரை
  6. மோட்டாம்பட்டியார் குலம் – காரமடை ரங்கநாதர்
  7. கருவலூரான் மாட குலம் – காளிபாளையம்
  8. புக்தி குலம் – வெள்ளமடை, சாமநாயக்கன்பாளையம், பல்லடம்
  9. சீடர் குலம் – காரமடை ரங்கநாதர் - வீரபாண்டி
  10. புல்லாகுலம் -நீலம்பூர், சாமநாயக்கன்பாளையம், பல்லடம்



முதலியார்கள்
  1. கொங்க கூட்டம் – வடக்கலூர் பொன்காளியம்மன், முனியப்பன் - மருதமலை வடவழி, நவாவூர் புதூர், துடியலூர், கரிச்சிபாளையம் (காரமடை ரங்கநாதர்), வடக்கலூர், புளியம்பட்டி, வெள்ளியம்பாளையம், அன்னூர் (மண்ணீஸ்வரர்), எச்சினம்பாளையம், புகலூர் (மண்ணீஸ்வரர்), கோயில்பாளையம்
  2. கோனாங் கூட்டம் – பத்திரகாளியம்மன், ஓதிமலையாண்டவர், வடகஞ்சபள்ளி அங்காளம்மன்
  3. பட்டகாரன் கூட்டம் – உருமன் பெருமாள், தேவன்ப்பெருமாள்    மருதமலை வடவழி, உச்சியனூர், வெள்ளியம்பாளையம், புகலூர், தாத்தையம்பாளையம், குருக்கள்பாளையம், அச்சம்பாளையம், சோம்பனாசி, நல்ல செட்டிபாளையம், மருதூர், தேவனாபுரம், வடக்கலூர், கோயில்பாளையம், ஏரங்காட்டுபாளையம், வடுகபாளையம், வச்சிரம்பாளையம், மோத்தேபாளையம், புகலூர், கணக்கம்பாளையம், ரங்கம்பாளையம், புளியம்பட்டி
  4. கணக்கங் கூட்டம் – முதலியார்கள், பிள்ளைமார்கள் – வடக்கலூர் பொன்காளியம்மன் - மருதமலை  வடவழி, நவாவூர் புதூர், கரிச்சிபாளையம், யரங்காட்டுபாளையம், வடுகபாளையம், வச்சிரம்பாளையம், குத்தேரிபாளையம், சன்னமலை (மேட்டுப்பாளையம்), காளபட்டி, காரமடை, கண்ணாபாளையம், வைத்தூர், குன்னியூர், அழகப்பகவுண்டன்புதூர்.
  5. (பிள்ளை) – அல்லிகாரகவுண்டன்பாளையம், ஆண்டிச்சிபாளையம், கெம்பனாயக்கன்பட்டி, காளிபாளையம், மருதூர், தேவனாபுரம், மேட்டுப்பாளையம், குட்டையூர், காட்டேரி கவுண்டம்பாளையம், பச்சாகவுண்டனூர், தாத்தையம்பாளையம், குருக்கள் அய்யம்பாளையம், அல்லப்பன்பாளையம்.




கொங்க வெள்ளாளர்
  1. கோவேந்தர் கூட்டம் – அழகுநாச்சியம்மன், வீரமாத்தி அம்மன் -  கோவை செட்டிபாளையம், தேகாணி, பெரியகுயிலி, காணி குடிமங்கலம், சிறையாம்பாளையம், தாய நல்லியம்மன் வீரமத்தி, ஒட்டர் பாளையம், முதலிபாளையம், அனுசம்பாளையம், வெள்ளானைப்பட்டி, பிங்கலபாளையம் (தொண்டாமுத்தூர்), இருகூர், தம்பனாம்பாறை
  2. எண்ணை கூட்டம் – பொன்காளியம்மன் -  பாச்சாகவுண்டனூர்,  கோவில்பாளையம்
  3. அந்துவன் கூட்டம் – காணி கீரனூர் - வெள்ளானைப்பட்டி, குரும்பபாளையம், தடாகம், காரமடை, இடிகரை, குன்னத்தூர், சூரியபாளையம், கருவலூர், கானூர், மிகவும்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, சிறியகள்ளிப்பட்டி, சிரறுமுகைபுதூர், கோவிந்தநாயக்கன் பாளையம், இடுகம்பாளையம்
  4. பவள கூட்டம் - காணி அங்கித்தொழுவு -     கவையகாளி அம்மன், ராயர்காளி      பச்சாம்பாளையம், தேகாணி, காரச்சேரி, கஞ்சிகோனம்பாளையம்
  5. அழக கூட்டம் – காணி காரவழி – செல்லாண்டியம்மன் -  தேகாணி, கஞ்சிகோனம்பாளையம்
  6. பூச கூட்டம் – காணி பெருந்தொழுவு – மங்கையாத்தாள் - தேகாணி, காரச்சேரி
  7. எண்ணை கூட்டம் – காணி - பல்லாங்கோயில் - கரியகாளியம்மன், பிள்ளை தெய்வம், கன்னிமார் கோயில்  - கஞ்சிகோனம்பாளையம், காரச்சேரி, மலுமிச்சம்பட்டி
  8. பராவு கூட்டம் – தென்குளியம்மன் – காணி தாராபுரம் -    கஞ்சிகோனம்பாளையம்




சோழிய வெள்ளாளர்



  1. பிள்ளை கூட்டம் (அருக்காணி கூட்டம்) –வீரமாத்தி அம்மன், சேவூர் தட்டான், நல்ல பிரமணாதன் - கோவில்பாளையத்து கொண்டயம்பாளையம், கன்னாபாளையம், விளிச்சிகவுண்டனூர், மேட்டுப்பாளையம், பீடம்பள்ளிகாளப்பட்டி, பச்சாமல்லனூர்
  2. திருவாரூர் பிள்ளை கூட்டம் – மகா முனீஸ்வரர் - கொண்டயம்பாளையம்
  3. வாத்தியார் கூட்டம் – கன்னியாத்தாள்
  4. வள்ளிபெருமாள் கூட்டம் – வள்ளியம்மன்



கொங்க குலாலர் (மண்ணுடையார்) – தட்டைநாட்டான் – மருதமலைஆண்டவர்
     மருதமலை வடவழி, கிருஷ்ணாகவுண்டன்புதூர், செட்டிபாளையம், சிறையாம்பாளையம், வெள்ளாளனபட்டி, அன்னூர் மேட்டுப்பாளையம், புளியம்பட்டி, சானாபதி, தேசிபாளையம், கஞ்சனூர், தண்டுக்காரன்பாளையம், ராயம்பாளையம், கணுவுக்கரை (சாம நாட்டான்), கொங்கிருபாளையம், அடரமங்கலம், சத்தியமங்கலம், இச்சிரிச்சிபாளையம், கொண்டயம்பாளையம், பாலப்பட்டி, மூலத்துறை, ஆலங்கோம்பு, மோத்தேபாளையம், இடுகம்பாளையம், மூக்கனூர், அரசூர், இருகூர், வெள்ளியம்பாளையம், காளப்பட்டி, சிறுமுகைபுதூர், கரிச்சிபாளையத்து கிருஷ்ணாகவுண்டன்புதூர், காரதிருமானூர், பெரியகள்ளிபட்டி, சின்னகள்ளிபட்டி, காரபாடி, காவிளலிபாளையம், பட்டி மணியகாரம்பளையம், புகலூர், அச்சம்பாளையம், சோம்பனாசி, நல்லசெட்டிபாளையம்
  100 வருடங்களுக்குப்பின் தட்டைய நாட்டுக் கொங்க குலாலர் பூசாரிகள் பட்டம் வைக்கையில் குலகுருவிடம் ஆசி பெற்றனர்


மடவிலாசம்: 
சிவஸ்ரீ ராமசாமி சிவாச்சாரியார் 
10/10, அக்ரஹார வீதி,
இருகூர் அஞ்சல், 
கோயமுத்தூர் - 641 103
தொலைபேசி எண்: 
94881 5516494863 12501

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கிராமியர் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகங்களை கூடயிருந்து எழுதிய கையேட்டுக்காரர்கள். குலகுருவின் மகத்துவம்

1.சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ கா...